13-08-2023, 03:51 PM
(This post was last modified: 13-08-2023, 04:08 PM by dreamsharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(09-08-2023, 01:44 PM)jzantony Wrote: நாம் ரசித்து படிக்கும் கதை பிடித்திருந்தால் படித்து முடித்தவுடனே ஒரு வார்த்தை கமெண்ட் போட்டு கதை எழுதுபவரை உற்சாகப்படுத்தத் தவறி விடுகிறோம். பிடித்த கதைக்கு ஒரு கமெண்ட் போட்டால் அது கவுரவக்குறைவு என்கிற மனப்பான்மை தான் காரணம். ஒழுங்காகத் தொடர்ச்சியாக எழுதும் எந்த ஆளும் ஒரு கட்டத்தில் ஆதரவின்மை காரணமாக சலித்துப் போய் எழுதுவதை நிறுத்தி விடுகிறான். பின் நாம் நாள் கணக்கில் காத்திருந்து விட்டு கதை தொடரக் காத்திருப்பதாக கமெண்ட் போட ஆரம்பிக்கிறோம். அந்த சமயத்தில் அந்த எழுத்தாளன் இந்த தளத்திற்கு வருவதையே கூட நிறுத்தி இருக்கலாம். மறுபடி கமெண்ட்ஸ் வர ஆரம்பிப்பது கூடத் தெரியாமலிருக்கலாம். இதில் இழப்பு நமக்குத் தான்.
கதை எழுதுபவருக்கு நாம் பணம் கொடுப்பதில்லை. எல்லாக் கதைகளுக்கும் கமெண்ட் போடவும் நான் சொல்லவில்லை. தொடர்ந்து படித்து ரசிக்கும் கதைக்கு, படித்து முடித்தவுடனேயே ஒரு கமெண்ட் போடும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொண்டால் நல்ல கதைகளைத் தொடர்ந்து படிக்க முடியும். காலம் கழிந்து கமெண்ட்ஸ் போட்டு பயனில்லை.
இது தான் இங்கே உள்ள ஒரு ஸ்பெஷாலிட்டி. இங்கே கதையை ஆரம்பிக்கிறேன் என்று அறிவிப்பு செய்து விட்டு சும்மா இருந்தாலே ஏழெட்டு கமெண்ட்ஸ் உடனடியாக வரும். ஆரம்பியுங்கள், வரவேற்கிறோம், சூப்பர் என்றெல்லாம் பலரும் சொல்வார்கள். அதே போல் எழுதுவதை நிறுத்தி விட்டு ஒருவன் போய் விட்டாலும் கமெண்ட்ஸ் போடுவார்கள். வெய்ட்டிங், அப்டேட் ப்ளீஸ், இன்று பதிவு உண்டா என்றெல்லாம் கமெண்ட்ஸ் வரும். ஆனால் ஒருவன் ஒழுங்காக தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தால் இரண்டு அல்லது மூன்று பேர் தவிர மற்றவர்கள் படித்துக் கொண்டே போவார்களே தவிர கண்டு கொள்ள மாட்டார்கள்.
இல்லா விட்டால் ஒருவருக்கொருவர் கமெண்ட்ஸ் போட்டுக் கொள்ளலாம் என்ற ஒப்பந்தமும் இங்கு இருக்கிறது. அவர் கதைக்கு நீங்கள் கமெண்ட் போட்டால் உங்கள் கதைக்கு அவர் கமெண்ட் போடுவார். மற்றபடி ஒரு கதையைப் படித்து, அது பிடித்து, பிடித்த கதைக்கு கமெண்ட் போட்டு பாராட்டுவது எல்லாம் பழங்கால பாணி. அது இங்கு மிக அபூர்வம். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி இரண்டு மூன்று பேர் விதிவிலக்காக இருக்கலாம்.
இந்த வித்தியாசமான சைக்காலஜியை இங்கு தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.