Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் !
#2
ரகுநாதன் பெரிய மில் பேக்டரி முதலாளி 

வயது எப்படியும் 60தை தொட்டு கொண்டு இருந்தது 

அவர் மில் தொழிற்சாலையில் 1000 கணக்கான தொழிலாளிகள் வேலை செய்து கொண்டு இருந்தார்கள் 

அதில் அர்ஜுனும் ஒருவன்.. 

20 வயதிற்குள் இருக்கும் துடிப்பான இளைஞன் அவன்

ரகுநாதன் செம டென்ஷனில் இருந்தார் 

அதற்க்கு காரணம் இந்த அர்ஜூன் 

மில் வாசலுக்கு முன்பு தன்னுடைய யூனியன் ஆட்களை வைத்து போனஸ் கொடுத்தால்தான் ஆட்களை மில்லுக்குள் அனுப்புவேன்.. என்று போராட்டம் நடத்தி கொண்டு இருந்தான் 

ஏழை தொழிலார்களின் ரத்தைத்தை உறிஞ்சி குடிக்கும் முதலாளி வர்க்கமே.. ஒழிக ஒழிக.. என்று அவன் ஆட்கள் கத்தி கோஷம் போட்டு கொண்டு கெலாட்டா பண்ணி கொண்டு இருந்தார்கள் 

முதலாளி ரகுநாதன் பொறுமை இழந்தார் 

யூனியன் தலைவன் அர்ஜுனை மட்டும் உள்ள கூப்பிடு.. 

அவனோடு சமரசம் பேசுவோம்.. என்று சொல்லி தன்னுடைய காரியதரிசியை அனுப்பினார் 

அர்ஜுன் அவர் ரூமுக்கு வந்தான் 

வாப்பா.. அர்ஜுன்.. உக்காரு.. என்றார் ரகுநாதன் 

நான் உக்கரவரல.. எங்க தொழிலாளர்கள் சார்பா இந்த வருஷம் போனஸ் கேட்டு போராட வந்து இருக்கேன்.. என்றான் கோபமாக அர்ஜுன்

நம்ம கம்பெனி 4 வருசமா நஷ்டத்துல ஓடிட்டு இருக்கு அர்ஜுன்.. இருந்தாலும் நான் நம்ம ஒர்க்கர்ஸ்க்கு எல்லாம் சரியா சம்பளம் குடுத்துட்டுதானே வர்றேன்.. 

இப்போ திடீர்ன்னு வந்து எல்லாத்துக்கும் போனஸ் குடுன்னு கேட்டா.. எப்படி.. என்று ரகுநாதன் ரொம்ப சாந்தமாகவே அர்ஜுனை பார்த்து கேட்டார்  

அதெல்லாம் எனக்கு தெரியாது.. எங்களுக்கு போனஸ் வேணும்.. அவ்ளோதான்.. என்று அடம் பிடித்தான் அர்ஜுன் 

அர்ஜுன்.. புரியாம பேசாத.. கம்பெனி எவ்ளோ நஷ்டத்துல ஓடுது தெரியுமா.. 

என் நிலைமைய புரிஞ்சிக்காம பேசுற.. 

ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. நீ என்னோட இடத்துல இருந்து பார்த்தாதான் தெரியும்.. 

எவ்ளோ நஷ்டம்.. எவ்ளோ கஷ்டபட்டு இந்த பேக்டரிய நடத்திட்டு வர்றேன்னு.. என்றார் ரகுநாதன்.. 

ம்ம்.. எல்லாரும் இப்படித்தான் சொல்லுவீங்க.. 

இந்த பேக்டரிய ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் என்கிட்டே குடுத்து பாருங்க.. 

எப்படி லாபம் ஈட்டி தர்றேன்.. என்று சவால் விட்டான் அர்ஜுன்.. 

அதே மாதிரி.. நீங்களூம்.. ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் நாங்க வாழற ஏழ்மை வாழ்க்கையை எங்க இடத்துல இருந்து வாழ்த்து பாருங்க முதலாளி.. 

அப்போதான் எங்களோட வறுமையும் கஷ்டமும் உங்களுக்கு தெரியும்.. புரியும்.. என்று ஆவேசமாய் சொன்னான் அர்ஜுன் 

சரி.. ஒரே ஒரு நாள் மட்டும் நீ என்னோட இடத்துல இரு.. நான் உன்னோட இடத்துல இருந்து பார்க்குறேன்.. என்று சொல்லி ரகுநாத்தும் அர்ஜுன் விட்ட சவாலை ஏற்று கொண்டார் 

இருவரும் பேக்டரி தொழிலாளர்கள் முன்பாக வந்தார்கள் 

உள்ளே இருவருக்கும் நடந்த வாக்கு வாதங்களையும்.. அந்த ஒரு நாள் ஒப்பந்தத்தையும் பற்றி தொழிலாளர்களிடம் அறிவித்தார் ரகுநாதன் 

இப்போது அவர் அணிந்து இருந்த முதலாளி கோட்டை அர்ஜுனுக்கு மாட்டி விட்டு ஒரு நாள் முதலாளியாக்கினார் 

அர்ஜுனின் காக்கி தொழிலாளர் சட்டையை தான் அணிந்து கொண்டு தொழிலாளிகளோடு தொழிலாளியாக அவர்களுக்கு தோள்கொடுத்து நின்று கொண்டார் 

இந்த ஒரு நாள் பதவி மாற்றத்தில் இருவர் வாழ்க்கையிலும் எப்படி அவர்கள் இருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட போகிறது என்பதைதான் இனி இந்த கதையில் பார்க்க போகிறீர்கள் 

தொடரும் 1
[+] 8 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் ! - by vibuthi viyabari - 24-11-2023, 12:49 AM



Users browsing this thread: