♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Episode -52

ராஜாவை செம வேலை வாங்கினாள் சஞ்சனா.ராஜா ஆடியிராத ஆட்டத்தை ஆட வைத்து ட்ரில் வாங்கி கொண்டு இருந்தாள்.நடன இயக்குனர் பெயரளவுக்கு மட்டுமே இருக்க,மொத்த வேலைகளை சஞ்சனா ஒருத்தியாகவே பார்த்து கொண்டு பம்பரமாய் சுழன்று கொண்டு இருந்தாள்.

"சஞ்சனா என்னால முடியல,இந்த ஆட்டம் எனக்கு வராது போல இருக்குடி.என்னை விட்டுடு"என கெஞ்சினான்..

அது எப்படி வராமல் போகும்,75 % வந்தாச்சு,இன்னும் 25 % மட்டும் தான்.continue பண்ணு கமான், கமான்...சஞ்சனா உற்சாகப்படுத்த

ராஜா அவளிடம் "ஆமா எங்கே வாசு, ஆளே காணோம்..."

தெரியல ராஜா,டான்ஸ் மாஸ்டர் இருக்கார்.ஆனால் அவன் ஆளே காணோம்...

சரி சஞ்சனா ,நான் கொஞ்சம் ரெஸ்ட் ரூம் வரை போய்ட்டு வரேன்.

ம்,போய்ட்டு சீக்கிரம் வாடா.

அப்பாடா,கொஞ்ச நேரம் இவகிட்ட தப்பிச்சாச்சு என நிம்மதியுடன் ரெஸ்ட் ரூமிற்குள் நுழைய ,வாசு அங்கே அவனுக்கு முன்பே  ஆஜராகி இருந்தான்.

அடப்பாவி, இங்கே என்னடா பண்ணிட்டு இருக்கே..

15 நாள் ஜாலியா இருக்கலாம் என்று நினைத்து இங்கே வந்து தெரியாம மாட்டிக்கிட்டேன் மச்சான்.முடியலடா,அந்த டான்ஸ் மாஸ்டர் என்னை வச்சி செய்யறான்.இடுப்பெலும்பே உடைகிற அளவுக்கு ஸ்டெப்ஸ் போட சொல்றான்.ஒழுங்கா ஒரு ஆர்டர் எடுத்தோமோ ,வீட்டுக்கு போனோமோ என்று இருந்தேன்.இவன் என்னடாவென்றால் காலையில் ஏழு மணிக்கெல்லாம் வர சொல்லி உயிரை எடுக்கிறான்.

"சரி சரி சீக்கிரம் ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்து சேரு.அப்புறம் அந்த ஆளு உன் பிராக்டீஸை இரவு வரை நீட்டிப்பதாக பேசி கொண்டு இருக்கார்.அப்புறம் நீ மட்டும் இரவில் பேய் மாதிரி தனியா ஆட வேண்டி இருக்கும் பார்த்துக்க.."

ராஜா ராஜா ... என்று கூப்பிட்டு கொண்டே அவசரமாக சஞ்சனா உள்ளே வர,"அய்யயோ" என வாசு பதறி போய் திரும்பினான்.

"ஏண்டி ஆம்பள ரெஸ்ட் ரூமுக்குள்ள கூடவா விவஸ்தை கெட்டு உள்ளே ஓடி வருவே,பாரு வாசு பதட்டத்தில் சுவற்றில் எல்லாம் ஒன்னுக்கு கோலம் போட்டு விட்டான்."

நான் நீ மட்டும் தான் உள்ளே இருப்பே என நினைச்சிட்டு வந்தேன்.எனக்கு என்ன தெரியும் இவன் உள்ளே இருப்பான் என்று?என சஞ்சனா முகம் சுளித்தால்.

சரி ஆண்கள் ரெஸ்ட் ரூமுக்குள்ள வர்ற அளவுக்கு என்ன இப்போ அவசரம்?

"அந்த கவுன்சிலரை நீ அன்னிக்கு அடிச்ச இல்ல,அவன் இப்போ நம்ம ஆபீஸுக்கு வந்து இருக்கான்."

சரி இரு நான் போய் பார்க்கிறேன்.

நாராயணன் சார் அறையில் கவுன்சிலர் அமர்ந்து பேசி கொண்டு இருந்தான்.

நாராயணன் சார் ராஜாவை கூட்டி வர சொன்னார்.

"சார் நான் உள்ளே வரலாமா?"ராஜாவும் சரியாக வந்து சேர்ந்தான்.

கவுன்சிலர் முகத்தில் காயங்கள் புதிதாக உருவாகி இருந்தது.அவன் ராஜாவை பார்த்து,

ஏன் தம்பி,கமிஷனரை தெரியும் என்று  ஒரு வார்த்தை என்கிட்ட  சொல்ல கூடாதா?.இப்போ பாரு எவ்வளவு பெரிய பிரச்சினை ஆயிடுச்சு.இதுக்கு மேல நான் உன் வழியிலேயே வர மாட்டேன்.என்னை மன்னிச்சிடுப்பா,கொஞ்சம் என் மேல போட்ட கேசை கொஞ்சம் வாபஸ் வாங்க சொல்லுப்பா.

ராஜா அவரை கை அமர்த்தி,"இருங்க நான் உங்க மேலே புகாரே கொடுக்கலயே.அப்புறம் எப்படி நான் வாபஸ் வாங்க முடியும்?"

"அய்யோ அந்த கமிஷனர் பொண்ணு வேலை தாம்ப்பா எல்லாம்.பேர் கூட "ஷ"ல ஆரம்பிக்கும்."

யாரு ஷன்மதியா?ராஜா கேட்க

ஆமாம்ப்பா ,என் ஆளுங்க எல்லாம் அரெஸ்ட் ஆயிட்டாங்க.என்னையும் அடிச்சாங்க.அந்த பொண்ணு  உன்கிட்ட பேசணும் என்று தான் என்னை மட்டும் அனுப்பி வைச்சு இருக்கு.

சரி ஒரு நிமிஷம் இருங்க, நான் அவளுக்கு ஃபோன் பண்றேன்.

ஹலோ ஷன்மதி,

ஹாய் ராஜா ,எவ்வளவு நாள் ஆச்சு உன்கிட்ட பேசி,ஃபோன் பண்ணினாலும் எடுக்க மாட்டேன்றே‌,வேற நம்பரில் இருந்து கால் பண்ணினாலும் அப்புறம் பேசறேன் என்று வைச்சிடுற.உன்னை கையில் பிடிப்பதே ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.

ஷன்மதி நான் இங்கே ஒரு டான்ஸ் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்,இங்க ஆபிஸ்‌ புரோகிராமில் ஆட வேண்டி இருக்கு.அதனால் தான் வர முடியல.அதுக்காக நீ இப்படி பண்ணலாமா?

"எனக்கு அதெல்லாம் கவலை இல்லை ராஜா, என் ராஜா மேல கை வைச்சா நான் சும்மா இருப்பேனா"

அவன் எங்கே கை வைச்சான்,நான் தானே அவன் மேல கை வைச்சேன்..

எனக்கு எதுவும் தெரியாது ராஜா,அந்த நாயினால் தான் சஞ்சனாவிற்கு அடிபட்டிச்சு.அதனால் தான் நீ என்னை பார்க்க வரவே இல்லை.அதுக்கு தான் நான் அவனை மாட்டி விட்டேன்.எனக்கு இன்னிக்கு உன்னை பார்க்கணும்.

இது எனக்கும் அவனுக்கும் இடையே உள்ள பிரச்சினை.முதலில் அவன் மேல உள்ள புகாரை வாபஸ் வாங்கு ஷன்மதி,ராஜா உறுதியாக சொல்ல

முடியாது ராஜா.நீ வரேன் என்று சொல்லு,நான் உடனே புகாரை வாபஸ் வாங்கறேன்.இல்ல அந்த நாய் உள்ளே கிடந்து சாகட்டும்.

சரி,எங்கே வரணும் சொல்லு.நான் வரேன்.ஆனா சாயங்காலம் தான் வர முடியும்.

அப்போ நீ சாயங்காலம் நேரா டிரைவ் இன் ஓட்டலுக்கு வந்து விடு.நாம அங்கே பேசணும்..

சரி வரேன்..ராஜா கோபமாக வைத்தான்.இன்னிக்கு கண்டிப்பாக ஷன்மதியிடம் இதற்கு மேல் சஞ்சனா மற்றும் தன் வாழ்கையில் தலையிட வேண்டாம் என தெளிவாக சொல்லி விட வேண்டும் என முடிவு செய்தான்.

[Image: FB-IMG-1693641388729.jpg]
[+] 6 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 11-09-2023, 03:33 PM



Users browsing this thread: 31 Guest(s)