♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
 Episode -46

ராஜா ஒரு நிமிஷம் வண்டி நிப்பாட்ட முடியுமா?

ராஜா வண்டியை ஓரமாக நிறுத்த,..
சஞ்சனா கீழே இறங்கி "உன் சட்டையை கழட்டு"என்றாள்.

ராஜா மறுபேச்சு பேசாமல் சட்டையை கழட்ட,இப்போ வண்டிய எடு போலாம்.

ராஜாவிற்கு புரிந்தது. ஷன்மதி கொடுத்த சட்டை போட்டு இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லையென.

வெறும் பனியனோடு ராஜா வண்டி ஒட்ட,ரோட்டில் அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர்.

சஞ்சனா அருகில் வந்த துணிக்கடையை காட்டி,அங்கு நிறுத்த சொன்னாள்.

அங்கு அவளே சென்று,சில துணிகளை எடுத்து ராஜாவிற்கு போட்டு பார்க்க சொன்னாள்.

என்ன இதிலேயும் போட்டியா சஞ்சனா,?

இல்லடா,உண்மையில் ஷன்மதி உனக்கு வாங்கி கொடுத்த ட்ரெஸ்ஸில் செம லுக்கா இருந்தே.நான் உன்னை அணு அணுவாக ரசித்தேன்.அதே மாதிரி நான் உனக்கு இதுவரை உனக்கு ஆடை வாங்கி கொடுக்க வில்லையே என்ற குற்ற உணர்ச்சி.அதனால் தான் கழட்ட சொன்னேன்.இப்போ அதே மாதிரி நான் உனக்கு வாங்கி கொடுத்துட்டேன்.முதலில் நான் வாங்கி கொடுத்த ட்ரெஸ் போட்டுட்டு அப்புறம் அவள் வாங்கி கொடுத்த ட்ரெஸ் போட்டுக்க ஓகேவா

அடிப்பாவி நீ இப்போ வாங்கிய ட்ரெஸ்ஸே நாலு, ஐந்து இருக்கு.இது போட்ட பிறகு தான் அதை போடணுமா?

அது தான் இல்லை,நாளைக்கு சம்பளம் நாள்,அப்போ ஒரு ஏழு,எட்டு ட்ரெஸ் என் ராஜாவுக்கு எடுத்து தருவேன்.அதையும் போட்ட பிறகு நீ அந்த ட்ரெஸ் போடணும்.அதுவும் நான் வாங்கி கொடுத்த ட்ரெஸ் குறைந்தது 3 தடவ போட்ட பிறகு தான்.

அப்போ அதுக்கு ஒரு மாசம் ஆகுமே.

ஆமா கண்டிப்பா ஆகும்.

சரி அதுக்கு அப்புறம் ஷன்மதி வாங்கி கொடுத்த ட்ரெஸ் போடலாமா?

அப்புறம் தான் அடுத்த மாதம் பொறந்துடுமே,திரும்ப சம்பளம் வருமில்லே..அப்போ திரும்ப என் செல்ல கண்ணனுக்கு மேலும் ஒரு பத்து ட்ரெஸ் எடுத்து கொடுத்து விடுவேன்.

ஓ புரிஞ்சுது,மறுபடியும் நீ வாங்கி கொடுத்த ட்ரெஸ் 3 தடவ போடணும்.10*3=,30 days.அப்புறம் மறுபடியும் மாசம் பொறக்கும்,திரும்ப ட்ரெஸ் வாங்கி தருவே.அப்போ அம்மணி மறைமுகமாக என்னை அவ வாங்கி கொடுத்த ட்ரெஸ் போடவே கூடாது என்று திட்டம் போடறீங்க,சரியா?

"புரிஞ்சிக்கிட்டா சரி தான்",என வெட்கமுடன் சஞ்சனா வழக்கம் போல் தன் டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தாள்.

ராஜாவின் ஃபோன் அடிக்க,எடுத்து பேசினான்.

சொல்லு ஷன்மதி,

போனில் ஷன்மதி"ராஜா நான் உன்னை நேரில் பார்த்து பேசனும்.இன்னிக்கு ஈவ்னிங் நீ ஃப்ரீயா.?

இன்னிக்கு முடியாது ஷன்மதி,நான் வேணா,நாளை காலை வீட்டுக்கு வரட்டுமா?

இல்லை வேண்டாம்,நாம வெளியில் பார்க்கலாம்.நான் நுங்கம்பாக்கம் ரெஸ்டாரன்ட்டில் காலை பதினோரு மணிக்கு டேபிள் புக் பண்றேன்.நீ அங்கே வந்து விடு.ரொம்ப முக்கியமான விசயம்.மறந்து விடாதே.தனியா தான் வரணும்.

சரி கண்டிப்பாக வரேன்.

"என்னவாம் அவளுக்கு ?இப்போ தானே அவள் வீட்டில் இருந்து வந்தோம்", சஞ்சனா கேட்க,

"நாளைக்கு ஷன்மதி நுங்கம்பாக்கம் ரெஸ்டாரன்ட் தனியா வர சொல்லி இருக்கா,."

ஏன் என்ன விசயம்?

போனால் தான் தெரியும் சஞ்சனா,போய்ட்டு வந்து நான் சொல்றேன்.நீ பயப்படும்படி ஒன்னும் இருக்காது.அவ எனக்கு ஒரு நல்ல தோழி மட்டுமே.என்னை நம்பு

டேய் நான் உன்னை முழுசா நம்பறேன்.சரி நீ போய்ட்டு வா.

அடுத்த நாள் காலை ,ராஜா மற்றும் அவன் நண்பர்கள் வழக்கம் போல் டீக்கடையில் நின்று இருக்க சஞ்சனாவும் வந்து சேர்ந்தாள்.

ராஜா உனக்காக கேசரி செய்து எடுத்து வந்து இருக்கேன்.நீ மட்டும் சாப்பிடணும்.வேற யாருக்கும் கொடுக்காதே என்று அங்கு இருக்கும் அவள் நண்பர்களை பார்த்து"ஏண்டா உங்களுக்கு வேற வேலையே கிடையாதா,எப்ப பார்த்தாலும் என் ராஜாவை சுத்தியே அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்கீங்க.."

வாசு ராஜேஷிடம் "மச்சான் அவளை போ சொல்லு,அப்புறம் மறுபடியும் நான் என் விஸ்வரூபத்தை காட்ட வேண்டி இருக்கும்"

டேய் தேங்காய் மூடி தலையா,உன்னை தான்டா வாசு,உனக்கு இருக்குடி ஒரு நாளு, நான் ஆபீஸ் போய்ட்டு வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்,ராஜா மறக்காம உடனே சாப்பிடு.நான் வரேன்.

சஞ்சனா சென்றவுடன்,ராஜா அவன் நண்பர்களிடம் "டேய் இதை நீங்க சாப்பிடுங்க."

ராஜேஷ் உடனே,"அய்யயோ வேணாம்ப்பா அவளுக்கு தெரிஞ்சது என்றால் எங்களை உண்டு இல்லை என்று பண்ணிடுவா,"

இல்ல ராஜேஷ்,நான் விரதத்தில் இருக்கேன்.மதியம் மட்டும் தான் சாப்பிடுவது.இப்ப சாப்பிட முடியாது அதனால் தான்.

உடனே வாசு மான் போல துள்ளி வந்து,அவனிடம் இருந்து டிபன் பாக்ஸை பிடுங்கி"அவன் கிடக்கிறான் மச்சான், கவலையை விடு,நான் சாப்பிடறேன்"

சரிடா நீ சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸை டீக்கடையில் கொடுத்துடு.நான் நுங்கம்பாக்கம் வரை போய்ட்டு வந்துடறேன்.

ராஜேஷ் " என்ன விசயம் ராஜா"

ஒண்ணுமில்ல ராஜேஷ், ஷன்மதி வர சொல்லி இருக்கா,ஏதோ முக்கியமான விசயமாம்?

யாரு அந்த கமிஷனர் பொண்ணா?

ஆமாம் ராஜேஷ்..

சரி நீ போய்ட்டு வா ராஜா

வாசு டிபன் பாக்ஸை திறக்க,கமகமக்கும் நெய் வாசனையோடு கேசரி வாசனை வந்தது.வாசு எச்சில் ஊற,எடுத்து சாப்பிட,

அதை பார்த்து ராஜேஷிக்கும் எச்சில் ஊறியது. டேய் எனக்கும் கொஞ்சம் கொடுடா வாசு,

முடியாது போடா,வேண்டாம் என்று சொன்ன ஆள் தானே நீ. நல்லா பாதாம் பருப்பு,முந்திரி எல்லாம் போட்டு சூப்பரா இருக்கு,இதை நான் யாருக்கும் தர மாட்டேன் என மடமடவென காலி பண்ணி ஏப்பம் விட்டான்.

கொஞ்ச நேரத்திலேயே சஞ்சனா வர,

ராஜேஷ் அவளிடம்,"என்ன சஞ்சனா வேலைக்கு போகல,"

இல்ல அண்ணா,நான் லீவு போட்டுட்டேன்.ராஜாவை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று வந்தேன்.

"ராஜாவா அவனுக்கு இன்னிக்கி வேலை இருக்கே,"

"அவனால தான் இன்னிக்கு வேலைக்கு இன்னிக்கு போக முடியாதே,அதுக்கு தானே நான் ஒரு வழி பண்ணி வைச்சு இருக்கேன் "என பொடி வைத்து பேசினாள்.

"ஏன் என்ன பண்ண சஞ்சனா,"

பின்ன என்ன அண்ணா,அந்த ஷன்மதி என்கிட்டேயே சவால் விடுறா,ராஜாவை என்கிட்ட இருந்து பிரிச்சி அவ எடுத்துக்க போறாளாம்,

வாசு அதற்கு,அவனவன் ஒரு பொண்ணு கூட கிடைக்காமல் ஏங்கிட்டு திரியறாங்க.இவன் பின்னாடி பாரு,ஒண்ணுக்கு ரெண்டு பொண்ணு பின்னாடி சுத்தறாங்க.எல்லாம் கலிகாலம்..

டேய் வாயை வச்சிக்கிட்டு கம்முன்னு இரு, இல்லன்னா,உனக்கு ஒரு பாயசத்தை ரெடி பண்ணிடுவேன் பார்த்துக்க,.

வாசு முணுமுணுத்து "அய்யயோ நான் சும்மா இருந்தாலும் என் வாய் சும்மா இருக்க மாட்டேங்குதே,சஞ்சனா இதுக்கு மேல நான் வாயே திறக்க மாட்டேன்.யூ continue

"இதுல ஓட்டை இங்கிலீஷ் வேற,கருவா பயலே".,சஞ்சனா அவனை திட்டி விட்டு ராஜேஷிடம் "அண்ணா அதற்கு தான் அவன் ஷன்மதியை பார்க்க போக கூடாதென்று கேசரியில் பேதி மாத்திரை கலந்து எடுத்து வந்தேன்"என்று சஞ்சனா சொல்லி முடிக்க,
பைக்கில் உட்கார்ந்து இருந்த வாசு,வழுக்கி கீழே விழுந்தான்.

வாசுவை பார்த்து ராஜேஷ் "எஸ்கேப் கிரேட் எஸ்கேப்" என்று குலுங்கி குலுங்கி நன்றாக சிரித்தான்.

சஞ்சனா புரியாமல்"என்ன அண்ணா,ராஜா எங்கே,வாசு வழுக்கி விழுந்ததை பார்த்து நீங்க ஏன் இப்படி சிரிக்கீறீங்க.

ராஜேஷ் சிரித்து கொண்டே "ராஜா ஷன்மதியை பார்க்க அப்பவே கிளம்பி போய்ட்டான் சஞ்சனா.நீ கொண்டு வந்த கேசரியை சாப்பிட்டது எல்லாம் வாசு தான்."

என்னது இவனா ?

இவனே தான் மொத்தமா சாப்பிட்டான்.

வாசு "அடிப்பாவி உங்க சக்களத்தி சண்டைக்கு நான் தான் கிடைச்சேனா,இப்பவே அடிவயிறு கலக்குது.வயித்துக்குள் சடுகுடு எல்லாம் நடக்குது. குடலே வெளிவந்து விடும் போல இருக்கு.காலையில் சாப்பிட்ட இட்லி பாயா ரெண்டும் போன வேகத்திலேயே ரிடர்ன் வந்துடும் போல இருக்கே..

சஞ்சனா அவனை முறைத்து "அடுத்தவங்க சாப்பாட்டை எடுத்து தின்னா இப்படி தான் நடக்கும்."

வாசு புலம்பி கொண்டே"ராஜேஷ் அவ எத்தனை மாத்திரை கலந்தாள் என்று மட்டும் கேளு மச்சான்.கொஞ்சம் ஓவரா கலக்குது"

அது வந்து முதலில் ஒரு மாத்திரை தான் போட்டேன்.அப்புறம் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது.அதனால் மேற்கொண்டு ரெண்டு மாத்திரை போட்டேன்.கடைசியில் அவன் என் கூட இன்னிக்கு முழுக்க...இருக்கணும்னு எக்ஸ்ட்ரா ஒரு நாலைந்து மாத்திரை போட்டு விட்டேன் .மொத்தம் ....

அய்யோ எண்ணுகிற நேரமாடி இது,அடி சண்டாளி கடைசியில் பாயாசம் போட்டு என்னை பாடையில் போக ஏற்பாடு பண்ணிட்டீயே,மச்சான் சீக்கிரம் ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ணுடா.

ராஜேஷோ"எதுக்கு ஆம்புலன்ஸை நாறடிப்பதற்கா,சீக்கிரம் கக்கூஸுக்கு போடா.அப்புறம் நட்டு லூசாகி இங்கேயே ஒழுகிட போகுது கருமாந்திரம் புடிச்சவனே.",

வாசு தலை தெறிக்க ஆபீஸில் உள்ள டாய்லெட் நோக்கி ஓடினான்.

சஞ்சனா ராஜேஷிடம் "அண்ணா நீங்க எங்கே போறீங்க,"

இல்ல சஞ்சனா,வாசுவுக்கு என்ன ஆச்சு என்று பார்க்க போறேன்.

அவனுக்கு ஒன்னும் ஆவாது.நீங்க வண்டியில் உட்காருங்க .

நானா..!! ஏன் ? அதுவும் உன் வண்டியிலா?முடியாது.

"இப்போ நீங்க உட்கார போறீங்களா இல்லையா ...நேரமாச்சு"சஞ்சனா முறைக்க

ராஜேஷ் உடனே "சரி எங்கே போறோம்,அதை மட்டும் சொல்லு,"

ராஜா இப்போ போன இடத்துக்கு போய் என்ன பேசறாங்க என வேவு பார்க்க போறோம்.எப்படி போனால் சீக்கிரமா போகலாம் சொல்லுங்க,வள்ளுவர் கோட்டம் வழியா போலாமா,இல்ல நார்த் உஸ்மான் ரோடு வழியாகவா

சரி தான்,இப்ப வரை நானே என் வீட்டுக்கு கூகிள் மேப் போட்டு தான் போய்ட்டு இருக்கேன்.நீ வேற ஏதாவது ஒரு வழியில் போம்மா..

சுத்த வேஸ்ட் அண்ணா நீங்க ,உட்காருங்க.

ராஜேஷ் உட்கார்ந்ததும் "எடு வண்டிய"என்று கூற

சஞ்சனா வண்டி சீறி பாய்ந்தது.

"அம்மா தாயே,கொஞ்சம் மெதுவா போ.எனக்கு பிள்ளை குட்டி எல்லாம் இருக்கு."ராஜேஷ் கெஞ்ச

மெதுவா போனால் அவங்க ரெண்டு பேர் சந்திப்பே முடிந்து விடும்.நீ மூடிட்டு உட்காரு.

"எனக்கு இது தேவை தான்" ராஜேஷ் புலம்பினான்.பின்னாடி இருக்கும் கைப்பிடியை பிடித்து கொண்டு ஊரில் உள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டி கொண்டு வந்தான்.

இவ போற வேகத்துக்கு எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் போல் இருக்கே. அய்யயோ வாசுவுக்கு பேதி மாத்திரை,எனக்கு ஹார்ட் அட்டாக்கா,சஞ்சனா கொஞ்சம் மெதுவா போம்மா...

முடியாது,அமைதியா வா இல்லன்னா எதிரில் வரும் தண்ணி லாரி மேல மோதிடுவேன் பார்த்துக்க,

அய்யயோ ,அது நோ என்ட்ரி போகாதே

இன்னிக்கு எனக்கு எல்லாம் என்ட்ரி தான்,நீ வாயை மூடு.

விரட்டு விரட்டிய வேகத்தில் பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்து விட்டனர்.

எப்படி என் டிரைவிங் ? சஞ்சனா கேட்க,

டிரைவிங்கா இது பிளையிங் ,என்று ராஜேஷ் அலறி ஓரமாக ஓடினான்.

"ஏய் எங்கே ஒடற,"

அடிப்போடி ,எனக்கு வாந்தி வா
ந்தியா வருது,நீ போய் உன் காதலனை பாரு,வ்வ்வ்வ்வவ்வ்க்க்.....என்று வாந்தி எடுத்தான்.

ஒரே நாளில் எனக்கு மேல வர வைச்சுட்டா, வாசுக்கு கீழ வர வைச்சுட்டா.பொண்ணா இது.. என்று புலம்பினான்.

[Image: IMG-20230903-WA0007.jpg]



 Episode -47

சஞ்சனா வந்த முதல் வேலையாக ராஜா எங்கு இருக்கிறான் என்று கண்களால் ஆராய்ந்தாள்.ராஜாவை கண்டவுடன் அங்கு இருந்த நியூஸ் பேப்பரை எடுத்து மறைத்து கொண்டு அவன் கண்களில் அகப்படா வண்ணம் அவர்கள் பேச்சை ஒட்டு கேட்கும் தூரத்தில் அமர்ந்து கொண்டாள்.சிறிது நேரத்தில் ஷன்மதியும் வந்து விட்டாள்.

சாரி ராஜா,உன்னை ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டேனோ,என்று கேட்க,

ராஜா முறுவலித்து"என்ன ஆச்சு ஷன்மதி ,நேற்றில் இருந்து ஒரே சாரி மழை பொழியுது.நீ சரியான நேரத்திற்கு தான் வந்து இருக்கே.சாரி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.அதுவும் நான் உனக்கு சிறந்த நண்பனாக இருக்க ஆசைப்படுகிறேன்.நீ அடிக்கடி சாரி கேட்பதை பார்த்தால் நான் உனக்கு நண்பனாக இருப்பதில் பிடிக்க வில்லையோ.

அய்யோ அப்படி இல்லாம் இல்லை ராஜா,இதுக்கு மேல் நான் சாரி கேட்க மாட்டேன் போதுமா ?இப்போ நான் சாரி கேட்டதுக்கு சாரி என்று சொல்ல வந்து நாக்கை கடித்து கொண்டாள்.

ராஜா சிரித்து "பார்த்தியா மறுபடியும் சாரி உன் வாயில் வருது, நேற்றில் இருந்து உன் முகமும் வாட்டமா இருக்கு ஷன்மதி,அதுவும் பேச ரொம்பவே தடுமாறுகிற.இது நான் வழக்கமாக பார்க்கிற ஷன்மதியே இல்ல"

ஷன்மதி மனதுள்ளாகவே "உன்னுடன் சஞ்சனாவை பார்த்ததில் இருந்து தான் இந்த தடுமாற்றம் ராஜா"என்று எண்ண,

ராஜா அவளிடம் சத்தமாக"ஷன்மதி இந்த உலகத்தில் தான் இருக்கியா?."

"அது வேற ஒன்னும் இல்ல ராஜா,உன்கிட்ட எப்படி பேச ஆரம்பிப்பது என ஒரு சின்ன சிந்தனை"

"சரி,உன் மனசு இலகுவாக ஆகிற மாதிரி சில விசயம் சொல்றேன்,நீ இன்னிக்கி பளிச்சுன்னு அழகாக இருக்கே,உன்னோட புருவங்கள் அழகாக மையிட்டு இருக்கே.உன்னோட அழகை நீ போட்டு வந்த உடை இன்னும் மெருகேற்றுகிறது "என சொல்ல

ஷன்மதி வெட்கப்பட்டு ,"ராஜா நான் உண்மையில் அழகாக இருக்கேனா."

"சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன் ஷன்மதி அதுக்கு நீ வெட்கம் எல்லாம் படாதே,"

"யூ ராஸ்கல்" என்று அவள் சிரித்து செல்லமாக அடிக்க முயல,

ராஜா சிரித்து கொண்டே அவள் அடியை வாங்கி கொண்டு"நீ உண்மையில் ரொம்ப அழகாக தான் இருக்கே,நீ இந்த மாதிரி கலகலப்பாக இருக்க வேண்டும் என்று தான் கிண்டல் பண்ணேன்.இப்போ உன் மைண்ட் ஃப்ரீ ஆயிடுச்சா.உனக்கு என்ன விருப்பமோ அதை முதலில் ஆர்டர் பண்ணு ."

"எனக்கு ஒரு மேங்கோ மில்க் ஷேக்,உனக்கு ராஜா,"

"எனக்கு எதுவும் வேணாம் ஷன்மதி,நான் இப்போ விரதம் இருப்பதால் காலையில் எதுவும் இப்போ சாப்பிட முடியாது."

"சரி, ராஜா நான் நேராக விசயத்திற்கு வரேன்.இப்போ போலீசில் உன்னை மாதிரி ஆட்கள் இருக்க வேண்டும் என்று அப்பா விருப்பப்பட்டார்.உனக்கு வேலை ரெடியாக இருக்கு.நீ "ம்" என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் உடனே உனக்கு வேலை கிடைக்கும்.அப்புறம் நீ ஒரு டிகிரி முடித்து ips மட்டும் பாசாகி விட்டால் நீ நல்ல ரேங்குக்கு சீக்கிரமா வந்து விட முடியும்.உன்னோட எதிர்காலமே மாறி விடும்.உனக்கு கூட இருந்து நான் உதவி புரிகிறேன்.உனக்கு இருக்கும் திறமைக்கு நீ ips கண்டிப்பாக பாஸ் பண்ண முடியும்."

சஞ்சனா இதை கேட்டு அதிர்ந்தாள்.ராஜாவை தன்னிடம் இருந்து பிரிக்க அவள் கையாளும் முதல் வழி என்பது அவளுக்கு புரிந்தது.இருந்தும் ராஜா என்ன சொல்ல போகிறான் என்று கேட்க மிக ஆர்வமாக காதுகளை தீட்டி கொண்டு தயாராக இருந்தாள்.

ராஜா ஷன்மதியிடம்,"ரொம்ப தேங்க்ஸ் ஷன்மதி,என்னோட எதிர்காலத்திற்காக நீ மெனக்கெட்டு வந்து இருக்கே.ஆனா என்னால் இப்போ போலீசில் சேர முடியாது."சட்டென்று மறுக்க

இந்த வார்த்தையை கேட்டதும் சஞ்சனா முகம் மலர்ந்தது.

"ஏன் என்னாச்சு ராஜா,"ஷன்மதி கவலையோடு கேட்க

"நான் இப்போ என்னோட கம்பனியில் TL ஆக செலக்ட் ஆகி இருக்கேன்."

வாவ் சூப்பர்,வாழ்த்துக்கள்.

அப்புறம் என்னோட வேலையில் இன்னும் அடுத்த நிலைகளுக்கு செல்ல டிகிரியும் படித்து கொண்டு இருக்கிறேன்.

அருமை.நான் என்ன நினைத்தேனோ அதை நீ செய்து கொண்டு இருப்பது எனக்கு சந்தோஷம்.

இன்னொரு முக்கிய விசயம் ஷன்மதி,இவை எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் சஞ்சனா தான்.அவ தான் பின்னாடி இருந்து ஒவ்வொன்றாக என்னை இயக்கி கொண்டு இருக்கிறாள்.

சஞ்சனா பற்றி பேசியதும் ஷன்மதி முகம் வாடி போனது.நான் என்ன ராஜாவிற்கு செய்ய நினைத்தேனோ,அதை தான் சஞ்சனா கச்சிதமாக செய்து கொண்டு இருக்கிறாள் என்று நினைத்து அவள் மேல் மதிப்பும் வந்தது.ஆனால் ராஜாவை மட்டும் விட்டு கொடுக்க மனமில்லை.

இதற்கு மேல் அவசரப்பட்டு எதையும் செய்ய முடியாது.சமயோசிதமாக யோசித்து தான் செயல்பட வேண்டும்.நான் தான் ராஜாவிடம் இனிமேல் அடிக்கடி சந்திப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.சரியான சந்தர்ப்பம் வரும் வரை காத்து இருக்க வேண்டும் என ஷன்மதி மனதில் நினைத்து,

"சரி ராஜா,நீ செல்வது தான் சரியான பாதை.நீ படிக்கும் டிகிரி சம்பந்தமாக நான் உன்னை அடிக்கடி சந்தித்து என்னால் ஆன உதவி செய்யறேன் இப்ப வரட்டுமா"

"சரி ஷன்மதி."

"பேரர் எவ்வளவு ஆச்சு", ஷன்மதி கேட்க

ஷன்மதி நீ கிளம்பு,கஸ்டமர் ஒருத்தர் இங்கே வரேன் என சொல்லி இருக்கார்.நான் அவருக்கும் சேர்த்து பில் பண்ணிக்கிறேன்.

ஓகே பை ராஜா.எதுக்கும் இந்த போலீஸ் வேலை பற்றியும் கொஞ்சம் யோசி.

சரி ஷன்மதி.பார்த்து போய்ட்டு வா

ராஜா அமைதியாக எழுந்து சென்று,சஞ்சனா டேபிள் முன் உட்கார்ந்து"சஞ்சனா ஒளிந்து இருந்தது போதும், கொஞ்சம் பேப்பரை கீழே இறக்குமா"

சஞ்சனா அசடு வழிய "அடப்பாவி நான் வந்தது உனக்கு முன்பே தெரியுமா?"

நீ உள்ளே வரும்போதே உன் கொலுசு பாடும் ராகத்தை வைத்தே அது நீ தான் என கண்டுபிடித்து விட்டேன்.நியூஸ் பேப்பரை வைத்து முகத்தை மறைத்த என் கண்மணிக்கு ஏனோ கொலுசை மறைக்க தோன்றவில்லை.எங்களுக்கும் சில சமயம் உள்ளுணர்வு வேலை செய்யும் சஞ்சனா.என் கண்மணி ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் வந்து விட்டால் எனக்கும் சிக்னல் வந்து விடும்.

"செம்ம உஷாருதான்பா நீ "

அது இருக்கட்டும்,நீ எதுக்கு வந்தே..?

அது வந்து ராஜா...என சஞ்சனா ராகம் இழுக்க,

என்ன என்னை வேவு பார்க்க வந்தியா சஞ்சனா,அப்போ என் மேல உனக்கு நம்பிக்கை கிடையாது.

"அப்படி இல்லடா,உன் மேல முழு நம்பிக்கை இருக்கு.ஏதோ ஒரு உந்துதலில் கிளம்பி வந்துட்டேன்.நான் பண்ணது தப்பு தான்.என்னை மன்னிச்சிடுடா" என தலை கவிழ்ந்தாள்.

ராஜா அவள் முகத்தை விரலால் நிமிர்த்தி"என்னை சந்தேகபடுவது உன்னை நீயே சந்தேகப்படுவது மாதிரி தானே செல்லம்,உன்னையும் குறை சொல்ல முடியாது. ஷன்மதி என்னை விரும்புறா என்று தெரிந்து ,அவ என்னை கொத்தி கொண்டு போய் விடுவாளோ என்ற பயம் உனக்கு.

சஞ்சனா ஆச்சரியம் அடைந்து"ராஜா உனக்கு எப்படி தெரியும் அவ உன்னை விரும்புறா என்று"

என்ன சஞ்சனா,ஒருத்தர் பேசும் போது அவர்கள் கண்ணை பார்த்து சொல்லிவிட முடியாதா?அவங்களுக்கு நம்ம மேல லவ் இருக்கா இல்லையா என்று,அவ நல்ல பொண்ணு, நேரம் பார்த்து கொஞ்சம் பக்குவமாக எடுத்து சொல்லி அவளுக்கு நானே புரிய வைக்கிறேன்."

எனக்கு இது போதும் ராஜா,என சந்தோஷத்துடன் அவனை கட்டி கொள்ள வர,"சார் பில்" பேரர் குரல் கேட்டு அவளை தடுத்தது.

ராஜா உடனே ஏமாற்றத்துடன்"ஏன்யா... சரியான நேரத்தில் குறுக்கே வரீங்க."ம்"என்று பெருமூச்சு விட்டு போய் இவங்க சாப்பிட்ட பில்லையும் சேர்த்து போட்டுட்டு வாங்க"

மீண்டும் சஞ்சனா கட்டி கொள்ள வர இப்போ ராஜேஷ் குரல் கேட்டது.

ஒருத்தன கூட்டிட்டு வந்தோமே,அவனுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமாவது எண்ணம் இருந்துச்சா சஞ்சனா உனக்கு.?

டேய் நீ எங்கேடா ராஜேஷ் இங்கே?ராஜா ஆச்சரியத்துடன் கேட்க,

எல்லாம் உன் ஆளை கேளுடா ராஜா,சும்மா இருந்தவனை கூட்டிட்டு வந்துட்டா.

சரி விடு ராஜேஷ்,அவ குழந்தை மாதிரி, வழி தெரியலன்னு துணைக்கு உன்னை கூட்டி வந்து இருப்பா,

என்னது அவளுக்கா வழி தெரியல,ஊரில் உள்ள சந்து பொந்தெல்லாம் அவளுக்கு நல்லா தெரியுது.

சரி சரி , உனக்கு என்ன வேணும் பார்த்து சாப்பிடு..

சாப்பிட்டு விட்டு கிளம்ப,

ராஜேஷ்"டேய் ராஜா என்னை ஒழுங்கா என் வண்டிகிட்ட கொண்டு போய் விடு,"

"அண்ணா வாங்கண்ணா,நான் கொண்டு போய் விடறேன்"சஞ்சனா கூப்பிட

என்னது.... மறுபடியும் உன் கூடவா?என்னால் முடியாது.. அவ ஒட்டும் போது வண்டியோட டயர் தரையிலேயே படல மச்சான்,அப்படியே அந்தரத்தில் பறந்து வருது.அவ்வளவு வேகமா வண்டி ஒட்டுறா.

சஞ்சனா நீயா டபுள்ஸ் அடித்து வண்டி ஓட்டிட்டு வந்தே..ராஜா ஆச்சரியமாக கேட்டான்.

ஆமா ராஜா,முதல் தடவை ராஜேஷ் அண்ணாவை வைச்சு தான் சோதனை பண்ணேன்..

என்னது....! முதல் தடவையா,ராஜா என் உசிருக்கு உத்திரவாதம் இல்லை,ஒழுங்கா rapido புக் பண்ணு.நான் அதிலேயே போய்க்கிறேன்.

சரி சரி ஓகே,இந்தா நீ என் வண்டியை நீ ஒட்டி வா,நான் சஞ்சனா வண்டியில் போய்க்கிறேன்.

ராஜா வீணா ரிஸ்க் எடுக்காதே,அவ ரொம்ப மோசமாக வண்டி ஒட்டறா,நீயும் இந்த வண்டியிலேயே வந்திடு.

டேய் ராஜேஷ்,அவளை மட்டும் தனியா விட்டுட்டு என்னால் எப்படி தனியா வர முடியும்..நீ போ,பரவாயில்ல நான் இதிலேயே வரேன்..

சஞ்சனாவிற்கு ராஜா பின்னாடி உட்கார்ந்து போவது சந்தோஷம்.இப்பொழுது அவனை பின்னாடி உட்கார வைத்து கூட்டி போவது டபுள் சந்தோஷம்.

முன்பு ஜெட் வேகத்தில் பறந்த வண்டி தற்பொழுது கப்பல் போல் மிதக்க தொடங்கியது.

ராஜேஷ் வண்டியில் பின் தொடர்ந்து வந்து"என்ன சஞ்சனா,இப்போ மட்டும் வண்டி அப்படியே ஸ்மூத்தாக போகுது"..

"பின்னாடி உட்கார்ந்து வருவது யாரு,அவன் என் உசிருடா.அவனுக்கு ஒன்னுன்னா நான் தாங்க மாட்டேன்.நீ முன்னாடி போடா" என கலாய்த்தாள்.

அவள் தோளின் மீது இருந்த அவன் கையை எடுத்து இடுப்பில் வைத்து "என்னை கெட்டியாக கட்டிக்கோட"
என்று சொன்னாலும் அவன் அமைதியாகவே வந்தான்.

மேலும் விரித்து வைத்து இருந்த அவள் கூந்தல் அவன் முகத்தில் அலையாடினாலும் அவன் அவளுக்காக எளிதில் கட்டுபடுத்தி கொண்டான்.

ஆனால் நாளை நடைபெற போகும் ஒரு சம்பவம் அவன் ஆண்மைக்கே ஒரு சவால் விட போகிறது.அவன் விரதத்தை சோதனைக்குள்ளாக்கும் விதமாக அவள் அந்தரங்க பாகங்களை தொ
ட வேண்டிய கட்டாயம் ஏற்பட போகிறது.அதில் மட்டும் வென்று விட்டால் இந்த விரதத்தை வெற்றிகரமாக அவன் முடிப்பது எளிது.

அது என்ன சம்பவம்?


[Image: IMG-20230903-WA0003.jpg]




[Image: IMG-20230903-WA0005.jpg]


 
[+] 7 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 06-09-2023, 12:17 PM



Users browsing this thread: 7 Guest(s)