Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் !
#15

கப்பல் போன்ற பிரமாண்டமான ஒரு பெரிய கார் அந்த கம்பெனிக்கு முன்பாக சரக் என்று ப்ரேக்கிட்டு வந்து நின்றது 

உள்ளே எம்.டி. ரூம் உள்ளே அமர்ந்து இருந்த அர்ஜுன் சி.சி.டிவி மானிட்டரில் பார்த்து கொண்டு இருந்தான் 

காரில் இருந்த டிரைவர் இறங்கி வேகமாக ஓடி வந்து பின் பக்க கார் கதவை திறந்து விட்டான் 

மிஸ்ஸர்ஸ் பவித்ரா ரகுநாதன் கம்பீரமாய்.. படு ஸ்டைலாய்.. கவர்ச்சி கலக்கலாய் இறங்கினாள்  

அலுவலக வாசலில் நின்றிருந்த சென்ரி விரைந்து நின்று சல்யூட் அடித்தான் 

பவித்ரா அவனை ஒரு அலட்சிய பார்வை பார்த்து விட்டு அலுவலகத்துக்கு உள்ளே நடந்தாள்  

அவள் பார்வையில் ஒரு பெரும் பணக்கார முதலாளியின் மனைவி என்ற திமிர் தெரிந்தது 

அவள் நடையில் ஒரு அரேபிக் குதிரை நளினமும் தினவும் இருந்தது 

முகமும் உடல்வாகும் அப்படியே அவள் பெயருக்கேற்ப அச்சு அசல் பழைய ஆண்ட்டி நடிகை பவித்ரா லோகேஷ் போலவே இருந்தாள் 

அவள் ஆபீஸ் கேபின்களை கடந்து வரவர வரிசையாக எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் வைத்தனர் 

எல்லோருக்கும் தன் அழகிய கண் அசைவிலேயே பதில் வணக்கம் செலுத்தி விட்டு எம்.டி. ரூக்குள் நுழைந்தாள் 

அர்ஜுன் தன்னையும் அறியாமல் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தான் 

முன்னாள் முதலாளியின் மனைவி என்ற மரியாதையும் பயமும் அவன் கண்களில் தெரிந்தது 

உக்காரு.. உக்காரு.. என்று தன்னுடைய ஆள்காட்டி விரலை அவன் முன்பாக காட்டி உக்கார சொன்னாள் 

மொத்த திமிரின் உருவமாக இருந்தாள் பவித்ரா 

இல்ல இருக்கட்டும் மேடம்.. 

நீதான் அர்ஜுன்.. ரைட்? என்றாள் அவனை பார்த்து.. 

பார்வையில் ஒரு அக்கினி தெரிந்தது.. 

அர்ஜுன் எச்சில் விழுங்கினான்.. ஆம்.. ஆமாம் மேடம்.. 

இப்போதுதான் பவித்ராவை அவன் இவ்வளவு அருகாமையில் பார்க்கிறான்.. 

கம்பெனியில் எப்போதாவது ஆண்டு விழா அல்லது தொழிலாளர் தின விழாவில் மட்டும்தான் அவள் சீப் கெஸ்ட் போல அந்த அலுவலகத்துக்கு வருவாள்.. 

அப்போது ஓரிரு முறை தூரத்தில் இருந்து கூட்டத்தோடு கூட்டமாக பவித்ராவை பார்த்து இருக்கிறான்.. 

அப்போது அவன் வேலைக்கு சேர்ந்த புதிது.. சின்ன பையன் 

அதன் பிறகு 

இப்போதுதான் முதல் முறை இப்படி நேருக்கு நேர் பார்க்கிறான்.. இவ்வளவு அருகில் பார்க்கிறான் 

அவள் சுண்டி சுண்டி விரல்களில் சொடக்கு போட்டு பேசிய ஸ்டைலை கவனித்தான் 

பழைய ரஜினி படம் மன்னனில் வரும் விஜய சாந்தியையும் படையாப்பாவில் வரும் நீலாம்பரியையும் கலந்த திமிரிலும்.. கம்பீரத்திலும் இருந்தாள் பவித்ரா 

எத்தனை மணிக்கு பிளைட்.. என்று கேட்டாள் 

அர்ஜுன் நடுக்கத்துடன் படபடப்புடன் தன் கையில் இருந்த பிளைட் டிக்கட்டை பார்த்து நேரம் தேடினான்.. 

12.30 மேம்.. என்றாள் பின்பக்கம் நின்று கொண்டு இருந்த காரியதரிசி.. 

பவித்ரா தன்னுடைய அழகிய கைக்கடிகாரத்தை பார்த்தாள் 

வைரமும் பிளாட்டினமும் கலந்த லேடீஸ் வாட்ச்.. 

போன பிறந்த நாளுக்கு நகுநாதன் அவளுக்கு ஹாங்காங்கில் இருந்து 2 லட்சத்துக்கு வாங்கி பிரசண்ட் பண்ணது 

இப்போ மணி 11.00 ஆகுது.. இப்போ கிளம்புனாதான் சரியா இருக்குமா.. 

ம்ம்.. ஆமாம் மேம்.. செக்கிங்.. எல்லாம் முடிஞ்சி பிளைட் உள்ள போய் உக்கார சரியா இருக்கும் மேம்.. என்றாள் காரியதரிசி 

அர்ஜுன்.. என்று சொல்லி அர்ஜுன் பக்கம் திரும்பினாள் பவித்ரா 

கண்களில் இன்னும் கோப கனல்கள்.. 

வா.. போலாம்.. என்று சொல்லி வேகமாக அந்த எம்.டி அறையை விட்டு வெளியேறினாள் 

அர்ஜுன் நடுக்கத்துடன் ஒரு ஹச் நாய் போல அவள் கட்டளைக்கு கீழ்ப்படிந்து அவளை பின்தொடர்ந்து ஓட ஆரம்பித்தான் 

தொடரும் 4
[+] 6 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் ! - by vibuthi viyabari - 02-12-2023, 06:11 PM



Users browsing this thread: