09-08-2023, 01:44 PM
(This post was last modified: 09-08-2023, 01:45 PM by jzantony. Edited 1 time in total. Edited 1 time in total.)
நாம் ரசித்து படிக்கும் கதை பிடித்திருந்தால் படித்து முடித்தவுடனே ஒரு வார்த்தை கமெண்ட் போட்டு கதை எழுதுபவரை உற்சாகப்படுத்தத் தவறி விடுகிறோம். பிடித்த கதைக்கு ஒரு கமெண்ட் போட்டால் அது கவுரவக்குறைவு என்கிற மனப்பான்மை தான் காரணம். ஒழுங்காகத் தொடர்ச்சியாக எழுதும் எந்த ஆளும் ஒரு கட்டத்தில் ஆதரவின்மை காரணமாக சலித்துப் போய் எழுதுவதை நிறுத்தி விடுகிறான். பின் நாம் நாள் கணக்கில் காத்திருந்து விட்டு கதை தொடரக் காத்திருப்பதாக கமெண்ட் போட ஆரம்பிக்கிறோம். அந்த சமயத்தில் அந்த எழுத்தாளன் இந்த தளத்திற்கு வருவதையே கூட நிறுத்தி இருக்கலாம். மறுபடி கமெண்ட்ஸ் வர ஆரம்பிப்பது கூடத் தெரியாமலிருக்கலாம். இதில் இழப்பு நமக்குத் தான்.
கதை எழுதுபவருக்கு நாம் பணம் கொடுப்பதில்லை. எல்லாக் கதைகளுக்கும் கமெண்ட் போடவும் நான் சொல்லவில்லை. தொடர்ந்து படித்து ரசிக்கும் கதைக்கு, படித்து முடித்தவுடனேயே ஒரு கமெண்ட் போடும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொண்டால் நல்ல கதைகளைத் தொடர்ந்து படிக்க முடியும். காலம் கழிந்து கமெண்ட்ஸ் போட்டு பயனில்லை.

J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்