♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
 Episode - 39

ஜார்ஜ் அரெஸ்ட் செய்யப்பட்டு போலீஸாரால் சிறையில் அடைக்கப்பட்டான்.அவனுடைய மாமா சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஓடி வந்து விபரங்கள் கேட்க,கமிஷனர் வீட்டு குழந்தை கடத்திய விவகாரத்தில் அவன் வசமாக சிக்கியுள்ளதை அறிந்தார்.கமிஷனரே நேரடியாக இந்த கேசை கவனிப்பதால் தன்னால் அவனுக்கு ஏதும் உதவ முடியாமல் திணறினார்.

அவர் தனது உயர் அதிகாரியிடம் சென்று உதவி கேட்க,
இன்ஸ்பெக்டர் அருள் அவரை பார்த்து,"இங்க பாரு அன்பரசு உன் அக்கா பையனை காப்பாற்றுவது ரொம்ப கஷ்டம்.கமிஷனர் அவன் மேல செம்ம கோபத்தில் இருக்கார். இன்னும் சொல்ல போனால் நிலுவையில் உள்ள ரெண்டு மூணு கேசை அவன் மேல போட்டு ஏழு வருஷம் சிறை தண்டனை வாங்கி கொடுக்க சொல்லி இருக்கார்.நான் என்ன பண்ணட்டும் சொல்லு.?

சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு பதறி "அய்யயோ ஏழு வருஷம் என்றால் அவன் வாழ்க்கையே பாழாய் போய் விடும் சார்.ஜார்ஜ் ஏதோ அந்த குழந்தையை சஞ்சனா தான் கடத்தி அவன் காரில் வந்து போட்டாதாக சொல்றான்."

இன்ஸ்பெக்டர் அருள் அன்பரசுவிடம் கோபமாக "அவனே ஒரு பிராடு,அவன் குடிச்சிட்டு சொல்றதை நீங்க நம்பறீங்களா..!ஏற்கனவே ராஜா விவகாரத்தில் நீங்க ரெண்டு பேர் பண்ண நாடகத்திலேயே தெரியும்,யார் தப்பு பண்ணி இருப்பாங்க என்று?அப்போ ராஜாவை மாட்டி விட நினைச்சான்,இப்போ சஞ்சனாவா..?என்று கத்த

சார் கொஞ்சம் மெதுவா பேசுங்க,அவன் சொல்றதை நானும் கண்மூடித்தனமாக நம்பல,அவன் உறுதியாக சொல்றான்.அவன் போனில் கடைசியாக சஞ்சனா பேசி இருப்பதாகவும்,அது கால் ரெக்கார்டிங்கில் பதிவு ஆகி இருப்பதாகவும் சொல்றான்.கொஞ்சம் செக் பண்ணி பாருங்க சார்.

இதே கதையை எங்ககிட்டேயும் விட்டான்.இந்தா அவனுடைய மொபைல் கொஞ்சம் நீயே செக் பண்ணி சொல்லு,

அன்பரசு அவரிடம் மொபைல் வாங்கி தேடி பார்க்க அதில் ஒன்றுமே இல்லை.(அதை தான் ராஜா சொல்லி இக்பால் முழுவதுமாக reset செய்து அழித்து விட்டானே)

அன்பரசு பதறி"சார் இந்த மொபைலில் ஒண்ணுமே இல்லை."

"யோவ் அதை தானே நானும் சொன்னேன்.இந்த மொபைல் அவனோட கம்பனி மொபைல்,அவனை வேலையை விட்டு நீக்கிய உடனே இவன் இந்த மொபைலை அங்கே திருப்பி கொடுத்து இருக்கணும்.அதையும் இவன் கொடுக்கல.அதுக்கு ஒரு case வேற பாக்கி இருக்கு.அவங்க கம்பனிகாரங்க இவன் திருப்பி கொடுக்காததால் reset பண்ணி இவன் பயன்படுத்த முடியாதபடி ஆக்கிட்டாங்க.இவ்வளவு தில்லாங்கலடி பண்ணி இருக்கும் இவனுக்கு support செய்தால் நீயும் உள்ளே போக வேண்டி இருக்கும் பார்த்துக்க..

அன்பரசு கெஞ்சுதலாக "சார் கடைசியாக கேட்கிறேன் இவனை காப்பாற்ற வழி ஏதும் இருக்கிறதா மட்டும் சொல்லுங்கள்.அவன் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்கள்.பார்க்கவே பாவமா இருக்கு.?

இன்ஸ்பெக்டர் அருள் கொஞ்சம் இரக்கம் கொண்டு"ஒரே ஒரு வழி தான் இருக்குது அன்பரசு,கமிஷனர் மனசு வைத்தால் சிறிய தண்டனையோடு அவன் தப்பிக்க முடியும்.ஆனால் இருக்கும் பெரிய சங்கடமே யார் அவரை பார்த்து பேசி சமாதனபடுத்துவது..!"

அன்பரசு உடனே "சார் நான் உடனே நேரில் போய் சந்தித்து பேசறேன்."

அருள் கோபமாக"யோவ் அடிக்கடி நீ முட்டாள் என்று காட்டி கொண்டே இருக்கே,நீயே உன் அக்கா பையனை 7 வருஷம் தண்டனையில் இருந்து மரண தண்டனையே வாங்கி கொடுத்துடுவே போல் இருக்கு"

அன்பரசு பதறி " ஏன் சார் அப்படி சொல்றீங்க?"

அருள் அதற்கு"ஏன்யா உன் ட்ராக் ரெக்கார்ட் எவ்வளவு மோசம் என்று இந்த டிபார்ட்மெண்ட் முழுக்க வெட்ட வெளிச்சம்.அவனுக்கு நீ தான் மாமா என்று அந்த கமிஷனருக்கு தெரிந்தால் போதும்,அப்பிலே இல்லாமல் கண்டிப்பாக அவனுக்கு தூக்கு தண்டனை தான்".

இதை கேட்டு அன்பரசு பதறி" சார் அப்போ நீங்க எனக்காக பேச முடியுமா?"

அருளும் பதிலுக்கு"அந்த ஆள் என் பேச்சை கேட்கவும் மாட்டான்,எனக்கும் அந்த ஆள் கிட்ட பேச பயம்.அந்த ஆள் பற்றி தான் உனக்கே தெரியும் தானே.அந்த ஆள் நல்லவனுக்கு நல்லவன்,கெட்டவனுக்கு கெட்டவன்..ஆனா அந்த ஆள்கிட்ட சகஜமா பேசக்கூடிய ஒரு ஆள் இருக்கான்.ஆனா அவன் இந்த விசயத்தில் உனக்கு உதவி செய்வானா என்று எனக்கு தெரியாது?

அன்பரசுவுக்கு சற்று தெம்பு வர"சார் யார்னு மட்டும் சொல்லுங்க,நான் அவன் காலில் போய் விழுந்து கெஞ்சி கேட்கிறேன்"

அருளும் சொல்ல தொடங்கினார்."உன்னால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு,தனக்கு கமிஷனர் நன்றாக தெரிந்தும் கூட அவரோட பேரை இதுவரை தன்னோட சுய லாபத்துக்காக பயன்படுத்தாமல் இருக்கும் ஒருத்தன் தான்.உனக்கு அறிமுகமான நபர் ,வேறு யாருமில்லை ராஜா தான்.சிறந்த குடிமகன் அவார்ட் வாங்கியதில் இருந்து அவனுக்கும் கமிஷனருக்கும் நல்ல பழக்கம்.அவனோட நேர்மை கமிஷனருக்கு பிடித்து இருப்பதால்,கமிஷனர் வீட்டு எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவர் அவனை கூப்பிட தவறுவதே இல்லை.அவனை தன் குடும்பத்தில் ஒருவனாகவே பார்க்கிறார் என்று நினைக்கிறேன்.அவன் என்ன சொல்கிறான் என்று குறைந்தபட்சம் காது கொடுத்தாவது கேட்பார்.மீதி கடவுள் விட்ட வழி."என்று சொல்ல அன்பரசுவுக்கும் ஜார்ஜ்ஜை காப்பாற்ற முடியும் என சற்று நம்பிக்கை வந்தது.

அன்பரசு வெளியே வர,ஜார்ஜ் அப்பா அம்மா அழுது கொண்டே அவரிடம் ஓடி வந்து விசாரித்தனர்.

நீங்க ரெண்டு பேரும் அழாம வீட்டுக்கு போங்க, நான் எப்படியாவது ஜார்ஜ்ஜை வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன்.!என்று உறுதி அளித்தார்.

ராஜா உதவி செய்வானா?அப்படி ராஜாவே உதவி பண்ண நினைத்தாலும் சஞ்சனா அதற்கு ஒப்பு கொள்வாளா.!கமிஷனர் கூறப் போவது என்ன?

[Image: FB-IMG-1692888122840.jpg]
[+] 5 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 31-08-2023, 08:58 PM



Users browsing this thread: 25 Guest(s)