♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Episode -59

அர்ஜுன் காசிமேடு கபாலிக்கு ஃபோன் செய்தான்.

கபாலி உன் மூலமா எனக்கு ஒரு உதவி ஆகனும்.

சொல்லு துரை,நான் என்ன செய்யனும்.?

நான் ஒரு பையனை அடையாளம் காட்டறேன்.அவன் கூட ஒரு பொண்ணு இருக்கும்,அவளை தூக்கி விட்டு வர வேண்டியது உன் வேலை.

சரி துரை என்னோட ஆள் ரெண்டு பேரை கூட்டிட்டு வரேன்.அட்வான்ஸ் ஒரு அம்பாதாயிரம் அனுப்புச்சு விடுங்க. பேலன்ஸ் காரியம் முடிந்தபின்  கொடுத்து விடுங்க.

அர்ஜுன்"யோவ் என்னய்யா,போன தடவை ஒரு ஆள் கை வெட்டவே அம்பதாயிரம் ரூபா தான் வாங்கின.இப்போ வெறும் கடத்தலுக்கு 1 லட்ச ரூபாய் கேட்குகிற."

ஆமா துரை,கை வெட்ட,கால் வெட்ட காசு கம்மி தான்.ஆனா பொண்ணை கடத்த வேண்டும் என்றால் ஒரு லட்ச ரூபாய் தான் ரேட் ‌.அதுவும் இன்னிக்கு மட்டும் தான் இந்த ரேட். சங்கத்தில் நாளையில் இருந்து ரெண்டு மடங்கு வாங்க சொல்லி இருக்காங்க.

ஓ உங்களுக்கு சங்கம் எல்லாம் இருக்கா?

ஆமா துரை,இப்போ போலீஸ் எங்களை பிடிச்சு உள்ளே ஏதாவது போட்டால் சங்கம் தான் வக்கீல் ஏற்பாடு பண்ணி வெளியே எடுப்பாங்க.வக்கீல் பீஸ் எல்லாம் கட்டுகடங்காமல் ஏறி விட்டது.அதை வைச்சு தான் ரேட் எல்லாம் நிர்ணியிக்கப்படுகிறது.

"சரி சரி அனுப்பி தொலைக்கிறேன் ."என்று அர்ஜுன் போனை வைத்தான்.
ஏற்கனவே ஏகப்பட்ட கடன் இருக்கு.இப்போ இந்த காசுக்கு எங்கே போவது என அர்ஜுன் யோசித்தான்.உடனே அவள் அக்காவின் நகையை திருடி விற்று காசை கபாலிக்கு அனுப்பினான்.

சஞ்சனா,கூரை புடவை போய் எடுத்திட்டு வந்து விடலாமா? ராஜா கேட்டான்.

ம்,போலாம் ராஜா.அப்புறம் தாலி கூட ரெடி ஆகிடுச்சு என ஃபோன் வந்தது.போய் அதையும் வாங்கிட்டு வந்திடலாம்.அப்புறம் அப்படியே ஹாஸ்பிடல் போய் ஒரு ஸ்கேன் எடுத்துட்டு வந்து விடுவோம்டா.

சரி சரி வா போலாம்.

ராஜாவும், சஞ்சனாவிடம் ஒரு புடவையைப் காட்டி இது நல்லா இருக்கு பாரு என்றான்.

ம்,உனக்கு பிடித்து இருந்தால் எனக்கு ஓகே தான்.

அது எல்லாம் கிடையாது.உனக்கு பிடிச்சு இருக்கா பார்த்து சொல்லு.

"எனக்கு அரக்கு கலரில் கல்யாண புடவை எடுக்க வேண்டும் என ஆசைடா"

சரி அதையே எடுத்து விடுவோம்.

தேடி கண்டு பிடித்து அங்கு இருந்த விற்பனையாளரை சுளுக்கு எடுத்து ஒரு வழியாக சஞ்சனாவிற்கு பிடித்த புடவை எடுத்தனர்.

அடுத்து தாலி வாங்கி கொண்டு,ஸ்கேன் எடுக்க ஹாஸ்பிடல் சென்றனர்.ஸ்கேன் ரிப்போர்ட் கூட கருவின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது என வர இருவரும் சந்தோஷமாக வந்தனர்.

இவர்கள் இருவரை ஒரு கார் நீண்ட நேரமாக ஃபாலோ பண்ணி கொண்டு வந்தது.

ராஜாவும்,சஞ்சனாவும் கொஞ்ச தூரம் சென்ற பிறகு ஒரு தெருவில் நுழைய அவன் பைக் ஆஃப் ஆகி விட்டது..

என்ன ஆச்சு ராஜா?

தெரியல சஞ்சனா,வண்டி ஆஃப் ஆகி விட்டது.

ராஜா பெட்ரோல் டேங்க் திறந்து பார்க்க அது காலி ஆகி இருந்தது.

என்ன ராஜா,பெட்ரோல் முன்னாடியே பார்த்து போட கூடாதா?சஞ்சனா கேட்க

சஞ்சனா,காலையில் உன் வீட்டுக்கு வருவதற்கு முன் தான் 300 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டேன்.அதுக்குள்ள காலி ஆக வாய்ப்பே இல்ல.எவனோ பெட்ரோல் திருடி இருக்கான்.இல்லை என்றால் இப்படி ஆகாது..!

சரி நீ வண்டியில் உட்காரு சஞ்சனா,கீதா கோவிந்தம் படத்தில் வருகிற மாதிரி நான் உன்னை பைக்கில் பெட்ரோல் பங்க் வரை தள்ளி கொண்டே போகிறேன்.

ஆ நான் மாட்டேன்.நான் நடந்தே வரேன்.உன்னை கஷ்டபடுத்தி விட்டு நான் மட்டும் ஜாலியா உட்கார்ந்துக்கிட்டு வர முடியாது.

இப்ப தானே உன்கிட்ட டாக்டர் சொன்னாரு. கொஞ்ச நாளைக்கு அதிகமா strain பண்ண கூடாது என்று.

அவர் ஆயிரம் சொல்லுவாரு.என்னால் முடியாது என்றால் கண்டிப்பாக முடியாது.

சரி இரு ராஜேஷிற்கு ஃபோன் பண்றேன்.அவன் பக்கத்தில் இங்கே எங்கேயாவது இருப்பான்.அவனை பெட்ரோல் வாங்கிட்டு வர சொல்றேன்.

ராஜா ஃபோன் பேசி முடிக்க,கபாலி ராஜா அருகே வந்தான்.

சார் இந்த அட்ரஸ் எங்கே என்று சொல்ல முடியுமா என்று கேட்டான்?

ராஜா அதை வாங்கி பார்க்கும் பொழுதே அவன் பின்னந்தலையில் யாரோ கட்டையால் அடித்தார்கள்.ராஜா யார் என்று திரும்பி பார்க்க அவன் தாடையிலும் கட்டையால் அடி விழுந்தது.ராஜா என்று சஞ்சனா கத்த,சஞ்சனாவின் கையை கபாலி பிடித்து ராஜாவின் மார்பில் எட்டி உதைத்தான்‌.ராஜா அங்கேயே மயங்கி விழ,கபாலியும் அவன் அடியாட்களும் சஞ்சனாவை தரதரவென காரில் ஏற்றினர்.யார் தன்னை கடத்துவது என புரியாமல் சஞ்சனா திகைக்க,காரில் இருந்த உருவத்தை பார்த்தவுடன் அவள் அதிர்ச்சி அடைந்தாலும் மனதுக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது.உள்ளே இருந்தது அர்ஜுன் தான்.

இவனை என்னாலே சமாளிக்க முடியும்.கொஞ்ச நேரம் அமைதியா இருந்து இவன் எதுக்காக என்னை கடத்தி இருக்கிறான் என்ற காரணம் மட்டும் தெரிந்து விட்டால் போதும்.அப்புறம் இவனிடம் இருந்து எளிதாக தப்பி விடலாம் என்று சஞ்சனாவிற்கு தோன்றியது.அதனால் முரண்டு எதுவும் பிடிக்காமல் அமைதியாக வந்தாள்.

கார் கோடம்பாக்கம் வழியே செல்லும் போது வாசு ,சஞ்சனா காரில் செல்வதை பார்த்தான்.

ஆகா சஞ்சனா காரில் போறாளே,நமக்கு கல்யாணத்திற்கு ட்ரெஸ் எடுத்து இருப்பதாக சொன்னாளே. இப்போ உடனே போய் வாங்கி விட வேண்டியது தான் என அவன் காரை பின் தொடர்ந்தான்.

ராஜேஷ்,ராஜா சொன்ன இடத்தில் வந்து பார்க்க,என்ன இவன் தக்காளி சாஸ் சாப்பிட்டு ரோட்டில் இப்படி படுத்து கிடக்கான் என்று அவனை எழுப்ப,அப்பொழுது தான் அது இரத்தம் என தெரிந்தது.

உடனே தண்ணீரை தெளித்து எழுப்ப ,ராஜா பின் மண்டையில் கை வைத்து கொண்டு எழுந்தான்.சஞ்சனா அருகில் இல்லாததை கண்டு பதறினான்.

டேய் என்னடா ஆச்சு?ராஜேஷ் கேட்க,

மச்சான் யாரோ வந்து சஞ்சனாவை கடத்திட்டு போய்ட்டாங்க.

யாருடா?ஒருவேளை ஷன்மதியா இருக்குமோ?

இல்ல மச்சான் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை.ஒரு நிமிஷம் இரு .என்னோட ஆபீஸ் மொபைல் உன்கிட்ட பேசிய பிறகு சஞ்சனாகிட்ட  தான் கொடுத்தேன்.நீ உடனே இக்பாலுக்கு ஃபோன் அடி..

யாரு நம்ம ஐடி டீமா?

ஆமாடா.என்னோட மொபைலை ட்ராக் பண்ணி அவ எங்கே இருக்கா என்று தெரிந்து கொள்ளலாம்.?

ராஜேஷ் போனில் ராஜா இக்பாலிடம் விவரங்களை சொல்ல,இக்பால் உடனே ட்ராக் செய்தான்.

இக்பால்"ராஜா, ஆற்காடு ரோடு வடபழனி கிட்ட காண்பிக்குது" என்று அவன் சொல்ல,

இக்பால் இது இப்போ நான் இருக்கும் இடத்தில் இருந்து 5 km தொலைவில் தான் இருக்கு.நீ கொஞ்சம் அப்படியே லொகேஷன் பார்த்து சொல்லிட்டே இரு.நான் உடனே ஃபாலோ பண்றேன்.

ஓகே ராஜா.

ராஜாவும் ,ராஜேஷிம் ஒரே வண்டியில் ஜெட் வேகத்தில் பறந்தனர்.

வளசரவாக்கம் ஒரு வீட்டின் முன்னே சென்று கார் நின்றது.ஒரு பெரிய பங்களா போன்று செட் போடப்பட்டு இருந்தது.

துரை என்ன இடம் இது?கபாலி அர்ஜுனிடம் கேட்டான்.

இதுவா கபாலி,சீரியல்கள் ஷூட்டிங் எடுக்கும் இடம்.இன்னிக்கு இங்கே எதுவும் ஷூட்டிங் கிடையாது.யாரும் இருக்க மாட்டாங்க.இவ இங்கே என்ன சத்தம் போட்டாலும் எதுவும் வெளியே கேட்காது.ஒடினாலும் அரை கிலோமீட்டர் ஓடினா தான் வெளியே போகவே முடியும்
என் ஆசை தீர நான் அவளை அனுபவிக்க போறேன்.

துரை,பொண்ணு தக்காளி பழ கலரில் செம அழகா இருக்கா.கையை பிடித்து இழுத்து வந்தப்பவே சும்மா ஜிவ்வென்று இருந்துச்சு.நீங்க அனுபவிச்ச பிறகு  எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க.

அதுக்கென்ன கபாலி ஆற்றில் போற தண்ணியை யாரு அள்ளி குடிச்சா என்ன?

சஞ்சனா எப்படி இவர்களிடம் இருந்து தப்பிப்பது என யோசித்து கொண்டு இருந்தாள்.ஆனால் கண்டிப்பாக ராஜா இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்டிப்பாக வந்து விடுவான் என்று நம்பினாள்.

சஞ்சனா அர்ஜுனிடம்,ஏண்டா அர்ஜுன் நீ என்ன பொட்டையா ,என் ராஜா கிட்ட நேரா நின்னு சண்டை போட்டு கூட்டி வர வக்கு இல்லாமல் போயும் போயும் திருட்டு தனமா அவனை பின் மண்டையில் அடித்து தூக்கி வந்து இருக்கே ,நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று அவனை பார்த்து காறி உமிழ்ந்தாள்.

அப்பொழுது வாசுவின் குரல் கேட்டது.

ஹே சஞ்சனா,என்ன இங்க வந்து உட்கார்ந்துகிட்டு இருக்க,எனக்கு ட்ரெஸ் வாங்கி வைத்து இருப்பதாய் சொன்னியே எங்க அது?என்று கேட்டான்.

"அடப்பாவி எந்த நேரத்தில் எங்க வந்து எதை கேட்கிறான் பாரு.டேய்  இவனுங்க என்னை கடத்திட்டு வந்துட்டாங்க ,இவங்ககிட்ட இருந்து முதலில் என்னை காப்பாற்று."

என்னது கடத்திட்டு வந்துட்டாங்களா..!!அப்போ உன்னோட சேர்த்து என்னையும் கடத்திட்டாங்களா.

ம்ஹீம் உன்னை கடத்தல,நீயா வந்து தொக்கா மாட்டிக்கிட்ட.டேய் அர்ஜுன் ,என்னோட தளபதி வாசு அண்ணன் வந்துட்டான்.அவன் திருவொற்றியூர் சிங்கம்,சென்னையின் don.அவன் அடிச்சா நேரா கண்ணம்மா பேட்டை  சுடுகாடு தான்.முடிஞ்சா அவன் மேல கை வைச்சிட்டு என் மேல கை வைடா பார்ப்போம்.

ஹே சஞ்சனா,என்னடி என்னென்னவோ சொல்ற,வாசு முழிக்க

டேய் வாசு நீ சும்மா இரு உன் பலம் உனக்கே தெரியாது.எங்க வாசு அண்ணன் மேல கை வைச்சவன் இதுவரை யாரும் உயிரோடு இருந்ததே இல்லை.அவன் ஹை வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர்டா,தொட்டவன் அப்படியே கருகிடுவான்,என சஞ்சனா உசுப்பேத்தினாள்.

"டேய் கபாலி என்னடா பார்த்திட்டு சும்மா நிக்கற,அவனை போய் வெளுத்து கட்டு" என்று அர்ஜுன் கத்தினான்.

நெருங்கி வரும் கபாலியின் கட்டு மஸ்தான உடம்பை பார்த்து வாசு எச்சில் விழுங்கினான்.

கபாலி அவனிடம் ," ஏண்டா நீ திருவொற்றியூர் சிங்கமா,நான் யார் தெரியுமா காசிமேடு புலி.புலியா சிங்கமா என்று ஒரு கை பார்த்து விடலாமா?என கையை முறுக்கி கொண்டு வந்தான்.

வாசு உடனே அவன் காலில் விழுந்து, "பிரதர் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல,டம்மி பீசு நானு.நான் எதுனா ஒரு வார்த்தை பேசினானா?என் பொண்டாட்டி அடிச்சா கூட நான் திருப்பி அடிச்சது இல்ல.உங்க ரேஞ்சுக்கு எல்லாம் நல்லா பல்க்கா இருக்கிற ஆள்கிட்ட  தான் மோதனும்.என்னை அடிச்சா அது உங்களுக்கு தான் அசிங்கம். ஓடி போடா நாயே என்று ஒரு வார்த்தை மட்டுமே சொல்லுங்க,நான் ஒரே ஓட்டம் ஓடி விடுகிறேன்" என்று அவன் காலை பிடித்து கெஞ்சினான்.

டேய் காலை விடுடா என்று கபாலி கத்த,வாசு சடாரென கபாலி காலை வாரி விட்டான்.இதில் கபாலி என்கிற மாமிச மலை தலை குப்புற கீழே விழுந்து சாய்ந்தது.

"சூப்பர் வாசு," என்று சஞ்சனா உற்சாகபடுத்தினாள்.இதுக்கு பேர் தான் கவுத்து போடும் கராத்தே,எங்க அண்ணன் கிட்ட இன்னும் இந்த மாதிரி பல வித்தைகள் இருக்கு.டேய் அர்ஜுன் எங்க அண்ணன் இன்னிக்கு உன்னை அலேக்காக தூக்கி மல்லாக்க போட்டு  நெஞ்சில் கதகளி ஆட போறாரு என சஞ்சனா மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினாள்.

அடியேய் பீத்த சிறுக்கி சும்மா இருக்க மாட்டே நீ,நானே எப்படி வெளியே தப்பி ஓடுவது என தத்தளித்து கொண்டு இருக்கிறேன்.நீ வேற அவனுங்கள உசுப்பி விட்டுகிட்டே இருக்கிற..

அர்ஜுனும்,கபாலி உடன் வந்த அடியாட்கள் வாசுவை துரத்த தொடங்க,அந்த பெரிய வீட்டுக்குள்ளேயே வட்டம் அடித்தனர்.வாசுவின் கால்கள் பயத்தில் கால்கள் பின்னி கொள்ள தடுமாறி கீழே விழுந்தான்.இதில் வாசுவை பிடிக்க ஓடி  வந்த அர்ஜுனும் மற்றும் அடியாட்களும்  எதிர்பாராத விதமாக வாசு விழுந்ததால் அவனை முந்தி சென்று சடாரென நிற்க ஒருவரையொருவர் முட்டி கொண்டு விழுந்தனர்.மீண்டும் வாசு எழுந்து ஓட ,அவர்களும் மூச்சு வாங்க வாங்க துரத்தினர்.ஒரு கட்டத்தில் வாசுவை கோழி போல் அமுக்கினர்.

அர்ஜுன் அவனிடம்"ஏண்டா அவளை நான் ரேப் பண்ணி,முதல் முறை அவளை தொட்டு,எச்சில் பட்ட கனி தான் அவனுக்கு கிடைக்கணும் என்று கஷ்டப்பட்டு கடத்திட்டு வந்தால் நீ நடுவில் வந்து என் உடம்பில் உள்ள சக்தி எல்லாம் உறிஞ்சி எடுத்துட்டீயே.நான் இப்போ எப்படிடா அவளை ரேப் பண்றது என சீறினான்.

வாசு அவனிடம் "டேய் லூசு,அவ ஏற்கனவே ராஜா எச்சில் வச்ச கனி தான்.எல்லோரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் முதல் இரவு கொண்டாடுவாங்க.ஆனா இவ முதல் இரவு கொண்டாட்டிட்டு தான் கல்யாணமே பண்ணிக்க போறா.

"டேய் என்னடா சொல்ற",அர்ஜுன் அதிர்ச்சியாகி கேட்க

போடா முட்டாள் இன்னுமா புரியல,அவ மூணு மாசம் கர்ப்பம் என்று சொல்றேன்..

அய்யய்யோ அய்யயோ என்று கை காலை உதைத்து கொண்டு குழந்தை போல் மண்ணில் புரண்டு அர்ஜுன் அழுதான்.

சஞ்சனாவும் ஒன்றும் புரியாமல் பார்க்க,

அடியாட்கள், துரை ஏன் அழுவுறீங்க..!அவன் எச்சில் வச்ச என்ன பிரச்சினை.நீங்க அவளை ரேப் பண்ணுங்க.அணில் கடித்த பழம் சுவையாக இருக்கும்.

"அட போங்கடா முட்டாள்களா,நான் எப்பவுமே இன்னொருத்தன் எச்சில் வச்சதை சாப்பிடவே மாட்டேன்.என்னோட கனவில் அநியாயமா மண்ணை அள்ளி போட்டுட்டாளே"என அவன் அழுகை இன்னும் அதிகமாகியது.

அப்போ இப்ப என்ன பண்றது துரை?

வேற வழி இல்லை,அவளை போட்டு தள்ள வேண்டியது தான்.எங்கேடா அவ என்று அர்ஜுன் கத்தினான்.

சஞ்சனா அதற்குள் பூனை போல் மெதுவாக பதுங்கி கதவை நெருங்கி விட்டு இருந்தாள்.

அர்ஜுன் அதை பார்த்து பிடிங்கடா அவளை,வெளியே தப்பி ஒடுறா என்று கத்த,சஞ்சனா கண் மண் தெரியாமல் ஓடினாள். கபாலியும் ஒரு வழியாக தள்ளாடி எழுந்து துரத்தினான்.சஞ்சனா வேகமாக ஓடி பலமான மார்பில் முட்டி கொண்டு பின்னோக்கி விழ, இரு முரட்டு கரங்கள் அவள் இடுப்பை வளைத்து பிடித்து விழாமல் தடுத்து  இறுக்கி அணைத்தது.அவளும் எதிர்வினை ஏதும் புரியாமல் காவிரி கடலில் சங்கமம் ஆவது போல் அவனுடன் ஒன்றி கலந்தாள்.

[Image: IMG-20230731-WA0006.jpg]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 20-09-2023, 11:10 PM



Users browsing this thread: 3 Guest(s)