மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 3

அத்தனை உடைகளையும் அயர்ன் செய்து வைத்துவிட்டு நெற்றியில் வழிந்த வியர்வையை முந்தானையால் ஒற்றியபடி நிமிர்ந்த மான்சியை கலாவின் குரல் அழைத்தது.....

"இதோ வர்றேன் சித்தி" என்றவள் துணிகளை எடுத்து பீரோவில் அடுக்கி விட்டு ஹாலுக்கு வந்தாள்....

ஹாலில் அமர்ந்து டிவி சீரியலைப் பார்த்து கடுப்புடன் முனங்கிக் கொண்டிருந்தாள் கலா,, தொலைபேசியில் வந்த செய்தியை முடக்கிவிட்டாலும் மனது எண்ணையில் இட்ட அப்பமாக கொதித்துக் கொண்டிருந்தது.... இந்த சிறுக்கி மகளை அவ்ளோ பெரிய இடத்துல போய் வாழ விட்டுருவேனா? அப்புறம் எம் மகளோட வாழ்க்கை என்னாகிறது?

எதிரில் வந்து நின்றவளை ஏளனமாக ஏறிட்டவள் "என்னடி நான் போன்ல பேசினதையெல்லாம் கேட்டேல்ல? உன் அப்பன் வந்ததும் நான் பேசும் போது நீயும் வேணாம்னு சொல்லனும்... இல்லேன்னா நடக்கிறதே வேற ஆமா சொல்லிட்டேன்" என்று மிரட்டியவளைக் கண்டு பயப்படவில்லை தான்....

ஆனாலும் குடும்பத்தில் சண்டை சச்சரவு என்றால் தனது அப்பாவின் மனம் நிம்மதியின்றி தவிக்குமே என்ற ஒரே நோக்கில் "சரி சித்தி" என்று அமைதியாகக் கூறிவிட்டு இரவு உணவை தயாரிக்க கிச்சனுக்குள் சென்றாள்...

சரியாக ஏழு மணி..... இன்னும் ரீத்து வரவில்லை.... பத்ரி வந்துவிட்டார்.... வாசலில் செருப்பை விடும் சப்தம் கேட்கும் போதே இங்கே நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள் கலா...

உள்ளே வந்தவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு கைப்பையை வாங்கிய மகளை கண் நிறைய பார்த்துப் புன்னகைத்து விட்டு "சிமிம்மா,, நீ எத்தனை மணிக்கிடா வந்த?" என்று கேட்கவும்....

"இன்னைக்கி எங்க எம்டியோட வீட்டுல ஒரு பங்ஷன்ப்பா... அதனால மதியம் மூணு மணியோட ஆபிஸ் லீவு.... நாலு மணிக்கே வீட்டு வந்துட்டேன்" என்ற மான்சி அவரின் பையை எடுத்துச் சென்று அறையில் வைத்து விட்டு வந்தாள்.



பத்ரி முகம் கழுவி உடை மாற்றிவிட்டு வரும் வரை கலா இருந்த இடத்திலிருந்து அசையவில்லை.... ஹாலின் மூலையில் கிடந்த சாய்வு நாற்காலியில் சென்று அமர்ந்தார்... மான்சி கொடுத்த காபியை வாங்கியவர் வாசலைப் பார்த்து விட்டு "இன்னும் ரீத்து வரலை போலருக்கு?" என்று கேட்க...

"ப்ரண்ட்ஸ் கூட எங்கயாவது வெளியப் போயிருப்பா... வந்துடுவாப்பா" என்று சமாளிப்பாக கூறினாள்....

"இப்படியே சமாளிச்சிடு.... ஆனா ரீத்து கெட்டது அவ அம்மாவால பாதின்னா உன்னால மீதி... நீ மட்டும் ஆரம்பத்துலருந்து உன் உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தா அவ இந்தளவுக்கு நடந்துக்க மாட்டா" பத்ரியின் குரலில் கோபம்.....

"அப்பா,, ப்ளீஸ்ப்பா.... சின்ன குழந்தைப்பா ரீத்து.... மூக்குக் கீழ இத்துணூன்டு மீசை வரைஞ்சா அப்புடியே நீங்களே தான்ப்பா.... எனக்கு தம்பியா பிறக்க வேண்டியவ... தங்கையா பிறந்திட்டா.... ஆனா வளர்ந்ததாவது தம்பியாவே வளரட்டுமே?" தங்கையைப் பற்றி நினைப்பில் முகம் கனிய தகப்பனிடம் பரிந்து பேசினாள்....

பத்ரி கலாவிடம் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது.... கலாவின் கையால் தண்ணீர் கூட வாங்கி குடிக்க மாட்டார்.... எதுவானாலும் மான்சி தான்.... அவளின் ஏழாவது வயதிலிருந்தே பத்ரி அவளுக்கு தகப்பன் என்பது மாறி... மான்சி தான் பத்ரிக்கு தாய் என்பது போல் ஆகிவிட்டது.... மகளுக்காகவே வாழும் பிறவி பத்ரி என்றால்.... குடும்பம் சிதறிவிடக் கூடாது.. தகப்பனின் கௌரவம் முக்கியம் என்று சகலத்தையும் ஒரு தூணாக இருந்து தாங்கும் மான்சி மகத்தான பிறவி தான்.....

'சிறு குழந்தையை பார்த்துக்க ஆள் வேணும்டா மகனே... அதுவும் பெண் குழந்தைக்குத் தாய் முக்கியமடா' என்று பத்ரியின் தாயார் வடித்தக் கண்ணீருக்கான விடை தான் இவருக்கும் கலாவுக்கும் நடந்த கல்யாணம்....

கலா என்னவோ வந்த புதிதில் மான்சியிடம் அன்போடு தான் இருந்தாள்..... பத்ரியும் கட்டியவளுக்கான கடமையைச் செய்ய வேண்டும் என்று கலந்தாடினார் தான்... ஆனால் அந்த கலப்பில் காதலை காட்டத்தான் அவரால் முடியவில்லை... வெறும் கடமை மட்டுமே இருக்க..... கவனிக்க ஆரம்பித்தாள் கலா.....

மனங்கள் ஒன்றாத சேர்க்கையில் இயற்கை மட்டும் தனது கடமையை சரியாகச் செய்தது... ரீத்து உருவானாள்.... மான்சியின் மூன்றாவது பிறந்தநாள் முடிந்த மூன்றாவது நாள் ரீத்து பிறந்தாள்.... அப்படியே பத்ரியின் மறு உருவாய்ப் பிறந்திருந்த தங்கையின் மீது மான்சி உயிரையே வைத்திருந்தாள்......

அதன்பின் ஒருநாள் வேண்டாவெறுப்பாய் விலகியவரை வேதனையோடு பார்த்தாள் கலா.... "என் காதல் உணர்வெல்லாம் எனது காதல் மனைவி தேவியோடு செத்துவிட்டது... அதை உயிர்பிக்க முடியவில்லை... என்னை மன்னிச்சிடு கலா" என்று பத்ரி உண்மையை ஒத்துக்கொண்ட அந்த தருணத்தில் தான் கலாவுக்குள் சாத்தான் வந்து புகுந்து கொண்டான்....

பத்ரியின் காதலுக்குறிய தேவியின் மீது அலாதி வெறுப்பு... அந்த உன்னதமான காதல் கொடுத்த உயிரான மான்சியின் மீது அதைவிட அதிகமான வெறுப்பு.... பள்ளிக்கூடம் விட்டு வந்து கால்களைக் கட்டிக்கொண்டு "அம்மா பசிக்கிது" என்ற சிமி என்ற சிறு பெண்ணை ரௌத்திரமாக விழித்துப் பார்த்தவள் கன்னத்தில் பளாரென்று அறைந்து "யாருடி உன் அம்மா? இனிமே சித்தினு கூப்பிடு சனியனே" இது தான் கலாவின் முதல் வசை மொழி... மான்சியின் ஜந்தாவது வயதில் தொடங்கியது இந்த போராட்டம்.....

அடிக்குப் பயந்து சித்தி என்று அழைத்தாள்.... முதலில் மிரண்டாலும் போகப் போக ஏச்சும் பேச்சும் அடியும் உதையும் பழகியது.... மனதுக்குள் "அம்மா காப்பாத்து அம்மா காப்பாத்து" என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே எல்லாவற்றையும் மவுனமாக தாங்கினாள் மான்சி....

பத்ரி இல்லாத பகல் நேரத்தில் தான் இவையெல்லாம் அதிகமாக நடக்கும்.... ஆனாலும் அவருக்குத் தெரியாமல் போகாது.... தாயின் பேச்சைக் கேட்டு மறு திருமணம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று மகளைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விடுவார்....

கலாவின் அடுத்த அடி சற்று பலமாக வலித்தது.... பிஞ்சுக் குழந்தையின் தலையில் சுமத்தப்பட்ட வேலைகள்?.... தோட்டத்து குவிந்து கிடக்கும் பாத்திரங்களைக் காட்டி "இதையெல்லாம் தேய்ச்சுக் கழுவி வெயில்ல கவுத்து வச்சிட்டு வந்து சாப்பிடு" என்று கூறிவிட்டு சென்ற சித்தியை மிரட்சியுடன் பார்த்தாள் ஏழுவயது குழந்தை.....

எப்பவுமே சிறு குழந்தைகளுக்கு பெரியவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதென்றால் ரொம்பவும் இஷ்டம், நாம் விரட்டினாலும் விலகிப் போகாமல் பாத்திரம் கழுவுறேன் துணி அலசுறேன் என்று பிடிவாதமாக நம்மையேச் சுற்றுவார்கள்... மான்சிக்கும் அப்படியொரு வயசு தான்.... ஆனால் தனியா இவ்வளுவு பாத்திரங்களையும்???

முதலில் ஒன்றும் புரியாமல் அரையும் குறையுமாக செய்தவளை அடுப்பில் பழுக்க காய வைத்த கம்பியை காட்டி மிரட்டியதும் இனி தனது விதி இதுதான் என்று புரிந்து கொண்ட அந்த பிஞ்சு தனது மலர் கரங்கங்கள் தேய்ந்து போகுமளவுக்கு எல்லாவற்றையும் கவனமாக செய்தாள்.....

எல்லாவற்றிலும் அடக்கியாண்ட கலாவால் மான்சியின் படிப்பில் கைவைக்க முடியவில்லை..... மகளின் படிப்பை முடக்கினால் பத்ரியின் மாத வருமானம் முற்றிலும் முடக்கப்பட்டு விடும் என்ற பயம் கலாவை கட்டிப் போட்டது.....

ஒரு வேலைக்காரியாக வீட்டில் வேலைகளை செய்துவிட்டு தனது படிப்பிலும் முழு கவனத்தையும் செலுத்தினாள்.... BSc கம்பியூட்டர் சயின்ஸில் முதல் மாணவியாக தேறியவளுக்கு முதல் இன்டர்வியூவிலேயே உடனடியாக ஒரு நிறுவனத்தில் கம்பியூட்டர் ஆப்ரேட்டராக வேலை கிடைத்தது.... மான்சி வேலைக்குச் செல்ல கலா சம்மதித்ததே ரீத்துவுக்கான சேமிப்பில் இன்னும் சில ஆயிரங்கள் கூடுமே என்ற ஆசையில் தான்.... அதே போல் அவளின் சம்பளத்தில் போக்குவரத்து செலவுகளுக்கு கொடுத்தது போக மீதியை மகளுக்காக செலவளித்தாள் கலா...

எப்பவுமே அதிகநேரம் மவுனியாக இருக்கும் பத்ரி நிரந்தர மவுனியாகிப் போனார்.... மான்சியின் ஏழாவது வயதில் தனது படுக்கை ஹாலுக்கு மாற்றிக்கொண்டார்.... மான்சிக்கும் ரீத்துவுக்கும் தனியறை என்று இருந்தது போய் "அம்மா எனக்கு ப்ரைவேசி வேணும்.. தனியா ரூம் வேணும்" என்று ரீத்து கேட்டவுடன் மான்சியும் ஹாலுக்கு விரட்டியடிக்கப் பட்டாள்.....

அதன் பின் தினமும் தகப்பனுக்கு கால் பிடித்து உறங்க வைத்துவிட்டு தான் இவள் உறங்குவாள்.... தனக்கு தாயாக மாறிய மகளை எண்ணி பத்ரி கண்ணீர் விடாத நாளே கிடையாது...

கடந்து சென்ற வருடங்களில் ஒவ்வொரு முறையும் கலாவின் அராஜகத்திலிருந்து தப்பித்து தன் மூத்த மகளுடன் விலகிச் சென்றுவிட அவர் நினைக்கும் போதெல்லாம் "பாப்பா அப்பா? அவ என்னப்பா செஞ்சா? அவளுக்கு அப்பா இல்லாம பண்றது ரொம்ப பாவமாச்சே அப்பா? எனக்கு பழகிடுச்சுப்பா.... என் வீட்டு வேலையை நான் செய்றேன்..... இதுல வருத்தப்பட ஒன்னுமில்லை" என்று பலவாறு பேசி தகப்பனை சமாதானம் செய்துவிடுவாள் மான்சி.....

இதோ இன்னும் கொஞ்ச காலம் தான்..... மான்சிக்கு திருமணம் முடிந்துவிட்டால்.. இவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டதும் ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தார் பத்ரி... இதற்கு மான்சி ஒரு போதும் சம்மதிக்க மாட்டாள் என்பது வேறு விஷயம்... உறுதியை உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தார்.....

டிவி பார்த்துக் கொண்டிருந்த கலா தொண்டையை செருமிக் கொண்டதும் ஏதோ பேசப் போகிறாள் என்று தகப்பனுக்கும் மகளுக்கும் புரிந்தது....

"உன் மொத சம்சாரம் செத்தப்ப ரயில்ல கூட வந்தாங்களாமே யாரோ பெங்களூர் காரங்க.... அவங்க இன்னைக்கி மதியம் போன் பண்ணி பேசினாங்க" என்று அலட்சியமாக கூறிவும்...

பத்ரி விதிர்ப்புடன் நிமிர்ந்து மகளைப் பார்த்து "அருணகிரி சாரா கால் பண்ணார்ம்மா?" என்று ஆர்வமாக கேட்க....

மவுனமாக ஆம்மென்று தலையசைத்தாள் மான்சி...

"என்ன சொன்னார்?" பொதுவாக கேட்டார்...

பெண்கள் இருவரிடமும் மௌனம்... கலா தான் மீண்டும் தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தாள் "உன் மகளை பெண் கேட்டாங்க... அவங்க மகன் சின்னுவுக்கு" என்று அவள் கூறிய மறுவிநாடி பரபரப்புடன் எழுந்த பத்ரி "மான்சியவா கேட்டாங்க?..." என்றதும்...

தரையதிர எழுந்து நின்ற கலா "ஆமா ஆமா,, இந்த ரதி தேவியை தான்....." வெறுப்புடன் கூறியவள் "ஆனா நான் உசுரோட இருக்குற வரைக்கும் இதை நடக்க விடமாட்டேன்" என்று கொடூரமாய் முழங்கினாள்.....

அதிர்ந்து போனார் பத்ரி... கலாவின் முகம் பார்த்துப் பேசி காலங்கள் பல கடந்திருக்க இன்று ஆத்திரமாய் அவளெதிரே வந்து நின்றார் "ஏன்டி? ஏன் நடக்காது? என் மகள் வாழ்க்கையில நீ தலையிட நான் விடமாட்டேன்" என்று ஆத்திரமாய் பேசியவரை பார்வையாலேயே அலட்சியப்படுத்தியவள்...

"அவதான் உன் மக,, ரீத்துவை நான் என்ன வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கா பெத்தேன்?" படு கேவலமான வார்த்தையைக் கூறி தனது மானத்தையே ஏலம் போட்டாள் கலா....

மான்சி காதுகளைப் பொத்திக் கொண்டாள் "அய்யோ சித்தி,, அசிங்கமா பேசாதீங்களேன்.... எனக்கு கல்யாணமே வேணாம் சித்தி.... தயவுசெஞ்சு நீங்க இப்படிலாம் பேசாதீங்க" என்று அழுதவள் கூசிப் போய் நின்றிருந்த பத்ரியை அழைத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கமாக வந்தாள்.....

தோட்டத்து வாசற்படியில் தொப்பென்று அமர்ந்த தகப்பனின் காலடியில் அமர்ந்து மடியில் தலைசாய்த்து விசும்பியபடி "ப்ளீஸ்ப்பா,, இனி இதைப் பத்தி பேசாதீங்க...... அவங்க பெண் கேட்டாலும் நான் எப்பவுமே கல்யாணம் செய்துக்கிற மாதிரி இல்லை.... கடைசி வரைக்கும் உங்க மகளாவே இருக்க ஆசைப்படுறேன்ப்பா....." என்றாள்...

"அதெப்படிம்மா முடியும்?..... நீயும் மத்த பெண்கள் மாதிரி வாழனும்மா" என்று கண்கலங்க கூறியவரின் கைகளைப் பற்றிக்கொண்டு "இல்லப்பா.... எனக்கு திருமண வாழ்க்கையில இஷ்டமும் இல்லை... நம்பிக்கையும் இல்லை.... நான் என் அப்பாவுக்கு மகளா... சமயத்துல தாயா தோழியா இருக்கவே விரும்புறேன்... தயவுசெஞ்சு புரிஞ்சுக்கங்கப்பா" என்று கண்ணீருடன் கூறிய மகளைக் கண்டு திகைப்புடன் அமர்ந்திருந்தார்....

தனது குடும்ப வாழ்க்கையின் பிரதிபளிப்பு மகளின் மனதை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்றுத் தெளிவாக புரிந்தது.... அன்று பெற்றவர்கள் பேச்சைக் கேட்டு யோசிக்காமல் செய்த திருமணம் தனது வாழ்க்கை மட்டுமல்ல தனது மகள் வாழ்க்கையையும் சேர்த்து கேள்விக்குறியாக்கிவிட்டதை உணர்ந்து வருந்தினார்....

'தேவி,, நீதான் உடனிருந்து நம் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தரனும்' மனம் மனைவியிடம் கோரிக்கை வைக்க மடியில் இருந்த மகளின் கூந்தலை வருடினார்....

"அப்பா இன்னொரு விஷயமும் நடந்தது" என்று மான்சி மெல்லிய குரலில் சொல்லவும்.... "இன்னும் என்னம்மா நடந்திருக்கும்?" என்றார் சலிப்புடன்...

சற்றுநேர தயக்கத்திற்குப் பிறகு "அவங்ககிட்ட எனக்கு கல்யாணம் ஆகி ஆறுமாசமாச்சுன்னு சித்தி சொல்லிருக்காங்கப்பா" என்றாள்...

"அடிப்பாவி" என்று அதிர்ந்தவர் "இவ பெண் தானா?" என்றார் விரக்தியாக....

"சித்தி அப்படி சொன்னதால எனக்கு எந்த வருத்தமும் இல்லைப்பா.... அவங்களும் அப்படியே நினைச்சுக்கட்டும்... ஆனா எப்பவாவது அவங்களை நீங்க சந்திக்கும்படி நேர்ந்தால்...... எனக்கு திருமணம் ஆகலைன்ற விஷயம் அவங்களுக்குத் தெரியக்கூடாதுப்பா" என்று மகள் கூறியதும் கோபமாகப் பார்த்தவர் "நானும் உன் சித்தி மாதிரியே பொய் சொல்லனுமா? ஏன் சொல்லனும்? முடியவே முடியாதும்மா" என்றார்

"அய்யோ அப்பா உங்களைப் பொய் சொல்லச் சொல்லலை,, சித்தி சொன்ன பொய்யை காப்பாத்தச் சொல்றேன்.... அதாவது சித்தி இதுபோல சொன்னப் பிறகு நாம அதை மறுத்துச் சொன்னா நம்ம குடும்பத்தைப் பத்தி எவ்வளவு கேவலமா நினைப்பாங்கப்பா? வீட்டுக்குள்ள ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் வெளிவுலகைப் பொருத்தவரை பத்ரிநாத்தோட குடும்பம் மரியாதை மிக்கதாதான் இன்னமும் இருக்கு... ஒருத்தருக்கொருத்தர் மாத்திப் பேசி அந்த மரியாதையை காத்துல பறக்க விடவேண்டாம்ப்பா.... அதுமட்டுமில்ல பத்ரியின் வார்த்தைக்கு கட்டுபடமாட்டாள் அவர் மனைவினோ,, பொண்டாட்டியை அடக்கத் தெரியாதவர் பத்ரின்னோ யாராவது சொன்னா அதை என்னால தாங்கிக்க முடியாதுப்பா... நல்லதோ கெட்டதோ சித்தி சொன்ன பொய்யே நிஜம்னு இருந்துட்டுப் போகட்டும்" என்று மான்சி தெளிவாகக் கூறவும்......

பத்ரி எதுவும் பேசாமல் விரக்தியாக சிரித்தார்....

மகள் அவரின் கையை எடுத்து தன் தலையின் மீது வைத்து "என்மேல சத்தியம் அப்பா,, எனக்கு கல்யாணம் ஆகலைனு நீங்க சொல்லவேக் கூடாது..." என்றாள்...



இப்பவும் பத்ரி பேசவில்லை... கண்ணீர் தான் வந்தது... தன் மகளுக்கு தானே சுமையாகிக் கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகப் புரிந்தது.... தன்னை இப்படியொரு சூழலில் விட்டுச்செல்ல மனமின்றி தான் மகள் திருமணத்தையே வெறுக்கிறாள் என்பது தெளிவாக அவருக்கு உயிரே சுமையானது....

இப்போதும் தேவியை மட்டும் நம்பியது அவர் மனது,, நல்வழி காட்டுவாள் என்று....

"உன் இஷ்டப்படியே நடக்கட்டும் சிமிம்மா" என்று கூறிவிட்டு எழுந்து குளியலறை நோக்கி நடந்தார்.....

நோய் தாக்கிய கோழியைப் போல கழுத்து சரிய உடல் துவள நடந்து சென்றவரை கண்ணீருடன் பார்த்து "எக்காரணம் கொண்டும் உங்களை விட்டுப் பிரியேன்ப்பா" என்று முனங்கலாய் கூறிவிட்டு வீட்டுக்குள் வந்தாள்....

"என்னடி,, உன் அப்பன்ட்ட பேசிட்டயா?... நான் சொன்னதை மறுத்துச் சொல்லிட்டு அவங்களை கூட்டி வந்து உன்னை கட்டி வைக்க நினைச்சா......" என்று ஆத்திரமாய் பேசி நிறுத்தியவள் "என் சாவுக்கு நீயும் உன் அப்பனும் தான் காரணம்னு எழுதி வச்சுட்டு கெரோசின் ஊத்திக்கிட்டு பத்த வச்சுக்குவேன்" இது உச்சக்கட்ட மிரட்டல்.... ஆனால் அப்பாவை பழிவாங்க செய்தாலும் செய்வாள் என்று மான்சிக்கும் தெரியும்....

"உங்க வார்த்தைக்கு மாற்று இல்லை சித்தி.... அப்பாகிட்ட தெளிவா சொல்லிட்டேன்" என்று கூறிவிட்டு தகப்பனுக்கு உணவு எடுத்து வைக்கச் சென்றாள்....

பத்ரி கைகால் கழுவிக்கொண்டு வந்து அமரும் போது ரீத்து வந்தாள்... தெருவில் பைக் சத்தம் கேட்டது... அவளின் பாய் பிரண்ட் யாரோ இறக்கிவிட்டுச் செல்கிறான் போல... ஹிந்தியில் பிரபலமான பாடலை முனுமுனுத்தபடி வந்தவள் சோபாவில் அமர்ந்திருந்த தனது அம்மாவிடம் வந்து கட்டிக் கொண்டாள்....

மான்சி கூறியதில் தவறேயில்லை.... லேசாக மீசை வரைந்தால் பத்ரியின் இளமை உருவமாய் தெரிவாள் ரீத்து....

"மம்மி,, காலைல பார்த்ததுக்கு இப்போ ரொம்ப டல்லாயிட்டயேம்மா" என்று தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள்.... இப்படி வந்ததும் தாயை கொஞ்சினாள் என்றாள் நாளை பணம் கொஞ்சம் அதிகப்படியாகத் தேவையென்று தான் அர்த்தம்......

பீரோ சாவியை மகளின் கையில் தினித்து "இந்தா செல்லம்... எவ்வளவு காசு வேணுமோ எடுத்துக்கோ கண்ணு" என்றாள் கலா....

பத்ரி மவுனமாக மகள் கொடுத்த சப்பாத்திகளை மென்று விழுங்க... தாயை நைச்சியம் செய்து பணத்தை வாங்கும் தங்கையைப் பார்த்து ரசித்து மனதுக்குள் சிரித்தாள் மான்சி....

தாயின் செல்லத்தில் குளித்துவிட்டு தனது அறைக்குச் சென்ற ரீத்துவின் பின்னால் சென்ற மான்சி "கை கால் கழுவிட்டு சாப்பிட வா ரீத்தும்மா" என்று அழைக்க.... டீசர்ட்டை தலைவழியாக கழட்டி கட்டிலில் வீசிவிட்டு வெறும் ஷிம்மியுடன் மான்சியின் முன்னால் வந்து நின்றாள்....

"உன்னால மட்டும் எப்புடி ஃபேஸை ஒரே மாதிரி வச்சுக்கிட்டு இருக்க முடியுது? உனக்கு சிமின்னு பேர் வச்சதுக்கு பதிலா ஜிம்மினு வச்சிருக்கலாம் போலருக்கு... ஆட்றதுக்கு வால் மட்டும் தான் இல்ல... மத்தபடி நாய் மாதிரியே நன்றி காட்டுற சிமி" என்று கேலி பேசவும்...

இதுவும் பழகிப் போன ஒன்றாய்.... "நேரமாச்சுடா... வா சாப்பிட" என்றபடி அவள் கழட்டி எரிந்த டீசர்ட்டை எடுத்துச் சென்று பாத்ரூம் பக்கெட்டில் போட்டு விட்டு வந்தாள்

"உனக்கு கோவமே வராதா சிமி" என்றபடி அக்காவின் பின்னால் சென்று அணைத்துக் கொண்ட ரீத்து "நானும் உன்னைப் போல இருக்க ட்ரை பண்றேன்... ஆனா வரமாட்டிது சிமி...." என்று சலித்துக் கொண்டதும்... சிரித்துவிட்டாள் மான்சி....

திரும்பி நின்று ரீத்துவின் தாடையைப் பற்றி நெற்றியில் முத்தமிட்டு "நீ இப்படியே இரு ரீத்தும்மா,,, இதுதான் உனக்கு அழகு...." என்றாள்...

"ம்ம்" என்றவள் "சரி நீ போ.... நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்" என்றாள்...

மான்சி அமைதிப் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு வெளியே சென்றாள்...

இதுதான் ரீத்து.... பாதி கலா,, மீதி பத்ரி... என்று கலவையான ஒரு பிறவி.... கலாவைப் போல நாக்கை சாட்டையாகவும் பயன்படுத்துவாள்... பத்ரியைப் போல பாசம் காட்டவும் செய்வாள்... மொத்ததில் அப்பா அக்கா இருவரின் வருமானமும் இல்லாவிட்டால் நடுதெருதான் என்று கண்டுகொண்ட காரியவாதியும் கூடத்தான்....

குடும்பம் குலைந்துவிடக் கூடாது என்று எல்லாவற்றையும் அனுசரித்து தாங்கிக் கொள்ளும் மான்சியின் பொறுமை? இந்த காலத்துக்கு தேவையானதா என்றால்.... அதுவும் விடை தெரியா கேள்விதான் 

மறுநாள் காலை அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பினாள் மான்சி.... அலுவலகம் தான் அவளுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்க கூடிய ஒரே இடம்....

உள்ளே நுழைந்ததுமே "நமஸ்தே ஜீ" என்று வணக்கம் கூறும் பியூனில் இருந்து.... அவளது இருக்கையை கடந்து செல்லும் போது "குட்மார்னிங் மான்சி" என்று கூறு புன்னகைக்கும் எம்டி வரை அனைவரும் அவளுக்கு உறவுகள் போல் தான் தோன்றுவார்கள்....

2008,, ஆன்லைன் உலகம் முழுமையாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காலம்,, கம்பியூட்டரின் அத்தியாவசியம் புரிந்து அரசுத் துறை அத்தனையும் கணனி மயம் ஆக்கப்பட்டத் தருணம்... மான்சியின் கம்பியூட்டர் படிப்புக்கு நல்ல மரியாதை தான்....

எலக்ட்ரிக் ட்ரைனில் சென்று இறங்கி அலுவலகம் இருக்கும் சாலையில் ஓட்டமும் நடையுமாக சென்றவளை கண்டு ரசிக்காதவன் மூடனோ?

மலர் சூடா மலர்க் கூந்தல்.... நீண்ட பின்னல் இடையை கடந்து தொடையைத் தொட்டு முன்னும் பின்னும் ஊஞ்சல் ஆட.... வட்டமுகத்தில் ஒற்றைப் பொட்டு வைத்து..... ஓவியன் தீட்டிவிட்டு நின்று ரசிக்கக்கூடிய நீண்ட அகன்ற கருவிழிகளில் எவ்வித ஒப்பனையுமின்றி.... இமையா அல்லது குடையா என்பது போன்ற ரோஜா மலரிதழாய் இமைகள்.... குவிந்த கீழுதடு சற்றே தடித்து நீண்ட மேலுதடு... உதடுகளில் இருக்கும் கவர்ச்சியான மெல்லிய கோடுகள்... அவற்றை உற்றுப் பார்த்தவனுக்கு ஒரு மாதத்திற்கு உணவு தேவைப்படாது.... பட்டின் மென்மையை கடன் வாங்கிய கன்னங்கள்... இது கழுத்தா? அல்லது கவிதைகளின் தொகுப்பா? என சந்தேகம் கொள்ள வைக்கும் கழுத்துப் பகுதி..... அங்கே ஓடும் பச்சை நரம்பெல்லாம் ஓராயிரம் கவிதைகள் சொல்லத் தூண்டியது..... அடச்சே,, அழகை வர்ணிக்க ஆயிரம் வார்த்தைகள் கண்டுப்பிடித்தாலும்... இவள் அழகுக்கு அத்தனையும் பற்றாக்குறை தான் போலிருக்கே.....

தோளும் புஜமும் சேருமிடம் சரிவாக இல்லாமல் சமமாக இருந்தால் அந்த பெண் தன்னம்பிக்கை உள்ளவளாக இருப்பாள்... மான்சிக்கு புஜங்கள் சமமாக இருக்க.... தாமரைத் தண்டைப் போல் வெண்மையான கரங்கள் நீண்டு கிடந்தன.... திமிறும் திமிர் பிடித்த தனங்களை கண்டவர் கண் படாமல் அவள் அடக்கி பதுக்கி வைக்கும் அழகே கண்ணியமிக்கது.... இவள் சீலை திருத்தும் செயலுக்கும்... கூந்தல் ஒதுக்கும் லாவகத்துக்கும் ஈடு சொல்ல உலகில் வேறு அழகில்லை......

விளக்கொளியில் விழிகளைப் பார்த்தவன் கவிஞனாவான்.... உன்மத்தமான தருணத்தில் உதடுகளை நோக்கியவன் ஓவியனாவான்.... ஏகாந்த வேலையில் இடை வளைவைக் கண்டவன் சிற்பியாவான்.... இவை ஏதுமில்லா தருணத்தில் இவளின் சான்நீள கழுத்தையும் சாக்ஸபோன் கைகளையும்.. சதை திரட்சியான கால்களையும் கண்டவன்........ பித்தனாவான்... இவற்றை கல்வெட்டில் செதுக்கலாமா? அல்லது கவிதையாக்கி இவள் காலடியில் வைக்கலாமா? 

வெண்பாதம் வைத்து மென் நடையாக நுழைந்தவளை கண்ட கண்கள் எல்லாம் புத்துணர்வு பெற "குட்மார்னிங் மான்சி" என்றன ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட குரல்கள்....

தனது அமைதிப் புன்னைகையால் அத்தைனையையும் அடித்து வீழ்த்திவிட்டு மெல்லிய தலையசைப்புடன் பதில் வணக்கம் சொல்லிவிட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தாள் மான்சி....

அதன்பின் அவள் தலை நிமிரவில்லை.... எதிரேயிருந்த கணணியை ஆன் செய்து கவனத்தை அதில் வைத்தாள்.... கம்பெனிக்கு வந்திருக்கும் மெயில்களை செக் செய்து அவற்றை யார் யார்க்கு அனுப்ப வேண்டுமோ அதன்படி அனுப்பி வைத்தாள்... இவளே பதில் செய்யக் கூடிய மெயில்களுக்கு பதில் எழுதி அனுப்பினாள்.... பதினோரு மணி சுமாருக்கு எம்டியிடமிருந்து வந்திருந்த சுற்றறிக்கையை எல்லோருக்கும் பார்வேர்ட் செய்தாள்.... இவைதான் அவளது அன்றாட அலுவல்கள்... சிலநாட்களில் அதிகமிருக்கும்... சிலநாட்கள் எதுவுமின்றி தனக்குப் பிடித்ததை செய்வாள்....

அவளுக்குப் பிடித்தது?? ம்ம் கவிதை எழுதுவது தான் அவளுக்குப் பிடித்தது.... அம்மா என்று ஒரு ப்ளாக் ஆரம்பித்து... அதில் சிமி என்ற பெயரில் தனது கவிதைகளை பதிவு செய்து வைப்பாள்... இவளது கவிகளுக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு... அம்மாவை நேசிக்கும் அனைவருக்கும் மான்சியின் கவிதைகளைப் பிடிக்கும்... ஆம் அம்மாவுக்காக மட்டுமே அவள் கவிகள் அனைத்தும்...

மணி பணிரெண்டு... அலுவல்கள் சற்று ஓய்ந்தன.... தனது மெயில் திறந்தாள்.... கவிதையை ரசித்தவர்களின் பாராட்டு வாசங்கள் அடங்கிய மெயில்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையை பதிலாக அனுப்பினாள்....

ஒரு ஜடியிலிருந்து நான்கைந்து மெயில்கள் வந்திருந்தன... கடந்த ஒரு மாதமாக பழக்கப்பட்ட ஐடி தான் இது....

இவள் கவிதைகளுக்கு ரசிகன் என்று சொல்வான்... அவனிடமிருந்து வந்த முதன் முதல் மெயிலை திறந்துப் படித்தாள்

ஹாய் சிமி...

நான் சத்யன்,, கலிபோர்னியாவில் மெக்கானிக்கல் மேற்படிப் படிக்கும் தமிழன்... எனது அம்மாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து அட்டை தயாரிக்க கவிதை வரிகள் தேடிய போது கூகிள் உங்களது ப்ளாக்கை காட்டியது.... அன்று நான் முதலில் படித்த கவிதை இதுதான்....




Quote:
Quote:" ஓர் அணுவாகப் பெற்று,

" சிறுக் கருவாகத் தரித்து....

" பெரும் உயிராக ஈன்ற...

" என் அம்மா!!


" என் உணர்வாக நீயும்....

" உன் உயிராக நானும்...

" வாழ்ந்த நாட்கள்???


" உன் முந்தானைச் சிறையே.....

" என் மூச்சு விடும் இடமாக...

" எனை மூடிவைத்த நாட்கள்???


" மீண்டும் உன் மடி தேடும் கன்றாய்....

" தாயாய் வந்து தலைகோதும்...

" ஒரு உறவுக்காக...

" என் இருதயப் பூ என்றும் ஏக்கத்தோடு!!
இதன் பின் அன்று முழுவதும் விடிய விடிய உங்களின் அத்தனை கவிதைகளையும் படித்து முடித்தேன்.... அத்தனையும் வலி வலி வலி.... இவ்வளவு வலிகளை சுமக்கும் உங்களுக்கு கவிதைகள் தான் நிவாரணி என்று புரிந்து கொள்ளமுடிகிறது.... ஆறுதல் என்ற பெயரில் உங்கள் வேதனையை தூண்டிவிட நான் தயாரில்லை தோழி.... உங்களின் எழுத்துக்களை ரசிக்கிறேன்... உங்களின் ரசிகனாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்.... ப்ளீஸ்.....

நன்றி....

Sathiyamurthi A
University of California (UC),
Oakland,
California.

இதுவரை எத்தனையோ முறை இந்த மெயிலை படித்துவிட்டாள்... மிகவும் நாகரீகமாக பாராட்டிய மெயில்.... அன்றும் அவனுக்கு பதிலாக வெறும் நன்றி என்று தான் அனுப்பினாள்....
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 10-06-2019, 11:48 AM



Users browsing this thread: 7 Guest(s)