09-06-2019, 10:09 AM
தண்ணீர் வரவில்லை, தண்ணீர்ப் பிரச்னை, நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது, பருவமழை பொய்த்துவிட்டது என்று சமீபகாலமாகத் தண்ணீர்ப் பஞ்சம் குறித்து பலரும் பேசிவருகின்றனர். ஆனால், இனி வரும் காலங்களில் இதைத் தவிர்க்க என்னென்ன செய்யலாம் என்ற முயற்சியை யாரும் இதுவரை செய்ததில்லை. என்னென்ன செய்தால் தண்ணீர் பிரச்னையிலிருந்து வெளிவரலாம். மழையே இல்லையென்றாலும் 5 வருடங்களுக்கு தண்ணீர்ப் பஞ்சத்திலிருந்து எப்படித் தப்பிக்கலாம் என்ற ஆலோசனையைக் கூறுகிறார் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் செந்தூர் பாரி.
"சென்னையைப் பொறுத்தவரை போதுமான அளவு தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், அதை சரியாகப் பயன்படுத்தாமல் பலர் வீணாக்குகின்றனர். ஒரு மாதத்துக்கு சென்னைக்குத் தேவையான தண்ணீர் அளவு ஒன்றறை டி.எம்.சி., என்றால் வருடத்துக்கு 18 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி = ஆயிரம் மில்லியன் கன அடி.) தற்போது, சென்னையில் இருக்கும் ஏரிகளை முறையாகப் பராமரித்தால், வருடத்துக்கு 84 டி.எம்.சி அளவுக்குத் தண்ணீரைச் சேமிக்கலாம்.
பல்வேறு ஏரிகள், ஆக்கிரமிப்பு காரணமாகக் காணாமல் போய்விட்டன. அதை மீட்பது என்பது மிகவும் கடினமானதுதான். எனவே, தற்போது இருக்கும் ஏரிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். இதனால் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை, 5 வருடத்துக்கு மழை பெய்யாத காலங்களில்கூட பயன்படுத்தலாம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், சென்னைக்கு தண்ணீர்ப் பஞ்சம் வருவதற்கான வாய்ப்புகள் வராது. இதுவரை அரசாங்கத்தின் மூலமாக 20,000 கோடிக்கும் மேல் செலவு செய்திருப்பதாக ஒரு கணக்கு இருக்கிறது. இருந்தும் நீர்நிலைகள் முறையாகப் பராமரிப்பின்றி உள்ளன.
சின்னச் சின்ன நீர்நிலைகளை உருவாக்கலாம். மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைக் கட்டாயப்படுத்தி, முறையாகப் பயன்படுத்தலாம். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசாங்கத்தால் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே, அந்தந்த பகுதிகளில் இருக்கும் NGO-க்கள், தன்னார்வலர்கள் என்று அனைவரையும் இணைத்தால், பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டுவரலாம். ஒரு முயற்சியைக் கையில் எடுத்தால், ஒருநாள்... இரண்டு நாள்களில் விட்டுவிடுகின்றனர். தொடர்ந்து திட்டம் முடியும் வரை முயற்சி செய்ய வேண்டும்.
சென்னையைப் பொறுத்தவரை விவசாய நிலங்களே இல்லை. ஆனால், நீர் நிலைகள் இருக்கின்றன. அதை முறையாக சுத்தப்படுத்தி,
பாதுகாத்துவந்தால், தண்ணீர் பிரச்னைகளில் இருந்து வெளிவரலாம். தற்போது பலர், குழந்தைகளின் உயர்கல்வி, கார், வீடு வாங்குதற்கு என பல்வேறு நல்ல தேவைகளுக்காக நாம் சேமித்துவைத்திருக்கும் பணத்தை எல்லாம் தண்ணீருக்காக செலவழித்துவருகிறோம்.
ஓ.எம்.ஆரின் தண்ணீர் வணிகம் மட்டும் 1,000 கோடி என்கின்றனர். இலவசமாகக் கிடைக்கும் தண்ணீருக்காக அதிக அளவில் செலவுசெய்துவருகிறோம். சென்னைக்கு, வருடத்துக்கு 1350 மி.மீ மழைகிடைக்கிறது. அதேபோல, ராஜஸ்தானில் 580 மி.மீ தான் மழைப்பொழிவு. ஆனால், போதிய தண்ணீரை மக்களுக்கு கொடுத்துவருகின்றனர். ஆனால், தேவைக்கு அதிகமான மழை பெய்தாலும், சென்னையில்தான் தண்ணீர்ப் பிரச்னை. தற்போது நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. எனவே, கரைகளைப் பலப்படுத்துதல், ஏரி, குளங்களைத் தூர் வாரி அகலப்படுத்தல் என்று முறையான பணிகளை NGO-க்கள், தன்னார்வலர்களின் குழுக்களையும், அரசாங்கம் இணைத்துச் செய்துவந்தால், குறைந்தபட்சம் இனி வரும் காலங்களில் தண்ணீர்ப் பிரச்னையை கட்டுப்படுத்தலாம் என்கிறார் செந்தூர் பாரி.
நீர்நிலைகளைப் பாதுகாத்து ,நிலத்தடி நீரை உயர்த்த பல்வேறு தன்னார்வலர்களுடன் இணைந்து நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து, இனி வரும் காலங்களில் தண்ணீர்ப் பிரச்னை வராமல் இருக்க முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவோம்.
"சென்னையைப் பொறுத்தவரை போதுமான அளவு தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், அதை சரியாகப் பயன்படுத்தாமல் பலர் வீணாக்குகின்றனர். ஒரு மாதத்துக்கு சென்னைக்குத் தேவையான தண்ணீர் அளவு ஒன்றறை டி.எம்.சி., என்றால் வருடத்துக்கு 18 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி = ஆயிரம் மில்லியன் கன அடி.) தற்போது, சென்னையில் இருக்கும் ஏரிகளை முறையாகப் பராமரித்தால், வருடத்துக்கு 84 டி.எம்.சி அளவுக்குத் தண்ணீரைச் சேமிக்கலாம்.
![[Image: IMG-20160125-WA0003_12517.jpg]](https://image.vikatan.com/news/2019/06/08/images/IMG-20160125-WA0003_12517.jpg)
பல்வேறு ஏரிகள், ஆக்கிரமிப்பு காரணமாகக் காணாமல் போய்விட்டன. அதை மீட்பது என்பது மிகவும் கடினமானதுதான். எனவே, தற்போது இருக்கும் ஏரிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். இதனால் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை, 5 வருடத்துக்கு மழை பெய்யாத காலங்களில்கூட பயன்படுத்தலாம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், சென்னைக்கு தண்ணீர்ப் பஞ்சம் வருவதற்கான வாய்ப்புகள் வராது. இதுவரை அரசாங்கத்தின் மூலமாக 20,000 கோடிக்கும் மேல் செலவு செய்திருப்பதாக ஒரு கணக்கு இருக்கிறது. இருந்தும் நீர்நிலைகள் முறையாகப் பராமரிப்பின்றி உள்ளன.
சின்னச் சின்ன நீர்நிலைகளை உருவாக்கலாம். மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைக் கட்டாயப்படுத்தி, முறையாகப் பயன்படுத்தலாம். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசாங்கத்தால் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே, அந்தந்த பகுதிகளில் இருக்கும் NGO-க்கள், தன்னார்வலர்கள் என்று அனைவரையும் இணைத்தால், பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டுவரலாம். ஒரு முயற்சியைக் கையில் எடுத்தால், ஒருநாள்... இரண்டு நாள்களில் விட்டுவிடுகின்றனர். தொடர்ந்து திட்டம் முடியும் வரை முயற்சி செய்ய வேண்டும்.
![[Image: Periyeri-North3_12156.jpg]](https://image.vikatan.com/news/2019/06/08/images/Periyeri-North3_12156.jpg)
![[Image: 0ce113d0-c216-4321-af82-10b8ec7381cd_12318.jpg]](https://image.vikatan.com/news/2019/06/08/images/0ce113d0-c216-4321-af82-10b8ec7381cd_12318.jpg)