Episode -24
Park sheraton ஓட்டலில் அனைத்து விற்பனை பிரதிநிதிகளும் குழுமியிருந்தனர்.உயர் பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் அங்கே இருந்ததால் எந்த ஒரு சிறு தவறும் நடந்தாலும் உடனே அவர்களுக்கு தெரிந்து நடவடிக்கை எடுப்பார்கள் என எல்லோரும் எல்லாவற்றையும் அடக்கி கொண்டு இருந்தனர்.அதுவும் இந்த மாதிரி ஒரு நாள் தான் அனைவரும் ஃபைவ் ஸ்டார் ஓட்டல் உணவையே பார்த்து சாப்பிட முடியும் என்பதால் முகத்தில் ஒருவித இறுக்கத்துடனும்,உள்ளே மகிழ்ச்சியுடனும் அமர்ந்து இருந்தனர்.
தலைமை அதிகாரி நாராயணன் புது பிளானை அறிமுகப்படுத்தியது மட்டும் இல்லாமல் ஒரு புது அனுகுண்டையும் சேர்த்து தூக்கி போட்டார்.எல்லோருடைய மாத TARGET இல் 10 ஆர்டர் இன்னும் அதிகமாக எடுத்தால் தான் INCENTIVE கிடைக்கும் என்று கூற,யார் முகத்திலும் ஈயாடவில்லை.
ராஜேஷ் வாசுவிடம்"டேய் வாசு,பழைய TARGET முடிப்பதற்கே இங்கு நாக்கு நுரை தள்ளி ரெண்டு மாசத்துக்கு ஒருமுறையோ இல்லை மூணு மாசத்துக்கு ஒரு முறையோ தான் incentive வாங்கறோம்.இப்போ என்னடா பண்றது?
அதெல்லாம் incentive வாங்கறவன் கவலைப்படனும் மச்சான். நமக்கேதுக்கு அந்த கவலை? அதோ பக்கத்தில் இருக்கானே ராஜா, அது அவன் கவலை பட வேண்டியது. ராஜேஷ் மட்டன் பிரியாணி வாசனை கமகமவென்று வருது.பசி வேற வயிற்றை கிள்ளுது.side dish வேற என்னென்ன இருக்கு என்றே தெரியல.சீக்கிரம் மீட்டிங் முடிந்தால் நல்லா இருக்கும்.போய் ஒரு கட்டு கட்டலாம்.
Buffey முறையில் தான் சென்று அனைவரும் சென்று வேண்டியதை எடுத்து சாப்பிட வேண்டும்.விதவிதமான உணவுகள் அடுக்கி வைக்க பட்டு இருந்தது.எங்கேயும் போல இங்கேயும் லேடீஸ் ஃபர்ஸ்ட்.அதனால் சஞ்சனா முதலில் சென்று தன் காதலனுக்கு சேர்த்து வாங்கினாள்.ராஜா வரிசையில் நின்று கொண்டு இருக்க,சஞ்சனா இரண்டு தட்டுக்களோடு வந்து முன் நின்றாள்.
என்ன சஞ்சனா இப்ப என்ன அவசரம்,நானே பொறுமையா வாங்கி சாப்பிடுவேனே.
"பரவாயில்லை வா,உனக்கு non veg எனக்கு veg ஓகே வா,"
ராஜாவுக்கு தன் நண்பர்களை விட்டு பிரிய தர்ம சங்கடமாய் இருந்தது.
"சரி போடா,நாங்களும் 5 நிமிஷத்தில் வாங்கி வந்துடறோம்"ராஜேஷ் கூற
ராஜாவும்,சஞ்சனாவும் தனியாக ஒதுங்கினர்.
"ஏன் சஞ்சனா உனக்கு தான் non veg பிடிக்காதே, எதுக்கு எனக்காக வாங்கின"
எனக்கு பிடிக்காது தான்,ஆனா உனக்கு பிடிக்குமே..!இன்னும் சொல்ல போனால் உனக்காக கொஞ்ச கொஞ்சமாக non veg செய்ய கற்று கொள்கிறேன்.
ஏய் லூசு,.உனக்கு பிடிக்காத எதையும் கஷ்டப்படுத்தி கொண்டு செய்ய வேண்டாம்.நீ என்ன செய்தாலும் நான் சாப்பிட தயார்.அப்படி நான் அசைவம் தான் சாப்பிட ஆசை வந்தால் நான் வெளியே போய் சாப்பிட்டு கொள்கிறேன் போதுமா?
"சரி"என்று சஞ்சனா சந்தோஷத்துடன் தலையாட்டினாள்.
சஞ்சனா தன் உணவை எடுத்து "இதோட டேஸ்ட் எப்படி இருக்கு பார்" என அவனுக்கு ஸ்பூனில் ஊட்ட,அதற்கு அவனோ "உதடும் விரலும் இருக்க,ஸ்பூன் எதற்கு"கேட்டான்.
"சரி"என அவளும் சிரித்து கொண்டே தன் உணவை எடுத்து அவள் தளிர் கரங்களால் அவனுக்கு ஊட்டவும், அதை ஜார்ஜ் எதேச்சையாக பார்க்கவும், அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அப்பொழுது ராஜேஷூம்,வாசுவும் அங்கே வர,"டேய் உங்க ரொமான்ஸை வேறு இடத்தில் வைச்சுக்க கூடாதா?
சஞ்சனா அதற்கு ,"ஏன்?நாங்க மறைவா தான் உட்கார்ந்து இருக்கோம்.யார் பார்த்தாலும் எனக்கு கவலை இல்லை."
ராஜா உடனே "இல்ல சஞ்சனா,அவன் சொல்றதும் சரி தான்.நாம ரெண்டு பேர் வெளியே போகும் போது தனியா உட்கார்ந்து சாப்பிட்டா எந்த பிரச்சினை கிடையாது .ஆனா இங்கே கம்பனி பார்ட்டி என்று வரும் பொழுது தனி தனியாக தான் இருக்க வேண்டும்.என்ன தான் நாம் காதலர்களாக இருந்தால் கூட இடம்,பொருள் பார்த்து தான் பழக வேண்டும்.
அப்பொழுது வாசு,டேய் ராஜா என்னடா உன் தட்டில் மட்டும் பீசு இத்தனை இருக்கு என்று அவன் தட்டில் கை வைக்க சஞ்சனா அவன் தலையில் குட்டி விட்டு,"அவன் தட்டில் கை வைத்தால் மகனே இன்னிக்கு வீடு போய் சேர முடியாது" என மிரட்டி விட்டு சென்றாள்.
ராஜா சாப்பிட்டு விட்டு கை கழுவ செல்வதை பார்த்து, ஜார்ஜ்ஜும் பின்னாடியே சென்றான்.
ராஜா கை கழுவும் போது,ஜார்ஜ் ராஜா காதில் விழும்படி தன் நண்பனிடம் வேண்டுமென்றே பேச்சு கொடுத்தான்.
"ஏண்டா பாலாஜி இந்த சேல்ஸ் பசங்களே ஏன் இப்படி இருக்காங்க,நாம சப்பி போடுகிற எச்சை ஆர்டரை தான் எடுக்கிறாங்க என்று பார்த்தால் நாம அனுபவித்து தூக்கி எறியும் பொண்ணுங்களை கூட விட மாட்டாறாங்க .அதுவும் என் பிறந்த நாள் அன்னிக்கு அந்த சஞ்சனாவை என் ரூமில் வைச்சு மேட்டர் போட்டேன் பாரு, செம பீசுடா அவ"என்று அவன் கூறும் போதே அவன் கன்னத்தில் பலமான குத்து விழுந்தது.அதில் நிலை தடுமாறி அவன் கீழே விழ,பாலாஜி ராஜாவை தாக்க தொடங்கினான்.பாலாஜி இருப்பதோ ஒல்லி.அடிக்க வந்த பாலாஜியை அலேக்காக தலை மேல் தூக்கி ராஜா வெளியே வீசி எறிந்தான்.அடுத்து ஜார்ஜ் எழுந்து ராஜாவை அடிக்க வர,இருவருக்கும் துவந்த யுத்தம் ஆரம்பமாகியது.என்ன தான் ஜிம்க்கு போய் ஜார்ஜ் உடம்பை பார்த்து பார்த்து வலுவாக்கி வைத்து இருந்தாலும் ராஜாவின் இயற்கையாக உருவாகி இருந்த வலிமைக்கு முன் ஈடு கொடுக்கவே முடியவில்லை.சரமாரியாக ராஜாவிடம் ஜார்ஜ் அடி வாங்கி கொண்டு இருந்தான்.அதுவும் ராஜாவின் வேகம் அசாதாரணமாக இருந்தது.ஜார்ஜ் அடிக்க கை ஓங்கும் முன்,ராஜாவின் கை வேகமாக செயல்பட்டு ஜார்ஜை தாக்கி நிலை குலைய வைத்தது.மின்னல் போல் ராஜா தொடுத்த தாக்குதலில் ஜார்ஜ் முற்றிலும் நிலை குலைந்து கீழே விழுந்தான். இருந்தும் ஆத்திரம் அடங்காமல் மாறி மாறி அவன் மார்பில் ராஜா எட்டி எட்டி உதைத்தான். இவர்கள் இருவர் சண்டையிடுவதை பார்த்து இவர்கள் நண்பர்கள் ஓடி வந்து பிடித்து கொண்டனர்.ராஜா அவர்களையும் மீறி காளை போல் துள்ளி ஜார்ஜ்ஜை கோபத்துடன் எட்டி எட்டி உதைத்தான்.
ஜார்ஜ் முகத்தில் அடி வாங்கி இரத்தத்துடன் தலைமுடி களைந்து பரிதாபமாக இருக்க,பக்கத்து தனி அறையில் சாப்பிட்டு கொண்டு higher official அனைவரும் இங்கு நடக்கும் கலாட்டாவை அறிந்து ஓடி வந்தனர்.
நாராயண் ,அவர்கள் இருவரை பார்த்து"whats happening here,ஒரு MNC கம்பனியில் வேலை பார்த்திட்டு ரெண்டு பேரும் தெரு பொறுக்கிங்க மாறி சண்டை போட்டுட்டு இருக்கீங்க.ராஜா you are in next level.i didn't expect this from you.both will get severely punished.i will take a action,come to my cabin tomorrow in lunch time.both of you get out immediately from this place" என்று கத்தினார்.
சஞ்சனா தகவல் அறிந்து ராஜாவிடம் ஓடி வந்தாள்.
"ஏண்டா இப்படி பண்ணே.நீ இப்ப தான் steps அட்டென்ட் பண்ணி இருக்கே.நீ அடுத்த லெவலுக்கு போகும் நேரம் இப்படி பண்ணலாமா?" சஞ்சனா கேட்க ராஜா மௌனமாக தலைகுனிந்து இருந்தான்.
இப்ப வாயை திறக்க போறீயா, இல்லையாடா என்று அவள் மாறி மாறி அவன் கன்னத்தில் அறைந்தாள்.
ராஜா சஞ்சனாவின் கையை இழுத்து கொண்டு தனியாக சென்றான்.
இப்போ எங்கடா என்னை கூட்டிட்டு போற?
ராஜா ஒரு தனிமையான இடத்திற்கு அவளை கூட்டி சென்று முன்னும் பின்னும் யாரும் இல்லை என உறுதி செய்து கொண்டு,"உனக்கு தெரியாது சஞ்சனா .ஜார்ஜ் உன்னை பற்றி என்ன பேசினான் தெரியுமா?அது நாலு பேர் முன்னாடி சொல்ல கூடிய விசயம் இல்லை.அதனால் தான் உன்னை தனியே கூட்டிட்டு வந்தேன்.".
என்ன சொன்னான் அவன்?
அவன் அனுபவித்து தூக்கி எறிந்த எச்சில் இலை நீ என்று சொன்னான்.என் சுந்தர நிலவை தப்பா பேசும் போது அதை கேட்டு எப்படி என்னால் தாங்கி கொள்ள முடியும்?
அதை நீ நம்பறீயா?
"ச்சீ,நான் எப்படிடி இதை போய் நம்புவேன்,என் உயிரின் பெண் வடிவம் நீ,உன் உயிரின் ஆண் வடிவம் நான் அல்லவா கண்மணி.உன்னை பற்றி தப்பா பேசிய வாயை உடைச்சி உன் காலில் விழுந்து அவனை மன்னிப்பு கேட்க வைத்தால் தான் என் ஆத்திரம் தீரும் சஞ்சனா"
சும்மா கோபப்பட்டு அறிவிழக்க வேண்டாம் ராஜா,அவன் சரியா பிளான் போட்டு எல்லா பெரிய ஆளுங்க ஒண்ணா இருக்கும் போது உன் கோபத்தை தூண்டி, சண்டை போட வைத்து உன் வேலைக்கு உலை வைச்சு இருக்கான்.நீயும் அவன் விரிச்சு வைச்ச வலையில் போய் வகையாக விழுந்துட்ட...
அதுக்கு உன்னை பற்றி தப்பா பேசும் போது சும்மா இருக்க சொல்றியா,உன்னை விட இந்த வேலை எனக்கும் ஒன்னும் பெரிசு இல்ல.ராஜா எகிறினான்.
"அப்படி அவசரப்பட்டு எதையும் முடிவு எடுக்க வேண்டாம்டா , நீ என்னை நம்பற, எனக்கு அது போதும்,அந்த எச்சை என்னை பற்றி என்ன வேணாலும் பேசிக்கட்டும்.எனக்கு கவலை இல்ல ,எனக்கு நீ அடுத்த நிலைக்கு போகனும் அது தான் எனக்கு முக்கியம்.முதலில் பொறுமையா இருக்க கத்துக்க,அவசரப்பட்டு ஒன்னும் ஆக போறதில்ல.அதுக்குன்னு அவனை சும்மாவும் விட கூடாது.சமயம் பார்த்து தான் பழி வாங்க வேண்டும்.அவனுக்கு நாம திருப்பி அடிக்கும் பொழுது அவனுக்கு மட்டும் தான் பாதிப்பு இருக்கணும்.நமக்கு எந்த பாதிப்பும் வர கூடாது.அதுக்கு பொறுமையா மறைந்து இருந்து தான் அடிக்கணும்.
"எனக்கு எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக தான் மோதி பழக்கம் சஞ்சனா.மறுபடியும் சொல்றேன் இந்த வேலை எனக்கு முக்கியம் இல்ல,நீதான் எனக்கு முக்கியம்."
"சரி விடு,இந்த பிரச்சினையில் இருந்து உன்னை எப்படி வெளிக்கொண்டு வருவது என்று எனக்கு தெரியும். ஜார்ஜ் கிட்ட இருக்கும் ஒரு ஆடு ஒரு விசயத்தில் என்னிடம் சிக்கி இருக்கு,அதை நான் மிரட்டுற மிரட்டுல நாளைக்கு நடக்க போகும் வேடிக்கையை மட்டும் பாரு. இந்த சஞ்சனா உன் கூட இருக்கிற வரை,அவ்வளவு எளிதாக இந்த வேலையில் இருந்து உன்னை யாரும் எடுக்க விட மாட்டேன்."
ஜார்ஜ் பாலாஜியை சந்திக்கும் பொழுது
என்னடா ஜார்ஜ் இப்படி பண்ணிட்டே.இப்போ உன்னோட வேலைக்கே ஆபத்து வந்து விட்டதே? பாலாஜி கேட்டான்.
டேய் பாலாஜி,நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் எதிரிக்கு ஒரு கண்ணாவது போகனும்.எனக்கு வேலை போனாலும் பரவாயில்லை,ஆனா அவன் வார்னிங் லெட்டர் வாங்கி அடுத்த லெவலுக்கு போக கூடாது.நாளைக்கு கண்டிப்பா குறைந்தபட்சம் வார்னிங் லெட்டர்,இல்ல வேலையை விட்டு தூக்குவார்கள்.அப்புறம் அவனை இன்னொரு இடத்தில் சிக்க வைக்க ஏற்பாடு செய்து இருக்கேன்.அந்த ஏற்பாட்டில் இரண்டு பேரும் கண்டிப்பாக பிரிவது உறுதி..என கொக்கரித்தான்.
ராஜாவின் வேலையை சஞ்சனா காப்பாற்ற முடிந்ததா?இல்லை ஜார்ஜ்ஜினால் ராஜாவின் வேலை போனாதா?வெற்றி பெற்றது சஞ்சனாவா?இல்லை ஜார்ஜ்ஜா?

![[Image: FB-IMG-1691245506220.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieNRyno7czpUQd5pIvRHfAFUP7fWEWlcMvSvbW4wY1SIhP7IW6jiuhYP42yTMTVAkEP-gCUkbrS6CdLj5Pn2z0Pk_DPz0RMiFBEPYesRTdjtqfNxUM5wLSlb7MImxa75LoSrK3dX5PLnskQq3amY2YRSoGTa7IlsyPBsFHJz_OxkPAQLtnnDyEx6rkg4s/s320/FB-IMG-1691245506220.jpg)