Romance ♥️♥️♥️உயிராக வந்த உறவே ♥️♥️♥️
#28
பாகம் -4

என்ன தாரிணி,அவன் சான்றிதழ்களை எடுத்து சென்று விடலாமா?என ஒரு நிமிடம் யோசித்தாள்.ஆனால் பாவம் வேண்டாம் என நினைத்து அவன் நேர்காணலில் சொதப்பினால் மட்டும் போதும் என்று நினைத்து ஒரு காரியத்தை மட்டும் தப்பு என்று தெரிந்தும் கச்சிதமாக செய்து முடித்து விட்டாள்.

சிவா குளித்து விட்ட வந்த பிறகு,"ஓகே தாரிணி ரொம்ப நன்றி,நான் பெருங்குடி வரை போக வேண்டி இருக்கு.நான் வரேன்."

"என்னது பெருங்குடியா,"ஒன்றும் தெரியாதவள் போல் ஆச்சரியமாக கேட்டாள்.

"ஆமாம் தாரிணி,ஒரு இன்டர்வியூ போய் கொண்டு இருக்கிறேன்."என்று கம்பெனி பேரை அவன் சொல்லவும்,

அவளும் நானும் அதே கம்பெனி இன்டர்வியூக்கு தான் செல்வதாக கூறினாள்.

"அப்போ நல்லதா போச்சு வாங்க,வெளியே ஆட்டோ இருக்கும் அதில் ஏறி போய் விடலாம்."

ஐயோ ஆட்டோ வேண்டாம்,கொள்ளை காசு கேட்பாங்க.அதுவும் பெருங்குடி இங்கு இருந்து தூரம்.அதனால் வாங்க,பஸ் இங்கே ரெகுலராக இருக்கும்,அதில் போய் விடலாம்.

ஏனோ அவனுடன் இப்போ பயணித்த பேருந்தில் இனம் புரியாத பரவசத்தை அவளுக்கு தந்தது.

நேர்காணலின் குறித்த நேரத்திற்கு முன்பாகவே இருவரும் போய் சேர்ந்து விட்டனர்.

அங்கு நேர்காணலுக்கு வந்து இருந்த ஒரு சில பெண்களை பார்த்ததும் தாரிணி மருண்டாள்.வந்து இருந்த எல்லா பெண்களும் அரைகுறை ஆடையில் லூசு ஹேர்விட்டு ஓவர் மேக்கப் போட்டு வந்து இருந்தனர்.அவர்கள் நுனி நாக்கில் விளையாடும் ஆங்கிலத்தை பார்த்து பயந்தாள்.அவர்கள் கால் கால் போட்டு ஸ்டைலாக உட்கார்ந்து கொண்டு இவள் உடை உடுத்திய விதத்தையும் ,பின்னலிட்டு ஜடை போட்டு இருப்பதை பார்த்து கேலியாக அவர்கள் சிரிக்க,இந்த இன்டர்வியூம் அவ்வளவுதானா? என நினைத்தாள்.சிவா அவள் மனதில் என்ன ஓடுகிறது என புரிந்து கொண்டான்.

அவன் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக,"இங்கே பார் தாரிணி,அவங்க பேசும் ஆங்கிலத்தை கண்டு ஏமாறாதே..knowledge ஒண்ணுமே இருக்காது.நீ தைரியமாக போய் அட்டென்ட் பண்ணு என நம்பிக்கையூட்டினான்.

"ச்சே இவனுக்கா நான் துரோகம் நினைத்தோம்" என மனதில் எண்ணி நாணி குறுகினாள்.

"வா தாரிணி முதலில் போய் பதிவு பண்ணி விட்டு வருவோம்."

அங்கு ரிசப்ஷனில் இருந்தவரிடம் இன்டர்வியூ வந்து இருப்பதாக சிவா சொல்ல,அங்கு இருந்த பெண் ,கீர்த்தியை கை காட்டினாள்.

சிவா கீர்த்தியை பார்த்து,"தாரிணி உனக்கு சரியான போட்டி" என்றான்.

தாரிணி புரியாமல் "என்ன போட்டி" என கேட்க,

சிவா சிரித்து,இங்கு வருவதற்கு முன் நீ தான் அழகி என்று நினைத்தேன்,ஆனால் இறைவன் மடையா அவசரப்படாதே, இன்னொரு பெண்ணையும்  அழகாக படைத்து உள்ளேன்,என சில மணி நேரங்களிலேயே என் கண்முன் காட்டி விட்டான் என கூறினான்.

தாரிணி அவளை பார்த்து,ஆமாம் இவன் சொல்வது நிஜம் தான் என நினைத்தாள்.இருந்தும் சற்றே பொறாமையுடன் "ஆனால் அவள் என்னை விட கலர் கம்மி தான்"என்று கூற

சிவா உடனே,"கலரில் என்ன இருக்கு தாரிணி,நீ பால் நிறத்தழகி என்றால்,அவள் கோதுமை நிறத்தழகி அவ்வளவு தான்."

முதலில் தாரிணி நேர்காணல் லெட்டரை காண்பித்து, பதிவு செய்து விட்டு நகர,

சிவா கீர்த்தியிடம்,ஹாய் கீர்த்தி உங்ககிட்ட ஒரு சின்ன சந்தேகம் கேட்கலாமா?

கீர்த்தியும் புன்னகையுடன்"ம்,கேளுங்க"என்றாள்.

சிவா"கீர்த்தி உங்க உதடுகள் கோவை பழம் மாதிரி சிவந்து இருக்கு,இது இயற்கையான கலரா,இல்லை சாயம் ஏதாவது பூசி இருக்கீங்களா."என்று கேட்டான்

கீர்த்தி சிரித்து,"ஏய்,வந்த உடனே நூல் விட ஆரம்பிச்சாச்சா"

அய்யோ சத்தியமா இல்லை கீர்த்தி,நிஜமாகவே உங்க உதடு சிவந்து சற்றே தடித்து,உங்க கோள முகத்திற்கு பக்காவா பொருந்தி அழகை மேலும் கூட்டி இருக்கு.உண்மையில் செம அழகாக இருக்கீங்க.ஒருவேளை கலர் சாயம் ஏதாவது பூசி இருந்தால் இதே அளவு போடுங்க என்று சொல்ல தான் நினைத்தேன்.மற்றபடி நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல என்று சிரித்தான்.

சாதாரண பையன் வந்து அழகை புகழ்ந்தாலே,பெண்கள் மயங்கி விடுவார்கள்.சிவா போல ஆணழகன் என்றால் சொல்லவே வேண்டாம்.கீர்த்தியும் அவன் புன்னகையை கண்டு சொக்கி,

"அப்படியா சிவா,உங்கள் புகழுரைக்கு நன்றி,எதுவும் சாயம் பூசல.natural தான்.மற்றபடி உங்க ஸ்மைல் அருமையா இருக்கு.

"God's Gift"என்று தோளை குலுக்கி விட்டு சிவா சென்று அமர்ந்தான்.

அடிக்கடி கீர்த்தியின் கண்கள் சிவாவை நோட்டமிட தவறவில்லை.அவன் செய்யும் சின்ன சின்ன செய்கைகளை ரசித்தாள்.

ஒவ்வொருவராய் albhabet வரிசையில் உள்ளே நேர்காணலுக்கு செல்ல, கடைசியில் சிவா,தாரிணி மட்டுமே எஞ்சி இருந்தனர்.

சிவா உள்ளே செல்லும் போது,"கீர்த்தி கைநீட்டி best of luck"என்றாள்.

சிவாவும் கை குலுக்கி,thank you கீர்த்தி"என்று உள்ளே சென்றான்.

சிவா உள்ளே சென்று,தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு,ரெஸ்யூம் எடுக்க உள்ளே ஃபைலை எடுத்து தேட,இன்டர்வியூ செய்பவர்கள் பொறுமை இழந்தனர்.அதை தான் தாரிணி இருந்த எல்லா ரெஸ்யூம் காப்பியை எடுத்து விட்டாளே.

"மிஸ்டர் இங்கே வந்து என்ன தேடறீங்க"இன்டர்வியூ செய்பவர்கள் கோபமாக கேட்க,

"Extremely sorry sir,my resume is missing.can i send softcopy to your mail id please."

"ஒரு இன்டர்வியூக்கு வருபவர்கள் இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்பீங்க.will you please get out" என்று கூறினார்கள்.

சிவாவிற்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி தோல்வி அடைந்து இருந்திருந்தாலும் பரவாயில்லை.ஆனால் இந்த மாதிரி தோல்வி அடைந்து வெளியேறுவது கேவலமாக இருந்தது.தன்னையே நொந்து கொண்டான்.அமைதியாக வெளியே வர அடுத்து தாரிணி உள்ளே வந்தாள்.best of luck என்று அவளை பார்த்து  அவன் கூறினாலும் தாரிணி இருந்த பதற்றத்தில் அதை கவனிக்காமல் சென்று விட்டாள்.

வெளியே வந்தவனை கீர்த்தி பார்த்து,"என்ன உடனே வெளியே வந்துட்டீங்க"என்று கேட்டாள்.

இன்னிக்கு என் நேரம் சரியில்லை கீர்த்தி,என்னோட ரெஸ்யூம் என் பையில் வைத்து இருந்தேன்.ஆனால் இப்போ அது காணல.first impression is best impression என்று சொல்வாங்க.நான் அதில் தோல்வி அடைந்து விட்டேன்.

உங்க ஃபைலை கொடுங்க,கீர்த்தி கேட்டாள்.

அவன் சான்றிதழ்களை பார்த்து,வியந்தாள். "வாவ் எல்லா சப்ஜெக்ட்டில் நல்ல பெர்செண்டேஜ் வாங்கி இருக்கீங்க.excellent marks."

ஒரு சில கேள்விகளை கீர்த்தி கேட்க,சிவா சரியான பதில்களை சொன்னான்.அவள் கம்ப்யூட்டரில் உட்கார வைத்து ஒரு சில applications கொடுத்து solve பண்ண சொன்னாள்.

சிவா அதை அசால்ட்டாக முடிக்க,கீர்த்தி அவனுக்கு வாழ்த்து தெரிவித்தாள்.

"சிவா,என்னோட நம்பர்,email id எடுத்துக்கோங்க.நீங்க உடனே உங்க ரெஸ்யூமை என்னோட email id க்கு அனுப்புங்க.கண்டிப்பாக i will get the job for you"

"Oh,thank you கீர்த்தி,அப்புறம் உங்க நம்பருக்கு வாட்ஸ் அப்பில் மெஸேஜ் அனுப்பலாமா?சிவா கேட்டான்.

"ஏய்,தப்பான மெஸேஜ் அனுப்பாமல் இருந்தா ஓகே தான்"

"என்னை பார்த்தால் அப்படியா தெரியுது கீர்த்தி"

"அப்படி தெரிந்து இருந்தால் நான் உன்கிட்ட என் நம்பரையே கொடுத்து இருக்க மாட்டேனே".

அப்போ உன் மனதில் நல்ல பெயரை தான் எடுத்து இருக்கேன் என்று சொல்லு.

"ம்,கண்டிப்பாக,"கீர்த்தி சிரித்தாள்.

சரி கீர்த்தி,இங்கே கேண்டீன் எங்கே என்று சொல்லு.இன்னும் காலையில் இருந்து சாப்பிடல.பயங்கரமா பசிக்குது.

கீழே 3 rd floor இல் food court இருக்கு. ஒரே ஒரு மாசம் மட்டும் சமாளிச்சுக்க சிவா,நான் எப்படியாவது உனக்கு வேலை ரெடி பண்ணி விடுகிறேன்.வேறு எங்கும் வேலை போய் ஜாயின் பண்ணி விடாதே.அப்பப்ப கால் மட்டும் பண்ணு.

"கீர்த்தி எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல.நீ இந்த அளவுக்கு எனக்கு உதவி பண்ணுவதே பெரிய விசயம்.

"சரி சிவா, சென்னையில் எங்கே தங்கி இருக்கே."

நான் இன்னும் மும்பையில் தான் இருக்கேன் கீர்த்தி,அடுத்த வாரம் தான் சென்னை ஷிஃப்ட் பண்ண போறேன்.இங்கே எனக்கு தெரிந்த ப்ரெண்ட் ஒருத்தன் நெற்குன்றத்தில் இருக்கான்.அவன் கூட தான் தங்க போறேன்.

ஓகே சிவா,சீக்கிரம் சென்னை வந்து விடு..

கண்டிப்பா கீர்த்தி bye.

சிவா சென்று புட் கோர்ட்டில் அமர்ந்து அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்தான்.கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.தாரிணி வந்தாள்.சுற்றும் முற்றும் பார்த்தாள்.சிவா இருந்ததை கவனிக்கவில்லை.நேராக dust bin இருக்கும் இடம் சென்று சிவாவின் ரெஸ்யூமை எடுத்து கிழித்து போட்டு விட்டு வெளியே ஃபோன் பேச சென்றாள்.

சிவா அதை பார்த்து விட்டு,"என்ன இவள் முழியே சரி இல்லையே"என்று தட்டை எடுத்து சென்று வைத்து விட்டு,குப்பை தொட்டியில் இருந்த பேப்பரை எடுக்க,அது அவனது ரெஸ்யூம்.அதை பார்த்து கோபம் அடைந்து அவளை தேடி கொண்டு சென்றான்.அப்பொழுது தூணுக்கு பின்னாடி அவள் பேசி கொண்டு இருப்பதை பார்த்தான்.அவள் என்ன பேசுகிறாள் என கேட்க நேர்ந்தது.

"அம்மா எனக்கு வேலை கிடைச்சாச்சு,மாசம் 20,000 ரூபா சம்பளம்.அப்புறம் ஆறு மாதம் கழித்து சம்பளம் கூடும்.நம்ம கஷ்டம் ஓரளவுக்கு தீர்ந்தாச்சு.தங்கச்சிக்கு காலேஜ் பீஸ் கட்ட பிரச்சினை இருக்காது.ஆனால்..." என்று தாரிணி ராகம் இழுத்தாள்.

மறுமுனையில் "ஆனால் என்ன?என்று அவள் அம்மா கேட்க,

தாரிணி"இந்த வேலை வேறு ஒருவனுக்கு கிடைக்க வேண்டியது அம்மா,ஆனால் அவன் ரெஸ்யூமை நான்  எடுத்து ஒளித்து வைத்து விட்டேன்.அதனால் பாவம் அவன் இன்டர்வியூ அட்டென்ட் செய்ய முடியாமல் போய் விட்டது.அவனுக்கு கிடைக்க இருந்த வேலையை நான் தட்டி பறித்தது எனக்கு குற்ற உணர்வாக இருக்கு"என வருந்தினாள்.

இதற்கு அவள் அம்மா"சரி நடந்தது நடந்து விட்டது விடு,அந்த பையனுக்கு கண்டிப்பாக நல்ல வேலை சீக்கிரம் கிடைக்கும் என வேண்டி கொள்"

"கண்டிப்பாக அவனுக்கு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கனும் என்று நான் வேண்டி கொள்கிறேன் அம்மா."

இதை எல்லாம் கேட்ட சிவா ,அமைதியாக வந்த வழியே சென்றுவிட்டான்.

"சாரி சிவா என்னை மன்னிச்சிடு.உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்."என்று தாரிணி மனதுக்குள் சொல்லி கொண்டாள்.

கீர்த்தி சிவாவை நினைத்து கொண்டு,"சிவா முதல் பார்வையிலேயே என்னை கொள்ளை கொண்டு விட்டாய். சீக்கிரமே உனக்கு இதே கம்பெனியில் வேலை ஏற்பாடு செய்து என் காதலை உன்னிடம் சொல்ல போகிறேன் என்று  சந்தோஷமாக உள்ளுக்குள் சொல்லி கொண்டாள்.

இருவரில் யாருக்கு சிவா கிடைக்க போகிறான்? தாரிணிக்கா? கீர்த்திக்கா?இருவருக்குமே சிவாவை அடைய சம உரிமை உள்ளது.ஆனால் ஒருவர் மட்டுமே சிவாவுடன் இணைய போகிறார்.அதை காலம் தான் தீர்மானிக்கும்.

தாரிணி தனக்கு வேலை கிடைத்து விட்டது என சிவாவின் நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்ப,பதிலுக்கு சிவா வாழ்த்துக்கள் என்று ரிப்ளை செய்தான்.

ஊரடங்கும் சாமத்திலே ...ஏ..எ ...

நானுறங்கும் நேரத்திலே . ...

காத்து போல வந்து தொட்டதாரு 

காதல்தீயை நெஞ்சில் இட்டதாரு

காத்து போல வந்து தொட்டதாரு 

காதல் தீயை நெஞ்சில் இட்டதாரு

யாரு அது யாரு யாரு 

ம்ம் ...அ ..அஹ ம்ம் ...எ ...

இந்த தேரை கொண்டு

போவதாறு 

ம்ம் ..ம்.. ம்ம் ...ஹ்ம்ம் ..

தாரிணி
[Image: IMG-20231011-213356.jpg]

கீர்த்தி

[Image: images-78.jpg]
binary to text
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️♥️உயிராக வந்த உறவே ♥️♥️♥️ - by Geneliarasigan - 12-10-2023, 08:36 PM



Users browsing this thread: 14 Guest(s)