21-10-2023, 10:43 PM
(21-10-2023, 10:15 PM)Kokko Munivar 2.0 Wrote: நண்பர்களே.. அப்டேட் தாமதம் ஆவது சற்று வருத்தமான விசயம் தான்.. என்னுடையtake care bro
உடல்நலக்குறைவு ஒருபுறம்.. சொந்த வாழ்வில் நெருக்கடிகள் மறுபுறம்.. அதனால் கதை எழுதும் மனநிலை இல்லை.. நேரமும் இல்லை... கதை எழுத வேண்டுமென்றால் எப்படிப்பட்ட மனநிலை வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும்.. ஏனோ தானோ என்று எழுத முடியாது.. சிறிய பதிவாக இருந்தாலும் ரசித்து எழுதுவது தான் என்னுடைய பாணி.. அதனால் தான் ஒரு காட்சியை முடிக்கவே இரண்டு மூன்று அப்டேட்கள் எனக்கு தேவைப்படுகிறது.. உரையாடல்கள் அதிகமில்லாமல் வெறுமனே தகவல் சொல்வது போல கதையை எழுதினால் சுருக்கமாக எழுதிவிடலாம்.. ஆனால் அந்த காட்சிக்கு உயிர் இல்லாதது போல தெரிகிறது.. அதே போல அடுத்தடுத்த காட்சிகளை யோசிக்கும் போதும் சவாலான விசயமாக இருக்கிறது.. வாசகர்களுக்கு சுவாரஸ்யம் குறையாமல் அப்டேட் கொடுக்க வேண்டும்.. அதற்கு அடுத்து மொபைலில் டைப் செய்வதும் சற்று சிரமம் தான்.. இவ்வளவு மெனக்கெடும் எழுத்தாளர்களுக்கு இங்கு எதுவும் கிடைப்பதில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விசயம்..
இப்போது எனக்கு ஓரளவு நெருக்கடி குறைந்துவிட்டது.. விரைவில் என்னுடைய கதைகளுக்கு அப்டேட் வரும்... நன்றி..
care bro