22-08-2023, 08:47 PM
(This post was last modified: 05-11-2024, 11:50 AM by Geneliarasigan. Edited 6 times in total. Edited 6 times in total.)
Update - 28
F3 போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் அருள் வேகமாக உள்ளே நுழைந்தார்.அங்கு ஜட்டியோடு உட்கார வைக்க பட்டு இருந்த ராஜாவை பார்க்க,
டேய் ராஜா,என்னடா இது இப்படி வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கே,
யோவ் ஏட்டு,யாருய்யா இது இவனை இப்படி உட்கார வைத்தது?
ஐயா நம்ம சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு தான் விபச்சார வழக்கில் இவனை கைது பண்ணி கொண்டு வந்தாங்க,
யோவ் முதலில் இவனுக்கு ட்ரெஸ் கொடுங்க, எங்கேய்யா அந்த அன்பரசு?
ஏட்டு அதற்கு,"சார் அவர் வழக்கம் போல வெளியே... என்று ராகம் இழுக்க
என்ன மாமுல் வாங்க போய் இருக்கானா?
ஆமா சார்,
டேய் ராஜா எந்திரிச்சு ட்ரெஸ் போடு முதலில்,யோவ் அந்தாளு வந்த உடனே என் ரூமுக்கு வர சொல்லு.
சரிங்க சார்.
இன்ஸ்பெக்டர் அவர் அறையில் அவனை உட்கார வைத்து,..
ஏண்டா இந்த மாதிரி நடந்து விட்டது என்று எனக்கு ஒரு ஃபோன் பண்ண கூடாதா?
இல்ல சார்,நான் பழைய கம்பனி விட்டு வந்து 4 வருஷம் ஆச்சு.அதுவும் திடீரென்று நடந்த இந்த சம்பவத்தில் அதிர்ச்சியாகி எதுவுமே ஞாபகம் வரல. போனும் வாங்கி வைச்சுட்டாங்க.
சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு உள்ளே நுழைய,ராஜா நாற்காலியில் அமர வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இன்ஸ்பெக்டர் அருள், அன்பரசை பார்த்து"எதுக்குயா ராஜாவை அரெஸ்ட் பண்ண,?"
சார் ,பலான தொழில் நடக்கும் ரோஹிணி இன்டர்நேஷனல் ஓட்டல் நான் ரெய்டு போகும் போது இவன் கையும் களவுமாகப் மாட்டினான்.
சரி மாட்டிய மத்த ஆளுங்க எங்கே?
சார் அது வந்து,
ஓ ,இவன் மட்டும் தான் அந்த நேரத்தில் அங்கு இருந்தானா?சரி விடு,இவன் கூட இருந்ததா சொல்ற அந்த பொம்பளை எங்கே,
சார் அது வழக்கமாக மாட்டும் செண்பகம் தான்.
நான் கேட்டது அந்த பொம்பளை எங்கே,?
சார்....அது வந்து
ஓ ...,ரெண்டு பேர் மாட்டினாங்க,இவன் மட்டும் இருக்கான்.ஆனா அந்த பொம்பளைய மட்டும் வெளியில் விட்டுட்ட.
சார்....
என்னயா மென்னு முழுங்கற,முதலில் இவன் யாரு தெரியுமா?இவன் சிறந்த குடிமகன் என்று ஜனாதிபதி கையால் அவார்ட் வாங்கி இருக்கான்.
நான் இப்போ இன்ஸ்பெக்டராக இருப்பதற்கும் இவன் தான் காரணம் தெரியுமா?
எப்படி சார்?
நம்ம கமிஷனர் அலுவலகத்தில் போலீஸுக்கு தேவையான குரூப் சிம்கார்டு ....இவன் வேலை செய்த பழைய கம்பனி மூலமா ரெகுலரா இவன் தான் கொடுப்பான்.அப்போ தான் இவனுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.ஒருநாள் இவனிடம் எவனோ ஒருவன் வந்து பொய்யான proof கொடுத்து நிறைய சிம் கார்டு வாங்கி இருக்கான்.அது பொய்யான proof என்று இவன் கண்டுபிடித்து தன் உயிரையே பணயம் வைத்து ரகசியமாக அவனை ஃபாலோ பண்ணியதில் அது தீவிரவாதிகளுக்காக பயன்படுத்துவதை கண்டுபிடித்து எனக்கு தகவல் சொன்னதால் தான் அவர்களை நாங்கள் எளிதாக வளைத்து பிடிக்க முடிந்தது.அதனால் தான் எனக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கிடைத்தது.அவனுக்கும் இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது கிடைத்தது.
சார் ஆனா எந்த நியூஸ் பேப்பர், டிவியில் எதிலும் இவன் முகம் வரவே இல்லயே
யோவ் நீயெல்லாம் எப்படி சப் இன்ஸ்பெக்டர் ஆன?இவன் தான் தீவிரவாதிகளை பிடித்து கொடுத்தான் என்று தெரிந்தால் அடுத்த நாள் இவன் உயிரோடு இருக்க முடியுமா?இவன் சாதாரண மனுஷன்யா,தினமும் அன்றாட வாழ்க்கையை வாழ வேண்டாமா?.அதனால் தான் இவனோட போட்டோ வெளியில் போட கூடாது என்று கமிஷனர் தெளிவா சொல்லிட்டார்.இவன் இப்போ நினைச்சா கூட கமிஷனர் கிட்ட நேரடியாக பேச முடியும்.
என்ன ராஜா,இவர் மேல complaint கொடுக்கறீயா.நான் ஆக்சன் எடுக்கிறேன்.
இல்லை வேண்டாம் சார்.நான் கிளம்பறேன்.
சரி, நான் வந்து ட்ராப் பன்றேன்ப்பா
அப்பொழுது ராஜேஷ் மற்றும் நண்பர்கள் விசயம் அறிந்து வந்து சேர்ந்தனர்.
சார் என்னோட ப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்க,நான் கொஞ்சம் உடனே போகனும்.
அன்பரசு வெளியே வந்து"சாரிப்பா என்னோட ரிலேஷன் ஒருத்தன் சொல்லி தான் இந்த மாதிரி எல்லாமே பண்ண வேண்டியதாகி விட்டது"
உங்களை சொல்லி குற்றமில்லை சார்,என் ராசி அப்படி..!நான் பிறந்ததில் இருந்தே ஆசைப்பட்டது எதுவுமே கிடைச்சது இல்ல,நான் ஆசைப்படற பொண்ணு மட்டும் எனக்கு எளிதாக கிடைத்து விடுமா என்ன?
தம்பி நான் வேணா வந்து அந்த பொண்ணு கிட்ட பேசட்டுமா?
வேண்டாம் சார்,நான் பார்த்துக்கிறேன்.
ராஜேஷ் வண்டியில் ராஜா கிளம்ப,சஞ்சனா வந்த ஆட்டோ அடுத்த இரண்டு நிமிடங்களில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வந்து நின்றது.
சஞ்சனா உள்ளே ஓடி வந்து இன்ஸ்பெக்டரிடம்,"சார் இங்கே ராஜா என்பவரை அரெஸ்ட் பண்ணி கொண்டு வந்தாங்க,நான் அவரை பார்க்க முடியுமா?"
நீ யாரும்மா?
நான் அவரை கல்யாணம் பண்ணிக்க போறவ சார்,
அப்படியா உட்காரும்மா
சார் அவரை நான் உடனே பார்க்கணும்.அவன் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டான்.பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
அது எப்படிம்மா அவ்வளவு உறுதியாக சொல்ற,
சார்,அவன் உண்மையில் தப்பு செய்பவனாக இருந்தால் என்னையும்,என் அப்பாவையும் அவன் அங்கே வர சொல்லி இருக்க மாட்டான். நீங்க எதுக்காக அரெஸ்ட் அவனை பண்ணிங்களோ,அதே தொழிலில் இருந்த பெண்ணை மீட்டு அவளுக்கு மறுவாழ்க்கை தந்தவன் சார் அவன்.
ஓ,உனக்கும் அந்த விசயம் தெரியுமா?
நான் ஒரு மாதம் அவன் கூட நெருங்கி பழகி இருக்கேன் சார்.எந்த பெண்ணிடமும் கண்ணை பார்த்து தான் பேசுவான் சார்.என்னிடம் மட்டும் தான் இப்போ அவன் உரிமை எடுத்து கொள்கிறான்.அதுவும் என் அனுமதியோடு.
Good.ஆனா ஒரு பொண்ணு தனியா போலீஸ் ஸ்டேஷன் வருவது எல்லாம் தைரியம் வேணும்.
தைரியம் இல்ல சார்,அவன் மேல் இருக்கும் காதல்.அவனுக்காக என்ன வேணும் என்றால் செய்வேன்.இன்னொரு விசயம் சார்,வேறு எந்த பெண்ணும் கொடுக்காத சுகத்தை அவன் எப்ப விரும்பினாலும் நான் தருவேனே தவிர, அவன் என்னை விட்டு வேறு பெண்ணை தேடி செல்லும் நிலையை உருவாக்கவே மாட்டேன்.
என்னை நீ ரொம்ப ஆச்சரியப்படுத்திட்ட,உன் பேரு என்னவென்று நான் கேட்கவே இல்ல,
என் பேரு சஞ்சனா சார்,
அவன் நல்ல மனசுக்கு ஏத்த ஜோடி நீ தான்.உங்க கல்யாணத்திற்கு என்னை கூப்பிடுங்க.அவன் எந்த தப்பும் செய்யல.அவனை வீட்டுக்கு அனுப்பி ஆச்சு.
ரொம்ப தேங்க்ஸ் சார்
சஞ்சனா ராஜா வீட்டுக்கு விரைய,ராஜாவோ சஞ்சனா வீட்டுக்கு ராஜேஷின் பைக்கில் சென்று கொண்டு இருந்தான்.
சஞ்சனா வீட்டு காலிங்பெல்லை ராஜா அழுத்த சஞ்சனாவின் அப்பா வந்து திறந்தார்.அவனை வெளியேவே நிற்க வைக்க
மாமா,ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட பேசணும்.
மாமா கீமா என்று கூப்பிட்ட அவ்வளவு தான்டா உன் பல்லை பேத்துருவேன்.அதுக்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பி வந்துட்டியா.சரியான கிரிமினல் தான்டா நீ
சார் ,நான் தப்பித்து எல்லாம் வரல.நான் எந்த தப்பும் செய்யல என்று தான் என்னை வெளியில் விட்டாங்க..
அது எப்படிடா ,ரெண்டே மணி நேரத்தில் நீ எந்த தப்பும் செய்யவில்லை என்று போலீஸ் கண்டுபிடித்து உன்னை விட்டு விட்டார்களா..!!.எவனாவது காதில் பூ சுற்றி இருப்பான்.அவன் கிட்ட போய் உன் கதையை விடு.
ராஜா வெறுப்படைந்து "சார்,நீங்க சஞ்சனாவை கூப்பிடுங்க,நான் அவகிட்ட பேசிக்கிறேன்."
டேய் அவ என் பொண்ணு,எனக்கு இல்லாத உரிமை உனக்கென்னடா அவமேலே. அவ உன் முகத்தில் கூட விழிக்க விருப்பபடல,இந்த இடத்தை விட்டு உடனே நீ காலி பண்றீயா,இல்லை நான் போலீஸை கூப்பிடட்டுமா?
"சார் ,நானே இப்போ போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தான் வரேன்.நீங்க யாருக்கு வேணா ஃபோன் பண்ணுங்க,சஞ்சனா வெளியே வா சஞ்சனா" என்று கத்தினான்.ஆனால் அவள் உள்ளே இருந்தா தானே வெளியில் வர,
"டேய் நான் தான் சொல்றேன் இல்ல,அவ உள்ள தான் இருக்கா ஆனா உன்னை பார்க்க கொஞ்சம் கூட விருப்பபடல .இன்னொரு முக்கியமான விசயம் இன்னொரு தடவை அவளை பார்க்க வருகிற வேலை எதுவும் வச்சிக்காத,ஏன்னா அவளுக்கு இன்று ஒப்பு தாம்பூலம் நடந்து விட்டது.மாப்பிள்ளை யார் தெரியுமா?அவளோட மேனேஜர் பிரியா தம்பி அர்ஜுன் தான்.நீ ஏதாவது தகராறு பண்ணா அவ மேனேஜர் கிட்ட சொல்லி உன்னை வேலையை விட்டே தூக்கிடுவேன்.அப்புறம் சோற்றுக்கு பிச்சை தான் எடுக்கணும்.
ராஜேஷ் கோபப்பட்டு,"யோவ் நிப்பாட்டுயா,போனால் போகுது என்று பார்த்தால் ரொம்ப ஓவரா தான் துள்ளுற.இந்த வேலை போனால் எங்களுக்கு என்ன வேற வேலை கிடைக்காதா?.நாங்கள் எல்லாம் உழைக்கிற வர்க்கம்,எங்க போனாலும் எங்களுக்கு வேலை உண்டு.உன் பொண்ணு தான் முதலில் இவன் தான் வேணும்னு சுற்றி சுற்றி வந்துச்சு.இவன் விலகி விலகி தான் போனான் தெரிஞ்சுக்க.
என் பொண்ணு இவன் நல்லவன் என்று ஏமாந்து சுற்றி சுற்றி வந்தா,இப்போ பொறுக்கி என்று தெரிஞ்ச பிறகு வேண்டாம் என்று ஒதுக்கிறா.உன் நண்பன் யோக்கியவனா இருந்தால் என் பொண்ணு கிட்ட கூட நெருங்க கூடாது என்று நீ சொல்லு..
"யோவ் இன்னொரு தடவை என் நண்பனை பொறுக்கி என்று சொன்னே வயசானவர் என்று கூட பார்க்க மாட்டேன்.அப்புறம் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டி விடுவேன்.ஏய் சஞ்சனா உங்க அப்பா பேசறத கேட்டுட்டு உள்ளே உட்கார்ந்துக்கிட்டு என்னடி பண்ற.யோவ் கிழவா நீ இப்போ உயிரோடு இருப்பதற்கு காரணமே இவன் தான் ,"என்று கூற வந்தவனை ராஜா தடுத்தான்.
"வேண்டாம் ராஜேஷ் நாம போய்டலாம்".
ராஜா சஞ்சனா அப்பாவிடம்"தப்பு செய்ஞ்சவனுக்கு கூட தன் தரப்பு நியாயத்தை சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும்.ஆனா நான் தப்பே செய்யாதவன் சார்.இனிமேல் உங்க பொண்ணு கண் முன்னாடி நான் வர மாட்டேன்.உங்களுக்கு என்னை வேலையை விட்டு தூக்க வேண்டிய அவசியமே இருக்காது.நானே பேப்பர் போட்டு போய்டறேன். "
ராஜா திரும்பி திரும்பி பார்த்து கொண்டு கண்ணில் கண்ணீரோடு வெளியேற,"ராஜேஷ் நான் போய்ட்டு வரேன்டா"
இருடா நான் உன்னை வீட்டில் ட்ராப் பண்றேன்.
இல்ல மச்சான் என் வண்டி ரோஹிணி ஓட்டல் கிட்ட நிக்குது.நான் அதை எடுத்துகிட்டு அப்படியே ஊருக்கு போறேன்.
டேய் அப்போ நீ நாளை வேலைக்கு வரலயா?
"இல்ல ராஜேஷ்,இதற்கு மேல் நான் இந்த வேலைக்கு வர மாட்டேன்.சென்னையை விட்டே போக போகிறேன்."
டேய் இவளுக்கு பயந்துகிட்டு நீ ஏண்டா வேலையை விட்டு போற,?
இல்ல ராஜேஷ்,சுஜிதாவாது நேரில் வந்து குறைந்தபட்சம் தன்னோட காதலை முறித்து விட்டு போனாள்.ஆனா இவ என் கண் முன்னாடி கூட வரல.அந்த அளவுக்கு இவகிட்ட நான் கெட்ட பேரை சம்பாதித்து இருக்கேன்.அதுவும் இவளை ரொம்பவே நேசித்து விட்டேன்.இங்கே இருந்தால் அவ ஞாபகமாகவே இருந்து நான் ஏதாவது என்னை பண்ணிக்கிடுவேன்.
ராஜேஷ் பதறி"டேய் வேண்டாம்டா"
"புரிஞ்சிக்க ராஜேஷ்,என் அம்மா மற்றும் தங்கைக்காக நான் உயிரோடு இருப்பது அவசியம்.இங்கே இருந்தால் என்னை தப்பான முடிவு எடுக்க வழி வகுக்கும்".அவன் மேலும் சில விசயங்களை கூற கூற ராஜேஷ் அதிர்ச்சியாகி நின்றான்.நான் கிளம்பறேன்டா
ராஜேஷ் ,ராஜா கூறுவதை கேட்டு தடுக்க முடியாமல் திகைத்து நின்றான்.தன் உயிர் நண்பன் போவதை பார்த்து அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.
ஆனால் சஞ்சனாவோ ராஜாவுக்காக அவன் ரூம் வாசலில் காத்து கொண்டு திரும்ப திரும்ப அவனுக்கு ஃபோன் அடிக்க அது ஸ்விட்ச் ஆப் சுவிட்ச் ஆப் என்றே வந்தது.