18-08-2023, 04:45 PM
(15-08-2023, 08:12 AM)jzantony Wrote: வாசகர்களின் கருத்துப்படி கதை எழுதப் போகாதீர்கள். ஒருவர் அது மட்டும் வேண்டாம் என்பார். இன்னொருவரோ நீங்கள் நினைக்காததையும் சொல்லி அதை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பார். பின் எப்படி எழுதினாலும் யாரோ ஒருவருக்கு கோபம் வரும். அதன் பின் அவர் உங்கள் கதையை பழைய ஆர்வத்துடன் படித்தாலும் கமெண்ட் போட மாட்டார். இப்படி அவர்கள் சண்டையில் உங்களுக்கு ஆர்வம் போய் விடும். பின் ஆளை விட்டால் போதும் என்று இந்த தளத்தில் காணாமல் போய் விடுவீர்கள். மேலும் எல்லாரையும் திருப்திப்படுத்தப் போனால் இது வரை போனது போல் கதை இயல்பாகவும் வராது.
தயவு செய்து உங்கள் பாணியிலேயே தொடருங்கள். ஆதரவு இல்லாமல் போனால் நிறுத்திக் கொள்ளுங்கள். அது தான் கவுரவம்.
மிகத் தெளிவான அனுபவ அறிவுரை உங்களுடையது நண்பா. நான் ஏற்றுக் கொள்கிறேன்.
சித்தார்த்