ஆலோசனை கேட்கிறேன் .
#12
(23-08-2023, 11:23 AM)dubukh Wrote: 5000 போதும், 10000 போதும், டாடிகிட்ட வாங்கின பாக்கெட் மணிலயே ஆரம்பிக்கலாம்னு சொல்றத நம்பாதீங்கப்பு. இந்த வெப்சைட்டின் பேரண்ட் சைட்டே இதுக்கு உதாரணம். இந்த தளம் இதற்கு முன்பாக எக்ஷ்ஸ்பி என்ற பெயரில் இருந்தது. ஹெவி ட்ராஃபிக், மேஜர் ஐஎஸ்பிகளையே கவர்மெண்ட் சொல்லி ப்ளாக் பண்ண வைத்து, அதன் பின் பிராக்ஸி, ரீ டேரக்ட், மிரர் ஹோஸ்டிங் என போய், கடைசியில் விளம்பர வருமானமும் மெம்பர்களின் சில லட்சங்கள் டொனேஷன்கள் போக, இன்னும் ஒரு பத்து லட்சம் குறைவாக இருந்த படியால் மூடப்பட்டது. அதுவும் பல ஆண்டுகள் முன்பு.

ஒரு ஐம்பது லட்சம் கையில் எக்ஸ்ட்ராவாக - தேவைக்கு அதிகமாக இருந்தால் சரியாக வரும். ஏன் எக்ஸ்ட்ரா என்றால், நீங்க உங்கள் வீட்டை அடமானம் வைத்தோ அல்லது ஏதேனும் சொத்தை விற்றோ முயற்சி செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில் சொல்கிறேன். அதை எஃப்டியில் போட்டு வரும் ஆண்டு வட்டியில் தளம் நடத்தலாம்.

ஏன் என்றால், கதைக்கான தளம் மட்டும் என்றால் 25000 - 50000 போதும் தான். ஆனால் அதற்கு வரும் கூட்டம் மிகக் குறைவு. ஏன்னா அப்படி 100 சைட் இருக்கு, அதில் 75% லாகின் கூட பண்ண வேண்டியது இல்ல. ஏன், கூகுள் ப்ளாகரே போட்டி போடும். எனவே இமேஜ் மற்றும் வீடியோவும் வைக்க வேண்டும். அதனை பொது ஃப்ரீ சர்வரில் எல்லோரும் பார்க்கும் படி வைத்தால், சில பைத்தியங்கள் வந்து தகாத படம் போட்டு, அந்த சர்வீஸ் செக்சனையே மூட வைத்து விடுவார்கள். உதாரணம் இந்த சைட்.

ஆட் சப்போர்டட்டாக செய்ய நினைத்தால், இப்பொழுது ஆட் ப்ளாக்கர்கள் உங்கள் சோற்றில் மண்ணைப் போட்டு விடும். மீறி ஆட் ப்ளாக்கர்களை தடை செய்தால் தான் உள் நுழைய முடியும் என்றால், ட்ராஃபிக் குறைந்து விடும். மத்தளம் போல இரண்டு பக்கமும் இடி வாங்க வேண்டும்.

இல்லை மெம்பர்ஸ் சப்ஸ்கிரிப்ஸன் கொண்டு செல்ல நினைத்தால், அதற்கு ரெபுடேஷன் மிக அவசியம். காப்பிரைட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் தள கதையை யாரும் திருட விடாமல் பார்த்துக் கொள்ள உதவும். வேறு தளத்தில் திருடி பதித்தால் அங்கே சண்டை இட வேண்டும். எனவே அதற்கு எக்ஸ்பீரியன்ஸ்ட் டெடிகேட்டட் பெய்ட் ஸ்டாஃப்கள் மிக அவசியம்.

உங்கள் தளம் ஆண்டவன் புண்ணியத்தில் நன்றாக ஓட ஆரம்பித்து விட்டால், திருட்டு கதைகள் என்பது அடுத்து வரும் பிரச்சனை. கை வலிக்க கதை எதியவனை பாராட்ட ஒரு வரி போடாதவர்கள் எல்லாம், "அந்த கதை கிடைக்குமா ப்ரோ" என்று சொல்லி பார்த்து இருப்பீர்கள். திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது நிச்சயம். ஆனால் கண்ட்ரோல் செய்யலாம், ஆனால் அதற்கு முன்பே சொன்னது போல மெனக்கெட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், திருட்டு கதைகள் உலா வர, கமெண்ட் செய்வர்கள் குறைந்து கதை எழுதுபவர்கள் நொந்து விடுவார்கள்.

சைட்டை கவனித்துக் கொள்ள சம்பள ஆள் இல்லை என்றால் நீங்களே முழு நேரம் பார்க்க வேண்டும். சும்மா ஒர்க் ஃப்ரம் ஹோம் அல்லது ஆபிஸில் ஒரு பிரௌஸர் விண்டோவை திறந்து வைத்து பார்த்துக் கொள்ளலாம் என நினைக்க வேண்டாம். அது கடைசியில் உங்கள் மெயின் வேலைக்கே உலை வைத்து விடும்.

கடைசியாக இதில் லாபம் வரும் என எதிர்பார்க்கக் கூடாது. ஜஸ்ட் பேஸனேட்டாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் கையை சுட்டுக் கொண்டாலும், பொறுத்துக் கொள்ள மனம் வரும்.

இதே அமெரிக்கா போன்ற நாடுகளில் என்றால் வேலை சுலபம், லாபம் நிச்சயம், ஆனால் செலவும் கூட. அரசாங்கத்திற்கு பயப்பட வேண்டியது இல்லை. நான் சொன்ன 50 லட்சம் எஃப்டி மூலம் செய்ய முடியாமல், மொத்த 50 லட்சத்தையுமே கொட்ட வேண்டி வரும். ஆனால் வெற்றி நிச்சயம்.

ஆல் தி பெஸ்ட் ப்ரோ.

நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால்
வலைத்தளம் ஆரம்பிக்கும் எண்ணமே வராது போல
[+] 1 user Likes Chellapandiapple's post
Like Reply


Messages In This Thread
RE: ஆலோசனை கேட்கிறேன் . - by Chellapandiapple - 23-08-2023, 09:26 PM



Users browsing this thread: 1 Guest(s)