Romance தோழியா... காதலியா... [COMPLETED]
#18
இப்போது அனைத்தையும் கேட்ட அபிராமியின் முகம் பயங்கரமான அதிர்ச்சியுடன் காணப்பட்டது.

“என்னடா சொல்றே நீயும் நானும் காதலிக்கிறோம்னு மஹாலட்சுமி நினைக்கிறாளா?”
 
“ஆமா அபி. எனக்கும் அதான் தோணுது”
 
“டேய்! ஆரம்பத்துல நம்ம ரெண்டு பேரு வீட்டுலயும் புரியாம சொன்னாங்களே. அது மாதிரிதான் இவளும் நினைச்சுட்டு இருக்குறாளா?” என்று அபிராமி சோகத்தில் மூழ்கினாள்.
 
“அபி நம்ம வீட்டுல நாம ரெண்டு பேரும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ் மட்டும்தான். காதலர்கள் கிடையாதுன்னு சொல்லி புரிய வச்சுட்டோம்ல”
 
“அதெல்லாம் சரிடா. ஆனா இந்த மஹா உன்னோட லவ்வ சொல்றதுக்கு எந்த சந்தர்பமும் கொடுக்கலையே” என்று வருந்தினாள்.
 
“இனிமே யோசிச்சு என்ன பண்றது அபி. அவதான் என்னைய விட்டு போயிட்டாளே”
 
எனது வாழ்கையை மொத்தமாக முடிந்து போனது போல சொன்னேன்.
 
“டேய்! அவ இன்னும் போகலடா லூசு! ஆனா அப்படியே போனாலும் அமெரிக்காதானே போறா”
 
“ஆமா அங்கதான் போறா. ஆனா திரும்ப ரெண்டு வருஷம் கழிச்சுதான் ஊருக்கு வருவா. அந்த நேரத்துல நான் யாருன்னு கூட அவளுக்கு ஞாபகம் இருக்காது”
 
“முட்டாள் மாதிரி பேசாத நாயே! கொஞ்சம் இரு. நான் திங் பண்ணனும்”
 
அபிராமி எதையோ யோசித்து விட்டு மீண்டும் பேசினாள்.
 
“மஹாவுக்கு எத்தன மணிக்கு ஃப்ளைட்னு தெரியுமா? அவ எதுவும் சொன்னாளா?”
 
“அவ என்கிட்ட பேசுறதே இல்ல. அப்புறம் எப்படி சொல்லுவா? ஆனா ஆபிஸ்ல இன்னைக்கி மதியம் ஒரு மணிக்கு ஃப்ளைட்னு பேசிகிட்டாங்க. அவ்வளவுதான் தெரியும்”
 
“இது போதும்டா விக்ரம் இப்போ மணி ஒன்பதுதான் ஆகுது. கண்டிப்பா அவ கிளம்பிருக்க மாட்டா. சீக்கிரம் அவளோட நம்பர்க்கு கால் பண்ணு”
 
“மஹா நிச்சயமா அட்டென்ட் பண்ண மாட்டா. அப்படியே அவ எடுத்தாலும் நான் என்னடி பேசுறது?” என்று புரியாமல் கேட்டேன்.
 
“டேய்! முதல்ல அவளுக்கு கால் பண்ணுடா”
 
அபிராமி என்னை விட அதிக ஆர்வத்துடன் இருப்பதால் அவளது கட்டளையை நிறைவேற்றினேன்.
 
மஹா எண்ணுக்கு கால் செய்ததும் ஒரு ரிங் போனது.
 
அடுத்த நொடியே அது நின்றுவிட்டது.
 
“இதோ பாரு அபி! மஹா கட் பண்ணிட்டா”
 
“சரி இன்னும் ஒரு தடவ மட்டும் ட்ரை பண்ணுடா”
 
நான் மீண்டும் மஹாவின் எண்ணுக்கு அழைத்தேன்.
 
இந்த முறை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாள்.
 
ஸ்பீக்கரில் போட்டதால் அபிராமியும் கேட்டு விட்டாள்.
 
அவளால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.
 
எனக்கு கோபம் அதிகமானதால் மொபைலை சோபாவின் ஓரத்தில் தூக்கி போட்டுவிட்டு அபியை பார்த்தேன்.
 
அபிராமி நிச்சயமாக அதோடு விடுவது போல தெரியவில்லை.
 
இதற்கு அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசிப்பது போல எனக்கு தோன்றியது.
 
“டேய்! நீ சொல்றத வச்சு பாத்தா மஹா இன்னும் நாலு மணி நேரத்துல கிளம்பிடுவா. ஆனா அதுக்கு முன்னாடி அவள பாக்கணும்”
 
“எதுக்குடி பாக்கணும்?"
 
“நாயே! உன்னோட லவ்வ அவ கிட்ட சொல்லனுமா வேணாமா?”
 
“ஆமா அபி அவகிட்ட சொல்லியே ஆகணும்” என்று கவலையோடு பேசினேன்.
Like Reply


Messages In This Thread
RE: தோழியா... காதலியா... - by feelmystory - 12-11-2023, 06:25 PM



Users browsing this thread: 1 Guest(s)