Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
அதுவரைக்கும் உனக்கு பரவாயில்லையாடா ?


நான் ஏதாவது செஞ்சி அவன்கிட்டேருந்து உன்னை காப்பாத்த முடியும் ஆனா இது வேற மாதிரி பிரச்னை ரேணு ... அவன் உன்னைவிட ரெண்டு வயசு கூட உங்க ஜாதி எல்லாமே சொந்தம் மாதிரி அப்போ அவன் அப்படியே காய் நகர்த்தி ஊருக்குள்ள உன்னை பத்தி தப்பா பேசி அப்புறம் உங்கப்பா அம்மா உன்னைய அவனுக்கே கட்டி வச்சிட்டா என்ன பண்ணுறது ? அதனால தான் நான் பொறுமையா இருக்கேன் ! என்னால உன்னை இழக்க முடியாது ரேணு !!



என்னாலையும் தான் வெங்கி அதனால தான் நானும் பொறுமையா இருக்கேன் ஆனா உன்னோட பொறுமைய பார்த்து எனக்கு ஆச்சர்யமா இருக்குடான்னு ரேணு என்னை கட்டிப்பிடிக்க மீண்டும் முத்த மழை !!



அதுசரி முதன்முதலா என்னை வெளில கூட்டி வரேன்னு இங்க கூட்டி வந்துருக்க சரி பரவாயில்லை ... எனக்கு என்ன வாங்கிட்டு வந்த எனக்கு பசிக்குதுடா ...


சாரி ரேணு உன்னை பார்க்க வந்த வேகத்துல அதை மறந்துட்டேன் !!


அடப்பாவி அவன் அதெல்லாம் பக்காவா பிளான் பண்ணி ரெண்டு five ஸ்டார் வாங்கிட்டு வரான் !! நான் வீட்ல போயி சாப்பிடுவேன்னு சொன்னா இன்னொன்ன எடுத்து நீட்டி இதை சாப்பிடுன்னு குடுத்து ப்பா போட்டு சப்பி எடுத்துட்டான் !!


ரேணு முதன்முதலாக இதை நேரில் சொல்ல எனக்குள் பொறாமை தீ பற்றி எரிந்தது !!


சரி சரி அதை ஏன் ஞாபகப்படுத்துற நீ உக்காரு போற வழில பாக்கலாம் !


ம்ம் போடா அட்லீஸ்ட் ஒரு இளநி ...


சாரி ரேணு ...


ம்ம் வண்டிய எடு உன்னை நம்பி வந்தேன் பாரு ...


இரு ரேணு அஞ்சி நிமிஷத்துல உன் தாக்கத்தை தணிக்கிறேன் !!



வண்டிய ஸ்டார்ட் பண்ண ஸ்டார்ட் ஆகல ...



ம்ம் முக்கு முக்குன்னு முக்குது ம்ஹூம் ஸ்டார்ட் ஆகல ...



என்னடா பெட்ரோல் இல்லையா ?



அதெல்லாம் இருக்கு ரேணு இப்போதான் போட்டேன் ..



ச்சோக் போட்டு ஸ்டார்ட் பண்ணேன் ம்ஹூம் ....



சரி உதைச்சி ஸ்டார்ட் பண்ணுவோம்னு உதைச்சேன் ....



நல்லவேளை ஸ்டார்ட் ஆகிடிச்சி ...



வண்டிய திருப்பி ரேணு ஏறி உக்கார உற்சாகமாக வண்டிய நகர்த்த ஸ்ஸ் ....



மீண்டும் ஆப் ஆகிவிட .... மீண்டும் உதைக்க எங்கப்பா பைக் வாங்கி தராத கோவம் எல்லாம் சேர்த்து அவரோட வண்டிய ஒரே உதை கிக்கர் தனியா புட்டுகிட்டு போயி விழுந்துச்சு ...


ஐயோ என்னடா இது ?


இரு ரேணு லிவர் உடைஞ்சிடுச்சி ...


செல்ப் எடுக்கவே இல்லை இப்போ உதைச்சி ஸ்டார்ட் பண்ணவும் வழி இல்லை !! என்ன செய்யிறது ??



டேய் ஏன்டா என் உயிரை வாங்குற ..


சாரி ரேணு நீ கொஞ்சம் தள்ளு வண்டி ஸ்டார்ட் ஆகிடும் !!


ம்க்கும் அது வேறையா ?


சரி உக்காரு தள்ளுறேன் ...


ரேணுவும் தள்ள ம்கூம் என்னத்த இடிச்சும் வண்டி ஸ்டார்ட் ஆகல ...


இப்ப என்ன பண்றது?


தள்ளிகிட்டே போலாம் ஆனா நாம வந்தது ஒரு ஐந்து கிலோமீட்டர் இருக்குமா ??



ம்ம் ...


சரி வேற எதுனா ஃபிரன்டுக்கு போன் பண்ணி வண்டி எடுத்துட்டு வர சொல்லுறேன் ...


ம்ம் போன் போட்டு தொல லூசு ..


தாங்ஸ் ரேணு ...


எதுக்கு ?


லூசுன்னு சொன்னதுக்கு ..


நீ உண்மையாலுமே லூசு தான் !! சீக்கிரம் கால் பண்ணு !!


நானும் என் நண்பன் வினோத்துக்கு கால் பண்ணேன் !!



அவன் போன் எடுத்து எங்க மச்சி என்கிட்ட ஏதுடா பைக்குன்னு கேக்க டேய் யாராச்சும் ஃபிரண்டு கிட்ட உதவி கேளுடா நான் ரொம்ப இக்கட்டுல இருக்கேன் !


சரி இருடா நான் பாக்குறேன்னு கட் பண்ண எனக்கென்னமோ அவன் மேல நம்பிக்கை இல்லை சரின்னு அடுத்து ராஜேஷுக்கு கால் பண்ண அவன் எடுக்கவே இல்லை அடுத்து பாபு அவனும் எங்கிட்ட எதுடா பைக்குன்னு கை விரிக்க எனக்கு என்ன பண்றதுன்னே புரியல ,



என்னடா ஆச்சு யாரு வரா ??



கடைக்கு போன் போட்டு மணி அண்ணனை கூப்பிடலாம் ரேணு ஆனா அவருக்கு தெரிஞ்சா வீட்டுக்கே தெரிஞ்ச மாதிரி ...


போச்சு போச்சு எல்லாம் என் தலை எழுத்து நான் நல்லா மாட்டினேன் !!


இவ்வளவு நேரம் நான் வரலைன்னா எங்கண்ணன் உடனே கதிருக்கு போன் பண்ணும் நான் அப்பவே பஸ் ஏத்தி விட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னா அவ்வளவு தான் கதை முடிஞ்சது இதுக்கு தான் நான் வேண்டாம்னு சொன்னேன் !


என்ன ரேணு நான் மட்டும் இப்படி நினைச்சேன்னா ?


ஒரு பொண்ண பார்க்க இப்படி ஒரு டப்பா வண்டிய தான் எடுத்துட்டு வருவியா ?


ரேணு இது ஒன்னும் டப்பா வண்டி இல்லை ...


ஆமா ஒரு உதை விட்டோன புட்டுக்கிட்டு போயி விழுது லூசு லூசு உன்னை நம்பி வந்தேன் பாரு நான் தான் லூசு ....


சரி இரு ரேணு நான் வண்டிய இங்கே விட்டுட்டு வரேன் நடந்தே போலாம் எதுனா ஆட்டோ வந்தா போயிடலாம் !



லூசு மெயின் ரோடு இன்னும் அஞ்சு கிலோமீட்டர் நடக்க ஆரம்பிச்சா ஒரு மணி நேரம் ஆகும் அதுக்குள்ள எங்க ஊரே கூடிடும் !!


கொஞ்சம் இரு ரேணுன்னு மீண்டும் வினோத்துக்கு கால் பண்ண ....


மச்சி வண்டி ஒன்னும் இல்லைடா எதுனா ஆட்டோ பிடிக்க முடியாதா ?


இல்லைடா ...


லிப்ட் கேட்டு வாடா ..


போடா லூசு வைடா போன ...


ரேணு நகத்தை கடித்தபடி கால்ல வெண்ணீரை ஊற்றியது போல துடிக்க ...


நான் வண்டிய எதுனா ரிப்பேர் பண்ண முடியுதான்னு பார்க்க ...


வெங்கி உன் போன குடு ...


ஏன் ரேணு ?


வேற வழி இல்லை சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது தான் பெட்டர் நான் கதிருக்கு போன் பண்ணுறேன் அவன் தான் உடனே வருவான் !!


கதிருக்கா ?
[+] 1 user Likes mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 13-08-2023, 08:26 PM



Users browsing this thread: 61 Guest(s)