♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
Episode - 36

ஜார்ஜ் தன்னுடன் வேலை செய்த பாலாஜிக்கு ஃபோன் செய்தான்.

என்ன பாலாஜி எப்படி இருக்கே?நான் இல்லாம ரொம்ப சுபிட்சமாக இருக்கே போல! ஜார்ஜ் நக்கலடிக்க

பாலாஜி பவ்யமாக,"என்ன குரு இப்படி சொல்லிட்டீங்க,நீங்க இல்லாமல் எனக்கு வேலையே ஓட மாட்டேங்குது."

ஜார்ஜ் நேராக விசயத்திற்கு வந்தான்."அப்புறம் என் எதிரி சஞ்சனா எப்படி இருக்கா?"

"குரு,அவ ரெண்டு நாளாக வேலைக்கே வரல,"

ஜார்ஜ் வீராப்பாக"எனக்கு தெரியும்,அவ ஏன் வரல என்று,அவ காதலனை விபச்சார வழக்கில்  போலீஸ் அரெஸ்ட் பண்ணதை கண் முன்னே பார்த்த சோகத்தில் வந்து இருக்கா மாட்டாள்.ஆனால் அந்த ராஜா நாய் மட்டும் எப்படியோ அன்னிக்கே எஸ்கேப் ஆயிடுச்சு.ஆனா ஊரை விட்டு ஓடி விட்டதா கேள்விப்பட்டேன்.எப்படி இந்த ஜார்ஜ் அடிச்ச அடி?

என்னது நீங்க அடிச்ச அடியா? பாலாஜி புரியாமல் கேட்டான்.

அது ஒன்னும் இல்ல பாலாஜி,நான் ஒரு திட்டம் போட்டேன். ராஜாவை விபச்சார வழக்கில் சிக்க வைத்தால், சஞ்சனாவிற்கு அவன் மேல் வெறுப்பு வரும்.அந்த நேரத்தில் நான் அவள் அப்பா மூலமாக அவளை கன்வின்ஸ் செய்து அவளை அடையலாம் என்று பிளான் போட்டு இருக்கேன்.

செம்ம பிளான் தான் குரு,ஆனா உங்க பிளான் ஊத்திக்கிடுச்சு..பாலாஜி குண்டை தூக்கி போட்டான்

என்னடா சொல்ற?ஜார்ஜ் அதிர்ச்சியாக

பின்ன நீங்க ராஜாவை மாட்ட வைக்க திட்டம் போட்டீங்க,ஆனா அவன் எஸ்கேப் ஆகிட்டான்.சஞ்சனாவை அடைய திட்டம் போட்டீங்க.அதுவும் இப்போ டமால்..

ஏண்டா என்ன ஆச்சு,சஞ்சனா தற்கொலை ஏதும் பண்ணிக்கிட்டாளா?

நீங்க வேற குரு, அவளாவது தற்கொலை பண்ணிக்கிறதாவது.. உங்களுக்கும் இல்லமா ராஜாவுக்கும் இல்லாம மூணாவதா ஒரு ஆள் புகுந்து சஞ்சனாவை தட்டிட்டு போய்ட்டான்.

யாருடா அது?என்னோட போட்டிக்கு வர்றது..!

அது வேறு யாருமில்லை குரு,பிரியா மேடம் தம்பி அர்ஜுன்..

என்னது பிரியா தம்பி அர்ஜுனா ? அவன் பேரை கேட்டதுமே ஜார்ஜ் விழுந்து விழுந்து சிரித்தான்.

என்ன குரு சிரிக்கிறீங்க?எனக்கும் விசயத்தை சொல்லி விட்டு சிரிங்க..

ஜார்ஜ் திமிருடன்"ராஜாகிட்ட இருந்து சஞ்சனாவை பிரிப்பது தான் கஷ்டம் பாலாஜி,ஆனா இந்த பிளக்கா பையன் அர்ஜுன் கிட்ட இருந்து சஞ்சனாவை பிரிப்பது ரொம்ப ரொம்ப சுலபம்.அப்புறம் அந்த சஞ்சனா என்கிற தங்க பாவை எனக்கு தான்..

எப்படி குரு பிரிக்க போறீங்க.?பாலாஜி ஆச்சரியமாக கேட்க,

பாலாஜி நல்லா கேட்டுக்க,நானும் அர்ஜுனும் ஒரே காலேஜில் படிச்சவங்க.அவன் சரியான தயிர்சாதம்.இன்னும் சொல்ல போனால் அவன் தான் எனக்காக பிரியா மேடம் கிட்ட  முதலில் இந்த வேலைக்கு சிபாரிசு பண்ணினான்.அதனால் தான் நான் இந்த கம்பனியில் சேர்ந்தேன்.அர்ஜுனோட முழு அகராதி எனக்கு தெரியும்.இப்போ நான் பண்ண போற விசயத்தில் அர்ஜுன் சஞ்சனாவை எச்சில் இலை மாதிரி எப்படி தூக்கி எறிந்து விட்டு போக போறான் பார்" என்று ஜார்ஜ் வில்லன் போல் சிரிக்க

பாலாஜி புரியாமல்"குரு எனக்கு மட்டும் எப்படி என்று சொல்லுங்கள்,இல்லை என்றால் எனக்கு தலையே வெடித்து விடும்"என்று கேட்க

அது போனில் சொல்ல முடியாது பாலாஜி ,நீ "நினைவோ ஒரு பறவை" என்ற கதையில்  episode 37 இல் வரும்.அதில் படித்து தெரிந்து கொள் போ என்று போனை வைத்து விட்டான்.

ஏண்டா அர்ஜுன் நான் கஷ்டப்பட்டு பிளான் போட்டு, ராஜா,சஞ்சனாவை பிரித்தால் நீ நோகாமல் வந்து சஞ்சனாவை தட்டி கொண்டு போக விடுவேனா? என கொக்கரித்து,ஒரு வீடியோவை வாட்ஸ்அப் மூலமாக அர்ஜுன் மொபைலுக்கு அனுப்பினான்.

அது என்ன வீடியோ?அதை பார்க்கும் அர்ஜுன் எடுக்க போகும் நடவடிக்கை என்ன,? அடுத்த பாகத்தில்...

[Image: Screenshot-2023-0827-210923.jpg]
[+] 7 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 29-08-2023, 06:12 PM



Users browsing this thread: 7 Guest(s)