13-10-2023, 08:39 PM
பாகம் -5
நெற்குன்றம்
முத்து ஒரு மார்கெட்டிங் executive.
இரவு வேலை விசயமாக கோவை செல்வதற்காக துணிமணிகளை அவன் எடுத்து அடுக்கி வைத்து கொண்டு இருந்தான்.
"ச்சே,இந்த ஷர்ட் வாங்கி ஒரு மாசம் கூட ஆகல.அதுக்குள்ள கலர் மங்கி போச்சே.பார்ப்பதற்கு தான் பெரிய கடை. நடிகர்களை விளம்பரம் பண்ண வைச்சு நல்லா ஏமாத்துறாங்க,அடுத்த தடவை இதே காசில் வண்ணாரப்பேட்டை போய் நல்லதா ஆறு,ஏழு ஷர்ட் வாங்கி வந்து விட வேண்டியது தான்" என்று புலம்பினான்.
காலிங்பெல் அடித்ததும்,யார் இந்த நேரத்தில் அடிப்பது?சென்று கதவை திறக்க சிவா நின்று இருப்பதை பார்த்து தாவி அணைத்து கொண்டான்.
"டேய் சிவா,எப்படிடா இருக்கே,எவ்ளோ நாளாச்சு உன்னை பார்த்து?"
"நான் நல்லா இருக்கேன்டா முத்து,அப்புறம் நீ எப்படி இருக்கே?"
"நான் நல்லா இருக்கேன் சிவா.என்ன இவ்வளவு தூரம்?"
"ஒரு இன்டர்வியூ வந்தேன் முத்து,ஆனா ஊத்திக்கிடுச்சு.அப்படியே உன்னை பார்க்கலாம் என்று வந்தேன்."
"சாரி சிவா,அம்மா இறப்புக்கு வர முடியல.அப்போ நான் அவசர வேலையா கொல்கொத்தா வரை போய் இருந்தேன்."
"பரவாயில்லை விடு முத்து.நான் இதுக்கு மேல உன்கூட தான் தங்கலாம் என்று வந்து இருக்கேன்."
"சரி சரி நீ உள்ளே வா,கிச்சடி செய்ஞ்சு வச்சு இருக்கேன்.முதலில் சாப்பிடு."
நான் அப்புறமா சாப்பிடறேன் முத்து,எங்கே அவசரமா கிளம்பற போல் இருக்கு.
ஆமா சிவா,ஒரு அவசர விசயம் கோவை வரை போய்ட்டு இருக்கேன்.நீ இங்கே தங்கிக்கோ.நான் ரெண்டு நாளில் திரும்பி வந்து விடுவேன்.
இல்ல முத்து,நானும் இரவே மும்பை கிளம்பி போய் வீட்டை காலி பண்ணிட்டு இரண்டு நாளில் திரும்பி வந்து விடுவேன்.ஒரு பொண்ணு எப்படியும் ஒரு மாதத்தில் வேலை ஏற்பாடு பண்ணி கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கு.அதுவரை நான் உனக்கு சுமை தான்.
ச்சே வாயை கழுவுடா,நீ எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இங்கே தங்கிக்கோ.நான் எதுவும் சொல்ல மாட்டேன்.நீதானே என் தங்கச்சி கல்யாணத்திற்கு காசு இல்லாம நான் கஷ்டப்பட்டப்ப கடவுள் மாதிரி வந்து, சேர்த்து வைத்த காசை எல்லாம் கொடுத்து எனக்கு உதவின.இதுவரை ஒரு வார்த்தை திருப்பி கேட்டு இருப்பீயா நீ...!
அப்போ ஒரு பெண் கேட்டை திறந்து,முத்து தங்கி இருக்கும் கீழ் வீட்டுக்குள் செல்ல,சிவா அவளை பார்த்து திடுக்கிட்டான்.
"டேய் அவ,ஹவுஸ் ஓனர் பொண்ணு கவிதா தானே..என்னடா இப்படி தளதளவென்று வளர்ந்துட்டா"
"ஆமாடா அவளே தான்."
உடனே சிவா,மடமடவென கீழே இறங்கி கவிதாவின் முன் ஓடி சென்று,
"ஹாய் கவிதா,எப்படி இருக்கே?"என்றான்
கவிதாவின் முகம் அவனை பார்த்த சந்தோஷத்தில் ஒரு நிமிடம் மலர்ந்து,உடனே வாடியது.அவனை பார்த்து அழுகை வர அதை அடக்க முடியாமல் உடனே உள்ளே ஓடி விட்டாள்.
சிவாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.
மீண்டும் முத்துவிடம் சென்று,டேய் என்னடா ஆச்சு இந்த பொண்ணுக்கு,என்கிட்ட எப்பவுமே கலகலப்பாக பேசும்.இப்போ பொட்டு கூட இல்லாமல் முகம் களை இழந்து போய் இருக்கு.
அது வந்து சிவா,நான் எப்படி சொல்றது என்று புரியல.அந்த பொண்ணு யாரையோ லவ் பண்ணி இருக்கு.அவ அப்பா பற்றி தான் தெரியுமே உனக்கு.சாதியை பிடித்து கொண்டு தொங்குற மனுஷன்.அவ லவ் பண்றதை தெரிந்து கொண்டு உடனே சொந்தத்தில் விசாரிக்காமல் எவனோ ஒருவனுக்கு கட்டி கொடுத்து விட்டார்.அவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே கிடையாது.பாவம் ரெண்டு வருஷம் அவன்கிட்ட இவள் படாதபாடு பட்டுட்டா.கடவுளுக்கே அவன் பண்ண இம்சை பொறுக்கல போல் இருக்கு,அதான் அவனை சீக்கிரம் லாரியில் மோத வைச்சு உயிரை எடுத்துட்டான்.இப்போ தான் அவ கொஞ்சம் நிம்மதியா இருக்கா..
முத்து நான் உன்கிட்ட ஒரு விசயம் கேட்கட்டுமா?
கேளு மச்சான்..,
நீ இன்னும் கவிதாவை லவ் பண்றீயா..!
முத்து ஒரு நிமிடம் மௌனமாக இருந்தான்.
சொல்லுடா,கவிதாவை இன்னும் நீ லவ் பண்றீயா..!திரும்ப சிவா கேட்டான்.
டேய் இப்போ கூட அவ என் கவிதா தான்டா.நான் அவளை கல்யாணமே பண்ணிக்க ரெடியா இருக்கேன்.அவளுக்கு சந்தோசத்தை தர ஒவ்வொரு நிமிடமும் நான் துடிச்சிட்டு இருக்கேன்.
சிவா,அவனை ஆரத்தழுவி கொண்டான்.
முத்து கவலையுடன் "ஆனால் அவ அப்பா இப்பவும் அதே சாதி வெறியில் தான் இருக்கார் சிவா"..
"அவர் கிடக்கிறாரு விட்டு தள்ளு முத்து,சாதிகாரனா வந்து சோறு போட போறான்.நமக்கு கவிதா சம்மதம் தான் முக்கியம்.நீ கொடுக்கிற வாடகையில் தான் அவங்க குடும்பமே ஓடுது.வெட்டி கௌரவத்திற்கு ஒன்னும் குறைச்சல் இல்ல அந்த ஆளுக்கு.ஊருக்கு போய்ட்டு வந்து நான் கவிதாகிட்டே பேசி உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கிறேன்.நீ சந்தோஷமாக ஊருக்கு போய்ட்டு வா.சீக்கிரமே உனக்கும் கவிதாக்கும் டும் டும் டும் தான்" என்று சிவா சொல்ல முத்து வெட்கத்தில் நெளிந்தான்.
கவிதா முகத்தை கழுவி கொண்டு,சிவாவிற்காக மேலே எட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தாள்.
சிவா,மற்றும் முத்து ஒன்றாக கீழே இறங்க,சிவா வந்த உடன் ஊருக்கு கிளம்புவதை பாத்து ஏமாற்றம் அடைந்தாள்.
கவிதாவை பார்த்து,சிவா புன்னகைத்தான்.
கவிதா அவனை பார்த்து,"சிவா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"
சிவா அவளிடம்,"கவி நடந்ததை எல்லாம் முத்து சொன்னான்.நீ கவலைபடாதே.நடந்தது எல்லாம் நல்லதுக்கு தான்.சீக்கிரமே உன் வாழ்வில் வசந்தம் பூக்கும்.ஊருக்கு போய் அங்கே வீட்டை காலி பண்ணி வந்து விட்டு இதற்கு மேல் இங்கே தான் தங்க போறேன்.ரயிலுக்கு நேரம் ஆச்சு,இப்போ எனக்கு பேச நேரம் இல்ல.நான் வந்து உன்கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு."
பேசி கொண்டே சிவா அவளிடம் ஒரு புடவையை எடுத்து நீட்டினான்.
"இது உனக்காக நான் தேடி வாங்கிட்டு வந்தேன் கவி,வாங்கிக்கோ"
கவிதாவும் வாங்கி கொண்டு,"போய்ட்டு வா சிவா,நானும் உன்கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு"
சரி கவி,எப்பவுமே கோலிகுண்டு கண்ணை வச்சு அழகாக சிரிப்பியே..!அந்த மாதிரி ஒரு கொஞ்சம் சிரியேன்.
கவிதா அவனுக்காக சோகத்தை மறந்து சிரிக்க,"அப்பாடா இப்போ தான் நிம்மதியா இருக்கு.நான் இப்போ ஊருக்கு சந்தோஷமா போய் வருவேன்.இன்டர்வியூ போகும் முன் உன் சிரித்த முகத்தை பார்த்து விட்டு போய் இருந்தால் கண்டிப்பா நான் செலக்ட் ஆகி இருப்பேன். ச்சே ஜஸ்ட் மிஸ் "என்று வருந்தினான்.
"கவிதா மனதில் என்ன எண்ணி இருக்கிறாள்" என்று சிவாவுக்கு இன்னும் தெரியாது.
தாரிணி வேலையில் சேர்ந்து நன்றாக போய் கொண்டு இருந்தது .
அவள் கூட வேலை செய்யும் ஒரு பெண் வந்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.
ஹாய் தாரிணி,"வெல்கம் டூ our கம்பெனி.i am ஷில்பா"என்று கை நீட்டினாள்.
"ஹாய் ஷில்பா,i am தாரிணி from வேலூர் பக்கம் ஒரு கிராமம்"
"அப்புறம் தாரிணி இங்கே எங்கே தங்கி இருக்கீங்க.."
"ஹாஸ்டல் பார்த்துகிட்டு இருக்கேன் ஷில்பா, இன்னும் சரியான ஹாஸ்டல் கிடைக்கல"
கவலைய விடு் தாரிணி,நான் ஒரு ஃபிளாட் வாடகை எடுத்துகிட்டு தனியா தான் தங்கி இருக்கேன்.நீ என் கூட வந்து தங்கிக்கோ.
"இல்லை" என்று தாரிணி தயங்கினாள்.
ஏன் என்ன பயம் தாரிணி ?
அதுவந்து ஷில்பா,ஃபிளாட் என்றால் வாடகை நிறைய ஆகுமே.என்னால் சமாளிக்க முடியாது.
உன்னால முடிஞ்சத கொடு தாரிணி.ஒரு ஃபிளாட்டை தனியா சுத்தம் செய்ய எனக்கும் கஷ்டமா இருக்கு.வேலையை பாதி பாதி பிரித்து கொள்வோம்.எனக்கும் உன்னை மாதிரி ஒரு ஆள் கூட துணைக்கு இருந்தால் நல்லா இருக்கும்.
தாரிணி அவளுடன் தங்க ஒப்பு கொண்டாள்..
ஆனால் அதனால் எதிர்காலத்தில் அவள் சிக்கலில் மாட்டி கொள்ள போகிறாள் என உணரவில்லை.
ஷில்பா,அவள் வீட்டுக்கு கூட்டி சென்றாள்.
Double பெட்ரூம் ஃபிளாட் பார்க்க மிக ஆடம்பரமாக இருந்தது..
தாரிணி அவள் ஏதோ சாதாரண வீடு என நினைத்தாள்.ஆனால் அவள் வீட்டை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.
தாரிணி அந்த ரூம் நீ எடுத்துக்கோ.உள்ளேயே attaced பாத்ரூம் இருக்கு.
தாரிணி தயங்கி கொண்டே"ஷில்பா இந்த வீட்டு வாடகை எவ்வளவு "என கேட்டாள்.
"மாசம் 15000 ரூபா தாரிணி,நீ உன்னால முடிஞ்சதை கொடு போதும்.."
"தாரிணி சாப்ட்வேர் engg,"ஷில்பா வெறும் receptionist மட்டுமே..ஷில்பாவின் சம்பளம் வெறும் 18000 ரூபா மட்டுமே,ஆனால் அவள் அணிந்து இருந்த உடை,வாழும் சொகுசு வாழ்க்கை ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் இருந்தது.
தாரிணி மீண்டும் ஷில்பாவை பார்த்து,"ஷில்பா எப்படி உங்கள் சம்பளத்தை வைத்து இப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ முடிகிறது"என்று கேட்டாள்.
"தாரிணி,நீ என்னுடன் தங்கும் roommate மட்டுமே.என் அந்தரங்க விசயத்தில் தலையிடுவது எனக்கு சுத்தமா பிடிக்காது.நானும் உன் அந்தரங்க விசயத்தில் தலையிட மாட்டேன்.மேற்கொண்டு கேள்வி ஏதும் கேட்பதாக இருந்தால் நீ வேறு எங்காவது போய் தங்கி கொள்ளலாம்"என பட்டென்று ஷில்பா பேசிவிட தாரிணி அமைதி ஆனாள்.
கொஞ்ச நேரத்தில் ஷில்பா நம்பருக்கு போன் வர,உடனே தன்னை அலங்கரித்து கொண்டு வெளியே கிளம்பினாள்.
"தாரிணி,நான் அவசரமாக வெளியே போறேன்.நீ கதவை தாழ்ப்பாள் போட்டு தூங்கு,என்னை எதிர்பார்க்காதே.நான் நாளை காலை தான் வருவேன்,என் கிட்ட இன்னொரு சாவி இருக்கு பை"என விறுவிறுவென சென்று விட்டாள்.
தாரிணி மாடி பால்கனியில் இருந்து பார்க்க,ஒரு விலை உயர்ந்த கார் அவள் அபார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றது.அதில் ஒரு 57 வயது மதிக்கத்தக்க மனிதன் கீழே இறங்கினான்.ஷில்பா அந்த ஆளை போய் கட்டி கொள்ள,அவன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.தன் மகள் வயது உள்ள ஷில்பாவின் இடுப்பில் உரிமையுடன் கை போட்டு கொண்டு அவளை காரில் ஏற்றினான்.
தாரிணி அவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
இந்த ஆள் நம் கம்பெனி MD பவன்குமார் அல்லவா..! என்ன இவனுடன் ஜோடி போட்டு இந்த நேரத்தில் இவள் போகிறாள் என அவளுக்கு புரியவில்லை.
பவன்குமார் சரியான பெண்பித்தன்.கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் எப்படியாவது திட்டமிட்டு அனுபவித்து விடுவது அவன் வழக்கம்.இதுவரை ஆபீஸில் அவன் அனுபவிக்காத பெண்கள் சொற்பமே..அப்படி அவன் கண்ணில் இதுவரை அகப்படாதவர்களில் தாரிணியும்,கீர்த்தியும் அடங்கும்.
ஷில்பா போன்ற பணத்திற்கு மயங்கும் பெண்களை பணத்தை காட்டி மயக்கி விடுவான்.தாரிணி மற்றும் கீர்த்தி போன்ற பணத்திற்கு மயங்காத பெண்களை மடக்கி போட வேறு பல வழிகள் வைத்து உள்ளான்.இரண்டு பெண்கள் இவனால் கற்பிழந்து வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.சில பெண்கள் இவனால் கெடுக்கபட்டு,வெளியே சொன்னால் அசிங்கம் என கருதி வேலைக்கு வருவதையே நிறுத்தி விட்டனர்.இவனிடம் இருக்கும் பணத்தினால் போலீஸ் இவனுக்கு வாலாட்டியது.
ஆனால் அவன் ஆடும் ஆட்டத்திற்கும் முடிவு ஒன்று இருக்கும் அல்லவா?
அது யாரால் என்பது சஸ்பென்ஸ்.?
தாரிணி வேலையில் சேர்ந்ததிற்காக,அவள் கூட வேலை செய்யும் நண்பர்கள் treat கேட்டு தொல்லை கொடுக்க,Swiggy இல் உணவு ஆர்டர் செய்தாள்.
ஆனால் ஆபிசில் டெலிவரி செய்ய வந்த ஆளை பார்த்த உடன் அவள் கண்களில் நீர் கோர்த்து கொண்டது.உடனே அவன் கரம் பிடித்து தனியாக அழைத்து சென்றாள்.
இலையிட்ட விருந்திலே
ஆறு சுவைதான்...
இளமையின் விருந்திலே
நூறு சுவைதான்,,,
இதில் காமன் பாதி,காதல் பாதி கவிஞன் நமக்கு சொன்னது தான்