♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
 Episode 29

ராஜா வண்டியை எடுக்க தொடும் பொழுது ,அவனுக்கு சஞ்சனாவின் நினைவுகள் அலைமோதியது. பைக்கில் அவள் மலர்கரங்களால் அவனை பின்னி கொண்டு ஊர் சுற்றியது கண்முன் வர,கோபத்தில் பைக்கை எட்டி உதைத்தான்.என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து குளிர்காய தான் வந்தாயா சஞ்சனா என்று பைத்தியம் போல வெறி கொண்டு வானத்தை நோக்கி கத்த சாலையில் சென்றவர்கள் எல்லாம் திரும்பி அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர்.அமைதியாக தரையில் உட்கார்ந்து வாயை மூடி அழுதான்.கீழே விழுந்த பைக் உந்து வேகத்தில் பின்சக்கரம் மட்டும் சுற்றி கொண்டு இருந்தது.ராஜா தன் பைக்கை சகோதரன் போல் பாவித்து வந்தான்.எத்தனையோ முறை அவன் களைப்பில் வண்டியை ஒட்டி விபத்து நடக்க இருந்த சமயத்தில் எல்லாம் பலமுறை இந்த பைக் அவனை காப்பாற்றி இருக்கிறது.இவனல்லவா என்னையும்,என் குடும்பத்தையும் வாழ வைக்கிறான் என வேகமாக சென்று பைக்கை நிமிர்த்தி "சாரிடா அவள் மேல் உள்ள கோபத்தில் உன்னை உதைத்து விட்டேன்.என்னை மன்னிச்சிடு."என மானசீகமாக தன் பைக்கிடம் மன்னிப்பு கேட்டான்.

பைக்கில் ஊர் சென்றால் அவள் நினைவுகள் அலை அலையாக தொடர்ந்துவரும் என்று பைக்கை கொண்டு சென்று கோயம்பேட்டில் விட்டு விட்டு பஸ்ஸில் சென்றான்.

அடுத்த நாள் காலை வழக்கமாக சந்திக்கும் இடத்தில்,
    வாசு ராஜேஷிடம் "ராஜேஷ் எங்கடா ராஜாவை காணோம்"

அவன் இதுக்கு மேல் வரமாட்டான் வாசு.வேலையை விட்டு நிக்க போறான்.

டேய் என்னடா சொல்ற,இப்ப தான்டா அவன் TL ஆக செலக்ட் ஆனான்.போஸ்டிங் வருவதற்குள் ஏண்டா இப்படி ஒரு முடிவு?

"எல்லாம் சஞ்சனாவால் வந்த வினை" என்று ராஜேஷ் சொல்லும் பொழுதே சஞ்சனா அங்கே வர,

வாசு உடனே"மச்சான் சஞ்சனா தான் வரா"

சஞ்சனா ராஜேஷிடம்"அண்ணா ராஜா எங்கே"

ராஜேஷ் கோபத்துடன்"போதும் சஞ்சனா உன் நாடகம் எல்லாம்.எத்தனை தடவை தான் எல்லோரும் என் நண்பனை காயப்படுத்திட்டே இருப்பீங்க.உன்னால தான் அவன் இந்த வேலையையும் விட்டு எங்களையும் விட்டு போய்ட்டான்.

என்ன அண்ணா சொல்றீங்க,வேலையை விட்டுட்டானா?நான் என்ன தப்பு பண்ணேன்?

ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதே சஞ்சனா,நேற்று நீயும் உங்க அப்பாவும் சேர்ந்து உங்க வீட்டில் அவனை எப்படி அசிங்கப்படுத்தினீங்க.அதுவும் உன் அப்பா உனக்கும் ,பிரியா தம்பி அர்ஜுனுக்கும் கல்யாணம் முடிவு ஆயிடுச்சு என்று சொன்னார்.உன் வாழ்கையில் ராஜா திரும்ப குறுக்கிடுவதாக இருந்தால் அவனை வேலையை விட்டு தூக்குவேன் என்றும் மிரட்டினார்.வார்த்தைக்கு வார்த்தை பொறுக்கி ,கிரிமினல் என்று திட்டினார்.அதை எல்லாம் நீ கேட்டுட்டு உள்ளே சும்மா தானே இருந்தே..

அண்ணா நேற்று நீங்க வந்ததே எனக்கு தெரியாது.நான் நேற்று இரவு 10 மணி வரை ராஜா ரூம் கிட்ட தான் அவனுக்காக காத்திட்டு இருந்தேன்.

இந்த காதலால் அவன் பட்ட கஷ்டம் எல்லாம் போதும் சஞ்சனா.அவனோட ராசி அப்படி.இதற்கு மேல் அவன் வாழ்வில் நீ வராமல் இருப்பது தான் அவனுக்கும் நலம் உனக்கும் நலம்.உனக்கு கிடைச்ச வாழ்வை நீ நல்லா வாழு.அவன் பாவம் விட்டுடுங்க.

"ஆமாம் சஞ்சனா உன்னால தான் எங்க நண்பனை நாங்க இழந்துட்டு நிக்கிறோம்"வாசுவும் ஆமோதித்தான்.

டேய் முட்டாள்களா,ராஜாவுக்காக கவலைபட ஃப்ரெண்ட்ஸ் என்று நீங்க இருக்கீங்க..!எனக்காக யாரு இருக்காங்க.என் நிலைமையில் இருந்து யாராவது யோசித்து பார்த்தீங்களா?என் அப்பா மட்டுமே.அதுவும் ஒரு பொண்ணாக என்னால நிறைய விசயங்களை என் அப்பா கிட்ட கூட சொல்ல முடியாது.ஏதோ ராஜா மூலமா,அவனோட அம்மா எனக்கு அம்மாவாகவும்,நீங்க எல்லாம் எனக்கு அண்ணனாகவும் கிடைச்ச சந்தோஷத்தில் இருந்தேன்.தங்கை என்ற உரிமையில் தான் உங்களை அப்பப்ப அடிச்சேன்.ஒருவேளை என் அம்மா இருந்து இருந்திருந்தால் ...."என சொல்லும் போதே அவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது.சமாளித்து "சரி விடுங்க எனக்கு கிடைச்ச வாழ்க்கை அவ்வளவு தான்.ஆனா அவனை அப்படியே விட்டுட்டு எல்லாம் என்னால் போக முடியாது.நானே தேடிக்கிறேன்."கண்ணீரோடு சஞ்சனா திரும்ப

சஞ்சனா கூறிய வார்த்தைகள் ராஜேஷை முற்றிலும் நிலைகுலைய செய்தது "நில்லு சஞ்சனா உன் அண்ணன் தான் இப்படி முட்டாள்தனமா எதுனா பேசினா தங்கச்சி நீயும் கோவிச்சிக்கலாமா?நீ உத்தரவு இடு சஞ்சனா, நான் என்ன செய்யனும்."

நான் ராஜா மொபைலுக்கு தொடர்ந்து கால் பண்ணிட்டே இருக்கேன்.அவன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என்றே வருது.

அவன் மொபைல் நேற்றே போலீஸ் ஸ்டேஷனில் ஆஃப் ஆயிடுச்சு சஞ்சனா.இன்னும் ஆன் பண்ணல.அவன் சொந்த ஊருக்கு தான் போய் இருக்கான்.

அப்போ நான் உடனே அவன் ஊருக்கு கிளம்பறேன்.

அவன் இப்போ அங்கே இல்ல சஞ்சனா.நானே காலையில் ஃபோன் பண்ணி தான் தெரிந்து கொண்டேன்.

ஆனா அவர் நம்பர் இப்போ வரை ஸ்விட்ச் ஆஃப் என்று தானே வருது.நீங்க எப்படி கால் பண்ணீங்க,

அவன் நம்பர் தானே ஸ்விட்ச் ஆஃபில் இருக்கு,ஆனால் அவன் தங்கச்சி நம்பர் on ல தானே இருக்கு.

அப்போ நான் உடனே அவளுக்கு ஃபோன் பண்ணி எங்கே இருக்கான் என்று கேட்டு தெரிந்து கொள்கிறேன்.

அது ரொம்ப கஷ்டம் சஞ்சனா,ராஜா தான் எங்கே போறேன் என்று யார்கிட்டேயும் சொல்ல கூடாது என அவன் தங்கச்சிகிட்ட சொல்லிட்டு போய் இருக்கான்.அவ அண்ணன் வார்த்தையை மீறி ஒரு விசயம் அவ சொல்ல மாட்டா.நான் கூட எவ்வளவு கேட்டும் அவ வாயே திறக்கல.அவ சரியான கிரிமினல்,ஒரு உதாரணம் சொல்றேன் கேட்டுக்கோ.சின்ன வயசுல அவன் tvs excel எடுத்து கொண்டு தங்கச்சியை உட்கார வைத்து வீட்டுக்கு தெரியாம ரவுண்ட்ஸ் அடிச்சு இருக்கான்.அப்போ கீழே விழுந்து அவ தங்கச்சி காலில் silencer பட்டு வெந்து போச்சு.வீட்டில் மட்டும் சொல்லாத குட்டி, அப்பா என்னை பொளந்து விடுவாங்க என்று அவன் சொன்ன ஒரே வார்த்தைக்காக 4 வயசு குழந்தையாக இருக்கும் போதே அந்த பொண்ணு வீட்டில் வாயே திறக்கவில்லை.எப்படி அடிச்சு கேட்டும் சுத்தமா வேலைக்கே ஆகல.அப்புறம் தங்கச்சி அடி வாங்கறத பார்த்து மனசு கேட்காம கடைசியில் இவன் தான் உண்மையை ஒத்துகிட்டான்.இப்ப வரை அவ அண்ணன் ஒரு வார்த்தை சொன்னால் அந்த பொண்ணு மீறுவதே கிடையாது.

இல்ல அண்ணா,எனக்கு வேறு ஆப்ஷன் இல்ல,நான் அவளுக்கே ஃபோன் அடிக்கிறேன்.

சஞ்சனா திவ்யாவிற்கு ஃபோன் அடிக்க,முதல் அழைப்பிலேயே எடுக்கப்பட்டது.

என்ன அண்ணி,உங்களுக்கும் அண்ணனுக்கும் எதுனா பிரச்சினையா?மூஞ்சி வாடி இருப்பதை நான் கேட்டேன்.எதுவுமே வாயை திறக்கல.அப்புறம் அவன் சென்னையில் வேலையை விட்டு விட்டு மீண்டும் அவனுக்கு பிடிக்காத பெங்களூர் வேலைக்கு போக போறதா சொன்னான்.

அப்போ அவன் பெங்களூரில் தான் இருக்கானா திவ்யா ?

இல்ல அண்ணி..

பொறுமையை சோதிக்காதே திவ்யா,அவன் எங்கே இருக்கான் என்று மட்டும் சொல்லு.

சாரி அண்ணி ,என் அண்ணண் யார்கிட்டேயும் சொல்ல கூடாது என்று சொல்லி இருக்கு.இன்னும் ரெண்டு மூணு நாளில் அவன் சென்னை வருவான்.அப்போ பார்த்துக்கோங்க

திவ்யா நிலைமை புரியாமல் பேசாத,இந்த சூழ்நிலையில் உன் அண்ணனுக்கு உடனே நான் கண்டிப்பா தேவை.ஏற்கனவே எந்த தப்பும் செய்யமாலே விதி எங்களை சுத்தி சுத்தி அடிக்குது.இன்னும் ரெண்டு மூணு நாள் என்றால் எங்கே நான் அவனை இழந்து விடுவேனோ என்று பயமாய் இருக்குது.தயவு செய்து சொல்லு

என்னால் நேரடியாக சொல்ல முடியாது. உங்களுக்காக வேணா ஜாடை மாடையா சொல்றேன்.நீங்களே கண்டுபிடிச்சு கொள்ளுங்கள்.
அவன் இப்போ போய் இருக்கும் இடம் நாற்புறமாக சதுரமாய் திசைக்கு ஒன்றாய் மலை,அதன் நடுவில் சுந்தரமாய்,சந்தனமாய் லிங்கம்.இது தான் அவன் போய் இருக்கும் இடம்.

இதை வச்சு எப்படிடி கண்டு பிடிக்கிறது,எதுனா க்ளூ கொடு..

அவன் போய் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள ஊரின் கோவில் கோபுரம் தான் தமிழ்நாடு அரசின் சின்னத்தில் உள்ளது.இவ்வளவு தான் என்னால் க்ளூ கொடுக்க முடியும்.இதற்கு மேல் கண்டுபிடிக்க வேண்டியது உங்க திறமை என்று வைத்து விட்டாள்.

எப்படியோ சஞ்சனா அந்த இடத்தை கண்டுபிடித்து விட்டாள்.(வாசகர்கள் கண்டுபிடித்தால் comment இல் தெரிவிக்கலாம்.கட்டாயம் இல்லை)

சஞ்சனா நானும் உன் கூட உடனே வரேன்,ராஜேஷ் சொல்ல

இல்ல அண்ணா,இந்த தடவை நான் மட்டும் தனியா போய் என் சொந்த முயற்சியில் தான் அவனை இங்க கூட்டி வர வேண்டும்.அப்போ தான் எங்களுக்குள் மீண்டும் பிரிவு உண்டாகாது.அங்கே போவதற்கு முன்னாடி என் அப்பாகிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.

ராஜேஷ் அவளிடம் கண்கலங்க "சஞ்சனா அப்புறம் இன்னொரு தடவை எனக்கென்று யாரும் இல்ல என்று மட்டும் சொல்லாதே.இந்த ரெண்டு அண்ணன்கள் எப்பவுமே உன் கூட தான் இருப்போம்.ராஜாவே வந்தாலும் நாங்க உன் பக்கம் தான்.உன் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் அந்த ராஜா பையனை நான் சும்மா விட மாட்டேன்.வெற்றி உன் பக்கம் தான்டா. நீ போய்ட்டு வாடா செல்லம்."

வாசுவும் சஞ்சனாவிடம் "சிஸ்டர் உங்களுக்கு எப்பவெல்லாம் போர் அடிக்குதோ அப்பவெல்லாம் என்னை வந்து அடிச்சு பழகிக்கோங்க .உங்களுக்காகவே இந்த பாடியை நான் இன்சூரன்ஸ் பண்ணி வச்சி இருக்கேன்."

" சரிங்க அண்ணன்ஸ் நீங்க என்னுடன் 

[Image: images-57.jpg]

இருக்கும் வரை எனக்கு கவலை இல்லை",என்று சஞ்சனா சிரித்து கொண்டே கிளம்பினாள்.
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 23-08-2023, 10:25 PM



Users browsing this thread: 22 Guest(s)