♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Episode -53

நிகழ்ச்சி நடைபெறும் நாளும் வந்தது.
வாசு தனியாக ஒரு டப்பாங்குத்து நடனமும்,ராஜா மற்றும் சஞ்சனா இணைந்து சிவ சக்தி நடனமும் ஆடுவதென முடிவாகி இருந்தது.
ராஜாவிற்கு சிவனின் ஆடைஅமைப்பு என்பதால் புலித்தோல் ஆடை மட்டுமே அணிந்து ஆட வேண்டிய கட்டாயம்.

ராஜாவின் உடை அலங்காரத்தை பார்த்து வாசு விழுந்து விழுந்து சிரித்தான்.

டேய் அமைதியா இரு வாசு,சஞ்சனா வந்து பார்த்தால் உனக்கு உதை விழ போகுது.

மச்சான் என்னால சிரிப்பு அடக்கவே முடியலடா,எப்படிடா இதை போட்டு கொண்டு டான்ஸ் ஆட போறே.காலை தூக்கி ஆட வேண்டி வந்தால் உள்ளே இருக்கும் மொத்தம் தெரிய வருமே.

"டேய் லூசு நான் உள்ளே ஜட்டி போட்டு இருக்கேன்டா.."

இருந்தாலும் இந்த ட்ரெஸ்ஸை போட்டு கொண்டு நீ ஆடுவதை கற்பனை பண்ணி பார்த்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது..

வாசு தலையில் பட்டென்று குட்டு விழுந்தது.
"அம்மா" அன்று கத்தி கொண்டே வாசு திரும்பி பார்க்க,சஞ்சனா நின்று கொண்டு இருந்தாள்.

டேய் தேங்காய் முடி மண்டையா, அவன் டிரஸ்ஸையா கிண்டல் பண்ற,இந்தா உன் காஸ்ட்யூம்,இதை தான் இப்போ நீ போட்டு கொண்டு ஆட போறே...

வாசு அதை ஆவலோடு பிரித்து பார்க்க,வெறும் ஒற்றை பட்டாபட்டி டவுசர் மட்டுமே இருந்தது..

என்ன சஞ்சனா இது,வெறும் ஒரே ஒரு டவுசர் மட்டும் தான் இருக்குது..

பின்ன நீ ஆட போற பாட்டு,வாடி பொட்டை புள்ளை வெளியே என் வாலிபத்தை நோகடித்த கிளியே என்ற பாட்டு தான்.இதுக்கு இந்த ட்ரெஸ் தான் கொடுக்க முடியும்.அதுவும் இந்த பாட்டை உன் பொண்டாட்டியைப் நினைச்சி தான் ஆட போறே என்று சொன்னே இல்ல

ஆமாம் சஞ்சனா,அவள் என்னை வீட்டில் கொடுமைபடுத்துவதை எண்ணி தான் இந்த பாட்டு ஆட போறேன்.அப்படியே என் உள்ள குமுறல்களை மேடையில் கொட்டி ஆட போறேன்.நீ பாரு வெறித்தனமா இருக்கும்

சஞ்சனா சிரித்து "அதுக்கு தான் ஸ்பெஷல் பெர்மிஷன் போட்டு  உன் பொண்டாட்டியை இந்த நிகழ்ச்சிக்கு ராஜேஷ் அண்ணா கூட்டி வந்து முதல் வரிசையிலேயே உட்கார வைச்சு இருக்காங்க பாரு,"

வாசு பதறி போய் விட்டான்."அய்யயோ என்னங்கடா இந்த  வேலை பார்த்து வச்சு இருக்கீங்க..அவ இதை பார்த்தால் என் நிலைமை என்ன ஆவறது.என்னால ஆட முடியாது போங்கடா.நீங்களும் உங்க நிகழ்ச்சியும்"

"டேய் வண்டுருட்டி தலையா,நீ மட்டும் ஆட முடியாது என்று சொன்னால் இந்த வீடியோவை இப்போ இங்கே ஸ்டேஜ்ஜில் போட்டு காட்டி விடுவேன்" என சஞ்சனா மிரட்டினாள்.

அப்படி என்ன வீடியோ?  என்று வாசு அதை அலட்சியமாக வாங்கி பார்க்க,ஒரு நிமிடம் அதை பார்த்து பதறி போய் விட்டான்.

ராஜா நீயும் இதை பாரு,என காண்பிக்க,"என்னடா வாசு இப்படி பண்ணி இருக்கே."என்று ராஜா கிண்டல் பண்ணினான்.

சார் ஒரே இரவில் ஒபாமா ஆயிட்டார் தெரியுமா ராஜா உனக்கு? நேற்று இரவில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ மட்டும் இதுவரை 2 லட்சம் பார்வை போய் இருக்கு.ஒரு டம்மி ஆல்கஹால் பாட்டில் வச்சு பிராங்க் பண்ணி இருக்காங்க.மத்த எல்லோரும் வராங்க அந்த பாட்டில எடுக்க முயற்சி பண்ணும் போது அங்கே உள்ள டம்மி பாம்பை பார்த்து பதறி அடிச்சு ஒடுறாங்க.ஆனால் நம்ம ஹீரோ மட்டும் பாம்பை அசால்ட்டாக தூக்கி போட்டு விட்டு அந்த குவார்ட்டர் பாட்டிலை திறந்து குடிக்கிறார்.போதாகுறைக்கு அந்த டம்மி பாம்பை side dish ஆ நினைச்சு கடிச்சு வேற சாப்பிடறான். ஆல்கஹாலும் டம்மி,பாம்பும் டம்மி ஆனா இவன் பண்ற அலப்பறையை பார்த்து இந்த வீடியோ தான் இன்டர்நெட்டில் இப்போ டிரெண்டிங்.

அடப்பாவி வாசு,டம்மி சரக்கு என்று கூட தெரியாம தான் இந்த ஆட்டம் போட்டியா?

அய்யோ அப்படி எல்லாம் இல்ல மச்சான்,எனக்கு எதுவுமே நினைவிலேயே இல்ல.அனேகமா அந்த நேரம் லேசா சரக்கு உள்ளே விட்டு இருப்பேன் என நினைக்கிறேன்.அதான் போதையில் இதுவும் சரக்கு என நினைச்சு குடிச்சு கொஞ்சம் ஓவரா ஆட்டம் போட்டுட்டேன்.இதை பார்த்தா என் பொண்டாட்டி என்ன செய்வாள் என்றே தெரியாது?இப்போ என்னடா பண்றது?

சஞ்சனா ஏதாவது பண்ணுடி,வாசு பாவம்,ராஜா கெஞ்ச

ஒழுங்கா அவனை டான்ஸ் ஆட சொல்லு ராஜா,நான் அவன் ஆட போகிற பாட்டு விஷயமா அவன் பொண்டாட்டி கிட்ட பேசறேன்.அதனால் எந்த பாதிப்பும் வராது.அவன் ஆடவில்லை எனில் இந்த வீடியோவை மேடையில் போட்டு விடுவேன்.அப்புறம் நடக்கிற சம்பவங்களுக்கு நான் பொறுப்பு இல்ல..

அம்மா தாயே நான் ஆடறேன் போதுமா?எப்படியோ கோர்ட்டுக்கு போகாம ,வக்கிலை பார்க்காம அஞ்சு பைசா செலவு பண்ணாம டிவோர்ஸ் வாங்கி கொடுக்க முடிவு பண்ணிட்டீங்க.. என புலம்பினான்.

டேய் வாசு,நீ தைரியமா போய் ஆடு.நீ வருவதற்குள் இந்த வீடியோ டெலீட் ஆகி இருக்கும்.இந்த பிராங்க் வீடியோ பன்றவன் நம்பர் என்கிட்ட  இருக்கு.இவன் வீடு வளசரவாக்கத்தில் தான் இருக்கு.நான் இவன் கிட்ட ஆர்டர் எடுத்து இருக்கேன்.ஒருத்தர் அனுமதி இல்லாம எந்த வீடியோவும் பதிவேற்ற முடியாது.நான் பேசி டெலீட் பண்ண வைக்கிறேன்.

தயவு செய்து பண்ணு மச்சான்,உனக்கு புண்ணியமா போகும்..இல்லனா என் பொழைப்பு நாறி போய் விடும்..

முதலில் ஹைதராபாத்,பெங்களூர், டெல்லி என அந்தந்த ஊரில் இருந்து வந்தவர்கள் எல்லோரும் ஆடினர்.அதிலும் குறிப்பாக பெங்களூரில் இருந்து வந்தவர்கள் மட்டும் செமயாக கலக்கினர்.
தங்களை போல இனி யாரும் ஆட முடியாது இறுமாப்புடன் அவர்கள் இருந்தனர்.

வாசு மேடை ஏறினான்.அவன் தனக்கே உரிய சேஷ்டைகளுடன் நய்யாண்டி பண்ணி ஆட அனைவரும் வெகுவாக ரசித்தனர்.அதுவும் அவன் மனைவியே கை தட்டி விசில் அடிக்க வாசு குஷியாகி மேலும் நன்றாக ஆடினான். தன் கணவனுக்குள் உள்ள திறமையை கண்டு கை தட்டி உற்சாகப்படுத்த,வாசுவின் குழந்தையும் அவன் நடனத்தை கண்டு சந்தோஷத்தில் அதுவும் கன்னாபின்னாவென்று குதித்தது.
அந்த ஒரு பாட்டிலேயே அங்கு இருந்த அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து விட்டான் வாசு.

வாசு மேடையை விட்டு கீழே இறங்கி வர சஞ்சனா அவனை பார்த்து " போதுமா வாசு ,உன் பொண்டாட்டி கிட்ட சொல்லிட்டேன்.இது மேடையில் அவன் ஆடுவதற்காக நான் தான் இந்த பாட்டை செலக்ட் பண்ணி கொடுத்தேன் என்று சொல்லி விட்டேன்.அவங்களும் கை தட்டி நல்லா ரசித்து பார்த்தாங்க.போ தைரியமாக இரு."

ஆமா ராஜா எங்கே,வாசு ஆர்வமுடன் கேட்க,

அவன் உனக்காக ஃபோன் செய்து விட்டு வரேன் என்று சொல்லி இருந்தான்.இன்னும் ஆளேயே காணோம்..

"சரி உன் பேரை கூப்பிடறாங்க பாரு.நீ உடனே மேடைக்கு போ, நான் ராஜா வந்த உடன் அனுப்பறேன்"என வாசு அவளை அவசரபடுத்தினான்.

சஞ்சனா திரும்பி திரும்பி பார்த்து கொண்டு மேடை ஏற,அங்கு ஒரு ஆள் உயர லிங்கம் மட்டும் வைக்கப்பட்டு இருந்தது.நடன இயக்குனர் வந்து அந்த லிங்கத்தை பார்த்து சிவனை நடனம் ஆடி நீ வரவழைக்க வேண்டும்.இது தான் கான்செப்ட் என கூறினார்.

சார் ராஜா எங்கே,?

அவன் நீ இந்த பாட்டு முடியும் போது வருவான்..நீ போய் ஆடு..அதுக்கு அப்புறம் அவனும் நீயும் சேர்ந்து ஆடுவீர்கள் என்று அவர் கூற அவனை நினைத்து கொண்டு ஏக்கமாக ஆட தொடங்கினாள்.

சக்தி சிவனை வரவழைப்பது போல் பாடல் பாட தொடங்க,சஞ்சனா அதற்கேற்ப நடனம் ஆட தொடங்கினாள்.அவள் ஒவ்வொரு அசைவும் அவனை நினைத்து ஏக்கமாகவே வெளிப்பட்டது.தலைவி, தலைவனை நோக்கி ஏங்கி பாடுவது போல் அவள் உணர்ச்சிகள் இருந்தது.கடைசியில் பாட்டு முடிந்து சஞ்சனா லிங்கத்தின் அடியில் விழ,அப்பொழுது லிங்கம் வெடித்து சிதறி அதில் இருந்து ராஜா பிரவேசித்தான்.

இதை சஞ்சனாவே எதிர்பார்க்கவில்லை.இந்த கான்செப்ட் ராஜாவும்,நடன இயக்குனரும் சேர்ந்து திட்டம் போட்டது.அவள் முகத்தில் மலர்ச்சியுடன் எழ,இருவரும் சேர்ந்து ஆட தொடங்கினர்.

பாடல் தக தக தகவென ஆடவா,சிவசக்தி சக்தியோடு ஆடவா என்ற பாடல் ஓட இருவரும் ஒரு சேர சிவ தாண்டவம் ஆட தொடங்கினார்கள்.அனைவரும் மெய்மறந்து நடனத்தை கண் இமைக்காமல் பார்த்து ரசிக்க அந்த இடமே பாடல் ஒலியை தவிர வேறு சத்தமே எழவில்லை.அவர்கள் இத்தனை நாள் பாடுபட்ட மொத்த உழைப்பும் அந்த மேடையில் தெரிந்தது.இருவருக்குள் இருந்த புரிந்து கொள்ளும் தன்மை ஆட்டத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றனர்.நாராயணன் சார் முகத்திலோ கொள்ளை பூரிப்பு.பெங்களூர் அணி முகம் முழுவதும் வாடி விட்டது.இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு முன் தங்களின் ஆட்டம் ஒன்றுமே இல்லை என அவர்களுக்கு தெளிவாக புரிந்து விட்டது.அதுவும் கடைசி இரண்டு நிமிடங்கள் அவர்கள் அர்த்தநாரீஸ்வரர் நடனம் ஆட அதை பார்த்து அனைவரும் மூச்சு கூட விட மறந்தார்கள்.ராஜாவின் வலது புறமும்,சஞ்சனாவின் இடது புறமும் ஒரு சேர ஒரே பாவனைகளை வெளிப்படுத்திய ஆட்டம் அனைவரையும் மயிற்கூச்செரிய வைத்தது.கடைசியாக பாடல் முடியும் போது ராஜாவின் இடது பாகத்தில் சஞ்சனா இடம் பெற,இருவரும் அர்த்தநாரீஸ்வரர் போல தோற்றம் அளித்தனர்.ராஜாவின் ஒரு பாதி மட்டுமே தெரிய,சஞ்சனாவின் உடலிலும் ஒரு பாதி மட்டுமே தெரிந்தது.சினிமாவில் பயன்படுத்துவது போல் இங்கு ஸ்கிரீன் மேஜிக்கை உபயோகித்து இருந்தனர்.அனைவரும் எழுந்து கை தட்ட ஸ்கிரீன் மூடப்பட்டது.எல்லோரும் சஞ்சனா மற்றும் ராஜாவை நோக்கி ஓடி வர இருவரும் கூட்டத்தில் மாட்டி கொண்டனர்.அது ராஜாவிற்கு மிகவும் வசதியாகி போனது.நைசாக கூட்டத்தை சாதகமாக்கி அந்த இடத்தில் இருந்து நழுவினான்.

நாராயணன் சார் நிகழ்ச்சியின் முடிவுரை வழங்கி கொண்டு இருந்தார் அதில் ராஜா மற்றும் சஞ்சனாவின் ஆட்டத்தை மிகவும் புகழ்ந்தார்.சிஇஓ ஶ்ரீவத்ஸன் அவரும் பேசும் போது இந்த மாதிரி ஒரு நடனத்தை நான் இதுவரை நேரில் பார்த்ததே இல்லை.அவர்கள் இருவரை நான் மேடைக்கு அழைக்கிறேன் என்று கூற,
சஞ்சனா ராஜாவை தேட ஆரம்பித்தாள்.அவள் அவன் மொபைலுக்கு கால் செய்ய அது ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.

சஞ்சனா ,ராஜா எங்கே ராஜா எங்கே என கேட்க,யாருமே தெரியவில்லை என கூறினார்கள்.

கூட இருந்தவர்கள் அனைவரும் சஞ்சனா நீ மட்டுமாவது மேலே போ என கூறினார்கள்.சஞ்சனா எப்படியும் ராஜா வந்து விடுவான் என நினைத்து மேடையேற,

ஶ்ரீவத்ஸன் அவளை பார்த்து,எங்கம்மா உன் ஜோடி என கேட்டார்.

சாரி சார் ,அவன் கொஞ்சம் அவசரமாக வெளியே போய் இருக்கான்.

ஶ்ரீவத்ஸன் மேடையில் பேச ஆரம்பித்தார்.

நாராயண் ,நான் இதுவரை என்னோட பெங்களூர் டீம் தான் இந்த மாதிரி கலை நிகழ்ச்சியில் கலக்குவாங்க என்று நினைத்தேன்.ஆனால் உங்க டீம் சேல்ஸ் மட்டும் அல்ல,இந்த மாதிரி போட்டிகளிலும் கலக்குவார்கள் என்று இன்னிக்கு தான் எனக்கு தெரிந்தது.இவங்க ரெண்டு பேர் ஆட்டம் அப்பப்பா அந்த சிவசக்தியின் நடனத்தையே நேரில் கொண்டு வந்து விட்டார்கள்.எங்க டீம் ஆட்டம் இவர்கள் ஆட்டம் முன்பு ஒன்றுமே இல்லை.ரியலி பென்டாஸ்டிக்.என்ன ஆடிய அந்த பையனை காணோம்.பரவாயில்லை நாராயண் இவங்க ரெண்டு பேருக்கும் எக்ஸ்டிரா ஒரு மாத சம்பளம் போட்டு விடுங்க..அவர் நினைவு பரிசை வழங்க சஞ்சனா பெற்று கொண்டாள்.பக்கத்தில் ராஜா இல்லாதது அவளுக்கு பெரிய குறையாக இருந்தது.ஶ்ரீவத்ஸன் மேலும் தன்னோட காஸ்ட்லி வாட்சை கழட்டி,இதை உன்னோட ஆடிய அந்த பையனுக்கு கொடுத்து விடும்மா என கூறினார்.

சஞ்சனா மேடையை விட்டு கீழே இறங்கும் நேரம் ,ராஜா விமான நிலையம் சென்று விட்டு இருந்தான்.அவசர அவசரமாக செக் இன் செய்து விட்டு அவன் உள்ளே செல்லவும் வாரணாசி செல்லும் விமானம் தயாராக இருந்தது.

விமானத்தில் ஜன்னல் வழியே பார்க்க சென்னை அவன் கண்களில் இருந்து மறைந்து கொண்டே வந்தது.அவன் கண்கள் சஞ்சனாவை நினைத்து கண்ணீர் துளிர்த்தது.அவள் பாவம் இந்நேரம் என்னை தேடி கொண்டு இருப்பாள்.சொல்லி கொண்டு கூட வர முடியாத சூழ்நிலை.

சஞ்சனா ராஜா மொபைலுக்கு இரவு முழுக்க தொடர்ந்து ஃபோன் செய்து ஓய்ந்தாள்.

"ராஜா எங்கேடா சொல்லாமல் கொள்ளாமல் போனாய்.நாளைக்கு பிளீஸ் என்னை பார்க்க வந்து விடுடா.உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது" என்று புலம்பினாள்.

[Image: FB-IMG-1693641471416.jpg]
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 12-09-2023, 11:24 PM



Users browsing this thread: 14 Guest(s)