15-08-2023, 05:10 PM
(15-08-2023, 02:53 PM)Chellapandiapple Wrote: என்னா தல இவ்வளவு கோவம்?
நீ உன் ஸ்டைல்ல எழுது தல
நாங்க படிக்க ஆர்வமாக இருக்கிறோம்
ஏதோ ஒரு கோவம்!!.
சில வாசகர்களுக்கு எழுத்தாளர்களின் நிலமை புரிகிறது.
சிலருக்கு புரிவதில்லை.
சிலர் ரேஸ் குதிரையை விரட்டுவது போல,...ம்ம்,...ஹரி அப்,... எங்கே அப்டேட்.... சீக்கிரம் சீக்கிரமாக எழுதுங்கள். புதிது புதிதாக எழுதுங்கள்,...ஏன் தாமதம்,.... என்று கேட்கிறார்கள். குதிரை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவ்வாறு விரட்டுகிறார்கள் என்பது புரிகிறது.
படுத்து விட்ட குதிரையை, பசிக்கு புல்லும், கொள்ளும் போடாமல், பட் என்று சுட்டுத் தள்ளி விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். எவ்வளவு மூச்சிரைக்க தன் எஜமானனுக்காக ஓடி இருக்கும், எவ்வளவு விரட்டப்பட்டிருக்கும், எவ்வலவு உழைத்திருக்கும், எவ்வளவு சம்பாதித்து கொடுத்திருக்கும், என்றெல்லாம் நினைத்துப் பார்க்க இங்கே யாருக்கும் நேரம் இல்லை. ஓடி ஓடி உழைத்த குதிரையையை குழி தோண்டி புதைத்து விட்டோம் என்ற கவலையும் இல்லை.
இந்த தளத்தில் எத்தனையோ எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் புதிது புதிதாக எழுதி தங்களை புதுப்பித்துக் கொள்ளாததால், சலனம் இல்லாமல் சமாதி ஆகிப் போனார்கள் என்பது இத் தளத்தில் வலம் வரும் எல்லோருக்குமே தெரியும்.