30-08-2023, 08:21 PM
(This post was last modified: 06-11-2024, 09:49 PM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode -38
ஜார்ஜ் இந்த மாலில் உள்ள உணவகத்திற்கு ரெகுலராக வருவது வழக்கம்.சாப்பிட்டு வரும் வழியில் ஜாலியாக பாட்டு பாடி கொண்டு வர,ராஜா அவன் சத்தம் கேட்டு உஷாரானான்.ஜார்ஜ் கார் கதவை திறக்கும் பொழுது ராஜா முகத்தை கைக்குட்டையால் மூடி கொண்டு ஜார்ஜ் பின்னே சென்று அவன் கழுத்தில் ஓங்கி அடிக்க,ஜார்ஜ் நிலை தடுமாறி விழுந்தான்.ஜார்ஜ் சுதாரித்து எழுந்து ராஜாவுடன் சண்டை போட்டு கொண்டே,யார் என்று பார்க்க ராஜா முகத்தை நோக்கி கை நீட்ட,ராஜா நீட்டிய அவன் கையை முதுகு புறம் மடக்கி,கார் கதவின் கண்ணாடியில் அவன் முகத்தை உள்ளே அழுத்தி கண்ணாடியை மேலேற்ற ஜார்ஜ்ஜின் முகம் கார் கதவின் கண்ணாடியில் சிக்கி கொண்டது.
ராஜா பக்கத்தில் உள்ள பார்க்கிங்கில் பயன்படுத்தபடும் ஸ்டீல் பைப்பை உருவி கொண்டு அவன் பிட்டத்தில் ,பள்ளி கூடத்தில் வாத்தியார் அடிப்பது போல மாறி மாறி பொளக்க,ஜார்ஜ் வலி தாங்காமல் கதறினான்.
அவன் கதறிய சத்தம் கேட்டு,அங்கு இருந்த செக்யூரிட்டிகள் ஓடி வரும் சத்தம் கேட்க,ராஜா பைப்பை வீசி விட்டு கிளம்பினான்.
ஜார்ஜ் கார் கதவில் சிக்கி இருந்தபடியே "முகத்தை மூடி கொண்டு அடிக்கிறீயே உனக்கு வெட்கமா இல்ல,கண்டிப்பாக எனக்கு தெரிந்தவனாக இருப்பே,உன்னை கண்டுபிடித்து சும்மா கூட விட மாட்டேன்"என்று கத்த,
ராஜா கொஞ்சம் கூட பதறாமல்"இதுவரை எத்தனை பேர் கிட்ட உதை வாங்கி இருக்க ஜார்ஜ்,ஒருவேளை நிறைய பேர் நீ உதை வாங்கி இருந்தால் நான் யார் என்று கண்டுபிடிப்பது கடினம்.ஆனா ஒரே ஒருத்தனிடம் உதை வாங்கி இருந்தால் அது தான் நான் "என்று ராஜா க்ளூ தர ஜார்ஜ் மூளையில் மின்னல் வெட்டியது.
ஜார்ஜ் இதுவரை அடி வாங்கியது ஒருவனிடம் மட்டுமே அது....
"ராஜாவாடா நீ"என்று ஜார்ஜ் அதிர்ச்சியில் கேட்டான்,
"பரவாயில்லை கண்டு பிடிச்சிட்ட,இன்னொரு தடவை எங்க ரெண்டு பேர் வாழ்க்கையில்
நடுவில் வந்தே அவ்வளவு தான் நீ இப்ப மாதிரி உசிரோடு விட்டு போக மாட்டேன்"என்று மிரட்டி விட்டு மின்னலென மறைந்தான்.
செக்யூரிட்டிகள் வந்து அவனை கார் கண்ணாடியில் இருந்து மீட்டு,சார் என்ன ஆச்சு என்று கேட்டனர்.
தன்னால் ராஜாவை எதிர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் வந்த செக்யூரிட்டிகள் மீது எரிந்து விழுந்தான்.அவன் மூக்கு உடைந்து இரத்தம் ஒழுகியது.ராஜா அவன் பிட்டத்தில் அடித்த அடியால் காரில் சரியாக கூட அவனால் உட்கார கூட முடியவில்லை. "ஐயோ இன்னும் கொஞ்ச நாளுக்கு குப்புற படுத்து தான் தூங்கனும் போலயே "என்று புலம்பினான்
காரை மெல்ல வெளியே கொண்டு வந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்க அதில் அவனுக்கு பழக்கமான வாடை வந்தது.மீண்டும் உறுதிபடுத்தி கொள்ள சிறிது குடித்த போது அதில் மது கலந்து இருப்பது தெரிய வந்தது.அப்பொழுது அந்த நேரம் ஜார்ஜ் காரை நிறுத்த சொல்லி போலீஸ் கைகாட்ட ஜார்ஜ் நிறுத்தாமல் காரை ஓட்டினான். எங்கே நிறுத்தினால் தான் குடித்து இருப்பதை கண்டு பிடித்து விடுவார்களோ என்ற பயத்தால் நிறுத்தாமல் ஒட்ட,அப்பொழுது ஜார்ஜ் மொபைலுக்கு ஒரு ஃபோன் வந்தது.
ஜார்ஜ் போன் எடுக்க,சஞ்சனா மறுமுனையில் பேசினாள்.
"என்னடா ஜார்ஜ் ,எப்படி இருக்கே,"
யாரென்று புரியாமல் "யார் பேசறது?"என்று ஜார்ஜ் கேட்க,
"நான்டா சஞ்சனா..!"என்ன என் குரல் கூட மறந்து போச்சா?
ஜார்ஜ் சந்தேகத்தோடு"ஆனா வேற நம்பரில் இருந்து கால் வருது."என்று கேட்டான்.
"பின்னே இந்த விசயத்துக்கு எல்லாம் என் நம்பரில் இருந்தா ஃபோன் பண்ணுவாங்க..என்னோட ராஜாவை போலீசில் மாட்டிவிட்ட இல்ல,அதுக்கு பதிலுக்கு பதில் உன்னை இப்போ போலீசில் மாட்டி விட்டு இருக்கேன்.."
ஜார்ஜ் சத்தமாக"ஹே ச்சீ உன்னை என்னவோ நினைச்சேன் இவ்வளவு மொக்கையாகவா திட்டம் போடுவே,என் வாட்டர் பாட்டிலில் ட்ரிங்க்ஸ் கலந்து வைச்சா என்ன நடக்கும்?நான் போலீசில் மாட்டினாலும் இது ஜஸ்ட் drink and drive கேஸ் தான்.என் மாமா மூலமா fine கட்டிட்டு வெறும் அரை மணி நேரத்தில் வெளியே வந்து விடுவேன்.இது தான் உன் பழிவாங்கலா" என்று சிரித்தான்.
சஞ்சனாவும் சிரித்து கொண்டே,"நல்லா சிரிடா மவனே,என்னை பற்றி நீ புரிந்து கொண்டது அவ்வளவு தான்.நான் என்ன அவ்வளவு முட்டாளாடா ஜார்ஜ்,உன் கார் டிக்கியை கொஞ்சம் திரும்பி பார் மகனே..!
ஜார்ஜ் திரும்பி எட்டி பார்க்க,ஒரு குழந்தை வாய் பொத்தி கைகட்டி மயக்க நிலையில் இருந்தது.பின்னாடி வேறு போலீஸ் வேன் துரத்தி கொண்டு வந்தது.
ஜார்ஜ் பதறி போய்,"யார் குழந்தைடி இது?"என்று அலறினான்.
சஞ்சனா கம்பீரமாக செய்தி வாசிப்பாளர் போல் "கமிஷனர் பேரன் கடத்தல்,கடத்திய ஜார்ஜ் என்ற நபரை ஒரு பெண் கொடுத்த துப்பு மூலம் அன்றிரவே போலீசாரால் மடக்கி பிடிக்கபட்டான்.அந்த பெண் வேறு யாருமல்ல இந்த சஞ்சனா தான்.நான் அன்னிக்கே உன்கிட்ட என்ன சொன்னேன்,நீ ராஜா மேல கையை வைத்தால் இந்த சஞ்சனா உன்னை சும்மா கூட விட மாட்டேன் என்று சொன்னேனா இல்லையா"..போலீஸ் வேன் சத்தம் சஞ்சனா காதுகளில் கேட்க,"சரிடா ஜார்ஜ்,உன்னை மாமியார் வீட்டுக்கு கூட்டி போக பொண்ணு வீட்டுக்காரங்க வந்துட்டாங்க.நான் வேற எதுக்கு உன்னை இந்த நேரத்தில் தொந்தரவு பண்ணிக்கிட்டு,போனை வைக்கிறேன்"என்று வைத்து விட்டாள்.
ஜார்ஜ் போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டு ,கமிஷனர் குழந்தை மீட்கப்பட்டது.ஜார்ஜ் நான் குழந்தையை கடத்தவில்லை என்று அலறினான்.ஆனால் அவன் குடித்தும், காரை நிக்காமல் ஒட்டி வந்த நிலையில் தர தரவென்று ஸ்டேஷன் இழுத்து செல்லப்பட்டான்.
ராஜா திரும்ப இக்பாலுக்கு ஃபோன் செய்ய,
ஹலோ இக்பால் நான் ராஜா பேசறேன்,ஜார்ஜை பார்த்தேன்,ஆனா அவன் மொபைலை தர மாட்டேன் என்று பிடிவாதமா சொல்லிட்டான் என்று கூற,
இக்பால் பதிலுக்கு"நோ பிராப்ளம் ராஜா,அவன் மொபைலை தராவிட்டாலும் பரவாயில்லை.அவனால் இதுக்கு மேல் அந்த மொபைலை பயன்படுத்த முடியாமல் செய்து விடுகிறேன் என கூறி ஒரு சாப்ட்வேரை அழுத்த ,ஜார்ஜ் மொபைல் reset ஆகி எல்லா டேட்டாக்களும் அழிந்து லாக் ஆகியது.சஞ்சனா தற்பொழுது பேசிய கால் உட்பட..
ராஜா எதுவாக இருந்தாலும் நேராக மோதி தான் பழக்கம்.ஆனால் சஞ்சனா சரியாக திட்டம் போட்டு ஜார்ஜ் பாணியிலேயே அவனை போலீஸிடம் வசமாக சிக்க வைத்து விட்டாள்
ஆனால் இந்த விசயம் ராஜாவிற்கு இதுவரை தெரியாது.