Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)
#16
என் குடிசை வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய மாட்டு பண்ணை இருந்தது 

அதில் 100க் கணக்கான பால் மாடுகள் இருந்தன.. 

100க் கணக்கான ஆட்கள் மாட்டில் பால் கறந்து.. கேன் கேனாக ரொப்பி கொண்டு இருந்தார்கள்.. 

அத்தனை கேன்னும் அரண்மனைக்கு போகணும்.. சீக்கிரம் வண்டில ஏத்து சுப்பையா.. என்று ஒரு கங்காணி எல்லோரையும் விரட்டி வேலை வாங்கி கொண்டு இருந்தான் 

சுப்பையா என்ற பெயரை கேட்டதும்.. நான் அதிர்ந்தேன்.. 

அது செத்து போன என் குடிகார பொம்பள பொருக்கி அப்பனாச்சே.. 

என் அழகிய அம்மாவின் வாழ்க்கையையே சீரழித்தவனாச்சே.. என்று அவனை நோக்கி கோபமாக நடந்தேன் 

என் அப்பன் சுப்பைய்யா.. நல்ல இளமை தோற்றத்துடன் இருந்தான் 

சிக்கென்று சின்ன பைய்யனாக இருந்தான் 

இளவட்ட காங்கேயன் களைப்போல இருந்தான் 

ஏற குறைய அவன் வயதும் என் வயதும் ஒரே வயதாக இருந்தது 

எனக்கு இப்படி ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது 

என்ன தம்பி.. யாரு நீ.. பார்க்க புதுசா இருக்க.. என்று கங்காணி என்னை பார்த்து கேட்டான் 

நான் பக்கத்துக்கு ஊரு அண்ணே.. என்று சும்மா பொய்ச்சொன்னேன் 

இந்த பால் கேன் எல்லாம் எங்கே போகுது.. என்று கேட்டேன் 

நம்ம அரண்மனை ஜமீனுக்குத்தான் 

இவ்ளோ கேன் பாலையுமா அரண்மனை ஜாமீன் உபயோகிக்க போறாங்க.. 

என்ன தம்பி புரியாம பேசுற.. என்றான் கங்காணி 

தம்பி ஊருக்கு புதுசுல.. அதான் விஷயம் தெரியாம பேசுது.. என்று கேன்களை அரண்மனை வண்டியில் ஏற்றிக்கொண்டு சொன்னான் சுப்பையா.. 

செத்து போன அப்பன் எப்படி இங்கே.. என்று ஒரு பெரிய குழப்பம் இருந்தாலும்.. அந்த 100 கேன் பால் ஏன் அரண்மனைக்கு போகிறது என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன் 

அண்ணே நானும் உங்க கூட அரண்மனைக்கு வரலாமா.. என்று கங்காணியை பார்த்து கேட்டேன் 

ஓ தாராளமா வரலாம் தம்பி.. நீ கேட்ட கேள்விக்கு அரண்மனைல உனக்கு பதில் கிடைக்கும் பாரு.. என்று கங்காணி சொன்னான் 

நானும் அந்த பால் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டேன் 

வண்டி நேராக அந்த அரண்மனைக்கு சென்றது 

நான் இப்போ சற்று முன் வேலை செய்த அரண்மனை 

ஆனால் இப்போது வெள்ளை அடித்து புத்தம் புது பொலிவுடன் இருந்தது 

முருகேசன் அண்ணன் நாளைக்குத்தான் வெள்ளை அடிக்க வரசொன்னாரு.. 

அதுக்குள்ள வேற ஆட்கள் வச்சி வெள்ளை அடிச்சிட்டாரா.. என்று ஆச்சரியப்பட்டேன் 

அரண்மனை வாசல் முழுவது ஏழை பாளை மக்கள் கூட்டம் கூட்டமாய் நின்று இருந்தார்கள் 

அரண்மனையில் இருந்து ஒரு அழகிய இளம் பெண் கம்பீரமாய் உயர்ரக உடை அணிந்தபடி இளவரசி போல வெளியே வந்தாள் 

அச்சு அசல் அப்படியே என் அம்மாவை போலவே இருந்தாள் 

என் அம்மா வயதோ 36

ஆனால் இந்த ஜாமீன் இளவரசி வயதோ 16 தான் இருக்கும் 

என்னுடைய குழப்பம் இன்னும் நீடிக்க ஆரம்பித்தது 

தொடரும் 4
[+] 5 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: மேஜிக் ஷூ (காலப் பயண கதை) - by vibuthi viyabari - 15-10-2023, 12:40 PM



Users browsing this thread: 3 Guest(s)