⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
பாகம் -13

நிகழ்காலம்

"ஏய் எரிமலை,7 மணிக்கு எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் வந்திடு,"வெள்ளை ஏஞ்சல் ஆராதனா வந்து சொல்ல

"ஏன் எதுக்கு,அன்னிக்கி ராயபுரம் சிவமணிக்கு கிட்ட மாட்டிவிட்டு நான் சிக்கி சின்னாபின்னமா ஆனது போதாதா,இப்ப இன்னொரு ரவுடி கிட்ட மாட்டிவிட போறீயா.. ம்ஹும்,நான் உன் கூட வர மாட்டேன்"

எரிமலை மிகவும் பயந்த சுபாவம் உள்ளவன்.

ஆராதனா தன் தெற்று பல் சிரிக்க "எரிமலை பேரில் மட்டும் இருந்தால் போதாது,நிஜத்தில் கொஞ்சமாவது இருக்கணும்"

"பேர் வச்சது என் அப்பா,தெரியாம வச்சுட்டாங்க.என்னை ஆளை விடு சாமி.என்னை ஆன்மீக அஞ்சல் ஆளவந்தார் கும்பகோணம் வரை வர சொல்லி இருக்கார்.நான் அங்கே தான் போக போறேன்."

"டேய் இப்போ நீ வரவில்லை என்றால் நான் சீப் எடிட்டர் கிட்ட போய் சொல்லி விடுவேன்."என ஆராதனா மிரட்டினாள்.

போய் சொல்லிக்கோ ஆரு,ஆனா நான் என் வேலையே போனாலும் உன் கூட வர மாட்டேன்.

ஆராதனா என்ன செய்வது?என் ஒரு நிமிடம் யோசித்தாள்.

அப்ப நீ வர மாட்டே..!மீண்டும் ஆராதனா கேட்டாள்.

வர மாட்டேன் வர மாட்டேன்.எரிமலை உறுதியாக சொல்ல

ம்ம்ம் உனக்கு கொடுத்து வைச்சது அவ்வளவு தான்..என ஆராதனா வலையை வீசினாள்.

ஏன்? என புரியாமல் கேட்டான்.

ஏய் லூசு,நான் எங்கே போக போறத உன்கிட்ட சொன்னேன்.!

"திருநெல்வேலி"என்றான் எரிமலை.

திருநெல்வேலியில் என்ன ஸ்பெஷல் எரிமலை.?

என்ன அல்வா தான்?.

ம்ம் கரெக்ட்,அந்த இருட்டு கடை அல்வா பற்றிய ரகசியத்தை தான் போய் விசாரித்து அதை பற்றிய ஒரு ஆர்டிக்கிள் எழுத சொல்லி இருக்கார் எடிட்டர்.அப்படியே சுடசுட திருநெல்வேலி அல்வா சாப்பிட இலவசமா நமக்கு கிடைக்கும்.

என்னது சுடசுட அல்வாவா...!எரிமலை வாயில் ஜொள்ளு வடிந்தது.

"ஆமாம்,சாப்பிட மட்டும் இல்ல.பார்சலும் கிலோ கணக்கில் கட்டி தருவாங்க.பின்ன பிரஸ் என்றால் சும்மாவா"ஆராதனா ஆசை காட்டினாள்.

மேலும்"ஆனா உனக்கு கொடுத்து வைக்கல எரிமலை.சரி நான் உனக்கு பதில் நம்ம சுடலை முத்துவை கூட்டிட்டு போறேன்.என ஆராதனா திரும்பி நடந்தாள்.

"ஆரும்மா..."என்று எரிமலை அழைத்தான்.

என்ன தீடீரென்று மரியாதை எல்லாம் பலமா இருக்கு?என திரும்பி கேட்டாள்.

"அது எப்பவுமே உன் மேல மரியாதை இருக்கு ஆரும்மா,நான் தான் அதை வெளிப்படுத்தி கொள்வது இல்லை.என்னை உன்கூட திருநெல்வேலிக்கு கூட்டிட்டு போயேன் பிளீஸ்"என கெஞ்சினான்.

"அப்போ அந்த ஆன்மிக அஞ்சல் ஆளவந்தார் கூட போறேன் என்று சொன்னே.."

"அந்த ஆளு கூட போனால் பொங்கல்,புளியோதரை மட்டும் தான் கிடைக்கும்.நான் உன் கூட வரேன்."

சரி அப்ப  சாயங்காலம் எக்மோர் வந்திடு.நெல்லை எக்ஸ்பிரஸ் A1 கோச்.

"அப்புறம் ஆரும்மா,இன்னொரு முக்கியமான விசயம்.திருநெல்வேலியில் பரோட்டா,சால்னா சூப்பரா இருக்கும்.அதை மட்டும் மறக்காமல் எனக்கு வாங்கி கொடு."

"நான் வாங்கி கொடுத்தாலும்,சாப்பிடும் நிலையில் நீ இருப்பியா என்று பார்க்கலாம்"என்று ஆராதனா முணுமுணுத்தாள்.

பாதி வார்த்தைகள் மட்டும் எரிமலை காதில் விழ,"என்னது?"என எரிமலை பதறினான்.

"ஒன்னும் இல்லை எரிமலை,நீ போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு நான் வாங்கி தரேன்" என்று சொன்னேன்.

அப்ப ஓகே என்று எரிமலை தன் 32 பல்லும் தெரிய இளித்தான்.

வாடா வா,நான் கூட்டிட்டு போக போற இடத்துக்கு போன அப்புறம் பயத்தில் உனக்கு வாந்தி,பேதி புடிங்கிக்க போகுது.அப்புறம் ஏது பரோட்டா,சால்னா என்று சிரித்து கொண்டே ஆராதனா வெளியேறினாள்.

காலை 7 மணி  நெல்லை எக்ஸ்பிரஸில் இருந்து ஆராதனா,எரிமலை உதிர்ந்தார்கள்.

ஆராதனா உடனே  ஒரு நம்பருக்கு கால் செய்தாள்.

மறுமுனையில் ,"நான் பார்க்கிங் ஏரியாவில் தான் நின்று கொண்டு இருக்கேன்.நீங்க வாங்க மேடம்"

எரிமலை நீ காஃபி சாப்பிட்டு பார்க்கிங் ஏரியா வந்து விடு.நான் அங்கே வெயிட் பண்றேன்.

ஓகே ஆரும்மா.

வெளியே நின்று கொண்டு இருந்தவனிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.

மேடம், நீங்க வேற பார்க்க ரோஜாப்பூ கலரில் சும்மா தகதக வென்று  மின்றீங்க.நீங்க போக போகிற இடம் ஒரு காமுகன் பேயா சுத்துற இடம்.கண்டிப்பாக உங்களை பார்த்தா விட மாட்டான் .அது உங்களுக்கு நல்லது இல்ல.

இதை கேட்ட ஆராதனா சிரித்தாள்.

இங்கே பாருப்பா,எனக்கு தெரிந்து யாராவது கடத்தல்காரர்கள் தான் கடத்திய பொருட்களை அங்கே பதுக்கி வைத்து இருப்பார்கள்.அதை பாதுகாக்க பேய்,பிசாசு என்று புருடா கட்டி விட்டு இருப்பார்கள்.எனக்கு இந்த பேய்,பூதம் மேல் எல்லாம் துளி கூட நம்பிக்கை கிடையாது.அங்கு நடக்கும் தப்பை வெளி கொண்டு வர வேண்டியது தான் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளரின் வேலை.

சொன்னா கேட்க மாட்டேன்றீங்க,உங்களுக்கு டிரைவிங் தெரியுமா?

ம்,தெரியுமே.

அப்ப ஒன்னு பண்ணுங்க மேடம்,நான் அடிவாரம் வரை உள்ள சிங்கம்புணரி கிராமம் வரை தான் வருவேன்.நீங்க மலை மேல் உள்ள கோட்டைக்கு வண்டியை தனியா ஓட்டிட்டு போங்க.

சரி நான் பார்த்துக்கிறேன்.என் கூட வந்த ஆளு வர்றான்.அந்த கோட்டை பற்றி எதுவும் அவனிடம் உளறி வைக்காதே.அவன் ஏற்கனவே சரியான பயந்தாங்கொள்ளி.முதலில் எங்களை நல்ல ஓட்டல் கூட்டிட்டு போ.refresh ஆன பிறகு அங்கே போகலாம்.

சரி மேடம்.

எரிமலை வந்த உடன் "போலாமா எரிமலை?"என ஆராதனா கேட்க,அவனும் அல்வா மேல் இருக்கும் ஆசையில் ஆர்வமாக "ரெடி" என்று சொன்னான்.

சிங்கம்புணரி கிராமம் செல்லும் வழியில் இருபக்கமும் இயற்கை அற்புதமாக இருந்தது.வெள்ளி சரிகை போன்ற நீரோடைகளும்,பச்சை பசேல் என்ற புல்வெளிகளும் கண்ணை கவர்ந்தன.

"ஆரும்மா,இருட்டு கடை அல்வா நெல்லையப்பர் கோவில் வாசலில் தானே இருக்கு,ஆனால் நீ வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே?"எரிமலை கேட்டான்.

அது ஒன்னும் இல்லை எரிமலை,அங்கே இருப்பது வெறும் கடை தான்.தயாரிப்பது எல்லாம்,மேலே தாமிரபரணி ஆறு உற்பத்தி ஆகும் இடத்தில் தான்.அங்கே தான் போய்ட்டு இருக்கோம்.

சிங்கம்புனரி கிராமம் வந்து சேர,மதியம் 3 மணி ஆகி விட்டது.

எரிமலை நீ இங்கேயே இரு.நான் ஊரில் போய் கொஞ்சம் விசாரித்து விட்டு வருகிறேன்..

ஆராதனா ஊரில் சென்று விசாரிக்க,எல்லோரும் அந்த மாயமலை பேரை கேட்டாலே பயந்து நடுங்கினர்.

அதில் ஒரு பெரியவர் மட்டும் தைரியமாக அங்கு பார்த்ததை கூற தொடங்கினார்.

அங்கு நிறைய பேய்கள் நடமாடுகின்றது தாயி.அவைகள் பல நூற்றாண்டுகளாக முக்தி அடையாமல் தவித்து வருகின்றன.அதில் தலைமை பேயான காத்தவராயன் ,மதிவதனியின் மறு பிறப்புக்காக காத்து இருக்கான்.தினமும் அந்த பேய்கள் இரவில் ஊளை இடும் சத்தம் அடிவாரம் வரை கேட்கிறது எனவும் கூறினார்.

"ஐயா,நீங்க அங்கே போய் இருக்கீங்களா."என ஆராதனா கேட்டாள்.

ஒரு நாற்பது வருஷம் முன்னாடி,நான் மலையில் ஆடு மேய்ப்பேன் தாயி.அப்போ என்னோட ஒரு ஆடு மட்டும் அந்த கோட்டைக்குள் போய்டுச்சு.அதை எப்படியாவது வெளியே கொண்டு வர போனேன்.உள்ளே போனால் ஆடு மட்டும் துண்டு துண்டாக சிதறி கிடந்தது.உடனே ஓடி வந்துட்டேன்.அப்புறமா அந்த பக்கம் போறதே இல்ல.

"உங்களை தவிர,வேறு யாராவது அங்கே போய் இருக்காங்களா ஐயா."

வெள்ளைக்காரன் காலத்தில் அந்த கோட்டைக்கு போவதற்கு ஆற்றின் மேல் ஒரு பாலம் போட்டாங்க தாயி.அங்கே ஒரு வெள்ளைக்கார குடும்பம் தங்கி இருந்தாங்க,ஆனா தங்கிய இரண்டே நாளில் அவங்க குடும்பத்தில் அமானுஷ்யமான முறையில் 4 பேர் அங்கே செத்து போய் இருக்காங்க.எத்தனை எத்தனையோ மந்திரவாதிகள் வந்து பூஜை பண்ணியும் ஒன்னும் நடக்கல.உடனே அந்த வெள்ளைக்காரங்க காலி பண்ணி ஓடிய பிறகு யாரும் அந்த பக்கம் தலை வைத்து கூட படுப்பது இல்லை.

ஆராதனாவிற்கு ஆர்வம் அதிகமாகி விட்டது.என்ன தான் அங்கே இருக்கிறது என்று வெளியுலகத்திற்கு காட்டுவது என முடிவெடித்து கொண்டாள்.

காரில் ஏறி கொண்டாள். மாயமலை நோக்கி காரை செலுத்தினாள்.

ஆரும்மா, எங்கே அந்த டிரைவர்.?எரிமலை கேட்க

ஆராதனா பதிலுக்கு "அவனோட சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க,அவன் பார்க்க போய் இருக்கான்.அதற்குள் நாம் மேலே போய் தகவல் சேகரித்து வந்து விடலாம்.

போகும் வழியில் ஒரு புலி பாறையின் மேல் படுத்து இருப்பதை எரிமலைக்கு காண்பிக்க அவன் அடிவயிற்றில் அமிலம் சுரந்தது.

மேலே ஏற ஏற செல் ஃபோன் சிக்னல் விட்டு போனது.

"ஏன் ஆரும்மா,இந்த மலை மேலேயா அல்வா தயாரிக்கறாங்க"

"பின்னே ஆறு மலை மேல தானே உற்பத்தி ஆகும்,அந்த தண்ணீர் எடுத்து தான் அல்வா தயார் செய்யறாங்க."

மாயமலை இனிதே வரவேற்கிறது என்ற வளைவு வரவேற்றது.பாலத்தை கடந்து உள்ளே கோட்டை வாசலில் காரை நிறுத்தினாள் ஆராதனா.

மணி நான்கு ஆகி விட்டு இருந்தது.எப்படியாவது இருட்டுவதற்குள் விவரங்களை சேகரித்து கொண்டு வெளியே வந்து விட வேண்டும் என நினைத்தாள்.

பாழடைந்த கோட்டையை பார்த்து எரிமலை பயத்தில் கத்தினான்.

"ஏய் ஆராதனா உண்மையை சொல்லு, எதுக்கு இங்கே கூட்டி வந்து இருக்கே."

ஆராதனா உண்மையை சொல்ல,எரிமலை கதிகலங்கி விட்டான்.

"அடிப்பாவி என்னை இப்படி வம்படியா வந்து மாட்டி விட்டுட்டீயே,பேய் என்றால் இருந்த இடத்திலேயே ஒன்னுக்கு விட்டு விடுவேன்.ஒழுங்கா என்னை கீழே கொண்டு போய் விட்டு விடு.

அப்பொழுது ஒரு பயங்கர சத்தம் கேட்டது.அதை கேட்டு இருவரின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.

ஆராதனாவின் மினுமினுக்கும் தேகத்தின் அழகை பார்த்து ஆவிக்கும் ஆசை வந்தது. காற்றின் வேட்டை ஆரம்பம்

[Image: images-10.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: காற்றாய்(ஆவியாய்)வந்த அசுரனின் வேட்டை(மேட்டர்)♥️♥️♥️ - by Geneliarasigan - 20-12-2023, 11:43 PM



Users browsing this thread: 125 Guest(s)