Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
கொலையுதிர் காலம் படத்தை வெளியிட ஐகோர்ட் தடை

[Image: NTLRG_20190611135547690289.jpg]

கமலின் உன்னைப்போல் ஒருவன், அஜித்தின் பில்லா 2 படங்களை இயக்கியவர் சக்ரி டோல்டி. இவர் நயன்தாரா நடிப்பில் இயக்கி உள்ள படம் கொலையுதிர் காலம். இதேப்படம் ஹிந்தியில் காமோஷி என்ற பெயரிலும் உருவாகி உள்ளது. அதில் தமன்னா, பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப்படங்கள் வரும் ஜூன் 14ம் தேதி வெளியாக உள்ளது. ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வரும் நிலையில் இப்படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்து இருக்கிறது. அதன் விபரம் வருமாறு...


பாலாஜி குமார் என்பவர் கொலையுதிர் காலம் படத்திற்கான தலைப்பை ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார். இந்த தலைப்புக்கான உரிமை இவரிடம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் படம் வெளியாக இருக்கிறது. ஆகவே இந்தப்படத்தின் பெயரில் நயன்தாரா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார் பாலாஜி குமார்.

இந்த வழக்கு இன்று(ஜூன் 11) விசாரணைக்கு வந்தது. காப்புரிமை சட்டத்தின் படி இப்படத்தின் தலைப்பு பாலாஜி குமாருக்கு சொந்தம் ஆகவே, கொலையுதிர்காலம் படத்தை வெளியிட நீதிபதி இடைக்கால தடைவிதித்தார். மேலும் இப்பட தயாரிப்பு நிறுவனம் ஜூன் 21-க்குள் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே பல பிரச்னைகளை கடந்து வந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்த கொலையுதிர்காலம் படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்திருப்பது அப்படக்குழுவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 11-06-2019, 05:06 PM



Users browsing this thread: 10 Guest(s)