Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் !
#6
இதுவரை அழுக்கு காக்கி சட்டையை மாட்டி வளம் வந்து கொண்டு இருந்த அர்ஜுன்.. இப்போது கோட்டும் ஷூட்டும் போட்டு கொண்டு.. எம்.டி. அறையில்.. அந்த உயர்ரக குஷன் சீட்டில் முதலாளியாக அமர்ந்து இருந்தான் 

இது போன்ற குஷன் இருக்கையில் அவன் அமர்ந்ததே இல்லை.. 

சின்ன குழந்தை போல அந்த சீட்டில் உக்காந்து துள்ளி துள்ளி குத்தித்து விளையாடி பார்த்தான்.. 

செம வாழ்க்கை வாழறான்ப்பா.. இந்த முதலாளி.. என்று நினைத்து கொண்டான் 

அப்போது..

சார் ஹாலிக்ஸ் ஆர் போன்விட்டா.. என்று காரியதரிசி பணிவாக அவன் முன் வந்து நின்று கேட்டாள் 

டி பிரேக் நேரத்தில் வெறும் சிங்கிள் கிளாஸ் டீயும் தம்மும் மட்டுமே அடித்து அடித்து பழகியவனுக்கு.. 

பூஸ்ட் ஹார்லிக்ஸ் போன்விட்டா.. என்று சாய்ஸ் கேட்கவும்.. ஒரே நாள்தான் இந்த சீட்டில் இருக்க போகிறோம்.. 

எதற்கு ஏதாவது ஒன்றை குடிக்கவேண்டும்.. எல்லாத்தையும் கலந்து அடிப்போம்.. என்று முடிவெடுத்தான் 

ஹார்லிக்ஸ்.. பூஸ்ட்.. போன்விட்டா.. காம்ப்ளான்.. எல்லாத்தையும் ஒரு பெரிய கிளாசில் கலந்து எடுத்துட்டு வாங்க.. என்று அவளை பார்த்து சொன்னான் 

அதை கேட்டதும் அவள் முகம் சுளித்தாள்  

என்னடா இது.. இவன் இப்படி கேடுகெட்டவனா இருக்கான்.. என்று நினைத்து நெத்தியில் அடித்து கொண்டாள்  

சரி எடுத்து வர்றேன் சார்.. என்று சொல்லிவிட்டு அந்த ரூம் விட்டு வெளியே போனாள் 

அந்த எம்.டி. ரூமை சுற்றி பார்த்தான் 

நான்கு பெரிய கடிகாரங்கள் இருந்தன.. 

அது ஒரு இன்டர்நெஷனல் கம்பெனி.. 

அதனால் 4 நாடுகளின் நேரத்தை ஒரே நேரத்தில் பார்ப்பதற்கு 4 கடிகாரங்கள் இருந்தன 

நியூ யார்க்.. சிட்னி.. பாரிஸ்.. லண்டன்.. என 4 நாடுகளின் நேரத்தையும் ஒரே நேரத்தில் காட்டியது 

யப்பா.. கிழவன் என்னமா ஒரு பெரிய பிசினெஸ்மேனா இருந்திருக்கான்.. 

ஆனா போனஸ் கேட்டா குடுக்க மாற்றான்.. 

கஞ்சப்பய.. கஞ்சப்பய.. என்று ரகுநாதனை மயிண்டு வாய்ஸில் திட்டினான் 

ட்ரிங் ட்ரிங்.. 
ட்ரிங் ட்ரிங்.. 

என்று போன் ஒலித்தது.. 

ஹலோ.. எம்.டி. ஸ்பீக்கிங் என்றான் அர்ஜுன் ஸ்டைலாக.. 

ரகுநாதன் சார்.. நம்ம லண்டன்ல இருந்து இந்தியாவுக்கு வந்த நம்ம சரக்கு கப்பல் கடல்ல கவுத்துடுச்சாம்.. 

இதனால நமக்கு இன்னைக்கு மட்டும் 200 கோடி நஷ்டம் சார்.. என்ற ஒரு போன் கால் செய்தி வந்தது 

ஐயோ.. முதல் கால்.. முதல் போன்.. ஆரம்பமே.. நஷ்ட்டமா.. அர்ஜுன் அதை கேட்டு அதிர்ந்தான் 

தொடரும் 2
[+] 4 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் ! - by vibuthi viyabari - 27-11-2023, 02:18 AM



Users browsing this thread: