03-09-2023, 11:20 AM
(This post was last modified: 06-11-2024, 09:54 PM by Geneliarasigan. Edited 5 times in total. Edited 5 times in total.)
Episode -43
ஷன்மதி ராஜாவை முதன்முதலில் அவள் வீட்டில் தான் சந்தித்தாள்.அவர் அப்பா கமிஷனர் மதிவாணன்.அவருக்கு மொத்தம் 3 பிள்ளைகள்.அதில் முதல் பிள்ளையின் குழந்தையை தான் சஞ்சனா கடத்தி காரில் போட்டது. ஷன்மதி கடைக்குட்டி என்பதால் செல்லம் அதிகம்.முதல் பார்வையிலேயே ராஜாவின் அப்பாவித்தனமான நடத்தையால் ஷன்மதி ஈர்க்கப்பட்டாள், ஆனால் காதலாக மாறவில்லை.இன்னும் சொல்ல போனால் ராஜா,சுஜிதா நிகழ்வதற்கு முன்பே ஷன்மதி,ராஜா சந்திப்பு நிகழ்ந்து இருந்தது.ஆனால் சந்திப்பு நடந்த முதல் இரண்டு வருடங்கள் வெறும் ஈர்ப்பாக மட்டுமே இருந்தது போக போக அவனுடன் பழகியது காதலாக மாறியது. எந்த அளவுக்கு என்றால் முதலில் வீட்டு விசேஷங்களுக்கு கமிஷனர் மட்டும் தான் கூப்பிடுவார்,சில நேரங்களில் கூப்பிடாமல் இருக்கும் பொழுது ஷன்மதியே ஞாபகப்படுத்தி அவனை வற்புறுத்தி கூப்பிட வைப்பாள்.பலரும் அவள் அழகினால் ஈர்க்கப்பட்டு அவளிடம் வழியும் போது ராஜா மட்டும் அவள் நெருங்கி சென்றாலும் சற்று விலகி கண்ணியமாக நடந்து கொள்வது அவளை மிகவும் கவர்ந்தது.இருவரின் சந்திப்புகள் குறைந்த அளவே நிகழ்ந்து இருந்தாலும் அதில் அவளுடன் இருக்கும் பொழுது அவன் அனிச்சையாக செய்த சின்ன சின்ன குறும்புகளை வெகுவாக ரசித்தாள். அப்பொழுது எல்லாம் பெண்களிடம் ராஜா பேசுவதற்கே மிகவும் சங்கோஜப்படுவான்.ஏன் ஷன்மதியிடம் கூட ஆரம்பத்தில் பேசுவதற்கு கூச்சபட்டு விலகி போய் விடுவான்.ஒரு இரண்டு வருடம் கடந்த பிறகு தான் ஷன்மதியிடம் ஓரளவு பேச பழக ஆரம்பித்தது.சஞ்சனா ராஜா சந்திப்பு நிகழ்ந்த பிறகு இதுவரை ஷன்மதி ராஜாவை சந்திக்கவே இல்லை.சஞ்சனா ராஜா வாழ்வில் வந்த பிறகு அவன் நடை,உடை,பாவனை,பேச்சு அனைத்தையும் மாற்றி விட்டாள்.அப்படி மாறிய ராஜாவாக தான் ஷன்மதியும் பார்க்க ஆசைப்பட்டாள். அந்த ராஜாவை பார்த்த பிறகு அவனை எப்படியாவது அடையும் ஆசை அவளுக்கு உண்டாக போகிறது.இதுவரை எல்லா பெண்களிடம் ஏன் அவன் முதல் காதலி சுஜிதா உட்பட மிகவும் கண்ணியமாக நடந்து வந்துள்ள ராஜா,அது ஏனோ சஞ்சனாவிடம் மட்டும் எல்லை மீறி நடந்து உள்ளான்.முதல் சந்திப்பில் இருந்தே சஞ்சனா அவனை திரும்ப திரும்ப பார்க்க வைத்தாள்.சஞ்சனாவிடம் மட்டுமே அவன் கண்கள் எல்லை மீறி அவள் அங்கங்களை ரசித்து இருக்கின்றன.இதை ஏன் நான் இங்கே கூறுகிறேன் என்றால் ஷன்மதியிடம் பழகும் பொழுது கூட அவள் விழிகளை தாண்டி அவன் கண்கள் வேறு எங்கும் சென்றது இல்லை.அவளிடம் இதுவரை அவன் காதல் வயப்படவும் இல்லை.ஒரு நல்ல தோழியாக மட்டுமே பார்த்தான்.
ஆனால் ஷன்மதிக்கு ராஜாவின் மேல் ஆசை இருந்தது.அதை வெளியே காட்டி கொள்ளாமல் அவள் வீட்டு நிகழ்ச்சிகளில் எடுத்த போட்டோக்களில் இருந்த அவன் உருவத்தை பார்த்து தினம் தினம் ரசித்து கொண்டு இருந்தாள்.
ஷன்மதி தற்போது பல் மருத்துவம் கடைசி வருடம் இப்பொழுது தான் முடித்தாள்.படிப்பை முடித்து விட்டு தன் அப்பாவின் முன்னே ராஜாவிடம் தன் காதலை கூறி இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று எண்ணி இருக்கையில் சஞ்சனா முந்தி கொண்டு விட்டாள்.இன்று அதற்காக தான் ராஜாவை வர சொல்லி இருக்கிறாள்.ராஜா கமிஷனரிடம் இன்று ஒரு முக்கியமான நபரை கூட்டி வருவதாக சொல்லி இருக்கிறான்.யார் அது என்று புரியாமல் ஷன்மதி குழம்பி கொண்டு இருந்தாள்.இன்னும் சொல்ல போனால் ஜார்ஜ்ஜிற்கு அவள் அப்பாவிடம் கூறி தண்டனை கூடுதலாக வாங்கி கொடுக்க சொன்னதே ஷன்மதி தான் ஏன்?
ராஜாவிற்கு பிடித்த நிறம் மஞ்சள்.மஞ்சள் மங்களத்தின் அடையாளம் என்பான்.அந்த நிறத்தில் உடை அணிந்து கண்ணாடி முன் தன் அழகை பார்த்து ரசித்து"இந்த தேவதையை போய் அவன் நிராகரிக்க முடியுமா"என்று தனக்கு தானே கேட்டு கொண்டு சிரித்து கொண்டாள்.
பைக் சத்தம் கேட்டு வாசலுக்கு ஷன்மதி ஓடி வர,தன்னை போன்ற ஒரு பேரழகி அவனுடன் நடந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.ஒருவேளை அவன் தங்கையாக இருக்குமோ என்று ஒரு நொடி ஷன்மதி நினைத்தாள்.ஆனால் அடுத்த நொடியே அது தவறு என சஞ்சனா குறிப்பால் அவளுக்கு உணர்த்தினாள்.சஞ்சனாவும் ஷன்மதி அழகை பார்த்து பிரமிப்பு அடைந்தாள்,மேலும் ராஜாவிற்கு பிடித்த மஞ்சள் நிறத்தில் உடை அணிந்து இருப்பதை பார்த்து அவளுக்கு துணுக்கென்று இருந்தது. சஞ்சனாவின் விரல்கள் ராஜாவின் விரல்களுடன் சென்று கரம் கோர்த்து கொண்டன.அது இவன் என்னுடையவன் என்று சொல்லாமல் சொல்லியது ஷன்மதிக்கு.
நான் எழுதிய முதல் கதை இன்னும் முடிக்கவில்லை.அதில் ஸ்ருதி மற்றும் அனிதா இருவருக்கு இடையே ஏற்பட போகும் சக்களத்தி சண்டையை எதிர்பார்த்து என் வாசகர்கள் காத்து இருந்தார்கள்.ஆனால் இந்த கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருவதால் இதில் முதலில் வந்து விட்டது.இந்த கதை முடித்த பிறகு என்னோட முதல் கதை update வரும்.இதில் தற்பொழுது இருவர் காதலித்தாலும் ஒருவர் மட்டுமே ராஜா வாழ்வில் இணைவார்.அது யாரென்று படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்