மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 4


அதன்பின் எத்தனையோ மெயில்கள் அவனிடமிருந்து வந்துவிட்டன... கவிதைகளைப் பாராட்டியும் அதன் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டும்... புரிந்தவற்றுக்கு கருத்துக் கூறியும் மெயில் செய்வான்... வார்த்தைகளுக்கு விளக்கம் கூறிவிட்டு தனது வாதத்தை முடித்துக் கொள்வாள்....

ஒரு மெயிலில் "நீங்கள் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது... என்னை நண்பனாக நினைத்தால் யாரென்று சொல்லுங்கள் ப்ளீஸ்" என்று வந்த மெயிலுக்கு பதில் அனுப்பாமல் விட்டதற்கு மறுநாள் அதே வார்த்தைகளை சுமந்துகொண்டு பல மெயில்கள் வந்து குவிந்திருந்தன....

அவற்றுக்கும் பதில் அனுப்பவில்லை என்றதும்.... "உங்களின் மவுனமே நீங்கள் பெண்ணென்று சொல்லாமல் சொல்லிவிட்டது... நன்றி" என்று ஒரு மெயில் வந்தது...

தனது முட்டாள் தனத்தை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் தலையில் தட்டிக் கொண்டாள் மான்சி....

ஒருநாள் "எனக்கு அம்மா பிடிக்கும்.... அதனால் அம்மா கவிதை எழுதும் உங்களையும் பிடிக்கிறது" என்று அனுப்பியிருந்தான்

பிறகொரு நாளில் "எனக்காக இயற்க்கையை வர்ணித்து ஒரு கவிதை எழுதுங்களேன்" என்ற அவனது மெயிலுக்கு தெரியாது என்று முகத்திலடித்தாற் போல் பதில் அனுப்பினாள்....

மறுநாள் அவனிடமிருந்து எந்தவொரு மெயிலும் இல்லை.... ஆனால் அதற்கடுத்த நாளில் இருந்து தினமும் சாட் ரிக்வெஸ்ட் அனுப்ப ஆரம்பித்தான்... இவள் கேன்சல் செய்தாலும் தினமும் வந்துவிடும்.....

இதோ இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது... இப்போதும் அவன் ஐடியிலிருந்து சாட் ரிக்வெஸ்ட் வந்திருந்தது... கூடவே ஒரு மெயிலும்.... "சாட் செய்வதால் யாருடைய தரமும் தாழ்ந்து விடாது சிமி.. தயவுசெஞ்சு ஓகே செய்யுங்கள்" என்று அனுப்பியிருந்தான்....

மனதை குழப்ப மேகங்கள் சூழ கண்மூடி இருக்கையில் சாய்ந்தாள்.... உன்மீது உனக்கு நம்பிக்கை இருக்கும் போது சாட் செய்வதில் அப்படியென்ன கேடு வந்துவிடும்? கேள்வி கேட்ட மனதுக்கு பதில் சொல்லத்தான் தெரியவில்லை....



மெயிலுக்கும் சாட்டுக்கும் என்ன வித்தியாசம்? தகவல் சென்று வரும் சில நிமிடங்கள் தானே தவிர ஆபத்து எதுவுமில்லை என்று அறிவுக்குப் புரிய அவனது சாட் ரிக்வெஸ்ட்டை அக்சப்ட் செய்தாள்.... அடுத்த சில நொடிகளில் துள்ளி குதிக்கும் ஒரு ஸ்மைலியைப் போட்டுவிட்டு "நன்றி சிமி... ரொம்ப ரொம்ப நன்றி" என்றபடி அவனது சாட் பார்ம் வந்தது.....

"ம்ம்"

"வெறும் ம்ம் தானா? நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? தாங்க்ஸ் சிமி"

"நான் முதன்முதலா சாட் செய்றேன்... என்னால் அதிகநேரம் சாட்டில் வரவே இருக்கவோ முடியாது"

"பரவால்லை சிமி,, நீங்கள் வரும் வரை நான் காத்திருப்பேன்.... இப்போக் கூட இன்னைக்கு நீங்க கட்டாயம் என் ரிக்வெஸ்ட்டை ஏத்துக்குவீங்கன்னு தூங்காம வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்... அதேபோல நடந்துடுச்சு.. ஐ ஆம் வெரி ஹேப்பி"

"ஓ.... இப்போ அங்கே நேரம்?"

"கரெக்ட்டா நடு இரவு ஒண்ணு பத்து.... இங்கே இருக்குற குளிருக்கு பேய்கள் கூட இந்த டைம்ல முழிச்சிருக்காது.... ஆனா நான் முழிச்சிருக்கேன் "

"ஓ..... அப்போ பேயை விட மோசமான மனுஷன் நீங்கன்னு சொல்றீங்களா?"

சற்றுநேரம் வரை சத்யனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.... காயப்படுத்திவிட்டோம் என்று புரிய "ஹலோ இருக்கீங்களா?" என்று மீண்டும் அனுப்பினாள்....

"ம்ம்....."

"நான் விளையாட்டாகத்தான் கேட்டேன்"

"பரவால்லைங்க... முகம் தெரியா இந்த ஆன்லைன் உலகத்துல என்னைப் பத்தி அதிகம் தெரிய வாய்ப்பில்லை தான்...."

"ம்ம்...."

"ஆனா நான் ரொம்ப மென்மையானவன்... ஜாலியான பேர்வழி"...

"ம்ம்"

"நான் சொல்றதை நம்புறீங்களா?"

"நம்பித்தானே ஆகனும்.. நீங்கதானே சொன்னீங்க.. முகம் தெரியா ஆன்லைன் உலகம் இதுன்னு..."

"கேலி பண்றீங்கன்னு புரியுது.... சரி ஓகே உங்களுக்கு நம்பிக்கை வர நான் என்ன செய்யனும்?"

"எதுவும் செய்ய வேண்டாம்... அது எனக்கு தேவையுமில்லை..."

"ம்ம்....."

"ஓகே எனக்கு லஞ்ச் டைம் ஆச்சு.... பை"

சிமி சிமி ஒரு நிமிஷம் ப்ளீஸ்"

"ம் சொல்லுங்க"

"ரொம்ப லேட் நைட் தூங்கிட்டு காலைல காலேஜ் போய் தூங்கி வழியறதா இருக்கு.... நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா வரமுடியுமா?"

"ஸாரி,, முடியாது,, இது ஆபிஸ்..."

"ஓ நீங்க ஒர்க் பண்றீங்களா?"

"ஆமா,, நான் என் ஒர்க் முடிஞ்சி ஓய்வு நேரத்தில் தான் மெயில்கள் செக் பண்ணுவேன்...."

"உங்களுக்கு எப்ப ஓய்வு நேரம்?"

ஏனோ பட்டென்று கோபம் வந்தது மான்சிக்கு... "சிலநாட்களில் காலை ஒன்பது மணிக்கே... பல நாட்களில் மாலை வரை கூட ஓய்வு கிடைக்காது"

"ஓ அப்போ நான் எப்படி நீங்க ஆன்லைன் வந்ததை தெரிஞ்சுக்கிறது?... சப்போஸ் தூங்கிட்டேன்னா?"

"ஏன் தெரிஞ்சுக்கனும்? தூங்குங்க"

"அய்யோ இப்படிச் சொன்னா எப்படிங்க? உசுர குடுத்து ஓடுற பஸ்ல சீட் பிடிச்ச மாதிரி உங்க கூட சாட்ல இடம் பிடிச்சிருக்கேன்" கண்ணீர் விடும் ஸ்மைலி ஒன்று

"அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது"....

"இல்லைங்க ஒன்னு செய்யலாம்... நீங்க வந்ததும் ஒரு ஹாய் மட்டும் போடுங்க... நான் உடனே முழிச்சுப்பேன்"

"அதெப்படி முழிச்சுக்க முடியும்?"

"அது நான் லாப்டாப்ல ஹெட்போன் போட்டுகிட்டா நீங்க கூப்பிட்டதும் நோட்டிபிகேஷன் சத்தம் கேட்கும்"

"ம்ம்"

"ம்ம் சொல்லாதீங்க... ஹாய் போடுவீங்க தானே?" மீண்டும் அழும் பொம்மை...

அந்த பொம்மையைப் பார்த்தால் ஏனோ சிரிப்பு தான் வந்தது... "சரி போடுறேன்"

"வாவ்.... தாங்க்யூ ஸோமச்...."

"ஓகே பை"....

"ம் பை சிமி".....

சட்டென்று ஆப்லைன் போனாள்... ஒரு மாதிரி படபடப்பாக இருக்க வியர்த்துக் கொட்டியது.... இது சரியா? தவறா? புரியவில்லை தெரியவில்லை.... ஆனாலும் மனம் புத்துணர்வாக.... நீண்டநாள் நண்பனை நேரில் சந்தித்து அளவலாவிய சந்தோஷமும் நிம்மதியும்.... உணவு இருக்கும் பையை எடுத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்கு வந்தாள்....

வழக்கம் போல அப்பாவுக்கு செய்ததில் மிச்சமிருந்த சம்பா கோதுமையை உடைத்து அதில் செய்த உப்புமா தான்... ஆனால் இன்று திருப்தியாக உண்ண முடிந்தது.....





“ இன்று ஏனோ தென்றலின் தீண்டலில்..

“ தேகமெங்கும் பரவசம்...

“ நம் முதல் ஸ்பரிசம் கூட..

“ இப்படித்தான் இருந்திருக்குமோ?

“ சிலிர்த்துத்தான் போகிறேன் அம்மா!

மதியம் அலுவல்கள் நிறைய இருந்தன.... சாட் செய்த அவன் மறந்து போனான்.... மாலை ஐந்தரை மணி வாக்கில் மீண்டும் தனது பிளாக் சென்று பார்த்தாள்... புதிதாக SS என்ற ஐடியிலிருந்து இவளது கவிதைகள் அனைத்திற்கும் லைக் கொடுக்கப்பட்டு சில வரிகளில் கமெண்ட்ஸ்ம் சொல்லப்பட்டிருந்தது....

கமெண்ட்டின் ஸ்டைலே அவன்தான் தான் என்று சொல்லாமல் சொல்ல... அவன் தூங்கவே இல்லையா? என்று இவள் யோசிக்கும் போதே மெயில் வந்தது

"இன்றைய கவிதை எத்தனை மணிக்கு அப்டேட் செய்வீங்க?" என்று கேட்டு சத்யன் தான் மெயில் செய்திருந்தான்...

அவன் கூறியபடி அவனிருக்கும் நாட்டில் இப்போது அதிகாலை ஐந்து மணியாக இருக்கும்... இவன் சுத்தமா தூங்கவே இல்லையா?

அதையே மெயிலில் கேட்டாள் "தூங்கவே இல்லையா?"...

சில நிமிடங்களில் பதில் வந்தது "இல்லைங்க... உங்க கூட சாட் பண்ண சந்தோஷத்தில் தூக்கம் பறந்து போயிடுச்சு... உடனே ஐடி கிரியேட் பண்ணி உங்க பிளாக்ல போய் கவிதைகளுக்கு லைக் குடுத்து கமெண்ட் போட்டேன்... அப்புறம் நீங்க இந்த டைம்ல தானே புதுசா எழுதின கவிதைகளை அப்டேட் செய்வீங்க... அதுக்காக இப்போ வெயிட்டிங்"

படித்துவிட்டு எரிச்சலாக வந்தது... அப்புறம் காலேஜ் போய் எப்படி படிக்க முடியும்? "ஓகே,, ஆனா இவ்வளவு நேரம் முழிச்சிட்டு காலேஜ்க்கு எப்படி போவீங்க?" என்று மான்சி அனுப்பினாள்...

"ஹி ஹி ஹி ஹி இன்னைக்கு காலேஜ் மட்டம்ங்க.... கவிதாயினியுடன் கதைத்ததை கொண்டாடப் போகிறேன்... ரூம் கதவை மூடிக்கிட்டு இன்னைக்குப் பூராவும் தூங்கப் போறேன்... ஹா ஹா ஹா ஹா" சத்யனின் இந்த பதிலைப் பார்த்து மான்சியின் இதழ்களில் லேசான புன்னகையின் ரேகைகள்

"ம்ம்..." என்று மட்டும் பதில் செய்தாள்..

"ஏங்க ஒரு முக்கியமான விஷயம் கேட்கனும்... உங்க பெயர் சிமினு இருக்கே... நான் அந்த பார்ம்ல பல பெயரை யோசிச்சிப் பார்த்தேன்.... எனக்குத் தெரிஞ்சு உங்க கவிதை வரிகளுக்குப் பொருத்தமா சிவாத்மிகா என்ற பெயர் உங்க சொந்த பெயரா இருக்கும்னு தோணுது.... அதை தானே சுருக்கி சிமின்னு வச்சுக்கிட்டு இருக்கீங்க?" 

மான்சிக்கு ஒரு மாதிரியாக இருந்தது... இரவெல்லாம் விழித்திருந்து இதைத்தான் யோசித்தானோ? ஆனாலும் அவன் நம்பிக்கையை உடைக்க மனமின்றி "ம் ம்" என்று பதில் அனுப்பினாள்...

"வாரே வாவ்,, எப்புடி? நாங்களும் அறிவாளி தான்னு நிரூபிச்சிட்டோம்ல..... எனக்கு இந்த சிமி என்ற பெயர் ரொம்ப பிடிக்கும்... அதுக்கு ஒரு கதையே இருக்கு.. பிறகொருநாள் நீங்க ப்ரீயா இருக்கும் போது அந்த கதையை சொல்றேன்.... இப்போ உங்க கவிதைக்காக வெயிட்டிங்" என்று பதில் அனுப்பியிருந்தான்

"இப்பதான் எழுதுறேன்... பத்து நிமிஷத்தில் பதிவு செய்கிறேன்... பை" என்று பதில் செய்து விட்டு மெயிலில் இருந்து வெளியேறினாள்...

மனதுக்குள் தனது தாயை நினைத்ததுமே கவிதை வரிகள் சரம் கோர்த்தன.... 




"உன் உயரம் நான் வளர்ந்து,

" உன் சேலையில் முதல் தாவணியுடுத்தி,

" உன் காதலை நீ கதையாக சொல்ல...

" என் முதல் தோழி நீயாக...

" என்றென்றும்,,

" இல்லாமல் போனாயே...

" அம்மா!!!!


******************* ******************* *******************


" இணையில்லா பாசம் வைத்து...

" இடையில் மறைந்த!

" என் அம்மா!

" எண்ணமெல்லாம் உனைச் சுற்ற,

" என்னக்கான உறவாய்,

" ஏதாவதொரு உருவில்.....

" என் உயிர் சேர...

" நீ வருவதெப்போது?


******************* ******************* *******************


" காற்றில் உன் சுவாசம்,

" கனவில் உன் பாசம்,

" எங்கோ என் பெயர்..

" கூப்பிடக் கேட்டேன்!

" அழைத்தது நீயா அம்மா?


******************* ******************* *******************


" மார்கழிக் குளிரில்....

" உடல் உதற உறக்கமின்றி நான்....

" திடீரென தேகம் எங்கும் கதகதப்பு!

" நீ வந்து அனைத்துக் கொண்டாயா அம்மா?

" கனவாயினும்,, நிஜம் போல் சுகம்!



******************* ******************* *******************

" அம்மா,,

" உன்னை யோசித்தாலும் சுவாசித்தாலும்...

" உயிர் தீண்டும் உச்ச படபடப்பு!!! 
[color][font]

மாலை நேரத்து மஞ்சள் வெயிலைக் கண்டால் மான்குட்டிகளுக்கு கொண்டாட்டமாம்...... மான்கள் விளையாட மஞ்சள் வெயில் பாதையமைக்கும் மாலைப் பொழுது....

தோட்டத்து புல்வெளியில் நாற்காலியிட்டு அமர்ந்திருந்தார் அருணகிரி..... எதிரேயிருந்த டீபாயில் அவரது லாப்டாப்.... தனது மெயில்களைப் பார்த்துவிட்டு பொழுது போகாமல் ஒரு தமிழ் படத்தை ஓடவிட்டு பார்த்துக்கொண்டிருந்தார்...

காபி ட்ரேயுடன் வந்து அவருக்கு பக்கத்து நாற்காலியில் அமர்ந்த சந்திரா "என் பீரோவில் புடவைலாம் கலைஞ்சு கிடக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கனு கேட்டதுக்கு ஏதோ முக்கியமான வேலையிருக்குனு சொல்லிட்டு... இங்க வந்து சினிமாவா பார்க்கிறீங்க?" கோபமாக கேட்டவளைக் கண்டு அசடு வழிந்தபடி காபி கப்பை எடுத்துக் கொண்டார்.....

"புள்ளைக்கு பொண்ணு கேட்டது இப்புடியாகிடுச்சேனு எனக்கு கவலையா இருக்கு.... நீங்க என்னடான்னா அதைப் பத்தின கவலையே இல்லாம ஜாலியா இருக்கீங்க" மீண்டும் சந்திரா தான் கடிந்து கொண்டாள்...

"அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா அதுக்கு நான் என்ன சந்திரா பண்ண முடியும்? நாம ஒன்னு நினைச்சா விதி வேற மாதிரி முடிவு பண்ணிருக்கு..... சரி அதை விடு நம்ம மகனுக்கு பத்ரியோட மகளை விட நல்லவளா நிச்சயம் கிடைப்பா" என்றவர் மனைவியின் காதருகே சரிந்து "யார் கண்டா,, அங்கருந்தே தொப்புள்ல தோடு போட்டவ... புருவத்துல புள்ளாக்குப் போட்டவ யாரையாவது கூட்டிட்டு வந்து மம்மி டாடி இவதான் உங்க மருமகள்னு சொன்னாலும் சொல்லுவான்... எதுக்கும் நாம தயாரா இருக்கிறது நல்லது" என்று கூறிவிட்டு சிரிக்கவும்...

கணவரை கோபமாக முறைத்த சந்திரா.... "என் புள்ள அதெல்லாம் செய்ய மாட்டான்... சும்மா இருக்குறவனை எதையாவது சொல்லி கிளப்பி விடாதீங்க...." என்று எரிச்சலாக கூறும்போதே அருணகிரியின் மொபைல் அழைத்தது....

எடுத்துப் பார்த்தவர் முகம் மலர "உன் மகன் தான்" என்று கூறிவிட்டு ஆன்செய்து "என்னடா மகனே? எப்படியிருக்க?" என்று உற்சாகமாய் கேட்க....

"நல்லாருக்கேன் டாடி,, நீயும் அம்மாவும் என்ன பண்றீங்க?" என்று மகன் கேட்டதும்.... "நான் லாப்ல ஒரு தமிழ் படம் பார்க்குறேன்..." என்றார்

"என்ன படம்ப்பா?" ஆர்வமாய் சத்யன் கேட்டதும் "படம் பேரு பொரி உருண்டை.." என்றவர் கொஞ்சம் கடுப்புடன் " என்ன படம்னு முழுசா பார்க்குறதுக்குள்ள உன் அம்மா முதல்ல வந்தா,, அடுத்து நீ வந்துட்ட" என்றார்...

"பார்த்தியா? பெத்த மகனை பார்க்காம அழுவீங்கன்னு பார்த்தா.... ஏன் வந்தேன்னு திட்டுறேல்ல... நீயெல்லாம் ஒரு அப்பாவா" எதிர் முணையில் செல்லமாய் அழுதான் சத்யன்....

"அய்யோ அழுவாதடா மகனே,, நீ இல்லாத குறையை தீர்க்கதான் இப்படி சினிமாவா பார்க்குறேன்" என்றவர் நானாவது பரவாயில்லை உன் அம்மா ஆறாவது கப் காபியை உள்ள ஊத்திக்கிட்டு இருக்கா" என்றார் அருணகிரி...

"ஆறாவது கப் காபியா? இதுதான் என் அம்மாவை நீ பார்த்துக்கிற லட்சணமா? உன்னை நம்பி விட்டு வந்தேன் பாரு? என்னைச் சொல்லனும்" கடுப்பாக பேசினான்...

"ஆமாடா,, அவளையும் உன் கூடவே கூட்டிட்டுப் போயிருக்கலாம்" என்று அப்பா சொன்னதும்

"என்னப்பா இன்னைக்கு உன் குரல்ல உற்சாகம் வழியுது,, படிக்கப் போடா மகனேன்னு என்னை பேக் பண்ணிட்டு நீயும் உன் பொண்டாட்டியும் செம ஜாலியா இருக்கீங்க போலருக்கே? உண்மை தான?" என்று சத்யன் கேலியாக கேட்டதும்... அருணகிரிக்கு சிரிப்பு தாங்கவில்லை...

ஆனாலும் குரலில் விரக்தியை வரவழைத்துக் கொண்டு "அட நீ வேற சும்மா இருடா,, எங்கருந்து கிழவி கூட போய் ஜாலியா இருக்குறது? அதுக்கெல்லாம் மச்சம் வேணும் போலருக்கு" என்றார்...

பக்கத்தில் இருந்த சந்திராவுக்கு இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று புரிய... பட்டென்று அருணகிரியின் முதுகில் ஒன்று வைத்து "அடச்சே அப்பாவும் மகனும் மாதிரியா பேசுறீங்க? வரவர ரொம்ப ஓவரா போச்சு" என்றவள் அப்போது தான் ஞாபகம் வந்தது போல்... "ஓய்,, யாரை கிழவின்னு சொன்னீங்க? நான் கிழவின்னா என்னை விட ஆறு வயசு பெரியவர் நீங்க மட்டும் குமரனா?" கொதிப்புடன் பேசிய மனைவியைக் கண்டு அருணகிரி சிரிக்க....

"என்ன டாடி அடி விழுந்ததா?" என்று கேட்டுவிட்டு சத்யன் அங்கே உருண்டு புரண்டு சிரிப்பது இங்கே கேட்டது....

கணவரிடமிருந்து போனை பிடுங்கிய சந்திரா "சின்னும்மா,, எப்படிடா இருக்க? உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் தங்கம்" என தாயாய் சங்கடமாக பேசினாள்...

"ம்ஹூம் நான் நல்லாவே இல்லைம்மா.... எப்புடி ட்ரைப் பண்ணாலும் ஒரு பிகர் கூட செட்டாகலைம்மா... மூணு மாசமா முயற்சி பண்ணியும் ஒருத்தி கூட ஹாய் சொல்லலைம்மா" என்று புலம்பியவன் குரலை தாழ்த்தி "இன்னும் கொஞ்சம் குங்குமப்பூ சாப்பிட்டு கொஞ்சம் வெள்ளையாவாவது பெத்திருக்கலாம்ல?" என்று கேட்க....

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "அடப்பாவி மகனே" என்றாள் சந்திரா...

"ம்ம்,, வாழ்க்கையே ரொம்ப போரடிக்கிதும்மா... எதுக்கும் நீ என் ஜாதகத்தை எடுத்துட்டுப் போய் ஜோசியர் கிட்ட காட்டும்மா... எதுவும் தோஷமிருக்கான்னு கேட்டு பரிகாரம் பண்ணும்மா,, அப்பவாச்சும் பிகர் செட்டாகுதா பார்க்கலாம்" என்று சத்யன் வருத்தமாகக் கூறவும்....

தாயும் மகனும் பேசுவதை ஒட்டு கேட்ட அருணகிரி "அப்படியே சிறப்பு யாகத்துக்கும் ஏற்பாடு செய்துடலாம் சத்யா" என்று கூறிவிட்டு சிரிக்க.... சந்திரா கடுப்புடன் மீண்டும் அவர் முதுகில் ஒன்று போட்டு "அவன்தான் அப்படின்னா,, நீங்க அவனுக்கு மேல இருக்கீங்க" என்றாள்....

"மம்மி,, நிஜமாவே தான் சொல்றேன்,, என் ஜாதகத்தைப் பாரும்மா" கெஞ்சுவது போல் பேசினான் சத்யன்...

"அடச்சே,, ஏன்டா ரெண்டு பேரும் என் உசுரை எடுக்குறீங்க? படிப்பு முடிச்சிட்டு சீக்கிரமா வா,, நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன்... அதுவரைக்கும் அமைதியா இருக்கனும்.. கண்டதையும் யோசிச்சு கெட்டு குட்டிச்சுவரா போயிடாதா" என்று சந்திரா அறிவுரை கூறவும்...



"நீ போனை டாடிக்கிட்ட குடும்மா" என்றான் சத்யன்....

போன் அருணகிரியின் கைக்கு வந்ததும் "டாடி,, உன் பொண்டாட்டி சொன்னதை கேட்டியா? இதெல்லாம் ஓவரா தெரியலை? படிச்சிட்டு வந்ததும் கல்யாணமாம்,, அப்போ லவ் பண்ணனும்ற என்னோட லட்சியம் என்னாகுறது?... சொல்லி வை டாடி...." மகனின் போலியான மிரட்டலில் பயந்தவர் போல் "உத்தரவு இளவரசே" என்றார் அருணகிரி....

அதன்பின் சில பொது விசாரிப்புகளுடன் போன் வைக்கப்பட்டது.....

இவர்கள் இப்படித்தான்..... மகன் இவர்கள் இருவருக்கும் தோழன்... சத்யனுக்கும் அப்படித்தான்,, அவனது முதல் நண்பன் அருணகிரிதான்... அதேபோல் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே அவன் வாழ்வில் இல்லையெனலாம்... அழகான ஆங்கில லெக்சரரை சைட் அடித்ததை சொல்வதும் அம்மாவிடம் தான்... "நேத்து சரியா படிக்கலைம்மா,, இந்த எக்ஸாம்ல நிச்சயம் அரியர் வரும்மா" என்று சொல்வதும் அம்மாவிடம் தான்.... மூவருக்குள்ளும் ஒரு புரிதல்... இவர்களுக்கு மகனே வாழ்வென்றால்... அவனுக்கு இவர்கள் தான் உயிர் மூச்சு....


[/font][/color]
"அம்மா,,

“ அப்பாவை நீ அறிமுகம் செய்தாய்...

“ அப்பாவோ உலகை அறிமுகம் செய்தார்...

“ நீ சுமந்தது பத்து மாதம்.

“ அவர் சுமப்பதோ காலமெல்லாம்

“ அதுவும் உன்னோடு என்னையும் சேர்த்து!!
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 15-06-2019, 09:50 AM



Users browsing this thread: 2 Guest(s)