13-09-2023, 09:13 PM
(This post was last modified: 13-01-2024, 10:07 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Episode -54
காசி முற்றிலும் புது இடம் ராஜாவிற்கு.இப்பொழுது தான் முதல்முறை அவன் வட இந்தியாவே வருகிறான். கொஞ்சம் கொஞ்சம் மட்டும் தான் இந்தி தெரியும் அவனுக்கு.அதுவும் பெங்களூரில் வேலை பார்த்த பொழுது கற்று கொண்டது.சஞ்சனா அணிவித்த செயின் அவன் மார்பில் ஊஞ்சலாடி கொண்டு இருந்தது.அதை பத்திரமாக எடுத்து உள்ளே வைத்து கொண்டு பின் காசி விசுவநாதர் ஆலயம் தரிசனம் செய்தான்.பைரவர் ஆலயம் சென்று,இந்த காசியில் 12 நாட்கள் தங்க அனுமதி கேட்டு மானசீகமாக வேண்டியும் கொண்டான்.கங்கை நதி ஓரம் சென்று அமர்ந்து அதன் அழகை ரசித்து கொண்டே இருக்க அவன் தோளில் ஒரு கை விழுந்தது.
என்ன தம்பி கங்கையில் முங்கி எழ வேண்டுமா? முகத்தில் சுருக்கங்களுடன் இருந்த வயதான நபர் 70 வயது நபர் கேட்டார்.
ஐயா,நான் தமிழ் என்று எப்படி தெரியும் உங்களுக்கு?
என்ன தம்பி,நீ சிவபுராணம் கோவிலில் தமிழில் தானே பாடினாய்?.அப்புறம் என்ன?நான் இந்த கும்பகோணம் பக்கம் தான்..நீ எந்த ஊரு? அந்த இடத்திற்கே உரிய பாஷையில் கேட்க
அவரை பார்த்தவுடன் ராஜாவிற்கு ஒரு அன்னியோன்யம் வந்தது."நான் சென்னையில் இருந்து வருகிறேன் அய்யா."
"உன்னை மாதிரி இளைஞன் தனியாக இறைவனை பார்க்க வந்தது சந்தோஷம்.இங்கே எத்தனை நாள் தங்குவதாக உத்தேசம்?"
"ஒரு பன்னிரெண்டு நாள் இங்கே தங்க வேணும் அய்யா,நான் ஓட்டலில் எதுவும் தங்க கூடாது.இங்கே கோவிலில் எங்கேயாவது தான் தங்கனும்."
"இங்கே தங்குவதற்கு மடம் எல்லாம் இருக்கு தம்பி,அங்கே தங்கிக்க முடியும்.சாப்பாடு கூட பிரச்சினை கிடையாது.மூணுவேளை சாப்பாடு இலவசமாகவே கிடைச்சிடும்.
"அய்யா நீங்க இங்கே எவ்வளவு நாள் இங்கே தங்கி இருப்பீங்க?"
நான் சாகிற வரை இங்கே தான் தம்பி,பெத்த பசங்க எனக்கு சோறு போடாமல் விரட்டி விட்டுட்டாங்க.அப்புறம் காசி வந்துட்டேன்.மூணு வேளை சோறு கிடைக்குது.காசியில் செத்தால் முக்தி என்று சொல்வார்கள்.எனக்கு இந்த பிறவியில் வந்த கஷ்டங்களே போதும்.அதனால் மறுபிறப்பு வேண்டாம் என்று சாகும் வரை இந்த காசியில் இருப்பதென முடிவு செய்து விட்டேன்.
"அய்யா எனக்கு தினம் ஒரு வேளை உணவு மட்டும் போதும்.எனக்கு நெருங்கியவர்களிடம் இருந்து நான் 12 நாள் மறைந்து வாழ வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.அதற்காக தான் நான் இங்கே வந்து உள்ளேன்."
"சரிப்பா கங்கையில் மூழ்கி எழுந்து வா,நாம் நம் மடத்திற்கு செல்லலாம்.."
ராஜா அந்த முதியவரை தன் தந்தையாகவே பாவித்தான்.தியானம் செய்த நேரம் போக அவருடன் சிரித்து பேசி கலகலப்பாக இருந்தான்.தனிமையில் வாடிய அவருக்கு இது ஆனந்தமாக இருந்தது.ஆரம்பத்தில் இருந்து கஷ்டங்களை அனுபவித்து வந்த ராஜாவிற்கு மடத்தில் இருக்கும் அசௌகரியங்கள் கஷ்டமாகவே தெரியவில்லை.
நாட்கள் வேகமாக உருண்டு ஓடி கொண்டு இருந்தது..
சஞ்சனா,ராஜாவின் நண்பர்கள் எல்லோரிடமும் அவனை பற்றி விசாரித்தாள். அவனை பற்றி தகவல் எதுவும் கிடைக்க வில்லை.ஆபீஸில் மட்டும் நீண்ட விடுமுறை எடுத்து இருப்பதாக தகவல் சொன்னார்கள்.ஐந்து நாட்கள் போவதே தெரியாமல் போய் விட்டது.
சஞ்சனா மனதிற்குள்"அப்போ வேண்டுமென்றே தான் லீவு போட்டு எங்கோ சென்று இருக்கிறான்.தன்னிடம் கூட சொல்லாமல் போக அப்படி என்ன அவசியம் வந்தது.வரட்டும் வரட்டும் என்னை தவிக்க விட்ட அவனை சும்மா விட கூடாது என அவன் மீது கோபம் கொண்டாள்.ஆனால் அந்த கோபம் கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை.
ராஜாவின் அம்மாவிடம் இருந்து சஞ்சனாவிற்கு ஃபோன் வந்தது.
சஞ்சனா ,ராஜா எங்கேயாவது முக்கிய விஷயமா வெளியே போய் இருக்கானா ?அவனுக்கு ஃபோன் போட்டால் ஸ்விட்ச் ஆஃப் என்றே வருது.அவன் தங்கச்சியை கேட்டாலும் தெரியல என்றே சொல்றா..
அப்பொழுது தான் ஒன்றை சஞ்சனா உணர்ந்தாள்.
அய்யயயோ இவன் அம்மா,தங்கச்சிகிட்டேயே சொல்லாம போய் இருக்கானே.அப்போ ஏதோ முக்கியமான விசயம் போல் இருக்கு.நான் தான் அவனை தவறாக நினைத்து விட்டேன்.அப்பப்ப சொல்வானே ஏதோ இந்த மாதம் 31 ந் தேதி வரை பொறு பொறு என்று.பாவம் என்ன மனதில் வைத்து கொண்டு கஷ்டப்படுகிறோனோ என தெரியவில்லையே..என சஞ்சனா மனசுக்குள் மறுகினாள்.
சஞ்சனா சஞ்சனா என மீண்டும் மீண்டும் அவன் அம்மா அழைக்கும் குரல் கேட்டது.உடனே சஞ்சனா நனவுலகுக்கு வந்தாள்.
சாரிம்மா கொஞ்சம் நெட்வொர்க் பிரச்சினை. அவனை ஆபீஸ் விஷயமா ட்ரைனிங் வெளியூர் அனுப்பி இருக்காங்க.அவன் ட்ரைனிங்கில் இருப்பதால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்து இருக்கும். என்ன விசயம் சொல்லுங்க,நான் அவன் கிட்ட சொல்லிடறேன்..
ராஜாவின் அம்மா அவளிடம்"சஞ்சனா அவன் அப்பா இறந்து ஒரு வருடம் ஆக போகுது.அவன் அப்பாவின் திதி நவம்பர் 3 ந் தேதி வருது.அவன் வந்து தான் திவசம் கொடுக்கணும்.அதை சொல்ல தான் அவனுக்கு ஃபோன் பண்ணினேன்.."
"நீங்க கவலையை விடுங்க அம்மா,நான் விசயத்தை சொல்லி விடுகிறேன்.."
சஞ்சனாவிற்கு ராஜா எங்கே போய் இருக்கான்,எப்படி கண்டுபிடிப்பது என தெரியவில்லை.டக்கென்று ஒரு யோசனை மனதில் உதித்தது.. உடனே அவன் தங்கைக்கு ஃபோன் செய்தாள்.
ஹலோ திவ்யா,எப்படி இருக்கே,?
நான் நல்லா இருக்கேன் அண்ணி,சொல்லுங்க என்ன விசயம்?
ராஜாவின் இ மெயில் பாஸ்வேர்டு என்னவென்று தெரியுமா உனக்கு?
அது ரொம்ப ஈஸி அண்ணி,என்னோட பேர் தான் Divya @123 என வரும்.அதில் ஃபர்ஸ்ட் லெட்டர் மட்டும் caps லெட்டர்.
சஞ்சனா போட்டு பார்க்க,அது incorrect password என வந்தது.
"இல்ல திவ்யா அது தப்பு என வருது.."
அப்போ என் பேருக்கு பதிலா உங்க பேரு போட்டு பாருங்க..அதுக்கு மேல அந்த டுபாக்கூருக்கு யோசிக்க தெரியாது.
Sanjana@123 என போட்டு பார்க்க,உடனே log in ஆகியது.
இப்போ ஓகே ஆயிடுச்சு திவ்யா.
பார்த்தீங்களா அண்ணி,நீங்க வந்த உடனே என் அண்ணன் உங்க பேரில் பாஸ் வேர்டு மாற்றி விட்டான்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல திவ்யா,இதுக்கு மேல என்னோட பாஸ்வேர்டு எல்லாம் உன் பெயரில் வைத்து கொள்கிறேன் போதுமா?
அய்யோ நான் சும்மா தான் கலாட்டா பண்ணினேன்.நான் போனை வச்சிடட்டுமா.கிளாஸ் ஸ்டார்ட் ஆக போகுது?
ஓகே திவ்யா bye..
சஞ்சனா அவன் email அனைத்தையும் ஒன்று விடாமல் பார்க்க,ட்ரெயின் டிக்கெட் ஒன்று புக் செய்யப்பட்டு பின் கேன்சல் ஆகி இருந்தற்கான மெயில் வந்து இருந்தது.அந்த என்ன ட்ரெயின் என்று பார்க்க வாரணாசி எக்ஸ்பிரஸ் என்று இருந்தது..அதே தேதியில் ஒரு டிராவல்ஸ் கம்பனியில் இருந்து இ மெயில் வந்து இருந்ததை ஓபன் செய்து பார்க்க,அது வாரணாசி செல்வதற்கான விமான டிக்கெட் மெயில்.ராஜா சென்ற இடம் வாரணாசி என சஞ்சனாவிற்கு தெளிவாக புரிந்து விட்டது..
அப்பொழுது சஞ்சனாவின் தோழி ஓடி வந்து ஒரு வீடியோவை காண்பித்தாள்..
அதில் ராஜா கோளாறு பதிகத்தை காசி கோவிலில் உருக்கமாக பாடுவதை எடுத்து ஒரு வட இந்திய பெண் பதிவேற்றி இருந்தாள்.அந்த பதிகம் தன்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது எனவும்,தமிழ் மொழி மிகவும் அழகான மொழி என்றும் கூறி இருந்தாள்.
இது போதுமே ,ராஜா காசியிலா ஒளிந்து கொண்டு இருக்கிறாய்.இதோ உடனே புறப்பட்டு வருகிறேன்.யாரை உடன் கூட்டி செல்லலாம் என்று யோசிக்க,அப்பொழுது வாசு ஆடிய நடனத்தை கம்ப்யூட்டரில் பார்த்து பக்கத்தில் இருந்த தோழிகள் சிரித்து கொண்டு இருந்தார்கள்.
"ம் இருக்கவே இருக்கான் நம்ம வாசு,"உடனே வாசுவுக்கு ஃபோன் அடித்தாள்.
சென்ட்ரல் ரயில் நிலையம்,
வாரணாசி செல்ல ரயில் தயாராக இருந்தது.
அப்புறம் சஞ்சனா,AC டிக்கெட் தானே புக் பண்ணி இருக்கே.AC இல்லனா இந்த வாசு ரயிலில் ஏற மாட்டான் பார்த்துக்க,வாசு மிரட்ட
சரி சரி வா,இந்த கோச்சில் ஏறு,சிக்னல் போட்டுட்டாங்க..
இது ஸ்லீப்பர் கோச் சஞ்சனா,நம்மளோடது Ac கோச் இன்னும் முன்னாடி போகனும்..
இந்த கோச் ஏறுடா சீக்கிரம்,நடந்து நடந்து அப்படியே உள்ளே போய் விடலாம்..
சஞ்சனா ஒரு சீட் நம்பர் சரி பார்த்து உட்கார,
"என்ன சஞ்சனா இங்கேயே உட்கார்ந்துட்ட,வா நம்ம கோச்சுக்கு போகலாம்..அங்கே ac குளு குளுவென இருக்கும்" வாசு கூப்பிட்டான்.
"நம்ம கோச் இதுதான்.."சஞ்சனா அமைதியாக சொல்ல.
"அடிப்பாவி ,அப்போ Ac டிக்கெட் புக் பண்ணலயா.."
டேய் மூடிட்டு உட்காரு,நானே என் ராஜாவை எப்போ பார்க்க போகிறேன் என்ற கவலையில் இருக்கேன்.நீ வேற.ஜாஸ்தி ஏதுனா பேசின ஓடுற ரயிலில் இருந்து உன்னை பிடித்து தள்ளி விடுவேன் பார்த்துக்க...
வாசு பயந்து அமைதியாக உட்கார்ந்தான்..
"டேய் முக்கியமான விசயம்,TTR வரும் போது மட்டும் சொல்றேன்.அப்ப மட்டும் கக்கூஸில் போய் ஒளிஞ்சிக்க"
என்னது அப்போ எனக்கு டிக்கெட் எடுக்கலயா நீ? வாசு பதறினான்.
சஞ்சனா சிரித்து கொண்டே ,சும்மா சொன்னேன் வாசு. கடைசி நேரத்தில் டிக்கெட் ஏற்பாடு பண்ண போதும் போதும் என்றாகி விட்டது.விமான டிக்கெட் புக் பண்ணலாம் என்று பார்த்தால் அங்கே சரியான பனி மூட்டம்,அதனால் பாதி விமானங்கள் கேன்சல் ஆகிடுச்சு.மீதி விமானங்கள் டிக்கெட்டே இல்லை என்று சொல்லிட்டாங்க..ராஜாவை திரும்ப கூட்டி வரும் போது விமானம் கிடைத்தால் அதில் வரலாம் போதுமா?
அய் சூப்பர் சஞ்சனா,முதல் முறை விமானத்தில் வர போகிறோமா ? அய் ஜாலி ஜாலி..
சஞ்சனா அவனிடம் "சரி நான் upper சீட் போய் படுத்துகிறேன்.நீ லோயர் எடுத்துக்கோ.."
"ஆமா சஞ்சனா,எனக்கு அடிக்கடி ஒன்னுக்கு வரும்.எனக்கு லோயர் தான் பெஸ்ட்.."வாசுவும் கூறினான்.
சஞ்சனாவிற்கு எப்பொழுது காசி சென்று அடைவோம் என்ற நினைப்பாகவே இருந்தது.என்ன தான் ரயில் வேகமாக சென்று கொண்டு இருந்தாலும் அந்த வேகம் சஞ்சனாவிற்கு ஊர்ந்து போவது போலவே தோன்றியது.விட்டால் அவளே சென்று ட்ரெயின் ஒட்ட வேண்டும் வெறியாக இருந்தது.
அடுத்த நாள் விடியற்காலை 5 மணி அளவில் ராஜா கங்கை கரையில் தியானம் செய்து கொண்டு இருக்க,அங்கு இரு அகோரிகள் வந்தனர்.
அதில் இளைய வயதுடைய நபர் முதியவரை பார்த்து"குருஜி,இந்த இளைஞனின் முகத்தை பாருங்கள்.என்ன ஒரு தேஜஸ்.என்ன ஒரு பொலிவு"என கூறினான்..
அந்த முதிய அகோரி அவன் முகத்தை உற்று பார்த்து ,"சிஷ்யா இது அணைய போகிற விளக்கு.அதனால் தான் பிரகாசமாக எரிகிறது.இந்த பையனுக்கு இன்னும் 7 நாட்களில் ஒரு பெரிய கண்டம் வர போகிறது.அதில் இவன் பிழைப்பது மிக மிக கடினம்.இதில் என்ன ஒரு கூத்து என்றால் இந்த மரணத்தை அவனே வேண்டி விரும்பி அழைக்கிறான்.பாவம் அல்பாயுசு,வா போகலாம்" என்று அவர்கள் கிளம்பி விட்டனர்.
ராஜா அவர்கள் பேசியதை கேட்டு மிகுந்த உற்சாகம் அடைந்தான்.அவர்கள் கூறியது அவன் இறக்க போகிறான் என,அதற்கு அவன் வருத்தபடுவதற்கு பதில் சந்தோஷமே அடைந்தான்.தான் எண்ணிய எண்ணம் ஈடேற போவதை எண்ணி அவன் மனம் சந்தோஷமே பட்டது.ஏன்?