09-06-2019, 10:40 AM
டிகை நந்தினி 2-வது திருமணம்
![[Image: 201906080007256964_Actress-Nandinis-2nd-...SECVPF.gif]](https://img.dailythanthi.com/Articles/2019/Jun/201906080007256964_Actress-Nandinis-2nd-marriage_SECVPF.gif)
வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி ஜோடியாக நடித்தவர் நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். டி.வி. தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டி.வி. தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினி என்று இவரை அழைத்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை நந்தினி காதலித்து திருமணம் செய்துகொண்டார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்தனர். ஆனால் திருமணமாகி ஒரு வருடத்திலேயே கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
குடும்பத் தகராறில் மனம் உடைந்து உயிரை மாய்த்ததாக கூறப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள். நந்தினி கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவர் இறந்து சில மாதங்களுக்கு பிறகு நந்தினி மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் டி.வி. நடிகர் யோகேஷ் என்பவரை காதலிப்பதாக நந்தினி அறிவித்து உள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவரும் நண்பர்களாக பழகி வருவதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.