Romance தோழியா... காதலியா... [COMPLETED]
#21
“ஏய்! மஹா நீ வந்துட்டியா ? நாங்க உன்னைய ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கோம்”

அபிராமி சொன்னதை கேட்ட மஹாலட்சுமி மேலும் அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு எதுவும் புரியாமல் அமைதியாக நின்றாள்.
 
“சரி நீங்க ரெண்டு பேரும் தனியா பேசுங்க! நான் போறேன்பா”
 
அபிராமி சட்டென்று எங்களிடமிருந்து விலகி ஒரு பத்தடி தூரத்திற்கு சென்று நின்றுகொண்டாள்.
 
அய்யோ! என்னை தனியாக விட்டு போய்விட்டாளே என்று பயம் வந்தது.
 
ஆனால் இதைவிட்டால் வேறு சந்தர்பம் கிடைக்காது என்பதால் கொஞ்சம் தைரியமாக பேச ஆரம்பித்தேன்.
 
“மஹா! ஒரு பைவ் மினிட்ஸ் உன் கூட பேசணும்”
 
“விக்ரம்!  இன்னும் என்னடா பேசணும்? அதுவும் இந்த நேரத்துல?”
 
எந்தவித சலனமும் இல்லாமல் இயல்பாக கேட்டவளை பார்த்தவுடன் இனி பேசி புரிய வைப்பது கடினம் என்பதை அறிந்தேன்.
 
நான் உடனே வேகமாக மஹாவை நெருங்கி சென்று அவளது கைகளை இறுக்கமாக பற்றினேன்.
 
“டேய் விக்ரம்! என்னடா பண்றே?”
 
மஹா எனது கைகளை விடுவிக்க பார்த்தாள்.
 
நான் விடவே இல்லை.
 
இத்தனை நாளாக என்னுடைய மனதில் ரகசியமாக தேக்கி வைத்ததை உடனடியாக வெளிப்படுத்தினேன்.
 
“ஐ லவ் யூ! மஹா!”
 
அதைக் கேட்டதுமே அவளது கண்களில் ஆச்சரியமும் உடலில் உஷ்ணமும் உண்டாவதை அறிந்தேன்.
 
ஆனால் நான் விடவே இல்லை.
 
அவளது கைகளை பிடித்துக்கொண்டே தொடர்ந்து பேசினேன்.
 
“என்னோட லைப்ல நீ இல்லாம ஒரு நிமிஷம் கூட என்னால தனியாவே இருக்க முடியாது. ப்ளீஸ்டி என்னைய விட்டு போயிடாத மஹா”
 
சில நொடிகள் மஹாலட்சுமி கொஞ்சம் ஏக்கத்துடன் என்னை பார்த்தாள்.
 
“ஏதாவது பேசு மஹா!”
 
நான் மீண்டும் கெஞ்சினேன். உடனே அவள் தூரத்தில் இருந்த அபிராமியை பார்த்தாள்.
 
“நீ எதுக்கு அபிய பாக்குறேன்னு புரியுது. அவ எனக்கு எப்பவுமே ஃப்ரெண்ட் மட்டும்தான். ஆனா நீதான் என்னோட வாழ்க்கைடி. ஏதாச்சும் சொல்லு மஹா. நீ சைலென்ட்டா இருக்கிறத பாக்கும்போது என்னால தாங்க முடியல”
 
அவள் மனதில் என்ன நினைக்கிறாளோ என்று தெரியவில்லை.
 
அடுத்த நொடியே அபிராமியை பார்ப்பதை தவிர்த்துவிட்டு என்னை நோக்கினாள்.
 
மெல்ல அவளது உதடுகளை அசைத்து பேச தொடங்கினாள்.
 
“என்னடா விக்ரம் கரெக்டா நான் கிளம்புற நேரத்துல வந்து லூசு மாதிரி உளறிட்டு இருக்குறே. நீ எனக்கு நல்ல நண்பனா இருப்பேன்னு நினைச்சுதான் உன் கூட பழகுனேன். ஆனா திடீர்னு கடைசி நேரத்துல லவ் பண்ணுறேன்னு சொல்லி என்னோட கேரியர ஸ்பாயில் பண்ண பாக்குறியா. ஐ ஹேட் யூடா!”
 
அவள் சொல்லிக் கொண்டே என்னிடம் இருந்த கைகளை வேகமாக விடுவித்தாள்.
 
நான் செய்வதறியாது திகைத்து போனேன்.
 
“மஹா! இத்தன நாளா நீ என்னைய லவ் பண்ணுறேனு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா!”
 
அவள் என்னை பேசவே விடவில்லை.
 
“நீ அப்படி நினைச்சா நான் என்ன பண்றதுடா. ஒழுங்கா போயி வேற ஏதாச்சும் வேலை இருந்தா பாரு”
 
எப்போது அவள் மாடர்ன் உடைகள் போட ஆரம்பித்துவிட்டாளோ அப்போதே என்னுடன் பழகியதையும் மறந்துவிட்டாள் என தோன்றியது.
 
மேலும் மஹாவுக்கு வெளிநாடு பயணம் கிடைத்ததால் என்னை விட உயர்வாக இருக்கிறேன் என்கிற ஆணவத்தால் பேசுவது போலவும் இருந்தது.
 
அந்த நேரத்தில் அவளுடன் செல்லும் எங்களது ஆபிஸ் நண்பர்கள் வந்துவிட்டனர்.
 
“மஹா! செக் இன் பண்றதுக்கு டைம் ஆகுது. வா போகலாம்”
 
அவளிடம் பேசிவிட்டு என்னை அவர்கள் கேவலமாக பார்ப்பது போல தெரிந்தது. நான் அவமானத்தால் கூனி குறுகி போனேன்.
 
“ஓகே விக்ரம்! எல்லாம் முடிஞ்சுது! குட் பை”
 
என்னுடைய பதில் கூட எதிர்பார்க்காத மஹாலட்சுமி அதை மட்டும் சொல்லிவிட்டு வேகமாக ட்ராலியை நகர்த்திக்கொண்டு ஆபிஸ் நண்பர்களோடு சேர்ந்து நடந்து கண்ணில் இருந்து மறைந்தாள்.
 
எனக்கு வாழ்க்கையே மொத்தமாக இருண்டு விட்டது போல் உணர்ந்தேன்.
 
மஹா சென்ற அடுத்த நொடியே அபிராமி வேகமாக என்னிடம் வந்தாள்.
 
“விக்ரம்! என்னடா அவ கிளம்பி போயிட்டா? என்ன நடந்துச்சு?”
 
அபி பதற்றத்துடன் கேட்கும் போதே எனது கண்களின் ஓரம் நீர் வழிந்தது.
 
“என்னைய மஹா லவ் பண்ணவே இல்லனு சொல்லிட்டு போயிட்டா” என்று கதறி அழுதேன்.
 
“டேய்! அழாதடா உன்னைய மாதிரி ஒருத்தன லைப்ல மிஸ் பண்ணிட்டு போயிட்டோம்னு அவதான் அழனும். இனி ஒரு நிமிஷம் கூட இந்த இடத்துல நிக்க வேணாம்! வா போலாம்”
 
அபிராமி எனது கையை பிடித்து கொண்டு இழுத்து சென்றாள்.
 
நான் கனத்த மனதுடன் அவளோடு சேர்ந்து நடந்து காரில் வந்து அமர்ந்தேன்... பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டை நோக்கி பயணித்தேன்...
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: தோழியா... காதலியா... - by feelmystory - 12-11-2023, 06:26 PM



Users browsing this thread: 1 Guest(s)