Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)
#18
கச்சா... முச்சா.. என்று பேசி கொண்டு இருந்த ஜனங்கள்.. கப் சிப் என்று அடங்கினார்கள்..

இளவரசி மில்க்கி வர்ராங்க.. அமைதியா இருங்க.. என்றார்கள்..

மில்க்கி..

இந்த பெயரை எங்கேயோ கேள்விபட்ட மாதிரி இருக்கே.. என்று யோசித்தேன்..

அரண்மனை குடவுனை சுத்தம் செய்யும்போது இருந்த ஒரு போட்டோ ஆல்பத்தில் இந்த பெயரை படித்த நியாபகம் வந்தது..

அட.. ஆல்பத்தில் இருந்த உருவம் இப்போது எப்படி நேரில் வருகிறது.. அதுவும் 16 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மில்கி இப்போது எப்படி இந்த அரண்மனைக்குள் வந்தாள்.. என்று நான் ஆச்சரியமாக பார்த்தேன்..

அப்போது நான் வந்த பால் வண்டியில் ஒரு நியூஸ் பேப்பர் இருந்தது..

அதை எடுத்து பார்த்தேன்...

அதில் தேதி 16-10-2007 என்று இருந்தது

ஓ இது பழைய பேப்பராக இருக்கும் என்று எண்ணினேன்..

சற்றென்று மீண்டும் ஒரு முறை அந்த பேப்பரின் தேதியை பார்த்தேன்..

பழைய பேப்பர் என்றால் 1 நாள் அல்லது 2 நாள் முந்தைய பேப்பராக இருக்கலாம்..

இதென்ன சரியாக 16 வருடங்களுக்கு முன்பு உள்ள பேப்பராக உள்ளதே.. இது எப்படி இங்கே வந்தது என்று யோசித்தேன்..

ஆனால் பேப்பர் இங்கே வரவில்லை.. 16 ஆண்டுகளுக்கு முந்தைய தினத்துக்கு நான்தான் வந்திருக்கிறேன்..

எப்படி எப்படி என்று யோசித்தேன்..

இந்த கால மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று நன்றாக யோசித்தேன்..

என் கால்களை பார்த்தேன்..

அந்த ஜி பூம் பா ஷூ இருந்தது..

இந்த ஷூதான் என்னை 16 வருடங்களுக்கு பின்னோக்கி கால பயணம் செய்ய வைத்திருக்கிறது என்று அறிந்து கொண்டேன்..

உண்மையிலேயே அது ஒரு மேஜிக் ஷூதான் என்பதை நம்ப ஆரம்பித்தேன்..

தொடரும் 5
[+] 3 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: மேஜிக் ஷூ (காலப் பயண கதை) - by vibuthi viyabari - 16-10-2023, 06:02 PM



Users browsing this thread: 10 Guest(s)