♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
[Image: FB-IMG-1691245613790.jpg]

 Episode -15



சஞ்சனா அன்று மாலை ராஜாவை சந்தித்த பொழுது,



என்னடா வலி எல்லாம் போச்சா?.



ம்,நேற்று நீ கொடுத்த மாத்திரை நல்லாவே வேலை செய்தது சஞ்சனா.இரவு செம தூக்கம்.தூக்கத்தில் கூட நீ தான் வந்தே.



நான் வந்தேனா !



ஆமாம் நீயே தான்.



நான் வந்து என்ன பண்ணேன்?



நீயா,நேற்று நான் ஒன்னு கேட்டேன் இல்ல,அதை நீ கனவில் வந்து தந்து விட்டு போன.



நீ என்ன கேட்ட,நான் என்ன தந்தேன்?.



என்ன அதுக்குள்ள மறந்து விட்டீயா கண்மணி,சரி நானே சொல்றேன்.நீ கனவில் வந்து என் முகத்தை உன் இரு மலர்கரங்களால் பிடித்து,அப்படியே உன் முகத்தை என் முகம் கிட்ட கொண்டு வரே.உன் மூக்கை என் மூக்கோடு உரசி, கன்னத்தோடு கன்னம் தேய்த்து,உன் விழியால் என் இமைகளை மூடி,உன் செவ்விதழ்களை என் இதழில் பதித்து ஒரு சூப்பரான இங்கிலீஷ் முத்தத்தை கொடுத்து விட்டு போனே கண்ணே.



"ம்....,கனவு எல்லாம் நல்லா தான் இருக்கு,கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் அது நீ சொல்லும் வார்த்தையில் தான் உள்ளது."



நேற்று நீ கனவில் கொடுத்த முத்தத்திற்கே என் உடம்பு எல்லாம் சில்லுன்னு சிலிர்த்து போச்சு தெரியுமா,நிஜத்தில் மட்டும் நடந்தால் எப்படி இருக்கும்.?



நீ ஆசைப்பட்டது கூடிய விரைவில் நடக்கும்,போதுமா!..சரி ராஜா,இன்னிக்கு ஆபீஸில் ஒரு சின்ன பிரச்சினை.நான் உங்க கூட நேற்று வெற்றியை கொண்டாடியதில் எங்க டீமில் உள்ள எல்லோருக்கும் என் மேல கோபம்,அப்புறம் ஜார்ஜ் தான் வந்து எல்லோரையும் சமாதனப்படுத்தினான்.



ம்,பரவாயில்லையே.ஜார்ஜ் இந்த மாதிரி நல்ல வேலை கூட செய்வானா?



அப்புறம் எங்க டீம் மெம்பர்ஸ் எல்லோரும் நாளை மாலை ஜார்ஜ் பிறந்த நாள் விழா போறாங்க.என்னையும் கட்டாயப்படுத்தி கூப்பிட்டாங்க.நான் போகட்டுமா?



தாராளமா போய்ட்டு வா சஞ்சனா.கூட வேலை செய்யும் டீம் மெம்பர்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் தான் உறவு மேம்பட்டு வேலை செய்யும் இடத்தில் நல்ல சூழ்நிலை உருவாகும்.



நீயும் வரீயா ராஜா,



வேண்டாம் சஞ்சனா,அழைப்பு எனக்கு இல்ல.நான் வரக்கூடாது.



அதுவும் சரி தான்.ஆனா நாளைக்கு உன்னை பார்க்க முடியாதே என்ற வருத்தம் தான்.



பரவாயில்லை ஒரு நாள் தானே விடு.



ராஜா எனக்கு வடபழனி கோவிலுக்கு போகனும் ஆசையா இருக்கு,கூட்டிட்டு போறியா,



சரி வா போகலாம்.



வடபழனி கோவில் வாசலில்,

சஞ்சனா அவனிடம் "வாடா உள்ளே போகலாம்"



இல்ல சஞ்சனா நீ போய்ட்டு வா,நான் இங்கே வெயிட் பண்றேன்.



இடுப்பில் அவள் கை வைத்து கொண்டு முறைப்பாக "ஏன்?" என்று கேட்க



உள்ளே இருக்கிறவருக்கும் எனக்கும் ஒரு பஞ்சாயத்து நாலு வருஷமா ஒடிட்டு இருக்கு ,அதனால் தான்.



யாரை சொல்ற?,



அது தான் கையில் வேலை வைச்சிக்கிட்டு நிக்கிறாரே,அவர் தான்.



அடப்பாவி, முருகக்கடவுள் கிட்ட பஞ்சாயத்தா!



"ஒழுங்கா உள்ளே வாடா",என்று தரதரவென்று உள்ளே இழுத்து போனாள்.



ராஜா இறைவனிடம்,"நாலு வருஷம் முன்னாடி வரை உன்னை தினமும் பார்க்க வருவேன்.ஆனால் எப்போ எனக்கு காதலில் தோல்வி கொடுத்தாயோ ,அன்றில் இருந்து நான் உன்னை பார்க்க வருவதை நிறுத்தி விட்டேன்.இப்போ இவள் தான் மறுபடியும் உன்னை பார்க்க என்னை கூப்பிட்டு வந்து இருக்கா,இவளையும் என்கிட்ட இருந்து பிரித்து விடாதே!"என்று வேண்டி கொண்டான்.



சஞ்சனா அவன் நெற்றியில் திருநீறு வைத்து மென்மையாக ஊத,தென்றல் காற்று அவனை வருடியது போல் இருந்தது.



ம், எனக்கு குங்குமம் வைச்சு விடு,



தன் மோதிர விரலால் தொட்டு அவள் நெற்றியில் வைக்க போகும் போது,கை விரல் நடுங்கியது.



என்னடா உன் கை இப்படி நடுங்குது?



முதல் தடவை சஞ்சனா,ஒரு பொண்ணோட நெற்றியில் வைக்க போறேன் அதனால் தான்..



சீக்கிரம் வை,



எப்படியோ அவள் நெற்றியில் வைத்து விட, இருவரும் ஒரு ஓரமாக உட்கார்ந்தனர்.



இப்ப சொல்லுடா உன் பஞ்சாயத்தை,என்ன சுஜி உன்னை விட்டு போனதால் இவர் மேல கோபமோ?



"ம்"என்று ஆமோதித்தான்.



டேய் மரமண்டை,அவ உன்னை விட்டு போனதால் தானே நீ எனக்கு கிடைச்ச.அவ இருந்திருந்தா நான் உன் வாழ்வில் வர முடியுமா?



அப்போ நீ வந்து எனக்கும் அவருக்கும் இருந்த நாலு வருட பஞ்சாயத்தை முடிச்சு வைச்சுட்ட.



ம்,அப்புறம் உன் வாழ்வில் எத்தனை பேரை காதலிச்சு இருக்க,



அந்த லிஸ்ட் நீண்டுகிட்டே போகுமே ,



அப்படியா,கொஞ்சம் லிஸ்ட்டை அவுத்து விடு பார்ப்போம்.



முதன்முதலில் ஐந்தாவது படிக்கும் போது,



என்னது ஐந்தாவது படிக்கும் போதேவா,



குறுக்கே பேசக்கூடாது,அப்புறம் நான் மறந்து விடுவேன்.



சரி சொல்லு,



ஐந்தாவது படிக்கும் போது,நான் காமாட்சி டீச்சர் என்ற ஒருவரை லவ் பண்ணேன்.ஆனா பாரு நான் லவ் பண்ண ஒரே மாசத்திலே அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.அப்புறம் என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மைதிலி அக்காவை லவ் பண்ணேன்.அவங்களுக்கு இன்னும் பாஸ்ட்,ஒரே வாரத்தில் கல்யாணம் ஆய்டுச்சு.பாலிடெக்னிக் படிக்கும் போது தீபாராணி என்ற பொண்ணை லவ் பண்ணேன்.எந்நேரம்..! அவ படிக்கும் போதே அவங்க முறைமாமனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க.அப்புறம் நான் பெங்களூரில் வேலை பார்க்கும் போது நித்யா என்ற பொண்ணை லவ் பண்ணி,முதல் முறை போய் பேசலாம் என்று பார்த்தா ,அவ கல்யாண பத்திரிக்கையை எடுத்து நீட்டறா.



சஞ்சனா சிரித்து கொண்டே"டேய் போதும் நிறுத்து,இதெல்லாம் லவ்வா,ஆமா இதில் ஒருத்தர் கிட்டயாவது லவ் சொன்னீயா,இல்லையா?



ம்ஹீம் யார்கிட்டேயும் சொல்லல.அதுவும் என்னோட லவ் கல்யாண ராசி வேற,நான் யாரை லவ் பண்றேனோ ,அவங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடந்து விடும்.



பார்க்கலாம் உன் கல்யாண ராசி என்கிட்ட பலிக்குதா என்று பார்ப்போம்.



எனக்கும் அது தான் பயமா இருக்கு சஞ்சனா,எங்க உனக்கும் வேறு ஒருவனோடு கல்யாணம் நடந்து விடுமோ என்று.



அது எப்படிடா என்னை மீறி நடக்கும்.அப்புறம் முக்கியமாக நீ சுஜி காதலை பற்றி சொல்லவே இல்லையே.



அடுத்தது அது தான்.முதன்முதலில் நான் சென்னை வந்த பொழுது நந்தனத்தில் தான் வேலை செய்தேன்.அப்போ எல்லாம் bike கிடையாது.பஸ் தான்.நான் திருமங்கலத்தில் 41D பஸ் ஏறுவேன்.சுஜிதா அம்பத்தூரில் ஏறி அதே பஸ்ஸில் வருவா, சுஜிதா என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துகிட்டே வருவா.வெறும் லுக்,லுக் மட்டும் தான்.ஆனா அவ என் ஆபிசில் தான் வேலை பார்க்கிறாள் என்று எனக்கு தெரியவே தெரியாது.நான் 3rd floor, அவ வேலை பார்த்தது கீழே ஷோ ரூமில்.அன்னிக்கு பஸ்ஸில் ஒரே கூட்டம்,நிக்க கூட இடம் இல்ல,தீடீர்னு பரவாயில்ல உங்க பேகை கொடுங்க என்று அவ என்கிட்ட கேட்ட பொழுது எனக்கு உடம்பே வேர்த்து போச்சு.



ஏன்டா இதில் என்ன இருக்கு?,



நீ வேற சஞ்சனா,இப்போ இருக்கிற மாறி எல்லாம் அப்போ நான் இல்லை.பொண்ணுங்க கிட்ட பேசணும் என்றாலே ,கை, கால் எல்லாமே நடுங்கும்.



அப்புறம் ஒருநாள் ராஜேஷ் தான்,சுஜிதாவை கூட்டிட்டு வந்து என்னோட பழக வைச்சான்.



ஓ,அண்ணன் ,மாமா வேலை எல்லாம் பார்த்து இருக்கு,அவனுக்கு இருக்கு ஒருநாள் கச்சேரி.சரி அப்புறம் அவகிட்டேயாவது உன் லவ்வை சொன்னீயா , இல்லையா?



நான் எங்கே சொன்னேன்? அவ தான் சொன்னா,அவ தான் முதன்முதலில் என்னை propose பண்ணிய பெண்.ராஜேஷ் தான் என்னை கன்வின்ஸ் பண்ணி லவ் பண்ண வைச்சான்.கடைசியில் என்னை விட better option வந்த உடனே என்னை விட்டு விலகிவிட்டாள்.எனக்கு ரெண்டு நாள் ஒரு மாதிரி தான் இருந்தது.அப்புறம் அந்த பாதிப்பில் இருந்து ராஜேஷ் தான் என்னை மீட்டு கொண்டு வந்தான்.ஆனா நீ என்னை விட்டு போனால் நான் அதே போல் மீள முடியுமா என்று தெரியல.



இங்க பாரு,அந்த மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது.ஒழுங்கா சீக்கிரம் என்கிட்ட லவ் சொல்லி என்னை கல்யாணம் பண்ற வழியை பார்.உன்னோட கல்யாண ராசி என்னிடம் வொர்க் அவுட் ஆகுதா என்று பார்க்கலாம்.அப்புறம் நீ முதல் முதல் காதல் சொல்லும் பெண் அது நானா தான் இருப்பேன்.



ம்,நீயும் வந்து எனக்கும் முருகருக்கும் இருந்த நாலு வருஷ பஞ்சாயத்தை தீர்த்து வைச்சிட்ட.



அதற்கு சஞ்சனா சிரிக்க,



சஞ்சனா நீ சிரிக்கும் போது உன் அழகு பன்மடங்கு கூடுது.அதில் என் உள்ளம் கொள்ளை போகுது.நீ பேசும் போது,உன் கண்மட்டும் இல்ல,நீ காதில் அணிந்து இருக்கும் லோலாக்கு கூட என் கூட பேசுது.



ம்,என்ன பேசுது,கொஞ்சம் கேட்டு சொல்லு.



ராஜா அவள் காதருகே தன் காதை வைத்து"அப்படியா ,சரி ஓகே" என்றான்.



என்ன சொல்லுச்சு என் கம்மல்?,



அது முட்டாளே,என் எஜமானி மேனியில் இருப்பதற்கு எங்களுக்கு எவ்வளவு கர்வமா இருக்கு, அந்த தேவதையே உன்னை தேடி வரும் போது நீ காலம் தாழ்த்துவது சரியா ?என்று கேட்டுச்சு,



ம் சரியா தான் கேட்டு இருக்கு,அதுக்கு இந்த மண்டு என்ன சொல்லுச்சு.?



இங்கே பார் கம்மல்,என்னவளின் மேனியில் வெயில் படாத இடத்தில் இருக்கும் உனக்கே இவ்வளவு திமிர் இருக்கும் என்றால்,வெயில் படாத இடங்களை ஆள போகும் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று கூறினேன்



"ச்சீ போடா" என்று சஞ்சனா வெட்கப்பட்டாள்.



அடுத்த நாள் மாலை,

சஞ்சனா மற்றும் அவள் குழு நண்பர்கள் ஜார்ஜ் பிறந்த நாள் விழாவிற்கு சென்றனர்.



ஜார்ஜ் வீட்டின் முகப்பை பார்த்த உடனே அவள் ஆச்சரியம் ஆனாள்.

உள்ளே அவன் வீட்டின் ஆடம்பரத்தை பார்த்து மூக்கில் விரல் வைத்தாள்."என்ன இது இவ்வளவு பெரிய வீட்டில் இருந்து கொண்டு ஏன் இந்த சிறிய வேலைக்கு வருகிறான் என்று"என்று ஒரு நிமிடம் நினைத்தாள்.ஜார்ஜ் சொல்லி வைத்த மாதிரி,அவன் அப்பா,அம்மா எல்லோரும் அவளிடம் நெருங்கி பழகினர்.



ஏய் சஞ்சனா,கம் வித் மீ,நான் என் வீட்டை சுற்றி காட்டுகிறேன்.வீட்டின் ஒவ்வொரு அறையை காட்ட,சஞ்சனா அதிசயித்து கொண்டே வர,கடைசியில் அவன் பெர்சனல் அறையை காட்டினான்.

"இது என்னோட பெர்சனல் அறை சஞ்சனா, வா வந்து உட்காரு.இந்த அறைக்கு என் அப்பா அம்மாவை கூட உள்ளே அனுமதிக்க மாட்டேன்.உன்னை தான் முதல் முதலில் கூட்டி வந்து இருக்கேன்."



சஞ்சனா அந்த கட்டில் மீது உட்கார,அதன் மிருதுவான தன்மையே அதன் ஆடம்பரத்தை உணர்த்தியது.சுவரில் மாட்டி வைக்க பட்டு இருந்த ஓவியங்கள்,மின் விளக்கு அலங்காரம் எல்லாம் கண்ணை கவர்ந்தன.



இந்த அறையோட இன்டீரியர் வேலை எல்லாம் மிக அழகா இருக்கு ஜார்ஜ்



எல்லாம் நானே பார்த்து பார்த்து செய்ய வைச்சேன் சஞ்சனா,ஆனா ஏதோ ஒரு குறை இருந்துகிட்டே இருந்துச்சு.ஆனா இப்போ நீ வந்த பிறகு அந்த குறை நீங்கி இந்த அறையின் அழகு முழுமை பெற்று இருக்கு சஞ்சனா.



ஜார்ஜ்,உனக்கு தான் இவ்வளவு வீட்டில் வசதி இருக்கே,அப்புறம் ஏன் போயும் போயும் இந்த telesales job வந்து செய்யற,



அது எனக்கு ஜஸ்ட் hobby சஞ்சனா,கூடிய சீக்கிரம் ஒரு பிசினஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ண போறேன்.அதுவரை இந்த வேலை எல்லாம் சும்மா ஒரு அனுபவத்திற்காக தான்.



அப்பொழுது ஜார்ஜ் அம்மா வந்து கேக் வெட்ட கூப்பிட,



வா சஞ்சனா ,கீழே கேக் வெட்ட போகலாம்..



Cake வெட்டும் போது,முதல் துண்டை தனக்கு தான் ஊட்டுவான் என்று எதிர்பார்த்து அவன் அப்பா,அம்மா வாயை திறக்க,ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக இது இன்று என்னோட ஸ்பெஷல் கெஸ்ட் சஞ்சனாவிற்கு தான் என அவளுக்கு ஊட்ட , சஞ்சனாவே விக்கித்து போனாள்.



கடைசியாக சஞ்சனா தன் கிஃப்ட்டை கொடுத்து விட்டு கிளம்ப,



இரு சஞ்சனா,நானே உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன்.



இல்லை பரவாயில்ல ஜார்ஜ் ,நான் cab புக் பண்ணி போய் விடுகிறேன்.உனக்கு எதுக்கு சிரமம்?



Oh no சஞ்சனா கமான்,எப்படியும் நான் சங்கீயை ட்ராப் பண்ண தான் போறேன்.அவ வீடும் உன் வீடும் அருகே தானே இருக்கு.உன்னையும் சேர்த்து ட்ராப் பண்ணா போச்சு.நீ சங்கீதாவிடம் பேசிட்டு இரு. நான் கார் கீ எடுத்துட்டு வந்து விடுகிறேன்.



சங்கீதா சஞ்சனாவிடம்"என்ன சஞ்சனா ஜார்ஜ் உன்னை லவ் பண்ற மாறி இருக்கு,"



"எனக்கு அப்படி தெரியல சங்கீ"



"இல்லன்னா அவன் அப்பா,அம்மாவை விட்டு முதல் கேக் துண்டை உனக்கு ஊட்டுவானா.இங்க பாரு அந்த வெறும் பய ராஜாவை விட்டுட்டு ஜார்ஜ்ஜை லவ் பண்ணு.உன் எதிர்கால நன்மைக்கு சொல்றேன்."



ஜார்ஜ் சஞ்சனாவை வீட்டில் விடும் பொழுது,

"சஞ்சனா நீ என்னோட பிறந்த நாள் விழாவிற்கு வந்தது ரொம்ப சந்தோஷம்.நான் இன்னிக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.good night.sweet dreams"என்று விடை பெற்றான்.



ஜார்ஜ் மொபைலுக்கு அவன் தோழன் பாலாஜி ஃபோன் செய்தான்.

"என்ன ஜார்ஜ் நீ விரித்த வலையில் பட்சி சிக்கிடுச்சா"



"எப்படி சிக்காம போய்டும் பாலாஜி,என் வீடு,என் லைஃப் ஸ்டைல்,என்னோட அழகு பார்த்து மயங்காதவர்கள் யாராவது உண்டா?.இன்னும் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியில் அந்த சஞ்சனா என் வலையில் தானா வந்து விழுவா பாரு.இப்பவே அவள் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு இருக்கும்.அப்புறம் இருக்கு அந்த பிச்சைகார பையன் ராஜாவுக்கு"



சரி எப்படி ,சஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்க போறீயா,இல்லை மத்த பொண்ணுங்க மாறி அனுபவிச்சிட்டு கழட்டி விட போறீயா.



ம்,அவ்வளவு சீக்கிரம் அவ படுக்க மாட்டா,கல்யாணம் தான் பண்ணிக்கணும்.ஒரு 3 மாசம் நல்லா

 அனுபவிச்சிட்டு தூக்கி எறிய வேண்டியது தான். என்று சிரித்தான்.



ஜார்ஜ் சஞ்சனா மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தினானா?வாழ்க்கையில் தொடர்ந்து ஏமாற்றங்களையே சந்தித்து வரும் ராஜாவின் நிலை என்ன ஆகும்?
[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 06-08-2023, 04:17 AM



Users browsing this thread: 22 Guest(s)