Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
#96
பாகம் -8

மதிவதனி ஆற்றில் குளித்து விட்டு மேலே வந்து ஆடை மாற்றி கொண்டாள்.வில்லை எடுத்து கொண்டு தன் படையை நோக்கி செல்ல ஒரு பருத்த காட்டு பன்றி அவள் செல்லும் வழியில் மறித்து கொண்டு நின்று கொண்டு இருந்தது.

இவ்வளவு பெரிய காட்டு பன்றியை அவள் இதுவரை வாழ்நாளில் பார்த்ததே இல்லை.ஒரு யானையே குலுங்கி அவள் முன்னே நடந்து வருவது போல் இருந்தது.  

அது வெளிவிட்ட மூச்சுக்காற்றினால் புழுதி பறந்தது.மூர்க்கமாக தந்தத்தினால் மண்ணை நோண்டி அவள் மேல் உள்ள கோபத்தை காண்பித்தது.
மதிவதனி சுதாரித்து உடனே வில்லில் நாண் ஏற்றி அதை நோக்கி அம்பை விட ,அம்பு பன்றியின் உடம்பில் பட்டு கீழே விழுந்தது.

மதிவதனிக்கு ஒரே ஆச்சரியம்.இந்த வில்லில் இருந்து ஒரு அம்பு விட்டால் அது ஏழு விலங்குகளை ஒரு சேர துளைக்கும்.என்ன ஆயிற்று என் வில்லுக்கு என யோசித்து வில்லை திருப்பி அம்பை ஒரு மரத்தை நோக்கி விட்டாள்.அது ஏழு மரத்தை வரிசையாக துளைத்து கொண்டே சென்றது.அதை பன்றி பார்த்து இன்னும் கோபம் கொண்டது.

மதிவதனிக்கு புரிந்து விட்டது.வில்லின் பலம் குறையவில்லை.ஆனால் பன்றியை துளைக்கும் அம்பு தன்னிடம் இல்லை என்று உணர்ந்தாள்.

உண்மையில் பன்றியாக உருமாறி வந்து இருப்பது காத்தவராயன் தான்.அவள் விட்ட அம்பு கண்டிப்பாக பன்றியை துளைத்து இருக்க வேண்டியது.ஆனால் இன்று துளைக்கவில்லை.காரணம் அவன் காளி தேவியிடம் பெற்று இருந்த வரம். இன்று ஒருநாள் மட்டும் அவன் என்ன உருவம் வேண்டுமானால் எடுக்க முடியும்.அதே நேரத்தில் எந்த ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அவனுக்கு இருக்கும் வரம் இன்று ஒருநாள் மட்டும் கேடயமாக அவனை பாதுகாக்கும்.

பன்றி ஒரு அடி முன்னே எடுத்து வைத்தது.மதிவதனி மீண்டும் பன்றியை நோக்கி அம்பை விட்டாள்.அம்பு பன்றியின் நெற்றியில் பட்டு கீழே விழுந்தது.பன்றி அவளை நாலு கால் பாய்ச்சலில் முட்ட ஒடி வந்தது.வேறு வழியின்றி மதிவதனி தன்னை காப்பாற்றி கொள்ள ஓட தொடங்கினாள்.
பன்றியின் வடிவில் இருந்த காத்தவராயனுக்கு அவள் படை பிரிவில் இருந்து தனியாக பிரிப்பதே நோக்கமாக இருந்தது.அதற்கேற்றவாறே படைகள் இருந்த நேர் எதிர் திசையில் அவளை விரட்டியது. மாயமலையின் எல்லை அருகே வந்து ஒரு நிமிடம் தயங்கி நின்றாள்.பன்றி வேகமாக நெருங்கி வந்தது.யோசிக்க நேரம் இல்லாமல் மாயமலைக்குள் நுழைந்தாள்.பன்றி விடாமல் மூர்க்கத்தனமாக ஓடி வந்தது.மீண்டும் மூச்சிரைக்க மதிவதனி ஓட ஒரு அடர்ந்த காட்டு பகுதிக்குள் நுழைந்தாள்.அவளை அந்த காட்டுக்குள் விரட்டி விட்ட தெம்புடன் பன்றி ஓடி மறைந்தது.

அவள் நுழைந்த காடு மதிகெட்டான் காடு.அந்த காட்டில் நுழைந்த மனிதர்கள் யாரும் அவ்வளவு எளிதில் வெளியே வர முடியாது.அங்கு இருக்கும் மரங்கள் வெளிவிடும் ஒருவித வாயுவை சுவாசிப்பதால் மதிமயங்கி அங்கேயே சுற்றி சுற்றி வெளியே வர முடியாமல் மயங்கி விழுந்து நீர்,உணவு இல்லாமல் இறந்து விடுவர்.அந்த காட்டில் நுழைந்து வெளியே செல்ல இரண்டே பேருக்கு தான் தெரியும்.ஒருவர் காத்தவராயன்.இன்னொருவர்...?
ஏனெனில் அந்த மரங்கள் வெளியிடும் வாயுவை சுவாசிப்பதை தடுக்க அவர்கள் ஒரு குறிப்பிட்ட மூலிகையை மெல்லுவர்.அதனால் இந்த வாயுவின் பாதிப்பில் இருந்து தப்பிவிடுவர்.

மதிவதனிக்கு அந்த காற்றை சுவாசிக்க சுவாசிக்க மயக்கமாக வந்தது.சுற்றி சுற்றி பார்த்தாலும் வெளியே செல்ல வழி தெரியவில்லை.மயங்கி கீழே விழும் நேரம் பக்கத்தில் ஏதோ ஓடையில் தண்ணீர் ஒடும் சலசலவென சத்தம் கேட்டது.சக்தியை ஒன்று திரட்டி ஒரே மூச்சாக ஓடையை நோக்கி ஓடினாள். ஓடைக்குள் ஓடிய தண்ணீரை எடுத்து முகத்தில் பட் பட்டென்று அடிக்க சற்று தெம்பு வந்தது.அள்ளி அள்ளி நீரை குடித்தாள்.அப்பொழுது தூரத்தில் புகை கிளர்ந்து மேலே செல்வதை பார்த்தாள்.அங்கே சென்றால் கண்டிப்பாக மனிதர் யாராவது இருக்க கூடும்.அவர்கள் மூலம் இங்கே இருந்து தப்பிக்க வழி கிடைக்கலாம் என்று புகை வந்த திசையை நோக்கி நடந்தாள்.

இவளை இங்கே மடைமாற்றி விட்டு
காத்தவராயன் எங்கே சென்றான்.?
எல்லாம் காத்தவராயன் திட்டப்படியே சென்றது.காத்தவராயன் தயாராக இருந்த படைகளை திரட்டி கொண்டு கூடாரம் இட்டு இருந்த மகேந்திரபுரி படைகளின் மீது தாக்குதல் தொடுத்தான்.

எதிர்பாராத தாக்குதல் மற்றும் தலைமை ஏற்று வந்த மதிவதனி இல்லாமல் மகேந்திரபுரி படை சிக்கி சின்னாபின்னமாகியது.
கண்ணில்பட்டாரை எல்லாம் காத்தவராயன் வெட்டி வீசினான்.ஆனால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை.மகன் இறந்த கோபத்தை முழுக்க முழுக்க எதிரி படைகள் மீது காட்டினான்

கடைசியில் ஒருவனை மட்டும் உயிரோடு விட்டுவிட்டு அவனிடம்,"நான் உன்னை மட்டும் உயிரோடு விடுகிறேன்.எதற்கு தெரியுமா?உங்கள் நாட்டின் இளவரசியை நான் ஏற்கனவே கவர்ந்து சென்று விட்டேன்.இதற்கு மேல் அவள் என்னுடையவள்.அவளை தேடி கொண்டு மீண்டும் யாராவது இங்கே வந்தால் ஒருவர் உயிர்கூட மிஞ்சாது.ஒரு அற்புதமான தங்க சிலையை பெற்று எனக்கு கொடுத்ததற்காக உன் மன்னனுக்கு உயிர்பிச்சை அளிக்கிறேன்.ஒழுங்காக மிஞ்சிய நாட்டையாவது வைத்து வாழ்ந்து கொள்ள சொல்.மீறி இங்கு வந்தால் அவன் உயிரை எமனிடம் அனுப்பி விட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.செல்.சென்று இந்த காத்தவராயன் சொன்ன இந்த சேதியை சொல் என்று அவனை விரட்டினான்.

அவனும் தப்பித்தால் போதும் என தலைதெறிக்க ஓடினான்.

மதிவதனி புகை வந்த இடத்தை வந்து சேரும் பொழுதே அந்த வாயுவை சுவாசித்து அரை மயக்க நிலைக்கு சென்று விட்டாள்.அங்கு ஒரு குடிசை மட்டுமே இருந்தது.வெளியே யாரோ தீ மூட்டி இருந்தார்கள்.குடிசையில் உள்ளே நுழைந்து பார்க்க அங்கே யாரும் இல்லை.நெஞ்சு அடைத்தது.உடம்பில் இருந்து வியர்வை ஆறாய் பெருகியது.மூச்சுவிட முடியாமல் தவித்தாள்.வாசலிலேயே மயங்கி கீழே விழுந்தாள்.

சிறிது நேரம் கழித்து விழிப்பு வர,தான் குடிசையில் படுக்க வைக்கபட்டு இருந்ததை உணர்ந்தாள்.இப்பொழுது நன்றாக சுவாசிக்க முடிந்தது.

அவள் பக்கத்தில் இலைகளை யாரோ எரிய விட்டு தீமூட்டி இருந்தார்கள்.அதில் இருந்து தான் சுவாசிக்க நல்ல காற்று கிடைப்பதை அவள் புரிந்து கொண்டாள்.கொஞ்ச நேரத்தில் யாரோ ஒருவர் நடந்து வரும் சத்தம் கேட்டது.உடனே மதிவதனி எச்சரிக்கையுடன் எழுந்து தன் வில்லை எடுத்து கொண்டாள்.
ஆனால் உள்ளே தள்ளாடி வந்த உருவத்தை பார்த்ததும் வில்லை தளர்த்தினாள்.

வந்தது ஒரு கூன் விழுந்த கிழவி.முகத்தில் வரிவரியாய் கோடுகளாய் சதைகள் தொங்கி கொண்டு இருந்தது.பற்கள் ரெண்டு மட்டுமே இருந்தது.கண்கள் பூ விழுந்து முடிகள் அனைத்தும் வெளுத்து போய் ,கம்பை ஊன்றி கொண்டு நடந்து வந்த கிழவியை பார்க்கவே அகோரமாக இருந்தது.

"விழித்து விட்டாயா?"என்று அந்த கிழவியின் குரலை கேட்கவே கர்ண கொடூரமாக இருந்தது.

பாட்டி நீங்க யாரு?

என் இடத்தில் வந்து விட்டு,என்னையே யார் என்று கேட்கிறாயா?முதலில் நீ யாரு என்று கூறு.

என் பேர் மதிவதனி..!மகேந்திரபுரி நாட்டின் இளவரசி..

சரி இங்கே எங்கே வந்தாய்?

நான் மாயமலை மீது போர் தொடுத்து காத்தவராயனை கொல்லவே இங்கே வந்தேன்.வந்த இடத்தில் பன்றி துரத்தியதால் இந்த காட்டுக்குள் வந்து மாட்டி கொண்டேன்.

ஹா ஹா ஹா என அந்த கிழவி சிரித்தது அந்த காட்டையே அதிர செய்தது.பறவைகள் அந்த சத்தத்தை கேட்டு பயந்து ஓடின.

ஏன் பாட்டி சிரிக்கிறீங்க.?

காத்தவராயனை கொல்ல யாராலும் முடியாது.அவன் மார்பை துளைக்கும் ஆயுதம் பூமியிலே கிடையாது.

இல்லை என் வில்லில் இருந்து புறப்படும் அம்பு அவன் மார்பை கண்டிப்பாக துளைக்கும்.

இங்கே பாருங்கள்,என குடிசைக்கு வெளியே சென்று ஒரு பருத்த மரத்தை குறி வைத்து வில்லில் நாணை பின்னோக்கி இழுத்து அம்பை விட அது அந்த மரத்தையே துளைத்து கொண்டு இன்னொரு மரத்தில் குத்தி நின்றது.

ம்ம்,நீ கெட்டிகாரி தான்.எட்டு பேர் வட்டமாக சேர்ந்து அந்த மரத்தை சுற்றி நின்றால் மட்டுமே அந்த பெரிய மரத்தை அணைக்க முடியும்.அவ்வளவு பருமனான மரத்தையே அசால்ட்டாக நீ துளைத்து விட்டாயே.ஆனால்...

என்ன ஆனால் பாட்டி?

நீ ஒருவளாக சென்று எப்படி காத்தவராயனை வெல்ல முடியும்?

என் படை இந்த மலைக்கு கீழே உள்ளது.அங்கு இப்பொழுது நான் சென்று விட்டால் போதும்.

இங்கே வா,என்று கிழவி அவள் கைபிடித்து குடிசைக்கு பின்னே உள்ளே பாறை அருகே அழைத்து சென்றாள்.கிழவி வயதாகி இருந்தாலும் அவள் பிடி உடும்பு பிடியாக இருந்தது.

"பாறையின் மீது ஏறி பார்"என்று கிழவி கூற

ஏறி பார்த்த பொழுது தூரத்தில் ,அவள் படைகள் இருந்த இடத்தில் வெட்டி சாய்க்கபட்ட உடல்களே இருந்தன..

பாட்டி என அவள் அதிர்ச்சியாக,

"ம் கீழே இறங்கு" என பாட்டி அதிகாரமாக கூறினாள்.

உனக்கு ரெண்டு வழி இருக்கு மதிவதனி,ஒன்று நீ தப்பித்து உடனே உன் நாட்டுக்கு புறமுதுகிட்டு ஒட வேண்டும்.இன்னொன்று இங்கே இருந்து காத்தவராயன் அரண்மனைக்கு செல்ல ரகசிய வழி எனக்கு தெரியும்.அங்கு சென்று அவனை கொன்று விட்டு உன் நாட்டுக்கு திரும்புவது?இதில் எது உனக்கு விருப்பம்?

மதிவதனிக்கு புறமுதுகிட்டு ஒட விருப்பம் இல்லை.

"பாட்டி,என் படையை சிதைத்த  அவனை என் கையால் நான் கொல்ல வேண்டும்"என்று கோபம் போங்க கத்தி,"அதற்கு எனக்கு அதற்கு உதவி புரியுங்கள்" என கேட்டாள்.

சரி நீ குடிசையில் போய் ஓய்வு எடு.நான் இரவு உணவுக்கு கிழங்குகளை பறித்து வருகிறேன்.அவனை எப்படி கொல்வது என பிறகு சிந்திப்போம்..

மதிவதனி குடிசைக்கு செல்ல,கிழவி ஓரமாக மறைந்தாள்.

காத்தவராயா.....!! உன்னை தேடி அறுசுவை பலகாரமே வந்துள்ளது.வெளுத்து கட்டும் வேளை வந்தது.சீக்கிரமே நீ இட்ட ஆணைப்படி அவளை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன்.அவள் வயிற்றில் இந்த மாயமலையின் வாரிசை விதைப்பது உன் பொறுப்பு..என கிழவி தனக்கு தானே சொல்லி சிரித்தாள்.

யார் இந்த கிழவி?காத்தவராயனுக்கும் இந்த கிழவிக்கும் என்ன தொடர்பு?எல்லாம் காத்தவராயன் திட்டப்படி சென்று கொண்டு இருக்கிறது.அவளை கொஞ்ச கொஞ்சமாக சூடேற்றி அனுபவித்து சுவைக்க காத்தவராயன் அவளுக்காக காத்து கொண்டு இருக்கிறான்.

[Image: IMG-20231018-WA0031.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 8 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய் வந்த அசுரனின் வேட்டை♥️♥️♥️ - by snegithan - 18-10-2023, 08:45 PM



Users browsing this thread: 10 Guest(s)