Romance தோழியா... காதலியா... [COMPLETED]
#19
“ஹ்ம்ம். ஆசை இருக்குதுல அப்புறம் என்னடா? நீ ட்ரெஸ் மாத்திட்டு வேகமா கிளம்பு ஏர்போர்ட் போலாம்”

அவள் சொல்ல வருவது இப்போது தான் எனக்கு புரிந்தது.
 
“நிஜமாவே அங்க போயி மஹாவ பாத்து. லவ்வ சொல்லிடலாமா?”
 
“நீ நினைச்சா கண்டிப்பா சொல்லலாம். என்னைய நம்பு”
 
அபிராமி சரியாகத் தான் சொல்கிறாள்.
 
நான் எதற்காகத் தயங்க வேண்டும்.
 
இது வரை அபியிடம் விஷயத்தை சொல்லாமல் மஹாவிடம் எப்படி காதலைச் சொல்வது என்று தான் தெரியாமல் தவித்தேன்.
 
ஆனால் இன்று அபியே ஆறுதல் சொல்லி விட்டாள்.
 
இனி என்ன நடந்தாலும் சரி இன்று மஹாலட்சுமியிடம் என்னுடைய காதலை சொல்லியே தீருவேன் என்று மனதில் நினைத்துகொண்டு வேகமாக எழுந்தேன்.
 
பிறகு உடைகளை மாற்றிக்கொண்டு வந்தேன்.
 
“என்னடா விக்ரம். கிளம்பலாமாடா?”
 
“ஹ்ம்ம் அதெல்லாம் கிளம்பலாம் அபி. ஆனா நீ பாட்டி வீட்டுக்கு போகணும்னு சொன்னியேடி”
 
“நான் மதியம் போயிக்குறேன். இப்போ முதல்ல ஏர்போர்ட் போகலாம்”
 
“சரிடி நான் பைக் எடுக்குறேன்”
 
“வேணாம்டா விக்ரம்! நீ டென்ஷன்ல ஒட்டுவே. அது ரிஸ்க். நான் வீட்டுக்கு போயி கார் எடுத்துட்டு வரேன்” என்று அபி அக்கறையுடன் கூறிவிட்டு கிளம்பி வெளியில் சென்றாள்.
 
சில நிமிடங்களில் அவள் கார் எடுத்து வந்ததும் முன் பக்கம் ஏறிகொண்டேன்.
 
அபிராமி சராசரியான வேகத்தில் இயக்கினாள்.
 
நான் கடிகாரத்தை பார்த்தேன் மணி பத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது.
 
இன்னும் மூன்று மணி நேரம்தான் இருக்கிறது என்று பயம் வந்தது.
 
“எனக்கு மஹாவ பாக்க முடியாதுன்னு தோணுது?"
 
“லூசு! நெகட்டிவா பேசாத. உன்னோட லவ் மேல நம்பிக்கை வச்சு தைரியமா இருடா” என்று செல்லமாக முறைத்தாள்.
 
“ஹ்ம்ம். யெஸ். இன்னைக்கி கண்டிப்பா அவள பாப்பேன். என்னோட காதல சொல்லியே தீருவேன்”
 
நான் சத்தமாக கூச்சலிட்டு சொன்னவுடன் அபிராமி புன்னகையுடன் ரோட்டை பார்த்து கவனமாக வண்டியை இயக்கினாள்.
 
சரியாக அரை மணி நேரத்தில் நாங்கள் ஏர்போர்டை அடைந்தோம்.
 
பார்க்கிங் எரியாவிற்குள் சென்று காரை நிறுத்தியதும் அங்கே இருந்த பெரிய திரையில் விமானங்கள் வந்து செல்லும் ஸ்டேட்டஸ் தெரிந்தது.
 
நான் காரில் இருந்து இறங்கி சென்று அதில் அமெரிக்கா செல்லும் விமானம் பற்றிய அறிவிப்பு எதுவும் இருக்கிறதா என்று தேடினேன்.
 
அப்போதுதான் என்னை திடுக்கிட செய்வது போல ஒன்று நடந்தது.
 
அன்று மதியம் அமெரிக்கா செல்வதற்கு எந்த ஒரு விமானமும் இல்லை என்று தெரிந்தது.
 
நான் என்ன செய்வது என புரியாமல் தலையில் கை வைத்தபடி நின்றேன்.
 
என்னுடைய நிலையை பார்த்து அருகில் வந்த அபிராமியிடம் விபரத்தை சொல்லி கண் கலங்கினேன்.
 
“சரிடா! ஒரு பிரச்சனையும் இல்ல. மஹாதானே போன் எடுக்கல. ஆனா அவ கூட இன்னும் நாலு பேரு சேர்ந்து போறாங்கல்ல. நீ அவங்க நம்பர்க்கு கால் செஞ்சு எங்க இருக்காங்கனு கேளுடா”
 
நான் உடனே என்னுடைய பேண்ட் பாக்கெட்டில் மொபைலை தேடினேன்.
 
அது கிடைக்கவில்லை.
 
“அய்யோ! அவசரத்துல போன வீட்டுலயே மறந்து வச்சுட்டு வந்துட்டேன்” என்று சொல்லிவிட்டு இன்னும் அழுதேன்.
 
“சீ… லூசு! கொஞ்சம் அழாம இருடா. அங்க பாரு! ஒரு தகவல் மையம் இருக்கு. நான் போயி கேட்டுட்டு வரேன். நீ இங்கயே நில்லு”
 
அபிராமி என்னிடம் சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.
 
நான் கண்களை துடைத்துக்கொண்டே அவள் செல்லும் திசையை பார்த்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: தோழியா... காதலியா... - by feelmystory - 12-11-2023, 06:26 PM



Users browsing this thread: 2 Guest(s)