17-10-2023, 09:20 PM
பாகம் -8
முத்துவின் வீரத்தை பார்த்து கவிதா ஆச்சரியமாக பார்த்தாள்.
முத்து நீதானா?கவிதா வாய் விட்டு கேட்க,
ஆமா கவி,நீ கொஞ்சம் வேடிக்கை மட்டும் பாரு.நான் கொஞ்சம் விளையாடிட்டு வரேன்.
முத்துவை ரவுடிகள் சூழ்ந்து கொள்ள,அவர்கள் அவனிடம் " டேய் இங்க பாரு,உன் பிரென்ட் 25000 ரூபா தான் கொடுத்து இருக்கான்.25 அடி தான் அடிக்கணும்,ஏற்கனவே 1 அடி அடிச்சாச்சு நீ.25 அடிக்கு மேல அடிச்சே அப்புறம் நாங்க திருப்பி அடிப்போம் பார்த்துக்க...
ஏம்பா அவன்(சிவா) இந்த கண்டிஷன்ஸ் எதுவும் சொல்லலியே..!அப்போ ஒன்னு பண்ணுங்க நான் 25 அடி அடித்து முடிப்பதற்குள் ஓடி விடுங்க.
சரி அடிக்க தொடங்கு,என ஒத்து கொண்டனர்.
முத்து வீரவேசமாக அவர்களிடம் சண்டை போட,கவிதா அவனை உற்சாகபடுத்தி கொண்டே இருந்தாள்.
கவிதாவின் உற்சாகத்தை பார்த்ததும் முத்து,எண்ணிக்கையை மறந்து உத்வேகத்தில் தாறுமாறாக அடித்து விட எண்ணிக்கை இருபத்தைந்தை தாண்டி விட்டது.
இப்பொழுது ரவுடிகள் சூழ்ந்து கொண்டு தாக்க தொடங்க,அய்யயோ சிவா என்னை காப்பாத்து என முத்து அலற தொடங்கினான்.
கவிதா சென்று,"டேய் சிவா போதும் நடிச்சது எந்திரிடா,அங்கே முத்து அடி வாங்கி கொண்டு இருக்கிறான் போய் காப்பாத்து போ"என எழுப்பினாள்.
அய்யோ கவி நான் நடிக்கிறேன் எப்படி கண்டுபிடிச்சே,..!
எனக்கு எல்லாம் தெரியும்..போய் முத்துவை காப்பாத்து.
"அடேய் அங்க என்னடா பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்க,சீக்கிரம் வந்து என்னை காப்பாற்று.இங்க என் சோலியே முடிஞ்சிடும் போல் இருக்கு"முத்து அலறினான்.
உடனே சிவா எழுந்து ஓடி சென்று"ஹலோ பிரதர்ஸ் நான் தான் உங்களுக்கு சொன்ன மாதிரியே அமௌண்ட் செட்டில் பண்ணி விட்டுட்டேனே..!அப்புறம் ஏன் இவனை அடிக்கறீங்க.
கொடுத்த அமௌன்ட்க்கு மேல இவன் அடிச்சான்,அதனாலே தான்.நீ தடுத்தால் உனக்கும் உதை விழ போகுது.
டேய் என்னடா இதெல்லாம் , நல்ல ஆளா பார்த்து கூட்டி வரமாட்டீயா?இப்போ பாரு,
ரவுடிக்கள் முத்துவை தாக்க,சிவா தடுக்க உண்மையான சண்டை ஆரம்பம் ஆகியது.5 பேரும் சுற்றி தாக்கினாலும் சிவா கொஞ்சம் கூட அசரவில்லை.அவன் விட்ட குத்துக்கள் ஒவ்வொன்றும் அவன் வலிமையை பறைசாற்றியது.
அடப்பாவி ,இவன் உண்மையான சண்டைக்காரன் தான் போலயே,என ரெளடியின் தலைவன் முதலில் ஓட்டம் பிடிக்க,அவனை தொடர்ந்து அவன் அடிவருடிகளும் ஓட்டம் பிடித்தனர்.
கவிதா வந்து சிவாவிடம்"இப்போ எதுக்கு இந்த நாடகம்?"என கேட்க,
அதுவந்து சிவா பதில் சொல்ல முடியாமல் அசடு வழிந்தான்.
முத்து உடனே "எனக்காக தான் கவிதா எல்லாமே"என சொல்ல,
கவிதா அவனை நிறுத்து என சைகை காட்டினாள்."இப்போ நீ சொல்லு சிவா",
"கவிதா அதுவந்து,முத்து உன்னை காதலிக்கிறான்.ஆனால் நீ என்னை காதலிப்பது போல் தோன்றியது.அதனால் என்னை விட முத்து தான் பெட்டர் என காட்டவே இந்த மாதிரி செய்தேன்"
"என்ன நான் உன்னை காதலிக்கிறேனா?நான் எப்போ உன்கிட்ட அந்த மாதிரி சொன்னேன்?நீ எனக்கு அண்ணன் மாதிரி"என்று ஒரு குண்டை தூக்கி கவிதா போட்டாள்.
அதை கேட்டு சிவா மகிழ்ச்சி அடைந்தான்.
நான் உன்னை காதலிக்கிறேன் என்று எப்படி உனக்கு தோன்றியது சிவா?என அவள் கேள்வி கேட்க,
கவி,நான் ஊருக்கு வந்த பொழுது என்னை பார்த்த உடனே ஏன் அழுதுகிட்டே ஒடினே.?
ஆமா,என் அண்ணன் முன்னாடி இப்படி தாலி அறுத்துட்டு வந்து நிக்கும் போது அழுகை வராதா? நான் நல்லா இருக்கணும் என்று தானே நீ நினைச்சு இருப்பே.இப்போ என்னை இந்த நிலைமையில் பார்க்கும் போது உனக்கும் கஷ்டமா தானே இருக்கும்.
எல்லாம் சரி,ஆனா என்கிட்ட தனியா பேசணும் என்று கேட்டீயே..!அதுக்கு என்ன காரணம்?
நான் முத்துவை முதலில் இருந்து லவ் பண்றேன்.இது என் அப்பாவுக்கு தெரிந்த பிறகு ,என்னை வேறு இடத்தில் கல்யாணம் செய்து வைக்க முயற்சி பண்ணார்.நான் தனியா எதிர்த்து போராடியும் என்னால் கல்யாணத்தை நிறுத்த முடியவில்லை.எனக்கு உதவி செய்யவும் யாரும் இல்லை.முதலில் என் மனதில் உள்ளதை முத்துவுக்கு தெரியப்படுத்த வேண்டும்.அதுக்கு என் அண்ணனாக உன்னிடம் உதவி கேட்க தான் உன்னை அழைத்தேன்.
சிவாவிற்கு இதை கேட்ட பிறகு நிம்மதி பெருமூச்சு வந்தது.
அப்பாடா,நான் மலை மாதிரி இருந்த பாரம் இப்போ எனக்கு பனி மாதிரி கரைந்து போச்சு..ரொம்ப சந்தோஷம் கவி, முத்து இன்னமும் உன்னை தான் லவ் பண்றான்.உன்னை கல்யாணம் பண்ணிக்கவும் ஆசைப்படுகிறான்..
கவிதா முத்துவை பார்க்க,முத்து இரு கைகளை அகலவிரித்து "கட்டிக்கலாமே"என்று செய்கை செய்ய,கவிதா ஓடி சென்று அவனை கட்டி கொண்டாள்.
உங்க ரெண்டு பேர் கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டியது என் பொறுப்பு என சிவா கூறினான்.
ஆமா, இந்த மொக்கை ஐடியா யார் கொடுத்தது?கவிதா கேட்க.
ஏன் கவி?என் கூட வேலை செய்யற பொண்ணுகுகிட்ட நான் தான் கேட்டேன்.அவதான் கவி, என்மேல் நீ காதல் வயப்பட்டு இருப்பதற்கான காரணம்,என் ஆண்மை,மற்றும் எல்லோருக்கும் உதவி செய்யும் குணம் இதனால் இருக்கலாம் என்று சொன்னாள்.அதனால் என்னை விட முத்து தான் வீரத்தில் சிறந்தவன் என காட்ட நான் இந்த டிராமா செட் செய்தேன்.ஆனால் எல்லாம் சொதப்பலாக போச்சு.
சூப்பர் சிவா,அவ உன்னை சரியா புரிஞ்சி வச்சு இருக்கா.அவ உன் லைஃப் பார்ட்னராக வந்தால் உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.
இல்ல கவி,நான் வேறொரு பெண்ணை லவ் பண்றேன் ,
யாரு அந்த லக்கி கேர்ள் சிவா,..
அவளும் நான் வேலை செய்யற ஆபீஸில் தான் வேலை பார்க்கிறாள்.அவகூட என்னை லவ் பண்றா தான் என நினைக்கிறேன்.
அப்போ உடனே போய் காதலை சொல்ல வேண்டியது தானே..!
இல்ல கவி,உன்னோட விசயத்திலேயே நான் மொக்கை வாங்கிட்டேன்.அவளும் உன்னை மாதிரியே உன்கிட்ட தங்கை மாதிரி தான் பழகினேன் என்று சொல்லிட்டா பிரச்சினை ஆகிடும்.அதனால் அவ என்னை தான் விரும்புகிறாள் என்று உறுதியாக தெரிந்த பிறகு தான் அவளிடம் நான் சொல்ல போகிறேன்..
மதியம் லஞ்ச் டைமில் தாரிணியிடம் வந்து நடந்த விசயத்தை சிவா சொல்ல அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.
அய்யோ சிவா,அவ தங்கச்சியா நினைத்து பழகியது கூடவா உன்னால புரிஞ்சிக்க முடியல.
இல்ல தாரிணி,எனக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்ல.நான் எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி பழகுவதால் என்னால் புரிஞ்சிக்க முடியல.எனக்கு அக்காவோ,இல்லை தங்கையோ இருந்திருந்தால் எனக்கு கண்டிப்பாக வித்தியாசம் தெரிந்து இருக்கும்.இதுதான் நான் இந்த மாதிரி முதல் தடவை மொக்கை வாங்குவது.
ஓ சாரி சிவா,
அதை விடு தாரிணி,உங்க வீட்டை பற்றி சொல்லு.
நான், அம்மா,தங்கை மூணு பேரு மட்டும் தான் சிவா..
ஏன் அப்பா இல்ல?
அப்பா,அண்ணன் அவங்க தேவை முடிந்த பிறகு எங்களை அப்படியே விட்டுட்டு போய்ட்டாங்க.அதனாலே எனக்கு ஆண்கள் என்றாலே அலர்ஜி..
"சரியான சுயநலம் பிடிச்சவங்க"என சிவா திட்டினான்.
இப்பொழுது என்னோடது மட்டும் தான் என் குடும்பத்தின் ஒரே வருமானம் சிவா.தங்கச்சியை எப்படியாவது நல்லபடியா படிக்க வைக்கணும்.
அப்போ உன்னோட வாழ்க்கை..!சிவா கேட்க..
என்னோட குடும்பத்தையும், தன்னொட குடும்பமாக நினைக்க கூடிய ஆண்மகன் கிடைத்தால் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன்.
அப்படிப்பட்ட பையனை பார்த்துட்டீயா தாரிணி?
"ம்" என மௌனமாக தலை அசைத்தாள்..
அப்போ சீக்கிரம் போய் சொல்ல வேண்டியது தானே..!
எப்படி சிவா?ஒரு பொண்ணு போய் தன் காதலை முதலில் சொல்ல முடியும்..!அவன் தான் வந்து சொல்லணும்.கூடிய சீக்கிரம் அவனே வந்து சொல்லுவான் என்று எதிர்பார்க்கிறேன்..
உன்னை கட்டிக்க போறவன் கண்டிப்பா கொடுத்து வச்சவன் தான் தாரிணி.சரி எனக்கு கிளையண்ட் கூட ஒரு சின்ன மீட்டிங் இருக்கு.நான் கிளம்பறேன் என்று கைகழுவ சென்றான்.
upload images