Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
ரேணு !! என் காதலி ரேணு என்கிற எண்ணமெல்லாம் கடந்து ஒத்து வந்தா பார்ப்போம் இல்லைன்னா படிச்சி முன்னேறும் வழியை பார்ப்போம்னு ஒரு முடிவெடுத்து ஒரு மாதம் ஆகிவிட்டது !! எதோ ஸ்கூல் பையன் போல அன்னன்னைய பாடத்தை அன்னன்னைக்கு படிக்கிறேன்னா பார்த்துக்கங்க !!


ஆனா அப்பப்ப ரேணுகிட்ட எப்படி இருக்கு காலேஜ் என்ன ஏதுன்னு கேப்பேன் !! அப்படி போன ஒரு நாள் சாதாரணமாக அவனை பற்றி சொல்ல ஆரம்பித்தாள் !!


அவன் பெயர் ஆதவன் !! அவனும் பொள்ளாச்சி தான் !! ஆனா அவன் வேற ஸ்கூல் அதனால எனக்கு அவனை தெரியல !! ஆனா பொள்ளாச்சி எனும் ஒரே காரணத்தை வைத்து இருவரும் நட்பாக பழக ஆரம்பிச்சிருக்காங்க ! அதுல எனக்கு ஒன்னும் தப்பா தெரியல !! ரேணுவும் அவனைப்பத்தி அப்பப்ப சொல்லுவா நல்லா பழகுறான் ரொம்ப டீசண்ட் ! சிரிக்க சிரிக்க பேசுறான் அப்படி இப்படின்னு அவனை பத்தி சொல்ல ஆரம்பிக்க நானும் அதெல்லாம் பெருசா கண்டுக்காம விட்டேன் !!


அப்படி போன ஒரு நாள் , ரேணு சாதாரணமாக அந்த விஷயத்தை கேட்க எனக்கு ஒன்னும் புரியல .. இதை என்னன்னு எடுத்துக்குறது எப்படி எடுத்துக்க என்ன எனக்கு ஒன்னும் புரியல !! ஆனா நல்ல விஷயம் தான இதுக்கு எதுக்கு ரேணு வருத்தப்படுறா அதுதான் எனக்கு புரியல ...


சரி விஷயத்தை முதலில் இருந்து கேளுங்க பாதில சொல்லி நான் வேற உங்களை குழப்ப வேண்டாம் !!


வழக்கமான ஒரு மாலை நேரத்தில் எங்கள் போன் உரையாடல் தொடங்கியது !! என்ன ரேணு டல்லா பேசுற ?


ஒண்ணுமில்லைடா ...


என்ன ரேணு என்ன சொல்லு ...


இந்த ஆதவன் லவ் பண்ணுறாண்டா ...


யாரு உன்னையா ஹா ஹா ...


லூசு எதுனா அறிவிருக்கா உனக்கு அவன் எப்படி என்னை லவ் பண்ணுவான் நான் தான் அவன்கிட்ட உன்னை பத்தி எல்லாம் சொல்லிருக்கேனே ...

அதான வேற யாரை லவ் பண்ணுறான் ?


அபர்ணான்னு ஒரு பொண்ணு அவளும் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் !! ஆனா கேரளா பொண்ணு !


சரி அதுக்கு என்ன இப்ப ?


அவ பார்க்க கொஞ்சம் அழகா இருக்கா அவளை இவனுக்கு புடிச்சிருக்காம் அவகிட்ட ப்ரப்போஸ் பண்ணணுமாம் !!


சரி பண்ண வேண்டியது தான ?


டேய் அதெல்லாம் என் வேலையா ?


ஏன் ரேணு ஒரு பிரண்டா உன்கிட்ட ஹெல்ப் கேக்குறான் பண்ண வேண்டியது தான ?


ம்ம் ஒருவேளை அவ ஓகே சொல்லிட்டா என்னை கண்டுக்காம போயிட்டா என்ன பண்ணுறது ?


ஏன் அதனால உனக்கு என்ன ?


ம்ம் ஒரு நல்ல பிரண்டு இப்படி போயிட்டா அப்புறம் நான் என்ன பண்ணுவேன் !


ரேணு உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல உன்னோட சுயநலத்துக்கு அவன் லவ்வ ஏன் கெடுக்குற ?


அதுக்கில்லைடா அவ ரொம்ப கட்டுசெட்டான பொண்ணு பசங்க கூட பேச கூட மாட்டா அவகிட்ட போயி எப்படி ப்ரப்போஸ் பண்ணுறது ?


சும்மா சொல்லு வந்தா மலை போனா மயிறு . அவன்கிட்ட அப்படியே சொல்லிடு ...


ம்ம் நாளைக்கு தான் சொல்லப்போறேன் என்ன சொல்லுவான்னு பார்ப்போம் !!


ஓகே ஆல் தி பெஸ்ட் !!


ம்ம் இதை நீ ஆதவனுக்கு சொல்லு ... பாய்
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 01-10-2023, 07:10 AM



Users browsing this thread: 75 Guest(s)