♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
 Episode -44

ராஜா சஞ்சனாவை கமிஷனரிடம் அறிமுகப்படுத்தினான்.

சார்,இவ தான் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு, பேர் சஞ்சனா என்று ராஜா சொல்லியவுடன் ஷன்மதி தலையில் இடி விழுந்தது.ஆனால் ஓரளவு எதிர்பார்த்து இருந்ததால் அதை பெரிதாக அவள் வெளிக்காட்டி கொள்ளவில்லை.ஆனால் முகம் சற்று சோபை இழந்தது.

சஞ்சனா கமிஷனர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க,"எழுந்திரும்மா நீயும் என் பொண்ணு மாதிரி தான் இருக்கே,உண்மையில் நீ நல்ல பையனை தான் தேர்ந்தெடுத்து இருக்காய்.சீக்கிரமே ரெண்டு பேரும் கல்யாண சாப்பாடு போடுங்க."

ராஜா ஷன்மதியை பார்த்து,"ஹாய் ஷன்மதி ஏன் டல்லா இருக்கே"என்று ராஜா கேட்டதும் அடுத்த தாக்குதலில் ஷன்மதி முற்றிலும் நிலைகுலைந்தாள்.இதுவரை ராஜாவாக வந்து அவளிடம் பேசியதே இல்லை. இவளாக சென்று தான் அவனிடம் பேசி இருக்கிறாள். முன்பெல்லாம் அவன் சிரிப்பில் ஒரு விரக்தி இருக்கும்.ஆனால் இன்று அவனிடம் இருந்து இன்று வெளிப்பட்ட புன்னகையை பார்த்து ஷன்மதி முற்றிலும் வசீகரிக்கபட்டாள்.

இதுவரை அவனிடம் இருந்து இப்படி ஒரு புன்னகையை அவள் பார்த்ததே இல்லயே.ராஜா தன் குடும்பத்தினரிடம் மிகவும் சகஜமாக எந்தவித கூச்சமும் இல்லாமல் பேசுவதை பார்த்து அவள் முகம் ஆச்சரியத்தில் மூழ்கியது.அவன் பேசும் போது காட்டிய உடல் மொழிகள் எல்லாம் அட்டகாசமாக இருந்தன.இதை எல்லாம் முதன் முறை அவனிடம் ஷன்மதி பார்க்கிறாள்.இந்த மாதிரி கலகலப்பான ராஜாவை தானே எதிர்பார்த்தேன்.எப்படி வந்தது இவனிடம் இவ்வளவு உற்சாகம்.!ஒருவேளை நான் என் காதலை முன்பே அவனுக்கு சொல்லி இருந்தால் அவன் இந்த மாதிரி கலகலப்பாக இருந்து இருப்பானோ என்ற எண்ணங்கள் ஷன்மதி மனதில் ஓடியது.

ஆனால் புது அவதாரமாக எடுத்து இருக்கும் இந்த ராஜாவின் நடை, உடை,பாவனை,ஸ்டைல்,attitude என அனைத்தையும் மாற்றியவள் அவன் அருகே அமுத சுரபியாய் நின்று கொண்டு இருந்த சஞ்சனா அல்லவா..!அவள் தானே அவனை அவனுக்கு அடையாளம் காட்டினாள்.

"இல்லை எக்காரணம் கொண்டும் நான் ராஜாவை சஞ்சனாவிற்கு விட்டு கொடுப்பதாக இல்லை.i love very much this Raja 2.0" என்று முடிவெடுத்து ஷன்மதி ,சஞ்சனா அருகில் சென்றாள்.

ஷன்மதி சஞ்சனாவிடம் சென்று ,"வாங்க சஞ்சனா நான் உங்களுக்கு என் வீட்டை சுற்றி காண்பிக்கிறேன்" என்று கூப்பிட,சஞ்சனா அவனிடம் கண்களால் அனுமதி கேட்டாள்.

ராஜாவும் அவளை பார்த்து"போய்ட்டு வா சஞ்சனா, ஷன்மதி எனக்கு ஒரு நல்ல தோழி.நல்ல கலகலப்பான ஆளு.அவளிடம் பேசி கொண்டு இருந்தால் நேரம் போவதே தெரியாது.இது சாப்பாட்டு நேரம் அதனால் வாட்ச் மேல ஒரு கண் இருக்கட்டும்"

ஷன்மதி ஆச்சரியமாக கண் இமைக்க மறந்து"ராஜா நீயா இந்த மாதிரி பேசறது,எனக்கே ஆச்சரியமாக இருக்கு.உன் காதலியை சரியா சாப்பிடும் நேரத்திற்கு அழைத்து வந்து விடுகிறேன் போதுமா?

ராஜாவும்"இந்த வீட்டின் இளவரசியின் சொல்லுக்கு தடை ஏது?தாங்கள் தாராளமாக சஞ்சனாவை கூட்டி செல்லலாம்.!!என்று கூற,

ஷன்மதி அவனுக்கு உதட்டை சுழித்து பழிப்பு காட்டி விட்டு சென்றாள்.

தன் அறைக்கு சஞ்சனாவை கூட்டி சென்று,அவளை பற்றியும்,அவர்கள் காதலை பற்றியும் அறிந்து கொண்டாள்.
பின் ஒரு ஆல்பத்தை எடுத்து அவளிடம் கொடுக்க,அதை ஒவ்வொன்றாக பார்த்து கொண்டே வர,அந்த ஆல்பத்தில் உள்ள போட்டோக்கள் அனைத்திலும் ராஜா அவர்கள் வீட்டு விசேஷத்தில் பங்கேற்ற போட்டோக்கள் மட்டுமே இருந்தது.என்ன இது ராஜா இருக்கும் போட்டோக்கள் மட்டும் இதில் இருக்கு என சஞ்சனா சந்தேகப்பட்டாள்.அதில் ஒரு ஃபோட்டோவில் ராஜா மிகவும் அழகாக இருக்க,சஞ்சனா அதை ஆசையாக பார்த்து,"ஷன்மதி இந்த ஒரு போட்டோவை மட்டும் நான் எடுத்து கொள்ளட்டுமா?என்று அனுமதி கேட்டாள்."

ஷன்மதி அவளிடம் "நீ இந்த ஆல்பத்தை பார்த்த உடனே உனக்கு புரிந்து இருக்கும் என்று நினைச்சேன் சஞ்சனா,இந்த ஆல்பத்தில் உள்ள போட்டோக்கள் அனைத்திலும் ராஜா கண்டிப்பாக இருப்பான்.அவன் இருக்கும் இந்த போட்டோக்கள் அனைத்தும் எனக்கு சொந்தமானவை.அதில் ஒன்றை கூட நான் தரமாட்டேன்.அதே போல தான் ராஜாவும் எனக்கு தான் சொந்தம்.உனக்கு நான் விட்டு கொடுக்க மாட்டேன்."

சஞ்சனா ஏற்கனவே ராஜாவை ஷன்மதி காதலிக்கிறாள் என்பதை ஓரளவு யூகித்து இருந்தாள். கொஞ்சம் கூட தயக்கமில்லாமல்"நீ வெறும் நிழலை தான் உன்வசம் வைத்து உள்ளாய் ஷன்மதி,நான் நிஜத்தையே என்வசம் வைத்து உள்ளேன். யாருக்காகவும் எதற்காகவும் நான் அவனை விட்டு கொடுக்க மாட்டேன்."

ஷன்மதி "இங்க பாரு சஞ்சனா,நான் ஒன்னு ஆசைப்பட்டால் அதை அடையாமல் விட மாட்டேன். உனக்கு நானே நல்ல இடத்தில் ராஜாவை விட வசதியான மாப்பிள்ளையை என் அப்பாவை விட்டு பார்க்க சொல்கிறேன்.உனக்கு என்ன மாதிரியான மாப்பிள்ளை வேண்டும் சொல்லு,டாக்டரா இல்லை கலெக்டரா? இதில் எந்த மாதிரி மாப்பிளை வேண்டுமானாலும் சொல்லு,நான் என் அப்பாவிடம் சொல்லி உனக்கு பார்க்க சொல்கிறேன்.உன் அழகுக்கு கண்டிப்பாக கிடைப்பாங்க.ராஜாவை மட்டும் விட்டு விலகி விடு..

சஞ்சனா அவளை கூர்ந்து நோக்கி "ஏன் ஷன்மதி எனக்கு மாப்பிள்ளை பார்ப்பதை விட்டு, நீயே ராஜாவை விட அந்த வசதியான மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே.."

சஞ்சனா என் பொறுமையை சோதிக்காதே,உனக்கு ராஜாவை கடந்த மூன்று மாதமாக தான் தெரியும்.ஆனால் நான் ராஜாவை 4 வருஷமா லவ் பண்றேன்.நான் என் காதலை முன்னாடியே சொல்லி இருந்தால் நீ அவன் வாழ்விலேயே இருந்து இருக்க மாட்டாய்.புரிஞ்சிக்க..

ஷன்மதி நீ தான் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.உனக்கு அறிமுகமாகும் முன்பே அவன் எனக்கு 7 வருடம் முன்பே அறிமுகம் ஆகி விட்டான்.அவன் என்னை காதலிக்க ஆரம்பிச்சு 3 மாதம் ஆச்சு,ஆனால் நான் அவனை காதலிக்க ஆரம்பித்து 7 வருடம் ஆச்சு.அதிலும் நான் தான் உனக்கு சீனியர்.இப்போ வரை நீ அவனுக்கு தோழி மட்டுமே,ஆனால் நான் அவனின் சுவாசக்காற்று.அதனால் எங்கள் வாழ்வில் இருந்து விலக வேண்டியது நீ தான்.

சஞ்சனா,நீ ஒன்னு புரிஞ்சிக்கல.இப்போ கூட ராஜாவின் எதிரி ஜார்ஜ் என்று தெரிந்த பிறகு நான் அவனுக்கு அதிகமான தண்டனை வாங்கி கொடுக்க என் அப்பாவை வற்புறுத்தி இருக்கிறேன்.இதில் இருந்தே தெரிந்து கொள்,நான் அவனை எவ்வளவு லவ் பண்றேன்னு,

சஞ்சனா விழுந்து விழுந்து சிரித்தாள்.

சஞ்சனா சிரித்து கொண்டே"நீ அவனுக்கு தண்டனை தான் வாங்கி கொடுக்க சிபாரிசு செய்தாய்,ஆனால் நான் உங்கள் வீட்டு குழந்தையை கடத்தி என் ராஜாவை இன்னல்களுக்கு உள்ளாக்கிய ஜார்ஜ்ஜின் காரில் போட்டு அவனை சிக்க வைத்ததே நான் தான்" என்று கூற ஷன்மதி என்ன சொல்வது என்று தெரியாமல் அயர்ந்து விட்டாள்.

"தன்னை விட இவள் ராஜாவை அதிகம் நேசிக்கிறாளே ..!விடவே கூடாது"

சரி நம்ம ரெண்டு பேருக்குள்ள ஒரு ஜென்டில்வுமன் அக்ரீமென்ட் வைத்து கொள்வோம்.ராஜா உன்னை இப்போ விரும்புறான்.நான் என் காதலை சொல்ல எனக்கு வாய்ப்பே கிடைக்கல.இப்போ நீ விலகினால் தான் அவன் கவனம் என் மேல் திரும்பும்.

அதுக்கு என்னை அவனை விட்டு விலக சொல்றியா என்னால் முடியாது.சஞ்சனா உடனே மறுத்தாள்.

இல்லை நான் அப்படி சொல்ல வரல சஞ்சனா,உன்னை விட,நான் தான் அவனை அதிகமாக நேசிக்கிறேன் என்று புரிய வைக்க சில விசயங்களை செய்ய போறேன்.அதை பற்றி எதையும் நீ ராஜாகிட்ட சொல்லி அனுதாபம் தேடகூடாது.அதன் பிறகு அவன் என்னை விரும்ப ஆரம்பித்து உன்னை வெறுத்து விட்டால்,நீ ராஜாவை விட்டு விலகி விட வேண்டும்..

"அது எந்த காலத்திலும் நடக்காது ஷன்மதி,வீணா பகல் கனவு காணாதே,ராஜா எப்பவும் என்னை வெறுக்க மாட்டான்.நான் அவனை நேசிப்பது போல வேறு யாரும் வேறு யாரும் ...." என்ற வார்த்தையை மீண்டும் நன்றாக அழுத்தி "நேசிக்க முடியாது"என்று சஞ்சனா உரைக்க,

"அதையும் பார்க்கலாம் சஞ்சனா,ஆனா ஒரு நிபந்தனை.இங்க நடந்த விசயம் நீ ராஜாவிற்கு சொல்ல கூடாது.இது தான் நமக்குள் இருக்கும் அக்ரீமெண்ட்.

சஞ்சனா "சரி நான் சொல்ல மாட்டேன்.ஆமா நீ என்ன சொன்ன ஷன்மதி? ஒருவேளை நீ முன்னாடி அவனிடம் லவ் சொல்லி இருந்தால் நான் அவன் வாழ்வில் இருந்திருக்க மாட்டேன் என்று தானே"

ஆமாம்,இப்பவும் அதை தான் சொல்றேன்.நீ முன்னாடி லவ் சொன்னதால் மட்டும் தான் உனக்கு ஓகே சொன்னான்.இல்லை என்றால் அவனோட first choice நான் தானே

சஞ்சனா சிரித்து"அவன் எனக்காக பிறந்தவன் ஷன்மதி,நீ முன்னாடி லவ் சொல்லி இருந்தாலும் அவனோட சாய்ஸ் நான் தான்.நீ என்ன வேணா முயற்சி பண்ணு,அவன் என்னை தவிர வேறு எந்த பெண்ணையும் ,உன்னையும் சேர்த்து தான் தன் மனைவியாக அவன் ஏற்று கொள்ளவே மாட்டான்.இது சவால்.

அதையும் பார்க்கலாம் சஞ்சனா..

ஷன்மதியின் அம்மா, சஞ்சனாவும்,நீயும் கீழே சாப்பிட வாங்க"என்று கீழே இருந்து கூப்பிட்டார்.

இவர்கள் இங்கே பேசி கொண்டு இருந்த வேளையில்,ராஜா கமிஷனரிடம் பேசி கொண்டு இருந்தான்.

சார் நான் உங்ககிட்ட ஒரு உதவி கேட்கலாமா?

கமிஷனர் "கேள் ராஜா,"

"சார் ஜார்ஜ் மேல எதுவும் பொய் கேஸ் போட வேண்டாம்.இன்னும் சொல்ல போனால் அவன் உங்க வீட்டு குழந்தையை கடத்தவே இல்லை.அவனுக்கு வேண்டாதவங்க யாரோ அவனை இதில் சிக்க வைத்து இருக்காங்க

அது எப்படி உனக்கு தெரியும் ராஜா?

சார் அதுவந்து....,

"நான் சொல்லட்டா ராஜா...,சஞ்சனா தான் என் வீட்டு குழந்தையை கடத்தியது,உன் மேல் உள்ள பிரியத்தில் அவள் செய்தாள் என்றும் எனக்கு தெரியும்.ஜார்ஜ் உனக்கு என்ன தீங்கு செய்தான் என்றும் எனக்கு தெரியும்."

சார் இது எப்படி உங்களுக்கு தெரியும்?

ராஜா,உன்னை அன்பரசு கைது பண்ண விசயம் அடுத்த நாளே எனக்கு இன்ஸ்பெக்டர் அருள் ஃபோன் பண்ணி சொல்லிட்டார்.நான் உனக்கு போனில் தொடர்பு கொள்ள try பண்ணேன்.ஆனா உன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப்.வேறு வழி இல்லாம நான் காத்து இருந்தேன்.அப்போ தான் இந்த ஜார்ஜ் என்னோட குழந்தை கேஸில் கைது செய்து இருப்பதாக கேள்விப்பட்டேன்.உடனே நானே இந்த கேசை நேரடியா கண்காணித்தேன்.அப்போ நம்ம cyber crime போலீஸ் அவன் மொபைலில் இருந்து சில டேட்டாக்களை மீட்டு எனக்கு அனுப்பினாங்க.அதில் அந்த பொண்ணு உனக்காக செய்த காரியம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தி விட்டது.உடனே அந்த டேட்டா எல்லாவற்றையும் அழித்து விட்டேன்.அவன் இந்த தப்பு செய்யவில்லை என்றாலும் உனக்கு எதிராக போலீஸ் டிபார்ட்மெண்ட்டை அவன் தவறாக பயன்படுத்தி இருக்கான்.அதுக்கு அவனுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கணும்.

சார் இதனால் அவன் எதிர்கால வாழ்க்கையே போய்டும், பாதிக்கபட்ட நானே தான் சார் அவனை விட்டுடுங்க என்று கேட்கிறேன்

கமிஷனர் யோசித்து,"சரி உனக்காக அவன் மேல பொய் கேஸ் எதுவும் போட வேண்டாம் என்று சொல்றேன்.ஆனால் அவன் செய்த குற்றத்திற்கு ஒரு ரெண்டு மாசமாவது உள்ளே இருக்கட்டும்."

இது போதும் சார்,ரொம்ப நன்றி..

கமிஷனர் ஃபோன் செய்து விவரங்களை தெரிவிக்க சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு மிக சந்தோஷப்பட்டார்.ராஜாவினால் தான் நீ இப்பொழுது தப்பினாய் என்று அன்பரசு மூலமாக ஜார்ஜ்ஜிற்கு விசயம் போய் சேர்ந்தது.இதில் அவமானத்தில் கூனி குறுகினான்.
[Image: IMG-20230901-WA0002.jpg]



[Image: IMG-20230901-WA0003.jpg]



 Episode -45

எல்லோரும் சாப்பிட உட்கார ஷன்மதியின் அம்மா, சஞ்சனாவிடம்,"சஞ்சனா நீ முதல் முறை வீட்டுக்கு வந்து இருக்கே,முதலில் நீ ஸ்வீட் எடுத்து சாப்பிடு.ராஜா நீ உன் ஸ்வீட் எடுத்து சஞ்சனாவிற்கு ஊட்டி விடு என்று சொல்ல,

ஷன்மதி உடனே,"அம்மா எதுக்கு இந்த பார்மலிடீஸ் எல்லாம்.இது எல்லாம் ஓல்ட் ஃபேஷன்.அதுவும் சஞ்சனா எப்படி புது ஆளுங்க முன்னாடி அப்படி செய்வா,அவளுக்கு கூச்சமா இருக்காது."என மறுப்பு தெரிவிக்க

சஞ்சனா உடனே "ஆன்டி,பெரியவங்க நீங்க சொல்றது தான் கரெக்ட்,ஆனா ஒரு சின்ன திருத்தம்.இவன் எச்சில் பட்ட சுவீட்டை தான் நான் சாப்பிடணும், அப்ப தான் எங்களுக்குள் அன்னியோன்யம் வரும்."

நீ சரியா சொன்னா சஞ்சனா,ராஜா நீ ஸ்வீட்டை எடுத்து ஊட்டு கமிஷனரும் சொல்ல,

ராஜா பாதி கடித்து மீதி ஸ்வீட்டை சஞ்சனாவுக்கு ஊட்டி விட,சஞ்சனாவும் ஷன்மதியை பார்த்து கொண்டே ஆசையுடன் வாங்கி சாப்பிட்டாள்.அடுத்து தன் உதட்டில் ஸ்வீட்டை நன்றாக தேய்த்து ,கடித்து அவனுக்கு ஸ்வீட்டை ஊட்டி விட்டாள்.

இதை பார்த்த ஷன்மதிக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன.

அப்புறம் ஆன்டி,வேற என்ன செய்யனும் சொல்லுங்க.சஞ்சனா கேட்க

ஷன்மதியின் அம்மாவும் "உன் தட்டில் இருக்கும் சாதத்தை பிசைந்து அவனுக்கு ஒரு வாய் ஊட்டுமா."

சஞ்சனாவும் வேகமாக தன் லோலாக்கு குலுங்க தலையாட்டி அவனுக்கு ஊட்ட,ராஜாவும் அவன் பங்குக்கு ஊட்டினான்.அப்பொழுது அவன் விரலை சஞ்சனா செல்லமாக கடிக்க "ஆ"என்று ராஜா வலியில் கத்தினான்.அதை பார்த்து எல்லோரும் சிரிக்க,
ஆனால் ஷன்மதி மட்டும் மிக கோபமாக இருந்தாள். ஷன்மதி வேண்டுமென்றே சாம்பாரை வேகமாக தட்டிவிட அது சஞ்சனாவின் ஆடையை நனைக்க தோட்டா போல் சென்றது.அதை கவனித்த ராஜா சாம்பாரை குறுக்கில் புகுந்து தன் ஆடையில் வாங்கி கொண்டான்.
ஷன்மதி சஞ்சனாவின் மேல் சாம்பார் ஊற்ற நினைத்தாள்,ஆனால் நடந்ததோ வேறு.இதே போன்று தான் எதிர்காலத்தில் நடக்க போகிறது.ஷன்மதி சஞ்சனாவிற்கு ஏற்படுத்த போகும் ஆபத்தை ,ராஜா குறுக்கில் புகுந்து அதை வாங்கி கொள்ள போகிறான் என்று காலம் முன்கூட்டியே ஷன்மதிக்கு இப்போது உணர்த்தியது.அதை அவள் இந்நேரம் உணர்ந்து இருந்தால் இப்பொழுதே ராஜாவை விட்டு ஷன்மதி விலகி இருப்பாள்.என்ன செய்வது?காலம் முன்னெச்சரிக்கை செய்யும் நிறைய விசயங்களை நாம் புரிந்து கொள்வதே இல்லை.அதே போல் சஞ்சனாவை ராஜாவும் தான் காதலிக்கிறான்.சஞ்சனாவின் மேல் வரும் கோபம் ஏனோ ராஜாவின் மீது ஷன்மதிக்கு துளியும் வரவில்லை.அவன் சட்டையின் மேல் சாம்பார் பட்டவுடன் அவள் பதறினாள்.உடனே ஓடி சென்று "ஐயோ சாரி ராஜா ,ஒரு நிமிஷம் என் கூட வா என்று வாஷ் பேசின் அருகே கூட்டி சென்று அவளே தண்ணீர் தொட்டு துடைக்க"

கமிஷனர் இதை எல்லாம் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தார்.

ஷன்மதி ஒன்னும் இல்ல விடு,என்று ராஜா மறுத்தாலும் அவள் விடவே இல்லை.

ஐயோ ,சாரி ராஜா சாரி ராஜா என்று பல முறை மன்னிப்பு கேட்டாள்.

"Hey ஷன்மதி cool down,இப்போ என்ன ஆச்சு என்று பதறுகிறாய்.just chill.இதுக்கு போய் எத்தனை தடவை சாரி கேட்ப,வெறும் சட்டை தானே.வீட்டுக்கு போய் சட்டை மாற்றி கொண்டால் போச்சு.அவ்வளவு தான்."

அவன் இங்கிலீஷ் கலந்து பேசும் தொனி கேட்டு ஷன்மதி ஆச்சரியம் அடைய அவனுக்காக வாங்கி வைத்து இருந்த ஷர்ட் ஞாபகம் வந்தது.

ஒரு நிமிஷம் ராஜா,ஓடி போய் தனது அறையில் இருந்து ஒரு புது சட்டையை எடுத்து கொண்டு வந்தாள்.

ராஜா இது உனக்காக தான் வாங்கி வைச்சேன்.இது போட்டுக்கோ.

நிஜமா எனக்காக வாங்கனீயா,இல்ல உங்க அண்ணன்களுக்கு கொடுக்க வச்சு இருந்தீயா.

அய்யோ உனக்காக தான் வாங்கினேன்.அவனுங்க ஒவ்வொருத்தனும் தடி மாடு மாறி இருக்கானுங்க.இந்த size எல்லாம் அவனுங்களுக்கு பத்தவே பத்தாது.அவனுங்களுக்கு ஃபேக்டரியில் இருந்து நேரா தைச்சி தான் தயாரிக்கனும்.

ராஜா போட்டு பார்க்க,கச்சிதமாக பொருந்தியது."ஷன்மதி ரியலி fantastic,பெர்பெக்ட்டா வாங்கி இருக்க,உன்னோட கலர் டேஸ்ட் சூப்பர்."

உனக்கு பிடிச்சு இருக்கா ராஜா,..

எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ஷன்மதி,வா போகலாம்.

ராஜா மீண்டும் டைனிங் ஹாலுக்கு வர,சஞ்சனா அவன் புது சட்டையை பார்த்தாள்.

"நீ ஊட்டி மட்டும் தானே விட்டே,இப்போ பாரு அவன் மேல் இருக்கிற சட்டையே நான் வாங்கி தந்தது தான்.இது ஆரம்பம் தான்.போக போக பார் இந்த ஷன்மதியின் லீலைகளை."சஞ்சனாவிடம் ஷன்மதி ஜாடையில் கூற,சஞ்சனா மனதுக்குள் சிரித்து கொண்டாள்.
அதே நேரத்தில் வீணாக ஏமாற போகிறாளே என்று அவள் மேல் பரிதாபமும் உண்டாக்கியது.

சஞ்சனா மீண்டும் ஷன்மதியை வெறுப்பேற்ற,ராஜாவை கூட்டி கொண்டு கமிஷனர் மற்றும் அவர் மனைவி காலில் தம்பதிகளாக விழ,அவர்கள் ஒரு நிமிடம் திகைத்தனர்.

கமிஷனர் மனைவி ஷன்மதியை மஞ்சள் குங்குமம் எடுத்து வர சொன்னார்."குங்குமம் எடுத்துக் கொள் சஞ்சனா "என்று அவர் சொல்ல,

சஞ்சனா ராஜாவை பார்த்து,கண்களால் வைத்து விடு என்று கூற ராஜாவும் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைக்கும் போது ஷன்மதி முகம் சுருங்கி போனது.

பரவாயில்லையே கண் ஜாடை தான்,அதிலேயே அவன் புரிந்து கொள்கிறேன்.எப்பவும் இதே மாதிரி ரெண்டு பேர் இருக்கணும்.

கண்டிப்பா ஆன்டி,எப்பவும் என் ராஜாகிட்ட இப்படி தான் இருப்பேன் என்று அவள் தோளில் சாய்ந்து குழந்தைத்தனமாக சொல்ல

"நல்ல விளையாட்டு பொண்ணு",என்று அவள் அம்மா சிரித்தார்.

சரி ஆன்டி,நாங்க போய்ட்டு வரோம். ஷன்மதியை மீண்டும் வெறுப்பேற்ற வேண்டும் என்றே சஞ்சனா பைக்கில் அவன் பின்னால் உட்கார்ந்து அவனை இறுக்க கட்டி கொண்டாள்.

நல்லா இருக்குங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தம் என்று ஷன்மதி அம்மா கூறவும், ஷன்மதி கோபத்தில் பொரிந்தாள்."அதெல்லாம் ஒன்னும் கிடையாது.ராஜாவின் ஸ்டைலுக்கும்,உடல்வாகுக்கும் அவள் பொருத்தமே கிடையாது.ஜோடி பொருத்தம் கேவலமா இருக்கு"என்று கூறினாள்.

இவ ஏன் இப்படி இதுக்கு போய் கோபப்படுறா.?சஞ்சனா அம்மா ஆச்சரியப்பட,

ஷன்மதி ஒரு நிமிஷம் என்னோட ஆபீஸ் ரூமுக்கு வா என்று கமிஷனர் சொல்லி விட்டு சென்றார். ஷன்மதி அவரை பின் தொடர்ந்து சென்றாள்.

"ஷன்மதி இன்று உன் நடவடிக்கைகள் சுத்தமா சரியில்ல,நீ சஞ்சனா மேல பொறாமை படற என்று நான் நினைக்கிறேன்."

"எனக்கா அவ மேல் எனக்கு என்ன பொறாமை,எதுவும் இல்லையே" என்று ஷன்மதி மழுப்பினாள்.

"எனக்கு என் பொண்ணை பற்றி நல்லா தெரியும்,நீ செய்யும் செய்கையில் இருந்தே நல்லா தெரியுது நீ ராஜாவை விரும்புற.நான் சொல்றது சரியா?."

ஷன்மதி மௌனமாக இருந்தாள்.

இங்க பாரு ஷன்மதி,நீ ஒவ்வொரு தடவை ராஜாவை நம்ம வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட சொல்லும் போதே எனக்கு தெரியும்,உனக்கு அவன் மேல் ஆசை இருக்கு என்று.அது தெரிந்தும் நான் ஏன் அவனை கூப்பிட்டேன் என்றால் எனக்கும் அவன் மருமகனாக வருவதில் விருப்பம் தான்.ஆனால் எப்போ அவன் வாழ்க்கையில் ஒரு பொண்ணு இருக்கிறது,அதுவும் அந்த பொண்ணு,அவனுக்காக தன் வாழ்க்கையை பற்றி கூட கவலைபடாமல் ராஜாவின் எதிரியை பழிவாங்கினாள் என்று தெரிந்ததோ ,அப்பவே நான் புரிந்து கொண்டேன்,அந்த பொண்ணு அவன் மேல உசிரையே வைச்சு இருக்கு என்று.யாருக்காகவும் அவ அவனை விட்டு கொடுக்க மாட்டா,ஒரு அப்பாவா உனக்கு அறிவுரை சொல்றேன்,இதை புரிந்து கொண்டு நீ விலகி இருப்பது தான் உத்தமம்.

ஷன்மதி "சூப்பர்பா,நான் உங்க கிட்ட தான் எப்படி சம்மதம் வாங்குவது என்று யோசித்து கொண்டு இருந்தேன்.ஆனா உங்களுக்கே அவனை எனக்கு கட்டி வைப்பதில் உடன்பாடு இருந்து இருக்கு.நான் கடைசி வருடம் என்பதால் கொஞ்சம் படிப்பில் மும்முரமாக இருந்து வாழ்கையில் கோட்டை விட்டு விட்டேன்.எனக்கு கிடைக்க வேண்டிய ராஜாவை தான் அவ தான் தட்டி பறிச்சு இருக்கா.நான் தவற விட்ட ராஜாவை நான் தானே மீட்டு எடுக்கணும்.

'வேணாம் ஷன்மதி உன் முடிவை மாத்திக்க,அவங்க ரெண்டு பேர் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க.நீ அவனை மறப்பது தான் நல்லது.அவனை மாதிரியே ஒரு நல்ல பையனை நானே தேடி கண்டுபிடித்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்"

ஷன்மதி விடாப்பிடியாக "இல்லப்பா, அவனை மாதிரி இல்ல எனக்கு அவன் தான் வேண்டும்.அவ அவன் மேல் வைத்து இருக்கும் அன்புக்கு ,நான் அவன் மேல் வைத்து இருக்கும் அன்பு ஒன்றும் குறைஞ்சது கிடையாது."

இப்போ நீ என்ன தான் சொல்ல வர,

இங்க பாருப்பா,எனக்கு அவன்கிட்ட என் காதலை சொல்ல சந்தர்ப்பம் அமையல.அதை நான் ஏற்படுத்திக்க போறேன்.அவன் என்னை ஏற்று கொண்டால் சஞ்சனா அவனை விட்டு விலகி விடுவதாக சொல்லி இருக்கிறாள்.அப்படி விலகும் போது மட்டும் எனக்கு பார்ப்பதாக சொன்ன மாப்பிள்ளையை அவளுக்கு பாருங்க.

"ராஜா அவளை விட்டு,உன்னை ஏற்று கொள்வான் என்று நீ நினைக்கிறீயா.."


கண்டிப்பாக ஏற்று கொள்வான் அப்பா.எனக்கு நம்பிக்கை இருக்கு.சஞ்சனாவும் ராஜாவும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் தானே,அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது.அதனால் அவர்கள் காதல் வளருது.முதலில் ராஜாவை அந்த வேலையில் இருந்து எடுத்தால் மட்டுமே அவர்கள் சந்திப்பு தடைபடும்.அந்த இடைவெளியில் நான் உள்ளே நுழைந்து என் காரியத்தை சாதித்து கொள்வேன்.

எனக்கு புரியல ஷன்மதி,நீ என்ன சொல்ற..!

அப்பா,ராஜாவின் விசாலமான மார்பு,வலிமையான உடலை பார்த்து அன்னிக்கு என்ன சொன்னீங்க.நீ போலீசில் இருக்க வேண்டிய ஆள்,உன்னை மாதிரி நேர்மையான ஆள் போலீசில் கம்மியா இருக்காங்க,வந்து சேருகிறாயா என்று கேட்டீங்க தானே..

ஆமா நான் தான் கேட்டேன்.ஆனால் அவன் தான் என்னால் போலீசில் சேர முடியாது என்று சொல்லி விட்டானே.

இல்லப்பா நான் அவனை சம்மதிக்க வைக்கிறேன்.

ஆனா அவன் வெறும் டிப்ளமோ தான் படித்து இருக்கான்.அவனால் எப்படி மேல இருக்கிற பதவிக்கு எல்லாம் வர முடியும்?

அவனை மேற்கொண்டு படிக்க வைச்சு உங்களை மாதிரி மேலே கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு.நீங்க ஆக வேண்டிய வேலை மட்டும் பாருங்க.

சரி ஷன்மதி,அவனுக்கு தகுதி இருக்கு என்ற ஒரே காரணத்திற்காக அவனை நான் பரிந்துரை பண்றேன்.ஆனா முதலில் நீ அவன்கிட்ட சம்மதம் வாங்கு.அப்புறம் பார்க்கலாம்.

சரிப்பா..

ராஜா போலீசில் சேர ஒத்து கொள்வானா?சஞ்சனா தான் அதற்கு விடுவாளா.!!அவள் தான் அவனை செதுக்கி கொண்டு இருக்கிறாளே.ராஜா இப்பொழுது தன் வேலையில் முன்னுக்கு வர,சஞ்சனாவின் உதவியோடு தபால் வழி கல்வி மூலமாக டிகிரி படித்து கொண்டு இருப்பது ஷன்மதி இன்னும் அறியவில்லை.

[Image: Malvika-sharma-coffee-with-kadhal-2-hot-...d-caps.jpg]


[Image: images-70.jpg]
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 04-09-2023, 04:45 PM



Users browsing this thread: 33 Guest(s)