கதையெழுத விருப்பம் உள்ளவர்கள் இதனை பார்க்கவும் !!!
#28
வித்தியாசமான நல்ல கதைகள் தொடரப்படாமல் நிறுத்தப்பட ஒரே காரணம் படிப்பவர்களின் அலட்சியம் தான்.

படிக்காத கதைக்கும், பிடிக்காத கதைக்கும் விமர்சனம், விருப்பம் தெரிவிக்காமல் இருப்பது சரி தான். ஆனால் பலரும் கதையை ரசித்து படித்தாலும் அப்டேட் போட்டவுடன் முதல் வேலையாகப் போய் படித்தாலும் கமெண்ட்ஸ், லைக்ஸ் போட மாட்டார்கள்.

இங்கே கதை எழுதுபவர்கள் காசுக்காக எழுதுவதில்லை. கமெண்ட்ஸ் லைக்ஸ் வராவிட்டால் பின் எதற்கு அவர்கள் எழுத வேண்டும்? போகப் போக உற்சாகம் குறைந்து விடுகிறது. எந்த வரவேற்பில்லா விட்டாலும் பத்து வரி எழுதுபவர்கள் போல் தரமாக எழுதுபவர்கள் தொடர்ந்து எழுத முடியாது. அதனால் ஒரு கட்டத்தில் நாம் ரசிக்கும் கதைகள் பாதியில் நின்று விடுகின்றன.

இதில் இன்னொரு கொடுமை என்ன என்றால் தலைப்பை கூட எழுத்துப்பிழை இல்லாமல் எழுத தெரியாதவர்கள் கதைக்கு சூப்பர் ஸ்டார்ட், அடுத்த அப்டேட் சீக்கிரம் என்று சிலர் உடனடியாக கமெண்ட் போடுவது தான். சிலர் எப்போதோ நின்று போன கதைக்கு  அடிக்கடி கமெண்ட் போடுவார்கள். ஒழுங்காக தற்போது எழுதப்பட்டு வரும் கதைக்கு கமெண்ட் போட அவர்களுக்கு கவுரவம் விடாது. இந்த நல்ல கதைக்கு கமெண்ட் போட வேண்டுமானால் இது நிறுத்தப்பட வேண்டும். பின் சில காலம் கழித்து தான் காத்திருக்கிறோம் என்றும் அப்டேட் ப்ளீஸ் என்றும்  கமெண்ட் போட்டு இதையும் படித்திருப்பதை தெரியப்படுத்துவார்கள். இது என்ன சைக்காலஜியோ தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
[+] 2 users Like dreamsharan's post
Like Reply


Messages In This Thread
RE: கதையெழுத விருப்பம் உள்ளவர்கள் இதனை பார்க்கவும் !!! - by dreamsharan - 30-11-2023, 03:28 PM



Users browsing this thread: 8 Guest(s)