♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(19-09-2023, 06:46 AM)Natarajan Rajangam Wrote: இந்த பாகம் கிட்டதட்ட தெலுங்கு படமான தருவு திரைப்படத்தை நியாபகம் படுத்தியது எனக்கு இந்த எமன் காதல் மக்கள் கூட்டம் என ஒருவனின் உயிரை காப்பாற்ற பலரும் போராடுவார்கள் ஆனால் அது வீடியோ இது எழுத்து எழுத்துக்கள் மூலமாக படிப்பவர்களை கட்டிபோடுவது சாதரண விஷயமல்ல அதை கட்சிதமாக செய்கிறீர் இந்த கதை கிட்டத்தட்ட முடிய போகிறது தங்களின் அடுத்தடுத்த கதைகளும் இதைவிட பலமாக பக்குவமாக (குடும்ப உறவு காமம் இல்லாமல் வேண்டாம்) இருந்தால் நல்லது.இந்த மாதிரி கதைகளுக்கு வரவேற்பு குறைவு.உங்களை போன்ற ஒரு சில நண்பர்கள் மட்டும் தான் கமென்ட் செய்கிறீர்கள்.உங்களை போன்றவர்களுக்காக மட்டுமே இந்த கதையை விடாமல் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன்.57 episode 


நீங்கள் சொன்ன படத்தை நான் பார்க்க வில்லை நண்பரே,இதில் கதையில் முதல் பாகத்தில் இருந்தே ராஜாவை,பிறருக்கு உதவி செய்யும் நபராகவே காண்பித்து இருப்பேன்.அதனால் தான் சஞ்சனா என்ற பொக்கிஷம் அவனுக்கு கிடைத்தாள்.அவன் பணம் அதிகமாக சம்பாதிக்கவில்லை என்றாலும் மனிதர்களை சம்பாதித்து உள்ளான் என்றே நான் இந்த கதையில் சொல்ல வந்த விசயம்.இந்த கதை இன்னும் 3 episode வது வரும்.சஞ்சனா,ராஜா திருமணத்திற்கு முன் ஒரு சம்பவம் நடைபெற போகிறது..அது சீரியஸ் சம்பவமாக இருந்தாலும் காமெடி கலந்து கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.இந்த மாதிரி கதைகளுக்கு வரவேற்பு குறைவு.உங்களை போன்றவர்களுக்காக தான் விடாமல் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன்.அதாவது 56 நாட்களில் 57 Episode எழுதி இருக்கிறேன்.இந்த கதைக்கு comments ஓரளவு வந்து இருந்தாலும் நான் எதிர்பார்த்த views வரவில்லை.ஒரு episode எழுத மட்டும் குறைந்தது 2 அல்லது 3 மணி நேரம் தேவைப்படுகிறது..மேற்கொண்டு புது கதை எழுதலாமா,வேண்டாமா என்ற மனநிலை உள்ளது.இப்பொழுது ஒழுங்காக இந்த கதையை மட்டும் எழுதி முடித்து விடுகிறேன்.வரவேற்பு இருந்தால் அடுத்த கதை என் மனதில் தயாராக உள்ளது.ஆனால் அது அமானுஷ்ய கதை.முன் ஜென்மம்,நிகழ்காலம் தொடர்பு உடைய பேய் சம்பந்தபட்ட கதை.முன் ஜென்மத்தில் நாயகியை அடைய முடியாமல் போனவன் அடுத்த ஜென்மத்தில் எப்படி ஆவியாக வந்து நிகழ் காலத்தில் பல முயற்சிகள் செய்து நாயகியை அடைகிறது என்பது தான் கதை சுருக்கம்.சொல்லபோனால் இந்த கதை என்னோட இரண்டாவது கதையாக வர வேண்டியது.ஆனால் இந்த கதைக்கு ஆவி சம்பந்தபட்ட விசயங்கள் நிறைய reference எடுக்க வேண்டும்.அதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது.வரவேற்பு கிடைத்தால் கண்டிப்பாக எழுதுவேன்.இல்லை என்றால் மன்னிக்கவும்.குடும்ப உறவு காம கதைகளை எப்பொழுதுமே நான் எழுதுவது இல்லை நண்பரே.என்னோட முதல் கதையை படித்தாலே உங்களுக்கு புரியும்.
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 19-09-2023, 07:04 AM



Users browsing this thread: 7 Guest(s)