காவியாவின் அடுத்த பயணம்(completed)
#95
காவியா நன்றாக குளித்து ஒரு பருத்தி புடவை உடுத்தி கொண்டு ஜெய்தீப் வருவதற்காக வாசலிலேயே காத்திருந்தாள். சரியாக எட்டு மணி ஆகும் சமயம்

ஜெய்தீப் கார் அவள் வாசல் அருகே வந்து நின்றது. எப்போவும் போல ஜெய்தீப் பார்த்ததும் உண்மையிலேயே காவியாவிற்கு ஒரு மயக்கம் ஏற்ப்பட்டது .

காவியா ஜெய்தீப் வண்டியை விட்டு இறங்குவானா என்று சில நிமிடம் காத்திருக்க அவன் இறங்க போவதில்லை என்று அறிந்து டிரைவர் இருக்கை பக்கம்

செல்ல அவள் நினைத்தது போல அவன் தான் டிரைவ் பண்ணி வந்த்திருந்தான். காவியா ஒரு செயற்கை புன்னகையுடன் கை குலுக்க கையை நீட்ட அவன் கை குலுக்காமல்

கண்ணாலேயே உள்ளே ஏறு என்று சைகை செய்ய காவியா ச்சே என்று கூனி குறுகி வேறு வழி இன்றி முன் கதவை திறந்து இருக்க காரில் ஏறிக்கொண்டாள்.

இதற்கு முன் எல்லாம் அவளிடம் ஜெய்தீப் எங்கே போகலாம் என்று கேட்டு தான் போகும் இடத்தை முடிவு செய்வான் ஆனால் இம்முறை ஒன்றும் சொல்லாமல் காரை செலுத்தினான்.

காவியாவிற்கு அந்த கணமே காரில் இருந்து கதவை திறந்து கொண்டு ஓடும் போதே வெளியே குதித்து இறந்து விட வேண்டும் என்று எண்ணம் வந்தாலும் அவளை வேறு ஏதோ அமைதியாய்

இரு என்று சொல்லி அவள் மனதை அமைதி படுத்தியது.

மெதுவாக பேச்சை தொடுங்கும் வகையில் " ஜெய்தீப் உங்க மனைவி பெண் எப்படி இருக்காங்க என்னை பற்றி எப்போதாவது பேசுகிறார்களா உங்க பெண்ணிற்கு என் நினைவு இருக்கிறாதா" கேட்டு முடித்து

அவனை பார்க்க ஒரே வார்த்தையில் அது ஏன் இப்போ அது பர்சனல் விஷயம் பேச வேண்டாம் என்று முற்றுபுள்ளி வைத்தான்.

காவியா அடுத்து என்ன நடக்க போகுது என்று புரியாமல் அமர்ந்து இருக்க ஜெய்தீப் காரை விமான நிலையம் அருகே இருக்கும் ஒரு பெரிய ஹோட்டல் உள்ளே செலுத்தினான்.

காவியா இது வரை இந்த ஹோட்டல் வந்தது இல்லை. ஆனால் காரை பார்த்ததும் அங்கே இருந்த செக்யூரிட்டி குடுத்த மரியாதையை பார்த்த போது

ஒன்று ஜெய்தீப் இங்கு அடிகடி வருவதாக இருக்கணும் அல்லது அவனுக்கு இந்த ஹோட்டலில் வியாபார சம்பந்தம் இருக்க வேண்டும் என்று புரிந்துக்கொண்டாள்.

ஜெய்தீப் நேராக போர்டிகோ செல்லாமல் பக்கத்தில் இருந்த ஒரு வழியில் சென்று ஒரு சிறிய வீடு மாதிரி இருந்த காட்டேஜ் அருகே சென்று நிறுத்தினான்.

உடனே அங்கே இருந்த செக்யூரிட்டி கார் கதவை திறந்து செல்யூட் செய்ய ஜெய்தீப் காரில் இருந்து இறங்கி கார் சாவியை அவனிடம் குடுத்து முன்னே நடக்க

வேறு வழி இல்லாமல் காவியா அவனை பின் தொடர்ந்தாள். இது அவளுக்கு பெருத்த அவமானமாக இருந்தது ஏதோ ஒரு விலை மாது ஆடவனை அவன் அழைத்து செல்லும்

அறைக்கு பின் தொடர்வது போல் இருந்தது... ஆனால் அதை பற்றி கவலை படும் நிலையில் காவியா இப்போது இல்லை என்பதை புரிந்துக்கொண்டு சென்றாள்.

அந்த குடிலுக்குள் சென்றதும் ஜெய்தீப் முதன் முறையாக திரும்பி பார்த்து வா என்றான் காவியாவிற்கு இன்னமும் அவமானம் அதிகமாகியது.

முதல் அறை கடந்து உள்ளே சென்றதும் அவள் வியப்படையும் வகையில் ஒரு நட்சத்திர ஹோட்டல் பார் போல அமைப்பில் அங்கே ஒரு பார் இருக்க ஜெய்தீப்

அதையும் தாண்டி செல்ல காவியா அடுத்த அறை என்ன என்பதை நுழையும் முன்னமே தெரிந்து கொண்டாள். அது ஒரு அரண்மனை உள்ளே இருக்கும் அந்தபுற படுக்கை

அறை போல மிக பெரியதாக நேர்த்தியாக இருந்தது.

ஜெய்தீப் ஒரு சோபாவில் அமர காவியா அவளும் அமர்வதா இல்லை அவன் சொல்லும் வரை நிற்பதா என்று திகைக்க ஜெய்தீப் அவளை பார்த்து சிட் டௌன் என்று சொல்ல

காவியா ஜெய்தீப் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தாள். கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு ஜெய்தீப் சொல்லு காவியா என்ன திடீரென்று என் நினைவு உனக்கு என்றதும்

அது வரை அடிக்கி வைத்திருந்த அவமானத்தால் ஏற்ப்பட்ட சோகம் ஒன்று சேர்ந்துகொள்ள வாய் விட்டு அழ துவங்கினாள் காவியா.
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 14-06-2019, 10:55 AM



Users browsing this thread: 5 Guest(s)