Non-erotic பெண்கள் & வாசகர்கள் கவனத்திற்கு...(Alert)
#19
(18-08-2023, 09:32 AM)Thiru93x Wrote:
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. யாராலும் மறுக்க முடியாது. மாறி வரும் இந்த இயந்திர உலகத்தில் பொறுமை என்பதே இப்போது கிடையாது. 


அந்த காலத்தில் செக்ஸ் புத்தகங்கள் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. அதற்கான புத்தக கடை எது என்பதே பலருக்கு தெரியாது. அதற்க்கு பின் பிட்டு பட வீசிடி வந்தது. அதை வாங்க அவ்வளவு யோசித்து யாரும் இல்லாத நேரமாக கடைக்குள் போய் அதை கூச்சப்படாமல் கேட்டு வாங்க வேண்டும். வாங்கும் போது கடைக்காரன் ஏற இறங்க பார்ப்பான். வீட்டில் யாரும் இல்லாத போது கேசட் போட்டு பார்க்க முடியும். பார்க்கும் போது கரண்டு கட் ஆனால் இன்னும் படபடப்பு ஆகி விடும். வீட்டில்  மாட்டி விடுவோமே அசிங்கமாய் போய் விடுமே என்று பயம் இருக்கும் அன்று எந்த வேலையும் நடக்காது.

ஆனால் இப்போது அப்படி இல்லை. மொத்த உலகமும் போனில் அடங்கி விட்டது.

கதை படிப்பதில் 80% பேர்கள் 90ஸ் & அதற்கு முன் பிறந்தவர்கள் தான். இந்த காலத்தில் பாதிபேருக்கு தமிழ் எழுத்துக்கள் படிக்கவே தெரிவது இல்லை. 

என்னை பொறுத்தவரை, கதை எழுதுவதால் எழுத்தாளருக்கு பொருளாதார அடிப்படையில் எதுவும் கிடைப்பது இல்லை தான். ஆனால், கதை எழுதும் போது வருகிற கற்பனை திறன்,  மனநிறைவு, எழுதும் கதபாத்திரமாக தன்னை தானே நினைத்து பிடித்தபடி எழுதிக் கொள்ளுவது, மற்றும் தன் கதையின் கதாபாத்திரங்களை உண்மையான மனிதர்களாக நினைத்து அவர்களை படைப்பது என்று எக்கச்சக்கமான சின்ன சின்ன சந்தோஷம் உண்டு.

இவையே ஒரு நல்ல எழுத்தாளருக்கு மனநிறைவை தரும் என்று நம்புகிறேன். மத்தபடி கமெண்ட் லைக் கேட்பது எல்லாம் வாசகர்கள் பார்வையில் அந்த கதாபாத்திரங்கள் எழுத்தாளரின் கற்பனை படியே அமைகிறதா என்று உறுதி படுத்தி கொள்ள தான்.

நீங்கள் கூறுவது உண்மை தான் நண்பா

நிறைய லாகின் செய்த நண்பர்கள் கதையை படிக்க மட்டும் தான் தளத்திற்கு வருகை புரிந்து இருக்கிறார்கள்.அதற்கு அவர்கள் லாகின் செய்யாமல் அப்படியே கூட கதைகளை படித்து விட்டு சென்று விட முடியும்.

பல நண்பர்கள் நான் உட்பட பல பேர் ஒரு சில கதைகளுக்கு மட்டுமே விமர்சனம் செய்து விட்டு செல்கின்றனர்.

ஆனால் நான் ஒரு சில கதைகளுக்கு மட்டுமே விமர்சனம் செய்ய காரணம் நான் கதையை படிக்கும் போது அதில் எனக்கு பிடித்த கதாபாத்திரங்களை உள் வாங்கி கொண்டு படித்து வருகிறேன்.

அதற்கு கதாபாத்திரங்களுக்கு ஆதரவாக ஒரு சில வார்த்தைகள் அதிகமாக பதிவு செய்து விட்டால் ஒரு சில கதாசிரியர் நீங்கள் கதையை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி எழுத வேண்டும் என்று பதிவு செய்வது போல இருக்கிறது என்று நேரடியாக சுட்டி காட்டி விடுகின்றனர்.

(சுட்டி காட்டும் ஆசிரியர் தனிப்பட்ட மெசேஜ் அனுப்பி முடித்து விடலாம்.)

யாராக இருந்தாலும் ஒரு திரைப்படத்திற்கு செல்லும் போது ஒரு சிலர் கதாநாயகிக்காக படம் பார்க்க செல்வார்கள் ஒரு சிலர் கதாநாயகனுக்காக படம் பார்க்க செல்வார்கள்.ஒருசிலர் காமம் நடிகர்களை வைத்து படம் பார்க்க செல்வார்கள்

படம் பார்த்து விட்டு வந்ததும் கூட தங்களுக்கு பிடித்த பாத்திரத்தை பற்றி தான் பேசிக் கொள்கிறார்கள்.

ஆனால் இங்கே ஒரு சில ஆசிரியர்கள் அதற்கு கூட ஏதாவது சொல்லி விடுகிறார்கள் என்று நினைத்து கதை அருமை . சூப்பர் என்று எளிதாக விமர்சனம் எழுதி பதிவு செய்து விட்டு சென்று விடுகின்றனர்

அதற்கும் குட்டி விமர்சனங்கள் தான் வருகிறது அதற்கேற்ப குட்டி பதிவு தான் செய்ய முடியும் என்றும் கூட பல ஆசிரியர்கள் பதில் செய்கின்றனர்.
இதற்கு பயந்து கூட பல புதிய பயனர்கள் கருத்து செய்ய வேண்டாம் என்று ஒதுங்கி போய் விட வாய்ப்பு இருக்கிறது 

மொத்தத்தில் இப்படி இரண்டு பக்கங்களிலும் தவறுகள் இருக்கிறது.
Like Reply


Messages In This Thread
RE: பெண்கள் & வாசகர்கள் கவனத்திற்கு...(Alert) - by Babyhot - 18-08-2023, 11:01 AM



Users browsing this thread: 5 Guest(s)