10-06-2019, 12:14 PM
"செனைப்பன்னிங்க மாதிரி ரெண்டு பேர்டா.. கொஞ்சம் கூட அறிவே இல்ல அவனுகளுக்கு.. நான் இந்தப்பக்கம் இருக்குறது தெரியாம.. படார்ர்ர்னு கதவை தள்ளிட்டானுக மச்சி..!! யப்பா.. செம அடி.. மூஞ்சிலயே.. மூக்கு வேற கிழிஞ்சு போச்சு..!! அவனுக ரெண்டு பேரும் 'ஸாரி ஸார்.. ஸாரி ஸார்..'ன்னு.. கால்ல விழாத கொறையா கெஞ்சுனானுக.. அவனுகளை அப்படியே ரெண்டு விடலாம் போல ஆத்திரம் எனக்கு..!! ப்ச்.. என்ன பண்றது.. ஆக்ஸிடன்ட் மாதிரி ஏதோ ஆகிப் போச்சு.. அவனுகளை அடிச்சு நமக்கு என்ன கெடைக்கப் போவுது சொல்லு..?? 'பரவால பாஸ்.. ஃப்ரீயா விடுங்க..'ன்னு சொல்லிட்டேன்..!! மீராதான் பாவம்.. எனக்கு அடிபட்டுச்சுன்னு தெரிஞ்சதும்.. அப்படியே துடிச்சு போயிட்டா தெரியுமா..?? அவ கண்ணுல அப்படியே பொலபொலன்னு கண்ணீர் வந்துடுச்சு மச்சான்..!! ஹ்ம்ம்.. அப்புறம் அவதான் காயத்தைலாம் க்ளீன் பண்ணி.. இந்த ப்ளாஸ்டர் போட்டுவிட்டா..!!" மனசாட்சியே இல்லாமல் புழுகிய அசோக்,
"ப்ளாஸ்டர் நல்லா அழகா போட்டு விட்ருக்காள்ல..??" என்று வெட்கமே இல்லாமல் இளித்தான்.
நண்பர்கள் மூவரும் எதுவும் பேசவில்லை. அசோக் பேசியதை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டவர்கள், அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டிக்கொள்ளாமல், இவனையே ஒருமாதிரி முறைத்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். ஒருவித நமுட்டு சிரிப்பு சிரித்தார்களே ஒழிய, நம்பிக்கை என்பது துளி கூட அவர்கள் முகத்தில் தென்படவில்லை. அவர்கள் அமைதியாக இருந்ததில் இருந்தே, அவர்களுடைய எண்ணத்தை அசோக் புரிந்து கொண்டான். இப்போது முகத்தையும், குரலையும் ஒரு மாதிரி பாவமாக மாற்றிக்கொண்டு சொன்னான்.
"ஏய்.. சத்தியமா அவ அடிக்கலடா..!!"
"கன்ஃபார்ம்ட் மச்சி..!! சத்தியமே பண்ணிட்டான்.. அப்படினா சத்தியமா அவதான் சாத்து சாத்துன்னு சாத்திருக்கா..!! ஹாஹா..!!" சாலமன் சொல்லிவிட்டு சிரித்தான்.
"த்தா.. சத்தியம் பண்றேன்.. அப்புறமும் நம்ப மாட்டீங்களாடா..??"
"சத்தியந்தான..?? நாங்க எவ்ளோ சத்தியம் பண்ணிருப்போம்.. எங்களுக்கு தெரியாதா சத்தியம் பண்ணினா என்ன மீனிங்னு..??" வேணுவும் கிண்டலாகவே சொன்னான்.
"போங்கடா வெண்ணைகளா.. நடந்ததுலாம் உள்ளது உள்ளபடி சொல்லிருக்கேன்.. அதுக்கு மேலயும் நீங்க நம்பலைன்னா நான் என்ன பண்றது..??"
"நீ நம்புறது மாதிரி எதுவுமே சொல்லலையே மச்சி..!! அந்த டோர் மேட்டர் கூட பரவால.. ஆனா.. உனக்கு அடிபட்ருச்சுனதும் அப்படியே அவ துடிச்சு போயிட்டான்ற.. கண்ணுல அப்படியே கண்ணீரா கொட்டுச்சுன்ற.. எதுவுமே நம்புறது மாதிரியே இல்லையடா..?? ஷகீலா சாமி கேரக்டர்ல நடிக்கிறாங்கன்ற மாதிரி இருக்கு..!!" - இது கிஷோர்.
"ஏன்டா..?? எனக்கு அடிபட்டுச்சுனா அவ துடிக்க மாட்டாளா...?? அன்னைக்கு எவன் மேலயோ இருந்த கோவத்துல, என் மூஞ்சி முன்னாடி செருப்பை நீட்டிட்டா.. நேத்து ஏதோ ஒரு அவசரத்துல ரெண்டு நம்பர் மாத்தி சொல்லிட்டா.. அதுக்காக அவளுக்கு என் மேல ப்ரியம் இல்லன்னு ஆயிடுமா..?? என்மேல அவ எவ்வளவு லவ் வச்சிருக்கான்னு.. நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்.. உங்களுக்குக்குத்தான் இன்னும் புரியல..!! உங்களுக்கு இன்னொன்னு சொல்லவா..??"
"என்ன..??"
"நாளைக்கு நானும் அவளும்.. ஃபுல்டே ஜாலியா ஊர் சுத்தப் போறோம்..!!"
அசோக் அவ்வாறு பெருமையாக சொல்ல, இப்போது மற்ற மூவருடைய முகமும் படக்கென இருண்டு போனது. மூவரும் அசோக்கையே ஒருவித பொறாமையும், நம்பிக்கையின்மையுமாய் ஒரு பார்வை பார்த்தனர்.
"எ..என்னடா மச்சி சொல்ற..??" வேணு பரிதாபமாக கேட்டான்.
"நம்ப மாட்டின்கன்னு தெரியும்.. நாளைக்கு போயிட்டு வந்து என்னோட எக்ஸ்பீரியன்ஸ் சொல்றேன்.. அப்போ நம்புனா போதும்..!! அப்புறம்.. இந்த ஊர் சுத்துற ஐடியா ப்ரோபோஸ் பண்ணினது யார்னு நெனைக்கிறீங்க.. சத்தியமா நான் இல்ல.. அவளேதான்..!! ஹ்ஹ.. அவளைப் பத்தி நீங்க புரிஞ்சுக்க வேண்டியது நெறைய இருக்குடா..!! ம்ம்ம்ம்... நாளைக்கு காலைலேயே கெளம்புற மாதிரி ப்ளான்.. அப்படியே பார்க், பீச், மூவின்னு கவலையே இல்லாம சுத்திட்டு, திரும்ப வர்றதுக்கு எப்படியும் லேட்நைட் ஆயிடும்னு நெனைக்கிறேன்.. ஸோ.. நாளைக்கு என்னால ஆபீஸ் வர முடியாது..!!"
"ஹேய்.. நாளைக்கு அந்த 'பேச்சி பெருங்காயம்' ஷூட்டிங் இருக்குடா.. நீ பாட்டுக்கு ஊர் சுத்தப் போறேன்ற..??" சாலமன் திடீரென ஞாபகம் வந்தவனாய் சொன்னான்.
"ஆமாண்டா.. நாளைக்கு விட்டா.. அப்புறம் பரவை முனியம்மா கால்ஷீட் கெடைக்கிறது ரொம்ப கஷ்டம்..!! அப்புறம்.. அந்த மோகன்ராஜ் கெடந்து தையதக்கான்னு குதிப்பான்.. பே..பேசாம நீ ப்ளானை கேன்ஸல் பண்ணிடு மச்சி..!!" என்றான் வேணு, எப்படியாவது அசோக்கின் ஆசையில் மண்ணை போட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன்.
"ஹேய்.. அதான் கிஷோர் இருக்கான்ல.. எல்லாம் அவன் பாத்துப்பான்..!! ஏன்னா.." அசோக் கேஷுவலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
"அவன்தான் இளிச்சவாயன்..!!!!" என்றான் கிஷோர் கடுப்புடன்.
"என்ன மச்சி இப்படி சொல்லிட்ட.. என் உயிர் நண்பன்னு சொல்ல வந்தேண்டா..!!"
"ம்க்கும்.. ரெண்டும் ஒண்ணுதான்..!!"
"ஹேய்.. ப்ளீஸ்டா..!! ஃபர்ஸ்ட் டைம் நானும் அவளும் வெளில போறோம்.. கொஞ்சம் உன் ப்ரோக்ராம் கேன்ஸல் பண்ணிட்டு இதை கவனிச்சுக்கோயேன்.. ப்ளீஸ்..?? நீயும் சங்கியும் ஊர் சுத்த போறப்போலாம்.. எத்தனை தடவை உன்னோட வேலையும் சேர்த்து நான் கவனிச்சிருப்பேன்.. அதெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோ மச்சி..!!"
"சரி சரி.. போய்த்தொலை.. ஐ வில் டேக் கேர்..!!"
"தேங்க்ஸ் மச்சி..!!" அசோக் கிஷோரிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமன் இப்போது ஒரு பெருமூச்சுடன் சொன்னான்.
"ஹ்ம்ம்.. உங்க வண்டி ஓவர் ஸ்பீடா போற மாதிரி எனக்கு தோணுது அசோக்.. பாத்து.. எங்கயாவது ஆக்சிடண்ட்னு முட்டிக்கிட்டு நிக்கப் போவுது..!!"
"என்னடா சொல்ற..??"
"ஆமாம்.. பேசுன மொத நாளே ஐ லவ் யூ சொல்லிக்கிட்டிங்க.. இப்போ மூணாவது நாளே ஊர் சுத்த கெளம்பிட்டிங்க.. ரொம்ம்ப ஸ்பீடா போறீங்கடா.. அதான் சொல்றேன்..!!" சாலமனின் பேச்சில் பொறமை மிதமிஞ்சிப் போயிருந்தது. அதை புரிந்து கொண்ட அசோக் நக்கலான குரலில் சொன்னான்.
"ஹாஹா..!! பொறாமை..???? ஹ்ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. ஆனா அதுக்குலாம் நாங்க ஒன்னும் செய்ய முடியாது..!! ம்ம்ம்.. இந்த ரெண்டு நாள்லயே அவளைப் பத்தி நான் எவ்வளவோ புரிஞ்சுக்கிட்டேன்.. அதேமாதிரி.. இனிமே வர்ற ஒவ்வொருநாளும் அவளைப் பத்தி இன்னும் என்னன்னவோ புரிஞ்சுக்கப் போறேன்..!! யு ஜஸ்ட் வெயிட் அண்ட் ஸீ..!!"