ராஜாக்கு ஏத்த ராணி
#18
அம்மா லதாவை உற்றுப் பாத்து நீ யாரு மா இங்க என்ன பண்ற

லதா: ஆண்ட்டி நானும் ராஜாவும் லவ் பண்றோம்.
அம்மா: என்ன சொல்ற , டேய் ராஜா இவ சொல்றது உண்மையா

நான்: ஆமா மா நாங்க லவ் பண்றோம்
அம்மா எங்களை வீட்டிற்குள் அழைத்து செல்ல நாங்கள் சோஃபாவில் உட்கார அம்மா வரிசையாக கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.
அம்மா லதா குடும்பத்தை பற்றியும் எங்கள் காதல் பற்றியும் கேட்டு கடைசியில் எங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்தாள்.
ஆனால் முதலில் இரண்டு பேரும் நன்றாக படித்து முடியுங்கள் பிறகு எங்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறினாள்.

எனக்கும் லதா விற்கும் மிகுந்த சந்தோஷம்.
அம்மா: எங்கள் குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் நீதான் மா என்று அவளை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டால்.
பின் மல்லிகை பூவை எடுத்து லதா தலையில் வைத்து விட்டாள் அம்மா.
பின் லதா அங்கிருந்து கிளம்ப அம்மா என்னிடம் வந்து ,
அம்மா: டேய் ராஜா, நீ லவ் பண்ற அளவுக்கு பெரிய பையனா வளந்துட்டியா, நீ நல்ல படியா படிச்சு முடிச்சு, லதாவை திருமணம் செஞ்சு சந்தோஷமா இருந்தால் அதுவே போதும் எனக்கு.
எந்த காரணத்துக்காகவும் லதா வை விட்டு பிரிய கூடாது.

(என் காதலை மறுப்பேதும் சொல்லாமல் அம்மா ஏற்றுக்கொண்டது சந்தோஷமாக இருந்தது)

நான்: அம்மா எனக்கு உங்களோட சம்மதம் கிடைச்ச அப்பறம் நான் லதாவை மிஸ் பண்ண மாட்டேன் மா. இது சத்தியம்

பின் நான் படிப்பில் கவனம் செலுத்தி கல்லூரியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். லதாவும் பர்ஸ்ட் கிளாசில் தேர்ச்சி பெற்றாள்.

அம்மா, நான், லதா மூன்று பேரும் மிகவும் சந்தோஷமாக இருந்தோம்.

அம்மாவும் எங்களின் காதலை லதா வீட்டில் எடுத்து சொல்லி திருமணம் செய்வதாக சத்தியம் செய்தாள்.
அன்று இரவு என் அப்பா வீட்டிற்கு வந்தார். நான் அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு என் ரூமிற்கு தூங்க சென்றேன்.

சிறிது நேரத்தில் என் அப்பாவின் சத்தம் அதிகமாக கேட்டது. நான் எழுந்து கதவின் அருகில் சென்று காதை வைத்து Shenzhen.அப்பா: என்னடி நெனச்சுட்டு இருக்கிங்க ரெண்டு பேரும், அவன் யாரோ வேற சாதி பொண்ண லவ் பண்ணுவானாம், நீ அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறியா, என்னடி இதெல்லாம்
அம்மா: என்னங்க இப்படி பேசுறிங்க, நம்ம பையன் சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்.

அப்பா: அதுக்கு வேற சாதி பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க சொல்றியா

அம்மா: ஏங்க அவன் ஆசைபட்டுடான் இப்ப போய் இப்படி சொல்றிங்க.

அப்பா: அவனுக்கு நம்ம சாதியில நல்ல பொண்ணா பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.

அம்மா: ஏங்க நான் சொல்றது உங்களுக்கு புரியலையா, அந்த பொண்ணு கிடைக்காத வருத்ததுல நம்ம பையன் எதாவது பண்ணிகிட்டா நாம என்னங்க பண்றது, நமக்கு இருக்குறது ஒரே புள்ள
அப்பா: நான் செத்தாலும் அவங்க கல்யாணம் நடக்காது.

அம்மா: ப்ளீஸ்ங்க நம்ம பையன் வாழ்க்கை
இது, நல்லா யோசிச்சு முடிவு எடுங்க
(அப்பா உடனே கோபமடைந்து அங்கு இருந்த பொருட்களை தூக்கி அடித்து நொறுக்கினார்)

அப்பா: இந்தா டி நான் சொன்னது சொன்னது தான். என்ன மீறி இந்த கல்யாணம் எப்படி நடக்குதுனு பாக்குறேன். நான் இதுக்காக எந்த எல்லைக்கும் போவேன்.

இதுவரை அப்பா இதுபோல் கோபப்பட்டு அம்மா பார்த்ததில்லை. அம்மா அப்பாவின் கோபத்தை பார்த்து அழுதாள்.
( அப்பா ரூமின் உள்ளே சென்று கதவை வேகமாக சாத்தினார்)
அம்மா சிறிது நேரம் கழித்து என் ரூமிற்குள் நுழைந்தாள்.

நான் பெட்டில் படுத்து இருக்க என் பக்கத்தில் வந்த அம்மா என்னை பார்த்து.

அம்மா: ராஜா ராஜா தூங்கிட்டியா

நான்: இல்ல மா

அம்மா: நடந்ததெல்லாம் கேட்டியா

நான்: கேட்டேன் மா ( என் கண்ணில் நீர் வழிய)

அம்மா: ராஜா அழாதடா அம்மா நான் இருக்கேன் நீ நினைச்ச மாதிரி லதா தான் உன் பொண்டாட்டி.
நான்: எப்படி மா அப்பா தான் ஒத்துக்க மாட்டாரே
[+] 1 user Likes Devid raja's post
Like Reply


Messages In This Thread
RE: ராஜாக்கு ஏத்த ராணி - by Devid raja - 09-12-2023, 03:00 PM



Users browsing this thread: 3 Guest(s)