Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
எல்இடி பெய்ல்ஸ்: விராத், ஆரோன் பின்ச் கோரிக்கை நிராகரிப்பு

[Image: 65239.jpg]
உலகக் கோப்பை தொடரில், ஸ்டம்பில் பந்து பட்டாலும் பெய்ல்ஸ் கீழே விழாததால், எல் இ டி பெய்ல்ஸ்-ஐ நீக்க வேண்டும் என்ற விராத் கோலி, ஆரோன் பின்ச் ஆகியோரின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
தற்போது நடக்கும் உலகக் கோப்பை தொடரில், எல்இடி பெய்ல்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நடுவர்களுக்கான வேலையை எளிதாக்கு கின்றன. இந்த பெய்ல்ஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு உலக கோப்பை  தொடரில் பந்து ஸ்டம்பை தாக்கியும் பெய்ல்ஸ் கீழே விழாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
[Image: 074933_bails%202.jpg]
இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் இருக்கும்போது, பும்ரா வீசிய பந்து, ஸ்டம்பில் தாக்கியது. பெய்ல்ஸ் விழாததால் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார். இதே போல, இந்த உலகக் கோப்பைத் தொடரில் 10 முறை பந்து, ஸ்டெம்பை தாக்கியும் பெய்ல்ஸ் விழவில்லை. இதனால் பந்துவீச்சாளர்களும் கேப்டன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை நீக்க வேண்டும் என்று இந்திய கேப்டன் விராத் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
[Image: 074635_bails%202%201.jpg]
இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்டது. ‘’தற்போது உலகக் கோப்பை போட்டிகள் மத்திய கட்டத்தை எட்டியுள்ளன. இப்போது எல் இ டி பெய்ல்ஸில் மாற்றம் செய்தால், போட்டியின் நம்பகத்தன்மை கேள்விகுறியாகிவிடும். 2015 உலகக் கோப்பைப் போட்டியில் இருந்தே இந்த பெய்ல்ஸ்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது’’ என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 12-06-2019, 11:13 AM



Users browsing this thread: 101 Guest(s)