Romance தோழியா... காதலியா... [COMPLETED]
#10
அபிராமி பெங்களூருக்கு சென்ற பிறகு இரண்டு மாதத்திற்கு ஒரு முறையே சென்னை வந்து என்னை சந்தித்துவிட்டு செல்வாள்.

நான் மஹாவின் அறிமுகத்திற்கு பிறகு அபியுடன் போனில் எப்போதாவது மட்டும்தான் பேச முடிந்தது.
 
ஆனாலும் எங்களது நட்பும் நல்லபடியாக தொடர்ந்தது. நானும் மஹாவும் வேலைக்கு சேர்ந்து ஆறு மாத காலம் நல்ல படியாக முடிந்தது.
 
எப்படியாவது அவளை அபிராமியிடம் அறிமுகம் செய்துவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சென்ற மாதத்தில் ஒருநாள் அவள் சென்னைக்கு வந்தபோது மஹாலட்சுமியை என்னுடைய வீட்டிற்கு அழைத்தேன்.
 
தினமும் வேலை முடிந்ததும் ஹாஸ்டலுக்கு செல்வது மஹாவுக்கு கொஞ்சம் அழுத்துப்போனது.
 
ஒரு மாற்றத்திற்காக என் வீட்டிற்கு வருவதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு எனக்காக வந்தாள்.
 
அவளை என்னுடைய பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்தேன்.
 
மஹாவை பார்த்ததும் அவர்களுக்கு நன்றாக பிடித்துவிட்டது. இனி அபிராமியிடம் அறிமுகம் செய்யலாம் என்று அவளையும் வீட்டிற்கு வர சொன்னேன்.
 
“அபி! இவதான் என்னோட ஃப்ரெண்ட் மஹாலட்சுமி” .
 
“அப்போ நான் யாருடா?”
 
அபிராமி கேட்டுக் கொண்டே என்னை பார்த்து முறைத்தாள். உடனே மஹாவின் முகம் வாடிப் போனதைக் கவனித்தேன்.
 
“லூசு. நீங்க ரெண்டு பேருமே என்னோட ஃப்ரெண்ட்ஸ் தான்” என்று சமாளித்தேன்.
 
நான் சொன்னதை கேட்டு இருவரும் சிரித்துவிட்டு மகிழ்ச்சியுடன் கைகொடுத்து பேச ஆரம்பித்தார்கள்.
 
அதன்பிறகு நாங்கள் மூவரும் அன்று முழுவதும் நன்றாக ஊரை சுற்றினோம்.
 
அபிராமி வழக்கம்போல் என்னுடன் கைகளை கோர்த்தபடி சிரித்த முகத்தோடு பேசிக்கொண்டே வந்தாள்.
 
மஹாலட்சுமியால் அதிகமாக பேச முடியவில்லை.
 
அவளது முகத்தில் ஏக்கம் இருப்பதை கவனித்தேன். இதை அபிராமியிடம் எப்படி சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தேன்.
 
அன்று மாலை அபிராமியை பெங்களூர் பஸ்ஸில் ஏற்றிவிட்டு. மஹாலட்சுமியை பைக்கில் ஹாஸ்டலுக்கு சென்று விட்டுவிடலாம் என்று நினைத்தேன்.
 
ஆனால் அபி செல்வதற்கு முன்பே மஹா வேறு ஒரு வேலை இருப்பதாக கூறிவிட்டு என்னை பிரித்து அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றுவிட்டாள்.
 
இதை பற்றி அபிராமியிடம் ஒன்றும் கூறவேண்டாம் என்று முடிவு செய்து அந்த விஷயத்தை சொல்லாமல் அவளை பஸ்ஸில் அனுப்பிவிட்டு சோகத்துடன் வீட்டிற்கு திரும்பினேன்.
 
இனிமேல் மஹாலட்சுமி என்னுடன் பேசாமல் இருந்துவிடுவாளோ என்று பயந்தேன்.
 
அடுத்த நாள் ஆஃபிஸ் சென்றதும் நான் நினைத்தது போலத்தான் நடந்தது.
 
மஹா என்னுடன் நெருங்கி பழகுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தாள்.
 
செல்லமாக விக்கி என்று கூட அழைப்பதை நிறுத்திவிட்டு விக்ரம் என்று மட்டுமே அழைத்து கடமைக்கு பேசினாள்.
 
அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முழுவதுமாக பேச்சே இல்லாமல் போனது.
 
அபிராமி மஹாலட்சுமி இருவரிடமும் வெளிப்படையாக பேச முடியாமல் எதுவோ என்னுடைய மனதிற்குள் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு இருந்தது.
 
அது என்ன என்று கண்டுபிடிப்பதற்குள் ஆபிசில் ஒரு அறிவிப்பு வந்தது.
 
அமெரிக்காவில் இருக்கும் எங்கள் கம்பேனியின் ஹெட் ஆபிசில் ஆன்சைட் வேலைக்கு செல்வதற்காக. ஐந்து பேரில் ஒருவராக என்னுடைய பெயரையும் தேர்ந்தெடுத்து மகிழ்ச்சி அளித்தனர்.
 
அங்கு சென்றால் இரண்டு வருடத்திற்கு பிறகுதான் மீண்டும் சென்னை வரமுடியும் என்பதையும் கூறி அதிர்ச்சி தந்தனர்.
 
அதோடு எவருக்குமே எளிதில் கிடைக்காத ஒன்று உனக்கு கிடைத்திருக்கிறது.
 
இந்த வாய்ப்பை விட்டுவிடாதே என்று பலர் எனக்கு அறிவுரை வழங்கினார்கள்.
 
எனக்கு மஹாவை பிரிவதற்கு மனம் இல்லை என்பதால் அமெரிக்கா செல்வதற்கு விருப்பம் இல்லையென்று சொல்லிவிட்டு என்னை தேடி வந்த வாய்ப்பை நானே நழுவ விட்டேன்.
 
மஹாலட்சுமி உட்பட அனைவருமே என்னை முட்டாள்தனமான காரியம் செய்துவிட்டதாக நன்றாக வசைப்பாடினார்கள்.
 
நான் எதற்கும் அசரவே இல்லை.
 
நான் கூடிய விரைவில் மஹாலட்சுமியிடம் எனது காதலை தெரிவித்து அவளது மனம் சஞ்சலப்படாமல் நடந்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் நினைத்துவிட்டு தைரியமாக இருந்தேன்.
 
அப்போது விதி என் வாழ்க்கையில் வேறு ரூபத்தில் விளையாடியது.
 
நான் வாய்ப்பை நழுவ விட்டதால் எனக்கு அடுத்தபடியாக இருந்த மஹாலட்சுமியிடம் அது வந்து சேர்ந்தது.
 
அவள் நிச்சயமாக செல்லமாட்டாள் என்று உறுதியுடன் இருந்தேன்.
 
ஆனால் என்னுடைய இதயத்தையே பிய்த்து எறிவதுபோல் அவள் அமெரிக்கா செல்வதற்கு சம்மதம் தெரிவித்த செய்தி என் காதில் வந்து விழுந்தது.
 
“என்ன மஹா! என்னைய விட்டு போறியா?”
 
அவளிடம் தயக்கதுடன் கேட்டேன்.
 
“ஆமா விக்ரம். இந்த மாதிரி போறதுக்கு எல்லாருக்கும் அமையாது. நீதான் முட்டாள்தனமா இருந்துட்டே. அதுக்காக நானும் அப்படி இருப்பேன்னு நினைச்சியா?”
 
அவளது வார்த்தைகள் அனைத்தும் தீ குழம்புபோல் என் நெஞ்சில்பட்டு வலியால் துடித்தேன்.
 
இனி எனக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை.
 
காதலிக்கிறேன் என்று சொல்வதற்கும் தைரியம் வரவில்லை.
 
நான் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு போலியாக சிரித்துவிட்டு பேசினேன்.
 
“இட்ஸ் ஓகே மஹா! ஆல் தி பெஸ்ட்” என்று மட்டும் சொன்னேன்.
 
“தாங் யூ விக்ரம்”
 
அவளும் கடமைக்கு கூறிவிட்டு என்னிடம் இருந்து விலகி சென்றாள்.
 
நான் அந்த சோகத்துடன் வீட்டிற்கு வந்தேன்.
 
அப்போது எனது பெற்றோர்கள் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு செல்வதாக என்னிடம் கூறிவிட்டு கிளம்பி சென்றார்கள்.
 
அவர்கள் சென்றதும் மஹாலட்சுமியை மனதில் நினைத்து தனிமையில் அழுது புலம்பினேன்.
 
அந்த நேரத்தில்தான் அபிராமியிடம் இருந்து நிறைய கால்ஸ் வந்தது.
 
நான் மஹாலட்சுமியை நினைத்து தவித்துக்கொண்டிருந்த காரணத்தால் எதையுமே அட்டென்ட் செய்ய பிடிக்காமல் போனை சைலன்டில் போட்டுவிட்டு அப்படியே பெட்டில் படுத்தேன்.
 
இரவு முழுவதும் மெத்தையில் கவலையுடன் படுத்து இருந்தேன்.
 
பிறகு எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.
 
அதிகாலை பொழுதில் ரோட்டில் செல்லும் வாகனங்களின் சத்தம் கேட்டதும் சட்டென்று விழித்துக்கொண்டேன்.
 
பெட்டில் இருந்து எழுவதற்கே மனம் இல்லாமல் படுத்து கிடந்த போதுதான் வாசலில் அபிராமி அடித்த காலிங் பெல் சத்தம் எனக்கு கேட்டது.
 
நான் இப்போது பழைய ஞாபகங்கள் அனைத்தையும் நினைத்து பார்த்துவிட்டு வாசலை பார்த்தேன்.
 
அங்கே என்னுயிர் தோழி அபிராமி சிரித்த முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாள்...
[+] 2 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: தோழியா... காதலியா... - by feelmystory - 10-11-2023, 10:17 PM



Users browsing this thread: 1 Guest(s)