Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`போ... அங்க போயி வண்டியை நிப்பாட்டு!' - நடுரோட்டில் தலைகுனிந்த சப்-இன்ஸ்பெக்டர்

ஹெல்மெட் போடாமல் செல்பவர்களின் வாகனங்களை ஏன் பறிமுதல் செய்யக் கூடாது? என்கிற ஒரு கேள்வியைத்தான் சென்னை உயர் நீதிமன்றம் கேட்டது. இதைத் தொடர்ந்து,  டிராஃபிக் போலீஸார் மீண்டும் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளைப் பாய்ந்து பாய்ந்து பிடித்து வருகின்றனர். போலீஸாரின் பிடியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் சிக்கியதுதான் ஹைலைட்.. 
[Image: sub_inspector_14132.jpg]
சென்னையைப் பொறுத்தவரை, தற்போது இ-சலான் வழியாகத் தலைக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. வண்டி எண்ணை போலீஸார் வைத்திருக்கும் எந்திரத்தில் பதிந்தால் போதும் நம்மைப் பற்றிய அத்தனை விவரங்களும் அதில் காட்டிவிடும். அபராதத்தை கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாகக் கட்டலாம். கையில் பணமாகக் கொடுக்கக் கூடாது. இ-சலானைக் கொண்டு தபால் அலுவலர்கள் வழியாகவும் அபராதத்தைச் செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. சென்னை கமிஷனர் விஸ்வநாதனின் அதிரடி உத்தரவால் தலைக்கவசம் அணியாமல் ஓட்டும் வாகன ஓட்டிகள் இப்போது போலீஸாரிடமிருந்து தப்ப முடிவதில்லை. 


உச்சக்கட்டமாக ஹெல்மெட் அணியாமல் சென்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், பொது இடத்தில் வைத்து லெப்ட் , ரைட் வாங்கும் வீடியோ காட்சியும் வெளியாகி வைரலானது. நேற்று கடற்கரை சாலையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இணை கமிஷனர் தலைமையில் போலீஸார் ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார். சாதாரண டிராஃபிக் போலீஸார் இருந்தால் சல்யூட் அடித்து விட்டு விடுவார்கள். ஆனால், இங்கே இணை கமிஷனரே ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடித்துக்கொண்டிருந்ததால் அவர்  வசமாகச் சிக்கிக் கொண்டார். 
[Image: sub_inspector-1_14307.jpg]
சாமானியர்கள்போல அந்த சப் இன்ஸ்பெக்டரை ட்ரீட் செய்த இணை கமிஷனர், 'போ அங்கே வண்டியை நிப்பாட்டுனு' திட்டினார். மேலும், அந்த சப் இன்ஸ்பெக்டரை இணை கமிஷனர் நன்றாகத் திட்டுவதும் தெரிந்தது. இன்ஸ்பெக்டரை இணை கமிஷனர் திட்டுவதை பொதுமக்கள் பலரும் வியப்புடன் பார்த்தவாறே கடந்து சென்றனர். 
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 15-06-2019, 09:24 AM



Users browsing this thread: 98 Guest(s)