Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)
#2
என்னுடைய பெயர் அண்ணாமலை

எனக்கு அப்பா இல்லை.. அம்மா மட்டும்தான்..

என் அம்மா ஒரு இளம் விதவை.. அவள் பெயர் பாலம்மா..

எப்போதும் வெள்ளை புடவையில்தான் இருப்பாள்..

ஆள் பார்க்க அந்த காலத்து சினிமா நடிகை நதியா மாதிரி இருப்பாள்

இன்றும் அவள் இளமையோடு நல்ல கவர்ச்சியோடும் இருப்பாள்

ஆனால் முகத்தில் ஒரு சோகம் எப்போதும் குடிகொண்டிருக்கும்..

ம்ம்.. நான் எப்படி இருக்கவேண்டியவ.. என்று எப்போதாவது ஏதாவது கஷ்ட நேரத்தில் சளித்து கொள்வாள்

அது ஏன் என்று புரியாது..

காரணம் நாங்கள் பரம்பரை பரம்பரையாக பால்கார குடும்பம்..

மாடுகள் வைத்து பால் கறந்து வீடு வீடாக சென்று பால் விற்பதுதான் எங்களுடைய பரம்பரை தொழில்..

இதுவரை அப்படிதான் நான் நினைத்து வாழ்ந்து கொண்டு இருந்தேன்..

ஆனால் எப்போது நான் அந்த அரண்மனை வீட்டில் பால் சப்ளை பண்ண ஆர்டர் எடுத்தேனோ.. அப்போதுதான் எனக்கு ஒரு அதிர்ச்சி உண்மை தெரிய வந்தது..

தினமும் அரண்மனையின் பின்பக்கம் சென்றுதான் நான் பால் ஊத்துவேன்..

ஒரு நாள் அந்த அரண்மனையை வெள்ளை சுண்ணாம்பு அடித்து சுத்தம் செய்ய ஆட்கள் வந்தார்கள்..

அதில் முருகேசன் என்பவர் எனக்கு ரொம்ப பழக்கமானவர்

ஆள் பார்க்க நகைச்சுவை நடிகர் வடிவேலு போலவே இருப்பார்

அங்கே சுத்தம் செய்யும் வேலைக்கு ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று என்னையும் வேலைக்கு கேட்டார் முருகேசன் அண்ணன்

நான் அம்மாவிடம் அந்த அரண்மனைக்கு வேலைக்கு போகிறேன் என்று சொன்னேன்..

அம்மா கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிய ஆரம்பித்தது..

நீ அந்த அரண்மனைல ராஜா மாதிரி வாழவேண்டியவன்.. அங்கேயா எடுபுடி வேலைக்கு போற.. என்றாள் அம்மா சோகமாக..

எனக்கு ஒன்றும் புரியவில்லை..

என்னம்மா.. நம்ம பரம்பரை பரம்பரையா பால்காரங்க.. நம்ம எப்படி அந்த அரண்மனைல.. அதுவும் நான் எப்படி அந்த அரண்மனைக்கு ராஜாவாக முடியும் என்றேன்..

சரி விடு அண்ணாமலை.. உன்னால ராஜாவாதான் அந்த அரண்மனைல வாழ முடியல.. ஒரு வேலைக்காரனாவாவது அந்த அரண்மனைக்குள்ள போ.. என்று அம்மா சொன்னாள்

இந்த அம்மா என்ன இப்படி சொல்றா.. கிறுக்கு கிறுக்கு புடிச்சிடுச்சா.. என்று நான் நினைத்துக்கொண்டே அந்த அரண்மனைக்குள் புகுந்தேன்..

முதல் நாள் பழைய பொருட்கள் போட்டு வைத்து இருக்கும் ஒரு அண்டர்கிரவுண்டில்தான் வேலைக்கு வைத்தார்கள்..

நான் அந்த அரண்மனையில் அண்டர்கிரவுண்டுக்குள் சுத்தம் செய்ய சென்றேன்..

அங்கே எனக்காக ஒரு அதிஷ்ட அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல் அந்த குப்பை கூளம் நிறைந்த அறைகளை மெல்ல மெல்ல சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்..

தொடரும் 1
[+] 5 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: மேஜிக் ஷூ (காலப் பயண கதை) - by vibuthi viyabari - 08-10-2023, 08:49 PM



Users browsing this thread: 12 Guest(s)